Thursday, July 17, 2025
Home Blog Page 40

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…பொதுமக்கள் பீதி!!

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்து வந்தனர். அதன் பிறகு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இந்தியா முழுவதும் இன்று காலை நிலவரப்படி சுமார் 3,961 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக சென்னை, மும்பை அகமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை அம்பாள் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தொற்று பாதித்த சிறுவன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பதால் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் தற்போது சிறுவனுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…பள்ளிகளுக்கு விடுமுறை விட அதிமுக வலியுறுத்தல்!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது. இந்தியாவில் 3961 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை, மும்பை ,அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதுச்சேரி வழியாக சென்னை, கடலூர், மகாபலிபுரம் ரயில் வழித்தட திட்டம் புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் எடப்பாடி யார் ஆட்சியின் பொழுது மத்திய அரசிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு ரயில் பாதை அமைக்க அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தரும் நிலையில் இரும்பல், சளி, தும்பல், அதிகளவு காணப்படுகின்றது. புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம், புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறையும் சுகாதார துறையும் இதற்கு அலட்சியம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

உதயநிதிக்கு மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்.. திடீரென அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!!

தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ள நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திமுக வில் முழு நேர அரசியலில் இறங்கி இருக்கின்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களை வெகுவாக கவர்ந்தது. பிரச்சாரத்தில் மத்திய அரசின் திட்டங்களையும், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் அரசின் திட்டங்களையும் விமர்சித்து பேசி வாக்குகளை பெற்றார். உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது அதன் பிறகு அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்ற நிலையில் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அரசின் திட்டங்களுக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றார். மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்ட நிலையில் மேடை ஏறி எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தது பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் உதயநிதி பங்கேற்க உள்ள அனைத்து நிகழ்வுகளும் அடுத்த சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

\திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இரும்பலால் அவதிப்பட்டு வருவதினால் சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவர் கலந்து கொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்க தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது துணை முதலமைச்சர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இரும்பல் இருக்கும் செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பட்டாவில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் இவ்வளவு சுலபமா… உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழக அரசு முன்கூட்டியே பட்டாவில் பெயர் நீக்கம், சேர்த்தல் ஆகியவற்றை நில உடைமைதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பை வெளியிட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பட்டாவில் இறந்தவர்களுடைய பெயரை நீக்கி வாரிசுகள் பெயரை சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பட்டாவில் இருக்கும் இறந்த நில உடமைத்தாரர்களின் பெயரை நீக்கி அவர்களுடைய வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றுள்ளவர்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கு உரிய ஆவணங்களுடன் இ சேவை மையங்கள் அல்லது சிட்டிசன் போர்டல் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள நிலங்களில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றது. இணைய வழியில் பொதுமக்கள் அனைவரும் இறுதியில் பார்வையிடும் வகையில் https://eservices.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களுக்கு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் இருக்கின்றது.

அதனால் உடனடியாக உரிய ஆவணங்கள் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பட்டாதாரர்களின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…இந்த அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள், பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மாணவர்களுக்கு புதிய பேருந்து பயண அட்டை வழங்கும் வரை தங்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் கொரோனா பெரும் தொற்று பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…மாதம் 1500 பெறுவது எப்படி!தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதோ!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் இன்று பள்ளிக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல் நாளான இன்று மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி வரும் உதவித்தொகை குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு என இரண்டு சிறப்பு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் வெற்றி பெறும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகின்றது. அரசு பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதி உண்டு. மேலும் திறனாய்வு தேர்வு எழுதிய பிறகு 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படும். இந்த திறனாய்வு தேர்வுகள் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடக புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக நடத்தப்படும். இந்த தேர்வினை எழுத விருப்பமுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கேட்கப்படும் அனைத்தையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக 50 ரூபாய் வள்ளி தலைமை ஆசிரியரிடம் செலுத்தலாம். அதன் பிறகு திறனாய்வு தேர்வுகளுக்கான தேதி பள்ளி தலைமை ஆசிரியரால் அறிவிக்கப்படும். 11 ஆம் வகுப்பு மாணவர்களும் 1500 இதே போல் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு எழுதி பெற்றுக் கொள்ளலாம். இந்த திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொன்னதை செய்த திமுக! வாக்குறுதியை காப்பாற்ற தவறிய அதிமுக – திருமாவளவன் விமர்சனம் 

விழுப்புரம் எம்.பி மற்றும் விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் அவர்களின் மூத்த சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக பொதுக்குழு தமிழ்நாட்டு அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கையைப் பெறும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் பல திட்டங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறார்.இதனால் 2026 தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

வாக்குறுதி காப்பாற்றாத அதிமுக

அவரது பேச்சில் முக்கியமாக,“நடிகர் கமலுக்கு கூட்டணியில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ராஜ்யசபா இடத்தை திமுக தலைவர் நேர்மையாக வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றி விட்டார். ஆனால் அதிமுக, தேமுதிகவிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்பது வருத்தமான விஷயம். மக்கள் இதை கண்காணித்து வருகிறார்கள்,” என்றும் தெரிவித்தார்.

