Saturday, July 12, 2025
Home Blog Page 33

இனி பட்டா பெறுவது இவ்வளவு சுலபமா; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!

நிலம் என்பது முக்கிய சொத்தாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு பட்டா பெறுவதில் பல்வேறு சிரமம் ஏற்படுகின்றது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் எனவும் புதிய முறையை பத்திரப்பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.

நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துக்களை இ சேவை மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்பிரிவு தேவையற்ற பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் நில அளவுத்துறை இயக்குனர் கூறுகையில் தமிழக அரசின் உத்தரவின்படி பட்டா பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும். சில சொத்துக்களில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் பட்டா மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பட்டா வாங்குவதில் சிரமம் இருந்ததால் தமிழக அரசு பட்டா சிட்டா போன்றவற்றை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது.

பட்டா வாங்குவதற்கான வழிகளை மிகவும் எளிமைப்படுத்தி கொடுத்துள்ளனர். முன்பிருந்த காலகட்டத்தில் சர்வேயரால் ஒரு மாதத்திற்கு 30 மனுக்கள் அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 80 என்ற அளவில் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் சிரமம் அடையாமல் இருக்க தமிழக அரசு புதிய செயல்பாட்டினை கொண்டு வந்துள்ளது.

அரசு ஊழியர்களை குஷி படுத்திய தமிழக அரசு; பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்!!

தமிழக அரசு சார்பாக தற்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வு புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம் இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராஜஸ்தான், திரிபுரா,உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதிமுக ஆட்சி முடிந்து 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுகவின் 309 வது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வு ஊதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு கொரோனா காலகட்டம், மோசமான நிதிநிலை குறித்த காரணங்களை கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.

ஜூன் மாதத்தில் 2 நாட்கள் மது கடைகள் மூடல்; எங்கு தெரியுமா!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பகுதியாக தமிழ்நாடு கேரளா எல்லையோரமாக நிலம்பூர் உள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பகுதி என்றாலும் தமிழக எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த பகுதி இருப்பதினால் தமிழர்கள் சிலர் வசித்து வருகின்றனர்.

மேலும் பணி நிமிர்த்தம் காரணமாகவும் அங்கு தமிழர்கள் வசித்து வரும் நிலையில் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் பகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஜூன் 19ஆம் தேதி அன்று பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான ஜூன் 18 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எந்த இடத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதுபோல ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்காக நிலம்பூர் பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றி பயணத்திற்கு தயராகும் தவெக தலைவர் விஜய்; அனல் பறக்கும் தேர்தல் களம்!!

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது கட்சியை தயார் படுத்தி வருகின்றார்.

தற்போது தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். பூத் கமிட்டி லெவல் வரை கட்சியை வலுப்படுத்த பூத் கமிட்டி ஏஜென்ட் மாநாட்டை ஐந்து முக்கிய நகரங்களில் நடத்த தற்போது தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. கோவையில் வெற்றிகரமாக பூத் கமிட்டி மாநாடு நடந்து முடிந்த நிலையில் அதனை தொடர்ந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது ஜனநாயகன் படம் சூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் தனது அரசியல் சுற்றுப்பயணம் குறித்து விஜய் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றார். விஜய் அரசியல் சுற்றுப்பயணத்திற்கு பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை ஜூலை மாதம் தொடங்கலாம் என தவெக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. 42 நாட்கள் தொடர் சுற்றுப்பயணத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த மக்களை விஜய் சந்திக்க இருக்கின்றார். அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகளுக்கு ஒரு சில அட்வைஸுகளை தலைவர் விஜய் வழங்கியுள்ளார்.

மேலும் தவெக குறித்து விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். வரும் 2026 தேர்தலை குறி வைத்து முழுவதும் தேர்தலை நோக்கி இயங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அசத்தல் கன்டுபிடிப்பு!! நீரில் போட்டால் கரையும் பிளாஸ்டிக்!!

Japan: புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதில் ஜப்பானியர் பேர் போனவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் தற்போது கடல் நீரில் கரையும் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர். நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதுடன், கடல் வாழ் உயிரினங்கள் என அனைத்திற்கும் சிரமத்தை தான் ஏற்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி நம் பின்னணி சந்ததியினருக்கு சுற்றுச்சூழலை சீர்கேடு அடைந்து விடாமல் கொடுக்க வேண்டிய முழு பொறுப்பும் நம்முடையது.

