அப்துல் அஜீஸ் எசார் இந்தியாவுக்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பேசுபவர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உயர் தளபதியாக இவர் உள்ளார். பாகிஸ்தானில் பஞ்சாப் மாவட்டத்தில் அப்துல் அஜீஸ் எசார் மர்மான முறையில் இறந்துள்ளார். அவரது உடலானது அதிகாலையில் அவரது உதவியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மர்மான முறையில் இறந்துள்ளது பெரும் வாரியாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்கு பெயர் போன ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!
அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!
Tamilnadu Gov: கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி தான் பேசப்படுகிறது. இது ரீதியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சமூக ஊடகமெங்கும் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அது முழுமையும் வதந்தி தான் தனியார் பேருந்து நிர்வாகம் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இது ரீதியாக நீதிமன்றம், மக்கள் கருத்தை கேட்டு தரவுகளை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.
அதை வைத்து தான் மக்கள் கருத்து கணிப்பு கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் தற்போது பேருந்து கட்டணம் உயர்வது குறித்து கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்தியுள்ளோம். தனியார் பேருந்து கட்டணம் உயர்த்துவதற்கு முன்பாக அரசு பேருந்து கட்டணத்தில் மாற்றம் உண்டாக வேண்டும். ஆனால் அரசு பேருந்து கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் வராத நிலையில் தனியார் பேருந்து நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெயின் விலையானது குறைந்த போதிலும் மத்திய அரசு டீசல் விலையை குறைத்த பாடில்லை அப்போதும் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனை சமாளிக்க முடியாமல் தான் தற்பொழுது தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இது ரீதியாக தக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும். அதுமட்டுமின்றி சரியான அறிவுரையும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
திமுக னா ஆளுநருக்கு “பயம்”.. அதனால் தான் உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்- ஸ்டாலின்!!
DMK BJP: சட்டமன்ற பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாகவே அவர்களை பதவியில் நியமிக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு முதன்மை உதவி செய்வதன் மூலம் மற்றவர்களைப் போல அவர்களையும் சம அளவில் நடத்துவது உறுதி செய்யப்படும்.
இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாகவே பல மசோதாக்கள் ஆளுநர் கிடப்பில் போடப்பட்டதை அடுத்து தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்ற பிறகு தான் அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைத்தது. அப்படி இருக்கையில் தற்போதும் அதேபோல் ஆளுநர் செய்ய வாய்ப்புள்ளது என பலர் கூறி வந்தனர். ஆனால் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதாக்களுக்கு உடனடியாகவே ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இது ரீதியாக செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய போது, ஆளுநர் ஒப்புதல் அளித்து விடுவார் என்பது நான் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான். ஒப்புதல் அளிக்காவிட்டால் மீண்டும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என்ற பயத்தில் தான் அவர் கையெழுத்திட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஆளுநர் திமுகவை கண்டு அஞ்சுகிறது என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
மீண்டும் லாக்டவுன்!! 4 ஆயிரத்தை கடந்த கொரோனா.. ஒரே நாளில் அடுத்தடுத்து பலி!!
Corona: 2019ஆம் ஆண்டு கடந்து கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேற்கொண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்களை பாதுகாக்கும் சூழல் உருவானது. பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாகத்தான் இருந்தது. நாளடைவில் கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டு மக்களுக்கு செலுத்திய நிலையில் அதன் வீரியம் குறைந்து கட்டுப்பாடுகளும் தளர்வு செய்யப்பட்டது.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மீண்டும் கொரோனாத் தொற்றின் வீரியமானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 4026 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐந்து பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதன் வீரியம் குறைவாகத்தான் உள்ளது என சுகாதாரத்துறை ஆதரவு அளித்தாலும் முகக் கவசம் அணியும் படியும் பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கும் லேசான காய்ச்சல் இருமல் போன்ற எந்த அறிகுறி இருந்தாலும் வீட்டுக்கு அனுப்பும் படி பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி கொரோனா தொற்று அதிகரிக்கவே மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொற்று பாதிப்பு அதிகரித்தால் கட்டாயம் மீண்டும் ஊரடங்கு போடப்படும் எனக் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
தொழில் முனைவோர்களுக்கு லட்ச கணக்கில் கடன் உதவி.. தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மாநில நிதி கழகமாக 1949 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
அதிகளவு தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகின்றது. இந்நிலையில் பல்வேறு சிறப்பு திட்டத்தின் மூலமாக கடன் உதவி பெற உதவி செய்து வருகின்றது. நடப்பு நிதியாண்டில் கடன் இலக்காக 2117 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மட்டும் கடன் 92 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட இருக்கின்றது.
அதனால் தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சம் 150 லட்சம் வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு.. உடனே விண்ணப்பியங்கள்!!