அத்துடன்,“விசிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தேர்தலுக்கான பேச்சுவார்த்தை நேரத்தில் முடிவு செய்வோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் திருச்சி பேரணிக்குப் பிறகு நிர்வாக மறுசீரமைப்பு துவங்கப்படும்,”என்றும் கூறினார்.

பாமக எங்கள் போட்டியல்ல!

பாமக நிலைபாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,“பாமக – விசிக இடையே போட்டி என்றே இல்லை. அங்கெ நடப்பது அவர்கள் உட்கட்சி விவகாரம். நாங்கள் வேறு களத்தில் பயணிக்கிறோம். எங்கள் பாதையும், நியாயமும் வேறுபட்டவை. பாமக திமுக கூட்டணியில் வந்தால் விசிக ஆதரிக்குமா என்பது தற்போது தேவையற்ற யூகமான கேள்வி அதற்கு இப்போ பதிலளிக்க தேவையில்லை என்று கூறினார்.

கருணாநிதியை பாத்துக் கத்துக்கோங்க.. குடும்ப அரசியலை கையாள தெரியாத ராமதாஸ்!!

DMK PMK: அரசியல் வட்டாரத்தில் பாமக குறித்த செய்திதான் தினம்தோறும் வந்த வண்ணமாகவே உள்ளது. அப்பா மகன் இருவருக்குமிடையே உள்ள பிரச்சனை தீவிரமடைந்து வெளியுலகத்தினர் ஆலோசனை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. இதனால் பலரும் திமுகவை கூட புகழாரம் சூட்ட ஆரம்பித்துவிட்டனர். திமுகவும் வாரிசு அரசியலை தற்போது வரை முன்னிறுத்தி தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அப்படி கருணாநித்திக்கும் அவரது மகன் என்று பல்வேறு அழுத்தங்கள் இருந்தது.

குறிப்பாக கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வரும் பொழுது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நேரம் பார்த்து ஸ்டாலின் அவரை களம் காண வைத்து பதவி ஒதுக்கினார். அடுத்தபடியாக முட்டுக்கட்டையாக நின்றது அழகிரிதான். கட்சியின் முக்கிய பொறுப்புகள், பதவிகள் என அனைத்தும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மும்மரம் காட்டி வந்தார். அதேபோல கருணாநிதியும் அவருக்கு சட்டமன்றம் செட் ஆகாது என கருதி மத்திய அமைச்சரவையில் பதவி வாங்கி கொடுத்தார். அப்படி இருந்தும் நாளடைவில் அழகிரியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் கட்சியை விட்டே நீக்கம் செய்தார். அதேபோல உயிர் போகும் நொடி வரை தலைவராகவே கருணாநிதி இருந்தார். யாருக்கும் அந்த பதவியை கொடுக்கவில்லை. இவருக்கு உடல்நிலை சரியில்லாத போது ஸ்டாலினுக்கு செயல் தலைவர் என்ற பதவி மட்டுமே கொடுக்கப்பட்டது. இப்படி கட்சியை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வைத்து கருணாநிதி எப்படி செதுக்கியுள்ளார் இந்த சாமர்த்தியம் ராமதாஸுக்கு இல்லாமல் போய்விட்டது என கூறுகின்றனர்.

அதேபோல அன்புமணியும் கட்சி பதவி அதன் உரிமை என அனைத்தையும் தனது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அது மிகவும் தவறு எனக் கூறுகின்றனர். கருணாநிதி இறப்பதற்கு முன் தனது வாரிசுகளை நிலை நிறுத்தி கட்சி அங்கீகாரத்தை நிலைநாட்டி சென்றார். ஆனால் தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் விலகி அவரது மகனால் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கட்சியை பின்னடைவுக்கு தான் எடுத்துச் செல்லும். இதைவிட யாரும் இறுதி வரை கருணாநிதியை எதிர்த்து நிற்கவில்லை, ஆனால் பாமகவில் அப்படி கிடையாது. ராமத்தஸ்ஸையே எதிர்க்க துணிந்துவிட்டனர்.

அன்புமணியின் பதவிக்காலம் முடிந்தது! வேல்முருகனை மீண்டும் பாமகவில் இணைக்க ராமதாஸ் வியூகம்?

