Saturday, July 12, 2025
Home Blog Page 31

விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய உழவன் செயலி; அரசு சொன்ன குட் நியூஸ்!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வேளாண்துறை சார்பாக விவசாயிகளுக்கு விடியலை ஏற்படுத்தும் உழவன் செயலி உருவாக்கி தரப்பட்டது. வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உழவன் மொபைல் போன் அப்ளிகேஷன் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த செயலியின் மூலமாக விவசாயிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலங்கள் அனைத்தையும் சாகுபடி நிலங்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விவசாயிகள் குழுவாக சேர்ந்து பதிவு செய்வதற்காக உழவன் செயலி உருவாக்கப்பட்டது.

இந்த செயலியின் மூலம் அரசு அளிக்கும் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வேளாண் கல்வி, சுற்றுலாவில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை சந்தைப்படுத்தவும் கொள்முதல் செய்யவும் வியாபாரிகளின் முகவரிகள் உழவன் செயலியில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். மேலும் விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவர்களையும் இதன் மூலம் தொடர்பு கொண்டு பயனடைய உழவன் செயலி உதவியாக இருக்கின்றது.

இந்த உழவன் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட உழவன் செயலியில் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் போன்ற தங்களது அடிப்படை தகவல்களை பதிவு செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து இந்த உழவன் செயலின் மூலம் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 19 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. வேளாண் உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுப்பொருட்களை பெறுவதற்கு முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சலை மேற்கொள்வதற்கு முன்பு மண்வளம் குறித்து விளைநிலங்களின் தற்போதைய நிலை அறிய மண் ஆய்வு செய்யவும் பதிவு செய்வது அவசியம். இது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இந்த செயலி பயன்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா; அரசு சொன்ன அப்டேட் இதோ!!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மாதம் தோறும் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தில் ஒரு கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக இந்த திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். தகுதி வாய்ந்த மகளிர் ஒரு சிலருக்கு இத்திட்டம் கிடைக்காததால் மீண்டும் பயனாளிகளை இணைக்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதனால் தகுதி வாய்ந்த மகளிர்கள் ஜூன் மாதம் முதல் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் எனவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

சுமார் 9000 முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் முகங்கள் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஒரு வாரத்தில் தேவையான இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம்கள் அமைக்கப்படும் எனவும் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு பெண்கள் முன்கூட்டியே விண்ணப்பித்த நிலையில் அதில் ஒரு சில பெண்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு மற்றொரு வாய்ப்பளித்தும் வகையில் மீண்டும் முகங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது பயனாளியாக உள்ள பெண்கள் அரசு பணிகளில் சேரும் பட்சத்தில் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் சுமார் 15,000 மகளிர்களை திட்டத்தில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. உடனே விடுமுறை எடுத்துக்கோங்க!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவலை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் என்பது அதிகரித்து காணப்படும் நிலையில் தொற்று பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதனை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. மாணவர்களின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலமாக மற்ற மாணவர்களுக்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதால் காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் காய்ச்சல் மற்றும் பிற பிரச்சனைகளும் பள்ளிக்கு வரும் நிலையில் உடனே ஆசிரியர்கள் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விட மாட்டார்கள்.. ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – திருமா பரபர பேட்டி!!

VSK ADMK: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக கூட்டணியானது இடது சாரிகளுக்கு ஆதரவான ஒன்று. இதன் அனைத்து சிந்தனைகளும் எடுத்து சாரியை நோக்கி தான் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே இந்த கூட்டணியிலும் இருக்க முடியும். அந்த வகையில் மதசார்பின்மையை முன்னெடுத்து நிறுத்தும் ஒரே கட்சி தமிழகத்தில் திமுக மட்டும் தான் என்று என்னால் அடித்து கூட சொல்ல முடியும். இந்த கூட்டணியில் வேறு யாராவது இணைவார்களா என்பது குறித்த முடிவுகள் ஸ்டாலின்தான் எடுக்க முடியும்.

