Friday, July 11, 2025
Home Blog Page 30

ரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க; அரசு அதிரடி உத்தரவு!!

ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் அவ்வப்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்நிலையில் தற்போது 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில் பெயர், முகவரி திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 14ஆம் தேதி சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பாமாயில், கோதுமை, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தம் 35,083 ரேஷன் கடைகள் இருக்கும் நிலையில் இந்த கடைகளில் 2,25,24,784 குடும்ப அட்டைகள் இருக்கின்றது. தமிழகத்தில் அரிசி இலவசமாக வழங்கப்படும் நிலையில் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவுப்பொருட்களை பெற்று வருகின்றனர்.

ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். அதில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பெறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அடைந்து வருவதால் உடனடியாக அவற்றை திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது.

இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் முகமூலம் ரேஷன் கடையில் உள்ள திருத்தங்களை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

செயற்கை இரத்தத்தை உருவாக்கிய ஜப்பான்!!

0

 

ஒவ்வொரு மருத்துவமனை, ஆம்புலன்ஸ் மற்றும் போர்க்களமும் பாதுகாப்பான, உலகளாவிய இரத்தத்தை உடனடியாக அணுகக்கூடிய ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் – தட்டச்சு இல்லை, குளிர்பதன சேமிப்பு இல்லை, தாமதம் இல்லை. அந்த உலகம் இனி அறிவியல் புனைகதை அல்ல. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு நன்றி, செயற்கை இரத்தம் விரைவில் உயிர்காக்கும் யதார்த்தமாக மாறக்கூடும்.

 

உலகளாவிய பிரச்சினைக்கு ஒரு உலகளாவிய தீர்வு

 

அவசர மருத்துவம், அறுவை சிகிச்சைகள், அதிர்ச்சி சிகிச்சை மற்றும் இராணுவ பயன்பாடுகளில் இரத்தமாற்றம் மிக முக்கியமானது. ஆனால் அவை கட்டுப்பாடுகளுடன் வருகின்றன: நன்கொடையாளர்கள் இரத்த வகையைப் பொறுத்து பொருத்தப்பட வேண்டும், துல்லியமான வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும் மற்றும் வாரங்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

 

ஜப்பானின் செயற்கை இரத்தத் திட்டம் இந்தக் கதையை மாற்றுகிறது. செயற்கை இரத்தம் உலகளாவிய இணக்கத்தன்மை கொண்டது, அதாவது இரத்த வகையைப் பொருட்படுத்தாமல் யாருக்கும் அதை மாற்றலாம். நேரமும் பொருந்தக்கூடிய தன்மையும் மிக முக்கியமான உயர்-பங்கு சூழ்நிலைகளில், இந்த கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்.

 

மேலும், இந்த செயற்கை இரத்தம் அறை வெப்பநிலையில் இரண்டு ஆண்டுகள் வரை நிலையானதாக இருக்கும், இது 42 நாட்களுக்குள் காலாவதியாகும் மற்றும் நிலையான குளிர்பதனம் தேவைப்படும் பாரம்பரிய இரத்தத்தைப் போலல்லாமல். இது தொலைதூர இடங்கள், பேரிடர் மண்டலங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட பகுதிகளில் பயன்படுத்த ஏற்றதாக அமைகிறது.

 

இது எவ்வாறு செயல்படுகிறது: ஒரு குமிழியில் அறிவியல்

 

ஜப்பானின் தேசிய பாதுகாப்பு மருத்துவக் கல்லூரி மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை இரத்தம், ஹீமோகுளோபின் வெசிகல் (HbV) தொழில்நுட்பம் எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே:

 

ஹீமோகுளோபின் காலாவதியான தானம் செய்யப்பட்ட இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

 

பின்னர் அது செயற்கை லிப்பிட் சவ்வுகளுக்குள் இணைக்கப்பட்டு உண்மையான சிவப்பு இரத்த அணுக்களைப் பிரதிபலிக்கும் நானோ அளவிலான வெசிகல்களை உருவாக்குகிறது.

 

இந்த வெசிகல்கள் இயற்கையான சிவப்பு இரத்த அணுக்களைப் போலவே இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல முடியும்.

 

சில பதிப்புகளில் பிளேட்லெட் மாற்றீடுகளும் அடங்கும், அவை இரத்த உறைதலுக்கு உதவுகின்றன – காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைகளின் போது முக்கியமானது.

