Saturday, July 12, 2025
Home Blog Page 32

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். ஆதார் அட்டையின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற முடியும். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அன்றாட தேவைக்கு என்ன செய்வது என தெரியாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது ஆதார் அட்டை மூலம் பத்தாயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் ஆதார் அட்டையின் மூலமாக கடன் வழங்க தொடங்கியுள்ளனர்.

இந்த கடன் பாதுகாப்பு பெற்றது என்பதால் எந்தவித சொத்து உத்தரவாதமும் தேவைப்படுவது கிடையாது. மாத சம்பளக்காரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் ஏற்ற விரிவான நிதி ஆதாரமாக செயல்படுகின்றது. இந்த கடனை பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 21 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். நிரந்தர முகவரி, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்காளர் ஐடி, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆன்லைன் மூலம் இந்த கடன் பெற எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

முதலில் ஆதார் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தனிநபர் கடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பிறகு ஆதார் எண் மற்றும் தகவலை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் கொடுக்கப்படும் ஓடிபி மூலம் அனைத்தையும் சரிபார்த்துக் கொள்ளலாம். பிறகு மூன்று நாட்களுக்குள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆதார் எண் மற்றும் பேன் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படாது. 

இதை முடிச்சா தான் டெல்லி… இல்லைனா அங்கேயே இரு!! அமித்ஷாவுக்கு மோடி போட்ட ஆர்டர்!!

BJP: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணிற்கு பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வருகை புரிய உள்ளார். நாளை நடைபெற போகும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் மதுரைக்கு வருவதற்கு முன் முக்கிய மூன்று வேலைகளை முடித்துவிட்டு தான் டெல்லிக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவை மூடி போட்டு உள்ளாராம்.

அதில் முதலாவதாக அதிமுக என் தங்களுடன் கூட்டணி வைத்தால் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க கூடாது என்று கூறியுள்ளனர். நாளடைவில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் முக்கிய நிர்வாகிகள் கொண்டு இது ரீதியாக டெல்லி மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் என் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளனர்.

இதனையெல்லாம் வைத்துதான் அமித் ஷா எடப்பாடி யிடம் பேச உள்ளாராம். அதுமட்டுமின்றி பாமக தேமுதிக இருவரும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளாராம். முதலில் பாமகவின் உட்கட்சி மோதலை சரி கட்ட ஆடிட்டர் ரகுபதியை பாஜக முன்கூட்டியே அனுப்பி வைத்தது.

தற்போது ஓரளவுக்கு பிரச்சனைகள் முடியப்போகிறது என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில் அமித்ஷா வருகை புரிய உள்ளார். இந்த தலைவர்களை நேரில் சந்தித்து பேசி விட்டான் அனைத்தும் முடிவாகிவிடும் என்று எண்ணியுள்ளார்கள். இதே போல முரண்டு பிடிக்கும் தேமுதிக வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஸ்ட்ரிட் ஆர்டரையும் போட்டுள்ளதால் இதை முடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மந்திரி உள்ளதாக கூறுகின்றனர்.

ஒரு பக்கம் எடப்பாடி சமாளிப்பு மற்றொரு பக்கம் ஓபிஎஸ் டிடிவி தினகரன் கூட்டணி அதே போல பிளவுபட்டு இருக்கும் பாமக மூரண்டு பிடிக்கும தேமுதிக என அனைத்தையும் சரி செய்யும் முயற்சியில் அமித்ஷா நாளை இறங்க உள்ளார்.

அமித்ஷாவது மோடி யாவது.. இத்தனை சீட் கொடுத்தால் தான் கூட்டணி!! அட்பிடிக்கும் தேமுதிக!!

BJP DMDK: தேமுதிக பிரேமலதா இந்த ஆண்டு எம்பி தேர்தலில் எப்படியாவது மகனை முன்னிறுத்தி பதவி வாங்கி கொடுத்து விட வேண்டும் இன்று தீவிரம் காட்டு வந்தார். ஆனால் அதிமுக தனது கட்சி சார்ந்தவர்களையே இருவரை தேர்வு செய்து விட்டது. அடுத்த ஆண்டு தேர்தலில் சீட் வழங்குவதாக தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக பொது செயலாளர், நாங்கள் எங்கள் கூட்டணியை பொதுக்குழு கூட்டத்தில் தான் அறிவிப்போம் என கூறிவிட்டார்.

