Tuesday, July 15, 2025
Home Blog Page 3384

அரசின் அதிகாரத்தை நீதிமன்றம் எப்படி கையிலெடுக்க முடியும்? மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்த அதிரடி கருத்து!

0

திருச்சி காவிரி- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது போன்ற பொதுநல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்தால் அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொண்டதை போலாகிவிடும் என ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறது.

காவேரி கொள்ளிடம் ஆறுகள் திருச்சி முக்கொம்புவில் பிரிந்து கல்லணையில் ஒன்றிணைகின்றன. இடையில் முக்கொம்பு முதல் கல்லணை வரையில் தீவு பகுதியாக இருக்கிறது கம்பரசன் பேட்டை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ளது உத்தமர் சீலையிலிருந்து காவிரியின் குறுக்கே வெங்கூருக்கும் கிளி கூடுவிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இடையாற்று மங்கலத்திற்கும் தடுப்பணைகள் அமைந்திருப்பதால் விவசாயம் குடிநீருக்கு உதவும் நீர் வளத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்டவற்றுக்கு மனு அனுப்பினோம். தடுப்பணைகள் அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்ரீரங்கம் உத்தமர்சீலி விஜயகுமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி பி என் பிரகாஷ் ஆர் ஹேமலதா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வது சாதித்து வந்தது கிளிக்கோடு காவிரியின் இடது கரை கொள்ளிடத்தில் வலது கரைக்கு இடைப்பட்ட பகுதியில் கல்லணைக்கு மேற்புறம் அமைந்திருக்கிறது. கல்லணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலமாக கிளிக்கூடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிணறுகள், செறிவூட்டப்படும் நாட்டு வாய்க்கால் மூலமாக பாசன வசதி பெறுகிறது.

 இடையாற்று மங்கலம் கொள்ளிடத்தில் இடது கரையில் அமைந்திருக்கிறது. இதன் மூலமாக ஐயன் வாய்க்கால் செல்வதால் பாசன வசதி பெறுகிறது தடுப்பணைகள் அமைக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று நீர்வளத்துறை பொறியாளர் தெரிவித்திருக்கிறார் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தடுப்பணைகள் அமைக்க வேண்டிய அவசியம் எதுவும் எழவில்லை என்று பொறியாளர் அறிக்கையை வழங்கியிருக்கிறார். இதில் நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் இருப்பதாக கருத இயலாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட இயலாது.

இத்தகைய பொதுநல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்தால் அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் கையிலெடுத்துக்கொண்டது போலாகிவிடும் என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்!

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (63). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (52). பாச்சமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் பழனிசாமி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.

அவர் தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும் தற்போது உயிரிழக்க போவதாகவும் கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனைக் கேட்டு ஜெயலட்சுமி அதிர்ச்சி அடைந்து விரைந்து  வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார் அப்போது பழனிசாமி குடிபோதையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து புளியம்பட்டி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?

தென் கொரியாவை சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்- கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்று இருக்கின்றார். அங்கு சென்ற காதலன் காதலியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக ஆகிவிட்டது. இதில் மூக்கு சிவந்து  கோபமடைந்த காதலன் நேராக காதலியின் பெட்ரூம் அறைக்கு சென்றுள்ளார்.அந்த அறையில் காதலி ஹேண்ட் பேக்கை ஒன்று வைத்திருந்தார்.

அந்த பேக்கில் காதலன் சிறுநீர் கழித்திருக்கின்றார். இதனைப் பார்த்த காதலியோ கோபத்தின் உச்சிக்கு சென்று இருக்கிறார். இந்த பேக்கின் விலை ஒன்றரை லட்சம் இருக்கும். விலை உயர்ந்த இந்த ஹேண்ட் பேக்கின் மீது சிறுநீர் கழித்ததால் காதலி அதற்கு நஷ்ட ஈடுதருமாறு  நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

விசாரணையின் போது அந்த காதலன் நான் சிறுநீர் கழிக்கவில்லை. தன் காதலியை வெறுப்பேற்றுவதற்காக அப்படி செய்ததாக நடித்தேன் என்று காதலன் கூறியுள்ளார். இருந்தாலும் இதனை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளாத காதலி பரிசோதனை செய்யுமாறு கூறியிருந்தார்.