 

இந்த கலவையானது மனித இரத்தத்தின் இரண்டு முக்கிய செயல்பாடுகளை செயற்கை இரத்தம் பிரதிபலிக்க அனுமதிக்கிறது: ஆக்ஸிஜன் போக்குவரத்து மற்றும் உறைதல்.

 

2030 ஆம் ஆண்டுக்கான ஆரம்பகால சோதனைகளை உறுதியளிக்கிறது

 

இந்த செயற்கை இரத்தத்தின் சிறிய அளவுகளை (சுமார் 100 மில்லி) விலங்குகள் மற்றும் ஆரோக்கியமான மனித தன்னார்வலர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பாக வழங்க முடியும் என்பதை ஆரம்பகால சோதனைகள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டில், பாதுகாப்பு, உறிஞ்சுதல் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை மையமாகக் கொண்டு விரிவாக்கப்பட்ட மனித சோதனைகள் தொடங்கியது.

 

மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நேர்மறையான முடிவுகளைக் காட்டினால், 2030 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான அங்கீகாரத்தையும் பொது வெளியீட்டையும் ஜப்பான் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவசரகால மருத்துவம், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நெருக்கடிகளில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

 

மருத்துவ முன்னேற்றத்தை விட – இது ஒரு உலகளாவிய உத்தி

 

ஜப்பானின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. உலகின் பழமையான மக்கள்தொகையில் ஒன்று நாட்டில் உள்ளது, மேலும் அதன் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. அதிகமான நாடுகள் மக்கள்தொகை மாற்றங்களை அனுபவிக்கும் போது மற்றும் பாதுகாப்பான இரத்தமாற்றத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், செயற்கை இரத்தம் விரிவடையும் இடைவெளிகளை நிரப்ப உதவும்.

 

மேலும், நெருக்கடி சூழ்நிலைகளில் – இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத தாக்குதல்கள், போர் மண்டலங்கள் – வகை-பொருத்தமான, குளிரூட்டப்பட்ட நன்கொடையாளர் இரத்தத்தின் நிலையான விநியோகத்தை நம்பியிருப்பது ஒரு தளவாடக் கனவாகும். செயற்கை இரத்தம், பாதுகாப்பு அல்லது செயல்திறனில் சமரசம் செய்யாத, எடுத்துச் செல்லக்கூடிய, பயன்படுத்தத் தயாராக உள்ள மாற்றீட்டை வழங்குகிறது.

 

சவால்கள் இன்னும் முன்னால் உள்ளன

 

உற்சாகம் இருந்தபோதிலும், கடக்க இன்னும் தடைகள் உள்ளன:

 

தேசிய மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரித்தல்.

 

சிக்கலான ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறைகளை வழிநடத்துதல்.

 

வணிகமயமாக்கப்பட்டவுடன் தயாரிப்பு மலிவு விலையிலும் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

 

அதிக மன அழுத்தம், நிஜ உலக மருத்துவ சூழல்களில் செயல்திறனை சோதித்தல்.

 

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளும், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட சிவப்பு இரத்த அணுக்கள் முதல் உறைந்த-உலர்ந்த ஹீமோகுளோபின் பொடிகள் வரை பல்வேறு முறைகள் மூலம் செயற்கை இரத்த தீர்வுகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் ஜப்பானின் அணுகுமுறை, அதன் நிலைத்தன்மை மற்றும் பொருந்தக்கூடிய நன்மைகளுடன், மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

வெற்றி பெற்றால், ஜப்பானின் செயற்கை இரத்தம் அவசரகால சுகாதாரப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும், இரத்த பற்றாக்குறை மற்றும் பொருந்தக்கூடிய சிக்கல்களை கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றும். இது ஒரு மருத்துவ கண்டுபிடிப்பு மட்டுமல்ல – இது உலகளாவிய தாக்கங்களைக் கொண்ட ஒரு மனிதாபிமான கருவியாகும்.

2030-ஐ நெருங்கி வரும் வேளையில், ஒரு விஷயம் தெளிவாகிறது: மருத்துவத்தின் எதிர்காலம் நன்கொடைகளைச் சார்ந்ததாக இருக்காது, மாறாக ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட சிவப்பு நிறத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்.

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; 1.50 லட்சம் வரை கடனுதவி..சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

தமிழ்நாடு அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு கடன் உதவி கிடைக்கும். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவி குழு நடத்தி வருகின்றது.