ஆனால் தற்போது காற்று நீர் நிலம் என பலவற்றிலும் மாசு ஏற்பட்டுவிட்டது. தற்போது அதனை சுத்திகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அந்த வகையில் பல ஆண்டுகளாக ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது ரீதியாக சோதனை செய்து வந்துள்ளனர். அந்த சோதனையானது வெற்றியடைந்துள்ளது பாராட்டுக்கூடியது. இதனை மக்களுக்கு விளக்கு வகையில் வாகோ நகரில் உள்ள ஆய்வகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை வைத்தனர். அதில் கடல் நீரில் இவர்கள் கண்டுபிடித்த பிளாஸ்டிக் துண்டை போட்டனர்.

போட்ட ஒரு மணி நேரத்திலேயே கண்ணுக்கு தெரியாமல் கரைந்து போனது. இதில் நல்லது என்னவென்றால் இப்படி கரையும் பிளாஸ்டிகானது தனது எந்த ஒரு நச்சுக்களையும் கடலில் கலப்பதில்லை. அந்த வகையில் இது மக்களுக்கு ஏற்ற ஒன்றுதான் எனக் கூறுகின்றனர். ஆனால் இதனை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது மேற்கொண்டு இதனை தொழில் ரீதியாக எப்படி நகர்த்துவது என எந்த திட்டமும் தற்போது இல்லையாம். இது ரீதியாக அந்த ஆய்வாளர்கள் குழுவின் மூத்த நிர்வாகி ஐடா பேசுகையில், உப்பு தண்ணீர் பட்டால் கரையும் தன்மை கொண்ட இந்த பிளாஸ்டிகானது யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.

அதேபோல இது மண்ணிலும் கரையக்கூடியது. இதன் மீது ஒருவித கோட்டிங் பூசப்படும் நிலையில் மக்கள் தினசரி உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் இதை வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த பிளாஸ்டி-க்கு மேல் உபயோகிக்கப்படும் கோட்டிங் எந்த வகையை சார்ந்தது என்பது குறித்த ஆராய்ச்சி நடந்து வருவதாக தெரிவித்த அவர், இது மாசுபாட்டை குறைப்பதற்காக கொண்டுவரப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

பாமக அப்பா மகன் மோதல்.. பாஜக தான் முக்கிய காரணம்- பளீச் பதிலளித்த நயினார்!!

BJP PMK: அதிமுகவானது இந்த முறை கட்டாயம் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளது. மற்றொரு பக்கம் பத்தாண்டு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. இதன் மத்தியில் பெரும் அழுத்தத்தை திமுக கொடுப்பதால் இம்முறை தங்களுக்கு ஆதரவாக அதிமுக தான் வரவேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் இவர்களின் கூட்டணியை ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு வருகை புரிந்து அமித்ஷா உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உடனடியாக தனது கூட்டணி கட்சியான பாமக கட்சிக்குள்ளையே மோதிக் கொள்கின்றனர்.

அதிமுகவும் அதே நிலையில் இருப்பதால் வாக்கு சதவீதத்தில் வேறுபாடு உள்ளது. அதேபோல பாமகவும் இருந்தால் கூட்டணி வைத்தும் இவர்களுக்கு பயனளிக்காது. இதனை சரி செய்ய ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று ராமதாசை காண தைலாபுரத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நான் எனது சிநேகிதனை தான் சந்தித்தேன், பாஜக என்னை அனுப்பவில்லை என்றவாறு தெரிவித்தார். அதுமட்டுமின்றி அன்புமணி வந்தது எனக்கு தெரியவே தெரியாது எனவும் கூறினார். ஆனால் இதெல்லாம் முற்றிலும் பொய் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

உட்கட்சி மோதலை சரி செய்ய தான் ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக அனுப்பி வைத்துள்ளது. ஏனென்றால் இம்மாதம் எட்டாம் தேதி மதுரைக்கு அமித் ஷா வரவுள்ளார். மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் உள்ளார். இவர் வருகைக்குள் பாமகவின் உட்கட்சி மோதலை சரி செய்து விட வேண்டும் என்ற   நோக்கத்தில் குருமூர்த்தியை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இது ரீதியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பிய போது, அமித்ஷா மதுரைக்கு வரும்போது அவரை அன்புமணி சந்திப்பது குறித்து எதுவும் திட்டமிட படவில்லை. அதேபோல பாமகவின் உட்கட்சி மோதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் பாமக என்ட்ரி.. யாரும் எதிற்பாரா டிவிஸ்ட்!! பாஜக – வுக்கு அன்புமணி வைக்கப்போகும் ஆப்பு!!