திமுக கடந்த தேர்தலின் பொழுது மகளிர்க்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மகளிர் உரிமைத்தொகை அமல்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வந்த நிலையில் மகளிரின் வங்கி கணக்குகளில் நேரடியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தகுதியுள்ள சில பெண்கள் இந்த திட்டத்தில் இணையாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக விண்ணப்பம் பூர்த்தி செய்யாதது, ஆவணங்கள் இல்லாதது, அல்லது தகவல் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் தொகை கிடைக்காமல் உள்ளது. அதனால் மீண்டும் இந்த திட்டத்தில் பெண்களை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. விடுபட்ட மகளிர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்காக தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஜூன் நான்காம் தேதி( நாளை) முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த முகாம்களில் தகுதியுள்ள பெண்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் இந்த விண்ணப்பத்திற்கு தேவையானது அடையாள அட்டை,வங்கி கணக்கு விவரங்கள், மற்றும் குடும்ப அட்டை முகாம்களில் சரிபார்க்கப்படும். இந்த முகாம்கள் இலவசமாக நடத்தப்படுவதால் எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் மகளிர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட பிறகு ஜூலை 2025 முதல் புதிய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்களை சந்திக்க தயாரான விஜய்…இரண்டாம் கட்ட மாணவர்கள் சந்திப்பு எப்போது தெரியுமா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் மாணவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 தேர்தலுக்காக தன் கட்சியை தயார்படுத்தி வரும் நிலையில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மாணவர்களை முதற்கட்டமாக சந்தித்தார்.
இந்நிலையில் ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை வரும் ஜூன் நான்காம் தேதி சந்தித்து பாராட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக இருக்கின்றது. இந்த ஆண்டு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முதற்கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட மாணவர்கள் சந்திப்பதற்கு விஜய் தயாராகியுள்ளார். தொகுதி வாரியாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பட்டியல் தயார் செய்து அனுப்பி வைத்தனர்.
இரண்டாம் கட்டமாக ராமநாதபுரம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி ,நெல்லை, திருப்பத்தூர், மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து பரிசு வழங்கி பாராட்ட இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் விஜய் நாள் முழுவதும் மேடையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் மாணவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து பேசுகின்றார். இது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்…50,000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!
தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. பாலின பாகுபாட்டை கலைப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் அதிகாரமளித்தலை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்களும் தரமான கல்வியை தொடரவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலமாக ஒற்றைப் பெண் குழந்தை இருக்கும் குடும்பங்களுக்கு நிலையான வாய்ப்புத் தொகையாக குழந்தையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த வைப்புத் தொகையானது தமிழ்நாடு பவர் பைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடேட்டில் வரவு வைக்கப்பட்டு வரும். குழந்தைக்கு 18 வயதை எட்டும் வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது. 18 வயதை குழந்தைய அடையும் பொழுது வட்டியுடன் சேர்த்து முழு தொகையையும் பெற முடியும்.
மேலும் இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது. பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவும் வகையில் ஆறு வயதில் இருந்து ஆண்டுதோறும் 1800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்கத்தொகையை பெற விரும்பும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இனி அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசலாம்… புதிய திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. ஆங்கிலம் கற்கும் திறனில் தனியார் பள்ளிகளுடன் அரசு பள்ளி போட்டியிட முடியாத சூழல் இருப்பதன் காரணமாக பெற்றோர்கள் தனியார் பள்ளியை நாடி செல்கின்றனர்.
அரசு நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக லெவல் அப் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளில் ஆங்கில திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் ஆங்கிலம் பேசுதல் மற்றும் எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எளிதில் ஆங்கில மொழியில் உள்ள அடிப்படை திறன்களை பெரும் வகையில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏழு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு மாத வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜூன் மாதத்துக்கான இலக்கு பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதனை ஆசிரியர்கள் எளிதாக பார்க்கும் வகையில் தனி இணையதளம் துவங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு அலுவலர்கள் மீளாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யுடன் இணையும் அதிமுகவின் முன்னாள் கூட்டணி கட்சி!! டோட்டல் அப்செட்டில் EPS!!
கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் செய்து வருகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் பொழுது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் புதிய தமிழகம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தோல்வியை சந்தித்தது. 2019 ஆம் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டனர். ஆனால் பட்டியலின வெளியேற்றம் குறித்து எந்த முடிவையும் பாஜக அறிவிக்காததால் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தேவேந்திர குல வேளாளர் வாங்கிய வங்கியை கணிசமாக வைத்துள்ளது. இந்நிலையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அண்மையில் திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இந்நிலையில் 2026 தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லாததால் விஜயின் தவெக கட்சியுடன் சேர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் முன்வைக்கும் கருத்துக்களை கிருஷ்ணசாமி தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் திமுகவை வீழ்த்த விஜய் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.