பாமகவில் குடும்ப உறுப்பினர்கள் இடையே நிலவி வந்த தலைமைத் தகராறு தற்போது கட்சி பிளவிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் தற்போது சட்ட ரீதியான அதிகார உரிமை குறித்து தனித்தனியாக சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமை பதவிக்காலம் முடிந்ததா?

கடந்த 2022 ஆம் ஆண்டு மே 28 அன்று பாமக பொதுக்குழுவில் அன்புமணி தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி விதிமுறைகளின்படி தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதால், 2025 மே 28 அன்று அவரது பதவிக்காலம் முடிந்ததாக ராமதாஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ராமதாஸ் தனது ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ராமதாஸ் அதிகாரம்

தலைவரின் பதவி காலாவதி ஆகியதால், பாமக ஒழுங்கு விதிகளின்படி, கட்சியின் முழுப்பட்ட அதிகாரமும் நிறுவனரான ராமதாஸுக்கு தானாகவே வந்துவிட்டதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் கட்சியின் நிர்வாகம் மீதான முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கி விட்டார்.

மாறி மாறி கூட்டங்கள் – இரண்டு தரப்பும் களம் இறங்கும்!

அதே நேரத்தில் அன்புமணி ராமதாஸ் தரப்பு, தலைமைக்கு மீண்டும் தங்களை நியமிக்க கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை திரட்டத் தொடங்கியிருக்க, ராமதாஸ் தரப்பு விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பழைய தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சி

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்த வகையில் பாமகவில் முன்னர் சிறப்பாக செயல்பட்டு சில கருத்து வேறுபாடுகளால் ஒதுங்கியுள்ள முன்னாள் நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பாமக முன்னாள் மாநில தலைவர் வேல்முருகனை மீண்டும் கட்சிக்குள் அழைத்து, முக்கிய பதவி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கட்சியிலிருந்து வெளியேறிய மூத்த நிர்வாகிகள் பலரும் மீண்டும் பாமகவில் இணைவதன் மூலம் தனக்கான அதிகாரத்தை மீண்டும் பெறவும் கட்சியை மீண்டும் அதே கட்டுப்பாட்டுடன் நடத்தவும்  ராமதாஸ் செயல்படத் திட்டமிட்டு வருகிறார்.

தேர்தல் ஆணையம் முடிவு?

இவ்வாறெல்லாம் நடக்கும்போது, கட்சித் தலைமை தொடர்பான உரிமையை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அப்போது இருதரப்பும் தனித்தனியே தங்கள் அதிகாரங்களை முன்வைத்து தங்களுடைய பதவியையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்த செய்யும் சூழலுக்கு வரலாம். அப்போது கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் செல்லும் என தொண்டர்கள் மத்தியில் குழப்பம் உருவாகியுள்ளது.

ஒருமையில் பேசிய ஆதவ்!! எடப்பாடிக்கு போன் அடித்த விஜய்.. அவரே சொன்ன பரபர தகவல்!!

ADMK TVK: விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாற்றமடைந்ததை அடுத்து தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் புஸ்ஸி ஆனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில், பாஜக வே அதிமுகவை விரட்டிவிடும். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக் கொண்டு 18 சதவீதம் வாக்கு வாங்கி இருக்காங்க என ஒருமையில் பேசியிருந்தார்.

இப்படி அதிமுகவையும் பாஜகவையும் விமர்சனம் செய்தது குறித்து பல கண்டனங்கள் எழுந்த நிலையில் தான் பேசியது தவறுதான் என  ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இப்படி இருக்கையில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, விஜய் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்து இது ரீதியாக பேசியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல ஆதாவ் அர்ஜுனா மன்னிப்பு கூறியதற்கும் அதுதான் காரணம் என்று தெரிவித்தனர். எடப்பாட-யிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் நேரடியாக கேட்கையில், என்னிடம் நடிகர் விஜய் ஏதும் பேசவில்லை ஆதவ் அர்ஜுனா தங்களை விமர்சனம் செய்ததற்கு அவரே பதில் கூறிவிட்டார் என தெரிவித்தார்.

மேற்கொண்டு திமுக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தங்களை “துரோக அதிமுக” என்று தெரிவித்ததற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். நாங்கள் துரோகம் செய்தவர்கள் இல்லை திமுக தான் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. அம்மாவின் மறைவுக்குப் பின்னும் அதற்கு முன்பு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சட்ட ஒழுங்கும்  சீராக இருந்தது. தற்போது தினம்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை கண்டு வருகிறோம். இது அனைத்தும் இந்த மாடல் ஆட்சியில் தான் நடக்கிறது அப்படி பார்க்கையில் இதுதான் துரோக ஆட்சி என்று பேசினார்.