PMK TVK: 2026 ஆம் ஆண்டு நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து தற்போதையிலிருந்தே வியூகம் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சட்டமன்றத் தேர்தல் மக்களவை தேர்தல் போன்றவற்றில் யாருடன் கூட்டணி வைத்தார்களோ அவர்களுடனே கூட்டணி வைக்க விரும்புகின்றனர். அதைத்தான் வெற்றி கூட்டணி என்பதையும் பெருமையுடன் கூறி வருகின்றனர். ஆனால் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணி மாற்றம் உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில் தற்போது வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளனர். இப்படி இருக்கையில் தினகரன் பாஜக கூட்டணியில்தான் உள்ளார். ஆனால் தினகரன் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை. மாறாக நாம் தமிழர் கட்சி, பாமக தேமுதிக உள்ளிட்டவைகள் தங்களது நிலைப்பாட்டை கூறாமலேயே உள்ளனர். இவர்கள் அனைவரும் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று கேள்வி உள்ளது.

குறிப்பாக பாமக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற பேச்சு அடிபட்ட வந்த நிலையில் இந்த எம்பி தேர்தலால் அது சாத்தியமில்லை என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். மாறாக அன்புமணி ராமதாஸ், விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறாராம். புதிய கட்சியுடன் கூட்டணி வைக்கும் பொழுது கட்டாயம் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என கூறுகின்றனர். ஏனென்றால் விஜய் கட்சிக்கு நல்ல மவுசு இருக்கும் நிலையில் இது ரீதியான முடிவை அன்புமணி எடுத்துள்ளாராம்.

திமுக தங்களுக்கு எதிராக வலுவான கூட்டணி ஏதும் அமைந்துவிடக் கூடாது என்று எண்ணி வரும் நிலையில் விஜய்யுடன் கைகோர்த்து புதிய கூட்டணியை கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு; இந்த இரண்டு நாளை மிஸ் பண்ணிடாதீங்க!!

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் மீண்டும் கடந்த ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் பல நாட்களுக்குப் பிறகு பாடங்களை படிக்க தற்போது தொடங்கியுள்ளனர். அதனால் ஆசிரியர்களின் பங்கு 

மிக முக்கிய ஒன்றாக மாறி உள்ளது. இந்நிலையில் பல பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை என தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருக்கின்றது. அதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாகவும் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. மேலும் ஆசிரியர்கள் வேலைக்காக சொந்த ஊரை விட்டு பல மாவட்டங்களைக் கடந்து வெளியே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அதனால் சொந்த மாவட்டம் அல்லது சொந்த மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டத்தில் பணி மாறுதல் கேட்டு வரும் நிலையில் இணைய வழி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த கல்வி ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் ஆதிதிராவிடர் நல ஆணையர் இது குறித்து கூறுகையில் இந்த கல்வியாண்டிற்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதாவிடர் நல நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆரம்பப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்சி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், காப்பாளர், இடைநிலை ஆசிரியர் காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டத்தை விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.

காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் பணியிடம் மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு; இதை உடனே பண்ணிடுங்க இல்லைன்னா அபராதம்!!

நிரந்தர கணக்கு எண் என்பது சுருக்கமாக பான் கார்டு என கூறப்படுகின்றது. 10 இலக்கு எண்களை கொண்ட அடையாள அட்டையாக உள்ளது. இந்திய குடிமக்களுக்கான முக்கிய அடையாளமாகவும் பான் அட்டை பார்க்கப்படும் நிலையில் பண பரிவர்த்தனைகளுக்கு அவசியமானதாக இருக்கின்றது.