பரிசோதனையில் காதலன் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காதலனை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு பேக்கீல் சிறுநீர் கழித்ததற்காக நீதி மன்றம் அவருக்கு ஒன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் சிலர் இதனை விமர்சித்து கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்! தமிழக அரசுக்கு வேண்டுதல் விடுத்த மருத்துவர் ராமதாஸ்!

0

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்பனை செய்யவோ மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 926 கோடி ரூபாயை செலுத்த தவறியதன் காரணமாக, மின் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது இது மிகப்பெரிய பின்னடைவாகும் என தெரிவித்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக தான் தமிழக அரசால் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்குவதை தவிர்த்து மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான் தமிழ்நாட்டின் மின்சார தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைய தொடங்கியிருக்கின்ற நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு உண்டாகக்கூடும். பொது மக்களின் வாழ்க்கையை மட்டும் அல்லாமல் தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இந்த விவகாரம் பாதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மண்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விளக்கச் செய்ய வேண்டும். மின்தடை உண்டாகாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும், உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் இதன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்ப மாட்டாரா? பார்த்துவிடலாம் அண்ணாமலை விட்ட சவால்!

0

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே பாஜகவின் சார்பாக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றும் போது 70 ஆண்டு கால தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

டெல்லிக்கு செல்வதற்கு முதல்வருக்கு பயம். அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் டெல்லி செல்வதற்கு தயங்குகிறார்கள்.

பாஜக அருகில் வருவதற்கே ஒரு தகுதி வேண்டும், திமுகவில் எந்த தலைவருக்கும் பாஜக தொண்டனுடன் நிற்பதற்கான தகுதி இல்லை என தெரிவித்தார். மேலும் இது ஒரு ஸ்டிக்கர் அரசு திமுக ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்னரே நான் படித்த கல்லூரி ஆரம்பமாகிவிட்டது என கூறினார்.

நான் படித்ததற்கு திமுக காரணமா? என்பது எனக்கு தெரியாது, ஆனால் நான் அரசியலுக்கு வந்ததற்கு திமுக தான் காரணம். நடுத்தர சாதாரண வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த என்னை திமுக நாசக்கார ஆட்சியின் பாதிப்பு தான் அரசியலுக்கு வரவைத்தது என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே குடும்பம் போல இங்கே ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது, சிவசேனா கட்சியைப் போல இங்கே தமிழகத்தில் திமுக உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் பத்து பொருத்தமும் சரியாக இருக்கிறது.

அங்கே ஒரு ஏக்நாத்ஷிண்டே கிளம்பிவிட்ட நிலையில், இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்ப மாட்டாரா? நிச்சயமாக கிளம்புவார். அதன் காரணமாக தான் திமுகவிற்கு தற்போது நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திமுகவிலிருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்புவார் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!

பெருந்துறையை அடுத்துள்ள  நசியனூர்  ராயபாளையம்  மரம்புளியன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகன் ஸ்ரீதர் (14). இவர் நாசியனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் வழக்கமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மதியமே வீடு திரும்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரத்தின்  தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் மாணவர் ஸ்ரீதர் வீடு திரும்பவில்லை அதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஸ்ரீதரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீதரை யாரேனும் கடத்திச் சென்றுள்ளார்களா அல்லது விபத்து ஏதேனும் நடந்துள்ளதா எனும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனி வன்முறையில் ஈடுபட்டால் அவ்வளவுதான்! பாஜகவினரை எச்சரித்த செந்தில் பாலாஜி!

0

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 15 ஆம் தேதி கோவை வந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது.

ஆனாலும் அவருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானதை தொடர்ந்து முதலமைச்சர் கோவை பயணம் திடீரென்று தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்வரும் 24 ஆம் தேதி கிணத்துக்கடவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கொள்கிறார்.

இதனை அடுத்து முதலமைச்சர் கோவை வருவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது தெரிவித்ததாவது எதிர்வரும் 23ஆம் தேதி 1,50,000க்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.

24 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் கிணத்துக்கடவு பகுதியில் 1,06,641பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களையும், ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து பொள்ளாச்சியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமை தாங்குகிறார். மேலும் அப்போது பல்வேறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையவுள்ளார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

100 யூனிட் மின்சாரம் ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல தான் இலவசம் மடிக்கணினி, சைக்கிள், உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் இலவசம் அடித்தட்டு மக்களை கைகோர்த்து அழைத்துச் செல்கின்றது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்துவதே தமிழக அரசின் தலையாய கடமை என தெரிவித்தார்.