அந்த குழுக்களின் மூலம் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றது. இதில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியாக அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் அல்லது தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் காய்கனி கடை, பலகாரக் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம், பூ வியாபாரம், மீன் வியாபாரம், உள்ளிட்ட தொழில்களை நடத்த கடன்கள் வழங்கப்படுகின்றது. இதில் பயன்பெற விண்ணப்பதாரர் சிறுபான்மையினர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

அவர்கள் குழுவில் குறைந்தது ஆறு மாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும் ஒரு சுய உதவி குழுவில் 60 சதவீதம் சிறுபான்மையினராக இருப்பது அவசியம். மீதமுள்ள 40 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர வகுப்பினர் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 20 உறுப்பினர்களும் குறைந்தபட்சமாக 10 உறுப்பினர்களும் ஒரு குழுவில் இருப்பது அவசியம் சிறுபான்மையினர் குழுக்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இதில் இரண்டு திட்டங்கள் இருக்கும் நிலையில் முதல் திட்டத்தின் அடிப்படையில் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டியாகவும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்குள் தவணைத்தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தும் வசதியும் உள்ளது. இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இரண்டாவது குழுவில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டுக்கு வட்டி விகிதம் 10 சதவீதமும், பெண்களுக்கு எட்டு சதவீதமும் வழங்கப்படும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் தவணை தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் இருக்கின்றார். இவருடைய வீடு புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றினார்.

அவருக்கு வழி முழுவதும் பேனர் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். மேலும் இந்த விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் ,ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் எ.வ வேலுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழங்கப்பட்ட மரியாதையை விட அமைச்சர் எ.வ வேலுக்கு மயில்மாலை ,500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர். அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

மேலும் அமைச்சருடன் நின்று அவர்களுடன் குடும்பமே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பாக வீடியோ வைரலான நிலையில் பாரதிதாசன் தவெக நிர்வாகியா அல்லது திமுக நிர்வாகியா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தன் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த அமைச்சர் எ.வ வேலுக்கு பணமழை போட்டு வரவேற்பு அளித்த தவெக நிர்வாகி விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் எதிரி திமுக மட்டும் தான் என கூறியது அல்லாமல் நிகழ்ச்சிகளிலும் திமுக அரசையும், திமுக அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தவெக மாவட்ட செயலாளரின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு; இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாளாக அறிவித்து பாடத்திட்டங்களை விரைவாக முடித்து வருகின்றனர்.

ஆனால் அரசு பள்ளிகளுக்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொது கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது உயர்நிலை பள்ளியின் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளனர். தற்போது வரை பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வருகின்றது. ஆனால் இனி காலை 9:45 மணி முதல் மாலை 4:15 மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

காலை மற்றும் மதியம் 15 நிமிடங்கள் வீதம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 220 வேலை நாட்கள் வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கேரளா அரசு இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை கூடுதல் வேலை நாளாக இருக்காது. மேலும் தொடக்கப் பள்ளிகளில் தொடர்ச்சியாக 6 நாட்கள் பள்ளி செயல்படும். மாதத்தில் இரண்டு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருக்கும். 25 சனிக்கிழமை உட்பட 220 பள்ளி நாட்கள் கொண்டதாக புதிய கல்வி நாட்காட்டி கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட 16 சனிக்கிழமை கூடுதலாக இந்த ஆண்டு வேலை நாட்களாக இருக்கின்றது. புதிய கல்வி நாட்காட்டிக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்வி சட்டத்தை பரிசீலிக்காமல் புதிய நாட்காட்டி தயாரித்துள்ளனர் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்த புதிய கல்வி நாட்காட்டி தேசிய கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த புதிய நாட்காட்டி சற்று அதிர்ச்சி அளித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு; அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட் இதோ!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் இருந்து நான்கு சதவீதம் அல்லது அதற்கு மேல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பொதுவாக டிஏ மற்றும் டி ஆர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யப்படும்.

ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படும். இந்த முறையானது அகவிலைப்படி உயர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் ஜனவரி சுழற்சிக்கான அகவிலை படி அடுத்த ஜூலை மாதம் அடுத்த கட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவலை நிவாரணத்தை இரண்டு சதவீதம் உயர்த்தி வழங்கியது. இதன் மூலமாக அகவிலைப்படி 55 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. ஆனால் கடந்த 78 மாதங்களில் அறிவிக்கப்பட்ட அகவிலைப் படையிலேயே மிக குறைவானது கடந்த முறை அறிவிக்கப்பட்டது தான். இந்த அகவிலைப்படி குறைவாக இருந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அரசு ஊழியர்கள் இடையே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.