இதனால் அதிமுக இவர்களுடன் கூட்டணி வைக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விதமாக மாறிவிட்டது. இவ்வாறு இருக்கையில் தேமுதிக மாற்று கட்சிக்கு செல்வதற்கு முன் கட்சிக்குள் இணைத்து விட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் அடுத்த கட்ட முயற்சியில் அவர்களே பேச முன்வந்துள்ளனர். மத்திய மந்திரி அமித்ஷா மதுரை வர உள்ள நிலையில் அதற்குள் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால் பாஜக வின் வேகத்திற்கு தேமுதிக செயல்படுவதாக இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுகள் முழுமையாக இருக்கும் நிலையில் தற்போது நாங்கள் கூட்டணி உறுதி செய்ய மாட்டோம் எனக் கூறியுள்ளனர். மறுபுறம் தற்போதைய தேர்தல் கூட்டணி உறுதி செய்து விட்டால் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இருக்கும் இறுதி கட்டத்தில் எதுவும் முடிவு செய்ய வேண்டாம். அதுமட்டுமின்றி நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் மாதம் வரும் அதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கூட்டணி பிரச்சாரம் குறித்து பேசலாம் என கூறியுள்ளார்களாம். வழக்கம்போல் பிரேமலதா சீனியர் பாஜக நிர்வாகிகளிடம் தனது நிபந்தனைகளை வைத்துள்ளார்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் என்னை சந்திக்க வேண்டும் எத்தனை சீட் வழங்கப்படும் என்பது குறித்து தற்போது தீர்மானிக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுள்ளாராம். தற்போது கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு பின்பு நீங்கள் கொடுத்ததை வாங்கிக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளாராம். ஆதலால் அமித்ஷா வருகை புரியும்போது கட்டாயம் அதிருப்தி நிறைந்த கூட்டணி கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம் போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விராட் கோலிக்கு தனது ரத்தால் பொட்டு வைத்த ரசிகர்!! வைரலாகும் வீடியோ!!

பெங்களூரு அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மற்றும் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கொண்டாட்டங்களைச் சீரழித்த துயரமான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு முழுவதும் அதிகரித்த உணர்ச்சிகளின் பின்னணியில் இது வந்துள்ளது. இந்த சிலிர்ப்பூட்டும் வீடியோ வெறித்தனத்தின் இருண்ட பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அங்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான அபிமானம் சுய-தீங்கு மற்றும் சடங்கு உச்சநிலையாக மாறுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவின்  (RCB) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட IPL 2025 பட்டத்தை வென்றதைக் கொண்டாட, கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் போஸ்டரில் ஒரு ரசிகர் இரத்த திலகம் பூசுவதைக் காட்டும் ஒரு தொந்தரவான வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது . வைரலாகி வரும் இந்த வீடியோ, நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது, மேலும் நவீன விளையாட்டு கலாச்சாரத்தில் ரசிகர் பக்தியின் உச்சத்தை பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

https://x.com/surabhi_tiwari_/status/1930880961899622573?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1930880961899622573%7Ctwgr%5E8421723136d2476e18daace7f5e46e94b2d5d069%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fsports%2Fajeeb-pagalpan-hai-netizens-react-as-fanatic-virat-kohli-fan-applies-blood-tilak-on-his-poster-after-ipl-2025-triumph-video

அந்தக் காட்சிகளில், ஒரு ரசிகர் தனது மணிக்கட்டை வெட்டிக் கொண்டு, அந்த ரத்தத்தைப் பயன்படுத்தி, அவர் ஏந்தியிருக்கும் ஒரு போஸ்டரில் கோலியின் நெற்றியில் சடங்கு முறையில் குறியிடுவது காட்டப்பட்டுள்ளது. சமூக ஊடக பயனர்கள், இதுபோன்ற தீவிர பக்தி செயல்கள் கோலியின் செல்வாக்கால் தூண்டப்பட்டதா அல்லது ஆர்சிபியில் உள்ள பரந்த ரசிகர் கலாச்சாரத்தால் தூண்டப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.

பெங்களூரு அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மற்றும் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கொண்டாட்டங்களைச் சீரழித்த துயரமான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு முழுவதும் அதிகரித்த உணர்ச்சிகளின் பின்னணியில் இது வந்துள்ளது. இந்த சிலிர்ப்பூட்டும் வீடியோ வெறித்தனத்தின் இருண்ட பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அங்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான அபிமானம் சுய-தீங்கு மற்றும் சடங்கு உச்சநிலையாக மாறுகிறது.

விளையாட்டுகள் ஆர்வத்தைத் தூண்டி மில்லியன் கணக்கானவர்களை ஒன்றிணைக்க முடியும் என்றாலும், இது போன்ற தீவிரமான செயல்கள் போற்றுதலையும் நல்லறிவையும் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் சிறு கடன் வாங்குபவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் நிவாரணத்தை வழங்க முடியும்.