அதேபோல வலது சாரிகளுக்கு இந்த கட்சி ஒத்து வராது. திமுகவை எதிர்க்க பல கட்சிகள் இருந்தாலும் எங்களைப் போல் அவர்களால் ஒருங்கிணைந்து இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்களால் எந்த ஒரு கூட்டணியும் உருவாகாது. இதுதான் நிதர்சனமான உண்மை. வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு எங்கள் கூட்டணி மட்டும் தான் உறுதியாக இருக்கிறது. எங்களுக்கு எதிராக எந்த கூட்டணி உள்ளது என்று தற்போது வரை தெரியவில்லை. மேற்கொண்டு இம்முறை தேமுதிக வெற்றி பெறும் என கூறுகிறார்கள் அதன் கீழ்தான் ஆட்சி அமையும் எனவும் தகவல்கள் பரவி வருகிறது இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

இது ரீதியாக திருமாவளவன் பேசுகையில், இது சாத்தியமில்லாத ஒன்று அதற்கு அதிமுகவே ஒத்து வராது என்பது எனது நம்பிக்கை. அதிமுகவுடன் பலவகை கூட்டணிகள் இணைந்தாலும் தலைமையில் ஆட்சி அமைக்க அவர்களே விரும்புவார்கள். கூட்டணி ஆட்சி என்பதில் ஒத்து வர மாட்டார்கள். அதிமுகவிற்கு எதிராகவே பாஜக, ஒரு சில இடங்களில் உங்களுக்கு அமைச்சர் பதவி எல்லாம் தருகிறோம் கூட்டணி ஆட்சி என ஆசை வார்த்தை எல்லாம் கூறி வருகிறது. ஆனால் இவையனைத்தும் ஏமாற்றப்படும் ஓர் அரசியல் காரணம் தான் என தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் தேமுதிக கூட்டணி.. பிரேமலதா சொன்ன பளிச் பதில்!!

DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வரை வெளியிடவில்லை. மாறாக அதிமுக அடுத்த ஆண்டு எம்பி தேர்தலில் சீட்டு வழங்குவதாக கூறி தேமுதிக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் பிரேமலதா நாங்கள் பொதுக்குழு கூட்டத்தில் தான் எங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவ்வாறு இருக்கையில் பிரேமலதா எம்பி சீட் அதிமுக வழங்காது தான் சற்று அதிருப்தியிலும் உள்ளார்.

இவ்வாறு பிரேமலதா அதிருப்தியில் இருக்கும் நிலையை கண்டு மாற்றுக் கட்சியினர் தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள கொக்கி போட ஆரம்பித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் நீங்கள் விஜய்யுடன் இணைய போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து அவர் தான் பதிலளிக்க வேண்டும். நீங்கள் அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என கூறிவிட்டார். அதேபோல 2026 ஆம் ஆண்டு கூட்டணி கட்சியானது ஆட்சிக்கு வரும் போது தான் ஏதேனும் தவறு நடந்தால் சுட்டிக்காட்டி பேச முடியும். அதுமட்டுமின்றி வரும் இரண்டு நாட்களில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம் என்றும் கூறினார்.

அதேபோல கனிமவேள கொள்ளை என்பது தற்போது வரை ஓய்ந்த பாடில்லை, இது ரீதியாக ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு கொள்ளை சம்பவம் குறிப்பிட்ட முதியோர்களை குறி வைத்து தாக்குவது நடந்து வருகிறது இதனால் யாருக்கும் பாதுகாப்பில்லை என பேசியுள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களா.. உடனே இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து எந்த ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அதனால் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புவர்கள் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பவராக இருந்தால் அந்த பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மீதமுள்ளவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் 72,000 இருக்க வேண்டும். அன்றாட கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ மாணவிகள் இந்த உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். முன்னதாக உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டு வரை உதவித்தொகை பெற தற்போதைய தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் ஆவணத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்த விதமான உதவி தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமின்றி தனியார் நிறுவனத்தில் பணி புரியாதவராகவோ, எந்த திட்டத்திலும் பயன் பெறாதவராகவோ இருக்க வேண்டும். இந்த உதவி தொகை பெறுவதற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சீனியர் சிட்டிசன் செயலியை பதிவிறக்கம் செஞ்சிட்டீங்களா; மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!!

மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அண்மையில் மத்திய அரசு 70 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது.