பல இடங்களில் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வு போதாது என போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் தொகை அதாவது ஜூலை மாதத்திற்கான அகவிலை படி தொகை கண்டிப்பாக அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. தற்போது ஜூலை மாதம் வரவுள்ளதால் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் மத்திய அரசு முன்னதாக நிலுவையில் உள்ள அகவிலை படி உயர்வுக்கான தொகையை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தொகையானது அடிப்படை ஊதியம் மற்றும் பழைய அகவிலைப்படியாக வழங்கப்படும்.

கிராம உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளனர். சுமார் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த அரசாணை பார்க்கப்படுகின்றது.

மேலும் வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் காலியாக இருக்கின்றது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிநேரம் விரயம் ஆகின்றது.

உதவியாளர்களை விரைவில் நியமிக்க வேண்டும் எனவும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது அது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அரசு முடிவு செய்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அந்த தாலுகாவில் வசிப்பராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கிராமத்திற்குள் வசிப்பவராக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

அதனால் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுடைய ஊரிலேயே வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ.. மக்களுக்கு வெளியாகும் புதிய அறிவிப்பு!!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக தனது கட்சியை பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து வருகின்றார்.

இது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு அவர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் இருந்து மேட்டூர் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களை நேரில் சந்திக்கின்றார்.

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மண்டல அளவிலான கண்காட்சி நடத்தப்படுகின்றது. அதில் அவர் கலந்து கொள்கின்றார்.

அதனைத் தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வுத்துறை அமைச்சர் சா முத்துசாமி முன்னிலையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஈரோட்டில் இருந்து சேலம் மாவட்டம் புறப்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி மேட்டூர் சுற்றுலா பயணியர் மாலையில் தங்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கின்றார். சாலை மார்க்கமாக சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றார். அங்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு முடிவுற்ற திட்ட பணிகளையும் புதிய திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கின்றார்.

சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கட்டணம்; அமைச்சர் மா சுப்ரமணியன் அளித்த விளக்கம்!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்கான காரண விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ள நிலையில் மக்கள் அனைவரும் மருத்துவ சேவைகளை பெற வேண்டும். என்பதே அரசின் நோக்கமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருந்துகள் சிகிச்சை ஆகியவை அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும், ஆனால் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்பினால் அவர்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொது வார்டுகளை தவிர தனிப்பட்ட வசதிகளை விரும்புபவர்கான ஏற்பாடாக பார்க்கப்படுகின்றது. அரசு மருத்துவமனை என்றாலே இலவசமாக சிகிச்சை பெரும் மருத்துவமனை என இருக்கும் சூழலை தற்போது மாற்றி அரசு மருத்துவமனையிலும் கட்டண பிரிவு என்ற செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டண பிரிவில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. மேலும் ஒரு சிலர் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர். பொது பிரிவுகளில் அனைவருக்கும் சமமான சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் தனி அறையில் சிகிச்சை பெற வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.

அதனால் விரும்புவர்கள் மட்டும் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய உழவன் செயலி; அரசு சொன்ன குட் நியூஸ்!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வேளாண்துறை சார்பாக விவசாயிகளுக்கு விடியலை ஏற்படுத்தும் உழவன் செயலி உருவாக்கி தரப்பட்டது. வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உழவன் மொபைல் போன் அப்ளிகேஷன் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த செயலியின் மூலமாக விவசாயிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலங்கள் அனைத்தையும் சாகுபடி நிலங்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விவசாயிகள் குழுவாக சேர்ந்து பதிவு செய்வதற்காக உழவன் செயலி உருவாக்கப்பட்டது.

இந்த செயலியின் மூலம் அரசு அளிக்கும் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வேளாண் கல்வி, சுற்றுலாவில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை சந்தைப்படுத்தவும் கொள்முதல் செய்யவும் வியாபாரிகளின் முகவரிகள் உழவன் செயலியில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். மேலும் விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவர்களையும் இதன் மூலம் தொடர்பு கொண்டு பயனடைய உழவன் செயலி உதவியாக இருக்கின்றது.

இந்த உழவன் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட உழவன் செயலியில் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் போன்ற தங்களது அடிப்படை தகவல்களை பதிவு செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து இந்த உழவன் செயலின் மூலம் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 19 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. வேளாண் உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுப்பொருட்களை பெறுவதற்கு முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சலை மேற்கொள்வதற்கு முன்பு மண்வளம் குறித்து விளைநிலங்களின் தற்போதைய நிலை அறிய மண் ஆய்வு செய்யவும் பதிவு செய்வது அவசியம். இது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இந்த செயலி பயன்படுகிறது.