இலவச திட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்த செந்தில் பாலாஜி இலவசம் வேண்டாம் என தெரிவிப்பவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டினார். இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் என்றும், அவர் தெரிவித்தார்.

அதோடு முதலமைச்சர் என் வருகைக்கு நாங்கள் கொடிகள் மற்றும் பேனர்களும் வைப்பதில்லை முதல்வருக்காக நாங்கள் சுவரொட்டிகள ஒட்டியதற்கு அந்த சுவரொட்டியின் மீது சுவரொட்டியை ஓட்டுவோம் என சொல்வது எப்படி? என கேள்வி எழுப்பினார் அமைச்சர் அதோடு போஸ்டர் ஓட்டும் விவகாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் வகையில் ஒரு கூட்டம் செயல்படுவதாகவும், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், தெரிவித்தார்.

பாஜகவை சார்ந்தவர்கள் தங்களுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என செயல்படுகிறார்கள் என்றும், இனிவரும் காலங்களில் யாராவது கோயம்பத்தூர் மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அதோடு அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் கோயம்புத்தூர் வரும்பொழுது சுவரொட்டிகளை ஓட்டுகிறார்கள், அதனை நாங்கள் தடுக்கிறோமா? யாரேனும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.

தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டம் தோப்பூர்  பகுதியை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது வயது 47. இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து தோப்பூர் குமியப்பட்டியை நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. அதில் கோவிந்தராஜ் கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின்  பின் சக்கரம் கோவிந்தராஜின் தலைமீது ஏறி இறங்கியது. சம்பவ  இடத்திலேயே தலை நசுங்கி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

0

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்  கூறியிருப்பதாவது,தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாய்கிறது.

ஆற்று நீர் பாய்ந்த போதிலும் அந்த மாவட்டத்தில் பாசனத்திற்கும் நீரில்லாமல் விவசாயிகள் அவஸ்தி படுகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிக்கவும் நீரில்லாமல் போயின. அறிவியலும்,தொழில்நுட்பமும் வளர்ந்தும் கூட நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த சிக்கலுக்கு இப்போது வரை முழு தீர்வு காணப்படவில்லை.

இதுதான் காலம் காலமாக நம்மை வேதனை அளிக்க செய்கின்ற ஒரு உண்மை. காவிரி உபரி நீர் திட்டம் விரைவில்  செயல்படுத்தப்படும்,தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும்,வேலை வாய்ப்பு பெருகும், என அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் அனைவரின்  முன்னிலையிலும் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. இன்றைய திமுக ஆட்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த போதும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனாலும் தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

இச்செயல் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இந்தத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை காலை முதல் மூன்று நாட்களுக்கு நடைப்பயண பிரச்சாரம்  மேற்கொள்ள உள்ளேன்.

இந்த சூழ்நிலையில் ஆவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணத்தில் இதனை செய்கின்றேன். பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி,தருமபுரி,சோலைக்கொட்டாய்,கடத்தூர்,கம்பைநல்லூர், மொரப்பூர்,அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி, வழியாக வரும் ஞாயிற்று கிழமை

ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாலை பொம்மிடியில்  நடைபயணத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன் என அந்த அறிவிப்பில்  கூறியிருந்தார்.அவர் கூறியதை தொடர்ந்து பல்வேறு கட்சியினருக்கிடையே சலசலப்பு பேச்சுக்கள் ஏற்பட்டது.மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

இதுதான் உங்கள் சமூக நீதியா? முதல்வருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

0

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தைச் சார்ந்த நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த அஸ்வினி எங்களுடைய வீட்டிற்கு முதலமைச்சர் வந்தார் எங்களுக்கு வீடு தருவதாகவும் 12 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாகவும், கூறினார்.

ஒன்றரை வருட காலங்கள் ஆன பிறகும் இன்னும் கடன் வழங்கவில்லை எனக் கூறியிருக்கிறார். அந்தப் பெண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தற்போது விடுத்திருக்கின்ற அறிக்கையில் விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டிடும் திமுக அரசு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

தேர்தலுக்குப் பிறகு கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறது. இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்களுடைய சமூக நீதியா தமிழக முதலமைச்சரே என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.