Monday, July 14, 2025
Home Blog Page 4219

வீரம் பட நடிகர் 2-வது திருமணம் !

0

வீரம், அண்ணாத்த பட நடிகரும் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான நடிகர் பாலா 2-வது திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2019-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இதனிடையே கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் நடிகர் பாலா மவுனம் காத்து வந்தார்.

இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது உறுதியாகி உள்ளது.

உலக தலைவர்கள் தரவரிசை – முதலிடத்தில் நரேந்திர மோடி

0

உலக தலைவர்கள் தரவரிசை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வெளியான பட்டியலில் 66 சதவீத ஆதரவே பெற்றிருந்த பிரதமர் மோடி தற்போது 70 சதவீத ஆதரவை பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளின் தலைவர்களுக்கான அங்கீகார மதிப்பீட்டு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், 2-ம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 70 சதவீத ஆதரவு பெற்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி அவர் முன்னிலையில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் பிற முக்கிய தலைவர்களான ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் (52 சதவீதம்), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (48 சதவீதம்), ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன் (48 சதவீதம்), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45 சதவீதம்), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (41 சதவீதம்) பின்தங்கி உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாத பட்டியலில் அவர் 82 சதவீத ஆதரவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது

3வது டி20 போட்டி – நியூசிலாந்து அபார வெற்றி

0

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆவது போட்டியில் அஜாஸ் பட்டேலின் சிறப்பான பந்துவீச்சால் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது.

நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்னும், டாம் பிளெண்டல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது.இறுதியில், வங்காளதேசம் 19.4 ஓவரில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், மெக்கன்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன், டி20 தொடரில் 2-1 என பின்தங்கியுள்ளது. ஆட்ட நாயகன் விருது அஜாஸ் படேலுக்கு வழங்கப்பட்டது.

ஹீரோயின் ஆகும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி!

0

பிரபல இயக்குனர் சங்கரின் மகள் விருமன் என்கிற தமிழ்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், சங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ முத்தையா கிராமத்து பாணியில் இயக்கும் இந்த படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்தியா : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மூன்றாவது அலையின் தொடக்கமா?

0

தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ளதால் மூன்றாம் அலை பாதிப்பு குறித்து முன்கள பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 ஆயிரத்து 092 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,28,57,937 ஆக அதிகரித்துள்ளது

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,529 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,28,825 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,89,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 66,30,37,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிப்புகள் தீவிரமடைந்து இரண்டாம் அலையைபோல் மூன்றாம் அலையும் உருவாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

0

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று (06.09.21) ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது.

ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செப்டம்பர்15-ந்தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவலை கருத்திக்கொண்டு இனி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு அனுப்பி உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கான இடங்கள் குறித்தும், தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.கட்சி பிரதிநிதிகளின் கருத்தை அறிந்து அதற்கேற்ப தேர்தல் நடத்துவதற்கான தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் இந்த கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் https://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர் எந்த வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!

0

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெறும் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மேலும் 299 ரன்கள் தேவைபடும் நிலையில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.
99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மாவின் சதம் ,ரிஷப் பண்ட் ,ஷர்துல் தாகூர் ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியா 2-வது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இங்கிலாந்து வீரர்கள் மிகவும் கவனமுடனும் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தனர். 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. வெற்றிக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் ஓவல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்டசத்தில் தொடரை சமன் செய்யலாம் அல்லது வெல்லாம் என்பதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

போலி கொரோனா தடுப்பூசிகள் : மத்திய அரசு எச்சரிக்கை

0

போலி கொரோனா தடுப்பூசிகளை அடையாளம் காண்பது குறித்து மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவேக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. நம் நாட்டிலும் இவை புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில், நம் நாட்டில் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில், தடுப்பூசிகளின் மேல் உள்ள ‘லேபிள்’ எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கப்பட்டு உள்ளது.இதனால் தடுப்பூசி செலுத்தியவர்கள் தாம் செலுத்திய தடுப்பூசிகள் தரமானதா என்னும் அச்சத்தில் உள்ளனர்.

பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

0

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை குவித்து இந்திய அணி பதக்க பட்டியலில் 24 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதனையடுத்து பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரரும், உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். பேட்மிண்டனில் மட்டும் இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களை வென்றிருக்கிறது.

இதனிடையே தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் தருண் தோல்வியை தழுவினார். பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி இணை ஆடிய வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியே ஏற்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் போராடிய விதம் ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருந்தது

இந்நிலையில் தற்போது டோக்கியோ பாராஒலிம்பிக்கில் போட்டிகள் முடிவடைந்துள்ளன. நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்து உள்ளனர். 1968 முதல் 2016 வரை பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தநிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெக்காராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்கதாகவே அமைந்திருக்கிறது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

0

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது பெற்றோர்கள் கலக்கமடைந்து பல இடங்களில் தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை.

இதனால் அவரது பெற்றோர் முதலில் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். தொடர்ந்து மகளைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மேலும் ஒரு மனுவை அளித்தனர். இந்த நிலையில் காணாமல் போன ராபியா பரிதாபமாக, வெட்டுக் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும், வெளியான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. ராபியாவை அந்த கொடூர கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திக் கிழித்து, கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர். முகம் மிகவும் கொடூரமாக உள்ளது.

அந்த அளவிற்கு அந்த இளம் பெண்ணை கொடுமை செய்துள்ளனர் நயவஞ்சகர்கள். இதேபோல் கடந்த மாதமும் ஒரு 9 வயது சிறுமியை அங்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதும் குறிப்பிடத்தக்கது. இதே டெல்லியில் தான் அந்த கொடூரமும் நடந்தேறியது.  காமுகர்கள் மாதத்திற்கு ஒன்று என்று கணக்கு வைத்துள்ளார்களா என்ன? எங்குதான் போனது மனிதாபிமானம்.

எல்லாம் ஏன் இப்படி வெறி பிடித்த மனித மிருகங்களாக இருக்கிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அரசு கையில் எடுப்பதோடு விட்டுவிடுகிறார்கள். அதற்கான தக்க தண்டனை கிடைக்கும் வரை அவர்களை நாம் எதுவுமே செய்ய முடியாது. அரசு தான் இதை சீர்திருத்தம் செய்ய வேண்டும். கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். இந்த நிலையில் ராபியாவின் இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பல பொது மக்களும், சிறுபான்மையினரும், போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதேபோல நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் #Justice For Rabiya என்ற வாசகத்தின் மூலம் தங்களது கண்டனங்களை பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ராபியாவை கொன்றவர்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உடனே தண்டிக்க வேண்டும் என்றும், கலெக்டர் அலுவலக ஊழல் வெளியே வராமல் இருக்கத்தான் இப்படி அவர்  கொல்லப்பட்டிருக்கலாம். என சந்தேகம் எழுவதாகவும் தமிழக எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது கூட உண்மையாக இருக்கலாம். யாருக்கு தெரியும்? சம்பந்தப்பட்டவர்களை தவிர. கடந்த 26ஆம் தேதி மாலை அலுவலகத்திலிருந்து ராபியாவை பரிதாபாத்துக்கு கடத்தப்பட்டு இந்த வன்கொடுமை சம்பவம் செய்யப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நினைத்து பாருங்கள் போலீஸ் அதிகாரி. ஆனால் இப்படி ஒரு நிலைமை. அப்போ சாதாரண பெண் என்றால் சும்மா விடுவார்களா? அரசு இதற்கு என்ன சொல்ல போகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவா? அல்லது கயவர்களுக்கா? பொறுத்திருந்து பார்க்கலாம்.