5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான திட்டங்கள் எளிமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சீனியர் சிட்டிசன் செயலியை உருவாக்கி இருக்கின்றது.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை மூத்த குடிமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மூத்த குடிமக்கள் நலன் கருதி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் அன்று வெளியிடப்பட்டு இந்த செயலை செயல்பாட்டிற்கு வந்தது.

இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றிருக்கின்றது. அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் பற்றி அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் அதிகாரிகள் விபரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன் பெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டத்தை சேர்ந்த மூத்த குடிமக்கள் சீனியர் சிட்டிசன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தலில் கட்டாயம் இதை செய்ய வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!!

திமுக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது திமுகவிற்காக பரப்புரை செய்தார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடுகள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து கொண்ட நிலையில் துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் 2026 ஆம் தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டு அதற்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீதம் புது வாக்காளர்களை திமுகவிற்குகாக கண்டிப்பாக சேர்க்க வேண்டும். திமுக வழங்கும் திட்டங்களை பொதுமக்களிடம் பொறுமையாக விளக்கி உறுப்பினர்களாக சேர்ப்பது அவசியம். 30 சதவீதம் புது வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை எம்பி தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக 4 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

UPI யூசர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி; புதிய விதிமுறை அமல்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றார்கள். 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள நிலையில் தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே வங்கி கணக்கின் இருப்பு தொகை சரிபார்த்துக் கொள்ள முடியும். இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. யுபிஐ அடிப்படையிலான பண பரிமாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்வில் தினந்தோறும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் மூலம் நாளொன்றுக்கு பலமுறை யுபிஐ செயலி பயன்படுத்தி வருகின்றோம். யு பி ஐ நெட்வொர்க்கில் சுமையை குறைக்கும் விதமாக இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பயனாளர்களுக்கு எந்த விதை இடையூறும் இருக்காமல் தொடர்ச்சியான சேவைகளை வழங்க இருக்கின்றனர். ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட செயலியை தினந்தோறும் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு செயலிலும் 50 முறை என மொத்தம் 100 முறை இருப்பு சரி பார்க்க முடியும். மேலும் ஒருமுறை யு பி ஐ செயலியை பயன்படுத்தினால் வங்கி கணக்கு இருப்பு பயனருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால் அடிக்கடி இருப்பு தொகை சரி பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8:30 வரை ஏபிஐ பரிவர்த்தனைகள் செய்ய பயணங்களின் அனுமதி தேவைப்படும். அதுமட்டுமின்றி எஸ் ஐ பி பரிவர்த்தனைகள் ஓடிடி கட்டணங்கள் போன்ற தானியங்கு பண பரிமாற்றத்திற்கு இனி உச்ச நேரத்தில் அல்லாமல் பிற நேரங்களில் செயல்படுத்தப்படும். இத்தகைய புதிய மாற்றங்கள் டிஜிட்டல் பண பரிமாற்றங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மட்டுமின்றி அமைப்பை நிலையாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். ஆதார் அட்டையின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற முடியும். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அன்றாட தேவைக்கு என்ன செய்வது என தெரியாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது ஆதார் அட்டை மூலம் பத்தாயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் ஆதார் அட்டையின் மூலமாக கடன் வழங்க தொடங்கியுள்ளனர்.

இந்த கடன் பாதுகாப்பு பெற்றது என்பதால் எந்தவித சொத்து உத்தரவாதமும் தேவைப்படுவது கிடையாது. மாத சம்பளக்காரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் ஏற்ற விரிவான நிதி ஆதாரமாக செயல்படுகின்றது. இந்த கடனை பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 21 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். நிரந்தர முகவரி, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்காளர் ஐடி, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆன்லைன் மூலம் இந்த கடன் பெற எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

முதலில் ஆதார் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தனிநபர் கடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பிறகு ஆதார் எண் மற்றும் தகவலை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் கொடுக்கப்படும் ஓடிபி மூலம் அனைத்தையும் சரிபார்த்துக் கொள்ளலாம். பிறகு மூன்று நாட்களுக்குள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆதார் எண் மற்றும் பேன் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படாது.