மேலும் ரிசர்வ் வங்கி இரண்டு லட்சம் வரை தங்க கடைங்களுக்கான மதிப்பு கடன் விகிதத்தை அதிகரித்துள்ளது. அதனால் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 85 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். முன்பிருந்த 75% வரம்பிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக பார்க்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்தால் முன்பு 75 ஆயிரத்துக்கு பதிலாக தற்போது 85 ஆயிரம் கடன் பெறலாம். இத்தகைய மாற்றம் சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் அவசர நிதி தேவைக்கு தங்க நகைகளை அடமான வைப்பவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் LTV விகிதம் என்பது கடன் பெறக்கூடிய சொத்து மதிப்பின் சதவீதத்தை வரையறுப்பதாக பார்க்கப்படுகின்றது. இந்த விகிதம் அதிகரிப்பதன் மூலம் கடனில் பாதுகாப்பை சமரசம் செய்யாமல் கடனை மேலும் அணுகக் கூடியதாக மாற்றலாம் என ரிசர்வ் வங்கி இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மேலும் தனி நபர் கடன்களுடன் ஒப்பிடும்பொழுது குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக பல தனிநபர்கள் குறுகிய கால கடன் விருப்பமாக தங்க நகைகளை வைத்து கடன்களை பெற விரும்புகின்றார்கள்.ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து முக்கிய தங்க கடன் வழங்குபவர்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளது.

மாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?

மாநிலங்களவை எம்பி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுகவிற்கு நான்கு இடங்களும் அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

மேலும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட வைகோ, எம் சண்முகம் ,முகமது அப்துல்லா, பி வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரன், ஆகிய 6 எம்பி களின் பதவிக்காலம் ஜூலை 27ஆம் தேதி உடன் நிறைவடைகின்றது. அதனை அடுத்து தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய எம்பிகள் தேர்வு செய்ய வேண்டும்.

வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எம் பி களை தேர்வு செய்ய தயாராக இருக்கின்றனர். அதிமுக சார்பில் தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2ஆம் தேதி வேப்பமனுக்கள் தாக்கல் தொடங்கியது.

சுயேச்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். முன்னதாக திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர் மற்றும் மநீக தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,அமைச்சர்கள் ஏவா வேலூ, ராஜேந்திரன், எம்பிக்கள் டி ஆர் பாலு, கனிமொழி, கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப் பெருந்தகை, திருமாவளவன், ராமச்சந்திரன், பே சண்முகம், முகமது அபுபக்கர், ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மேலும் பகல் ஒரு மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் கட்சியின் வேட்பாளர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். திமுக சார்பாக 4 பேரும் அதிமுக சார்பாக இரண்டு பேரும் சுயேச்சி வேட்பாளர்கள் மூன்று பேர் என மொத்தம் ஒன்பது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை வாக்குகள் எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படாத பொழுது திமுக மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது. அதில் உதவித்தொகை குறித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்காக தற்போது உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். முதலில் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில் மூலம் தங்களுடைய சேமிப்பு கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்கிறதா என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி. அதன் பிறகு அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து முடிந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. பள்ளி திறந்த முதல் நாளிலிருந்து மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் மாணவர்கள் அரசு அங்கீகரித்த சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும்.

அதில் இறுக்கமான முக்கால் அளவுள்ள பேண்ட் இறுக்கமான மற்றும் முழங்கை சட்டை உள்ளிட்டவற்றை அணிந்து வர அனுமதி கிடையாது. மேலும் மாணவர்கள் அதிகளவு முடி வைத்திருக்கக் கூடாது, கத்தி, கத்திரிக்கோல் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை பள்ளிக்கு மாணவர்கள் எடுத்து வர அனுமதி கிடையாது. வண்ண கயிறுகள், ஜாதி அடையாளம் குறிக்கும் பனியன் அணிவது, அடையாள ஸ்டிக்கர் ஒட்டிய சைக்கிள் எடுத்து வருவது உள்ளிட்டவற்றைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் பல வண்ணங்களில் ரிப்பன் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கு வரும் பொழுது தூய்மையான சீருடை அணிந்து காலணி அணிந்து வருவது அவசியம். மாணவர்களுக்கு விடுமுறை தேவைப்பட்டால் அவர்களுடைய பெற்றோர் மூலம் ஆசிரியரிடம் தெரிவித்த பிறகே விடுமுறை எடுக்க வேண்டும். இல்லையெனில் மறுநாள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்? அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்கள். அப்போது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு,

முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் மக்கள் பொது இடங்களுக்கு சகஜமாக சென்று வருகின்றனர். ஆனால் தற்போது இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்து காணப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் தமிழகத்தில் பொது மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல, ஆனால் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வழியாகும். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

வீரியம் குறைவான கொரோனா தான் பரவி வருகின்றது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்வது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை; உடனே விண்ணப்பியுங்கள்!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்காஜம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறுகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள நபர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20,000 மற்றும் ஈமச்சடங்கு செய்வதற்கு உதவித்தொகை 2500 என மொத்தம் 22,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

மேலும் இதில் ஈமச்சடங்கிற்காக உதவித்தொகை 2500 ரூபாய் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டிருந்தால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக இருக்கக்கூடிய நபரின் இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

மேலும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, திருமண உதவித் தொகை, கல்வித் தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் மற்றும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை பெற நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து சுமார் ஆறு மாதத்திற்குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தனி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விண்ணப்பிப்பதற்கு காலதாமதம் ஆனால் விண்ணப்பங்களுக்கு உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற முடியும். அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுக்குள் விண்ணப்பித்து முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.