பான் அட்டை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டு ஆக்டிவேடாக இல்லை என்றால் அல்லது உங்களிடம் இரண்டு பான் அட்டைகள் இருந்தால் வருமானவரித்துறை தற்போது பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பலரும் தங்களுடைய பான் கார்டு ஆக்டிவாக இருக்கின்றதா இல்லையா என தெரியாமல் உள்ள நிலையில் அதை பயன்படுத்துகின்றார்களா அல்லது அவர்களுக்கே தெரியாமல் இரண்டு பான் அட்டை வைத்திருக்கிறார்களா என்பதை உடனடியாக கவனிக்க வேண்டும். மேலும் பேன் கார்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு, வங்கி முதலீடு, சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் வாங்குதல், போன்ற முக்கியமான நிதி பரவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது பான் அட்டை ஆக்டிவாக இருக்கின்றதா என்பதனை வீட்டில் இருந்தே எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.

அதற்கு வருமான வழித்துறையின் மின்னணு தகவல் வலைதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு கீழே உள்ள குயிக் லைன்ஸ், அல்லது இன்ஸ்டன்ட் இ சர்வீஸ் பிரிவில் வெரிபை யுவர் பான் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பான் கார்டு எண், முழு பெயர் ,பிறந்த தேதி மற்றும் பான் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு தங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஓடிபி கிடைக்கும். அதை உள்ளிட்ட பிறகு உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருக்கின்றதா, இல்லையா என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் இரண்டு பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக அதில் ஒன்றை வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இரண்டு பான் அட்டை வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வருமானவரித்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படலாம். எந்த ஒரு சிக்கலிலும் மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு உடனடியாக பான் கார்டை ஆக்டிவேட் செய்து, இரண்டு அட்டைகள் வைத்திருந்தால் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .

அதிமுக தலைமை மீது அப்சட்டில் இருக்கும் ஜெயக்குமார்; மாநிலங்களவை எம்பி சீட்டு கொடுக்காததற்கு காரணம் இதுதான்!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டது. வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் காலியாக உள்ள ஆறு பதவிகளில் சட்டமன்ற பலத்தின் அடிப்படையில் திமுக சார்பாக 4 உறுப்பினர்களும் அதிமுக சார்பாக இரண்டு உறுப்பினர்களையும் தேர்வு செய்ய இருக்கின்றனர்.

திமுக சார்பாக வில்சன், எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும் சல்மா போட்டியிடுகின்றனர். திமுக ஒதுக்கீடு ஓர் இடத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து அதிமுகவில் உள்ள இரண்டு எம்பிகள் சீட்டு யாருக்கு என பல்வேறு கேள்விகள் எழுந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சீட்டு கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் ஜெயக்குமார் அதிருப்தியில் இருக்கின்றார். குறிப்பாக கடந்த 2021 தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பாஜக தான் காரணம் என வெளிப்படையாக ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பதவியில் இருக்க தனக்கு மட்டும் பதவி இல்லை என வருத்தத்தில் இருக்கின்றார்.

அதனால் அவருக்கே வாய்ப்பு அதிகம் என அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டது.ஆனால் அதிமுகவின் வழக்கு விவரங்களை கையாளும் இன்பதுரை மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக அவை தலைவர் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர் ஜெயக்குமார் அதிமுக தலைமை மீது மிகவும் வருத்தத்தில் இருக்கின்றார் என கூறப்படுகின்றது.

வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கோவையில் அவரிடம் அது தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அவசரமாக பொள்ளாச்சிக்கு செல்கிறேன் எனக்கூறி சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு விளக்கத்தையும் அவர் தற்போது வரை தரவில்லை.

மேலும் கடந்த ஜூன் இரண்டாம் தேதி வடசென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை திட்டத்திற்கு அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அந்த போராட்டத்தில் கூட ஜெயக்குமார் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா வளர்மதி கலந்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமாரை கலந்து கொள்ள அறிவுறுத்தியும் அவர் கலந்து கொள்ளவில்லை என அதிமுக வட்டாரங்கள் பேசி வருகின்றனர். மேலும் வரும் 2026 தேர்தலுக்கு ஒரு ஆண்டு உள்ள நிலையில் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் மீண்டும் நிறுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

ஆனால் மாநிலங்களவை சீட்டுக் கொடுக்காததால் ராயபுரம் தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றால் மாநிலங்களவை பதவியை ஒரே வருடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மாநில அரசியலில் இருக்க வேண்டும் என்றே இபிஎஸ் விரும்புகிறார் அதனால் ஜெயக்குமாருக்கு சீட்டு வழங்காமல் தவிர்த்து விட்டார் எனவும் கூறப்படுகின்றது.