Monday, July 14, 2025
Home Blog Page 4220

நாயுடன் பாலியல் உறவு கொண்ட அயர்லாந்து பெண்! வழக்கு விசாரணை வந்தது!

0

29 வயதான அயர்லாந்து பெண் நாயுடன் உடலுறவு கொண்ட வழக்கு இப்பொழுது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

29 வயதான அயர்லாந்து பெண் 2019 டிசம்பரில் தனது வீட்டில் கலப்பு இன ரோட்வீலர் நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கு ஜூன் மாதம் டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இன்னும் வழக்கில் அந்த பெண்ணிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வழக்கறிஞர்கள் தேவையான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.

 

செப்டம்பர் 3 ஆம் தேதி, அந்தப் பெண்ணுக்கு எதிராக ஆதாரப் புத்தகத்தை வழக்கறிஞர்கள் பூர்த்தி செய்ததாக நீதிபதி ட்ரெசா கெல்லிக்குத் தெரிவிக்கப்பட்டபோது, ​​வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் தொடங்கி இருக்கிறது.

 

எனினும், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆதாரங்களின் புத்தகம் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று அவரது வழக்கறிஞர் டோனி கோலியர் கூறியுள்ளார்.

 

இந்த வழக்கை இம்மாதம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, குற்றவாளியை தொடர்ந்து ஜாமீனில் வைக்க உத்தரவிட்டு உள்ளார் என சொல்லபடுகிறது.

 

அடுத்த விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணுக்கு எதிரான புத்தகம் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் சர்க்யூட் கோர்ட்டுக்கு விசாரணைக்கு அனுப்பப்படலாம், இது மிகவும் கடுமையான தண்டனையாக அந்தப் பெண்ணிற்கு அளிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளனர்..

 

இந்த வழக்கு ஜூன் மாதத்தில் டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தின் முன் வந்தபோது, ஊடகங்களும் மற்ற மக்களும் அந்தப் பெண்ணை அடையாளம் காண்பதை தவிர்க்க பல்வேறு இடைக்கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

 

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் அந்தப் பெண்ணின் அடையாளத்தை வெளி காண்பது அவளுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். அதனால், ஊடகங்கள் மற்றும் பொது மக்களின் வெறுப்பு அந்த பெண்ணின் மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் . இது சட்டத்தின் உரிய செயல்முறையை பாதிக்கும் மற்றும் நியாயமான விசாரணைக்கு அவளது உரிமையை தடுக்கலாம், என்று நீதிமன்றத்திடம் கேட்டு ஒரு சில கட்டுப்பாடுகளை விண்ணப்பித்து வாங்கியிருந்தார். நீதிபதி இப்போது இந்த தற்காலிக கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளார். அடுத்த விசாரணையில், இவை மேலும் தொடர வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

 

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

0

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள்.

அதே போல வௌவாலின் கழிவுகளில் இருந்து தான் நிபா வைரஸ் பரவுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது தான் கொரோனாவின் தாக்கம் மற்றும் தொற்று பரவும் விகிதமும், கொஞ்சம் அடங்கி உள்ளது. ஆனால் கேரளாவில் இன்னும்  இரண்டாம் அலை கட்டுக்குள் வரவில்லை. மாநிலங்களிலேயே அதிகம் பாதிக்கப்பட்டது கேரள மாநிலமாக உள்ளது.

ஆனால், தற்போது அங்கு மீண்டும் சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் சூலூரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஒன்றாம் தேதி உடல்நலக் குறைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனையில் உறுதியும் செய்துள்ளனர்.

இதையடுத்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். நிபா வைரசின் தன்மை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது என்பதனால், சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

நிபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், கழுத்து வலி, தலை சுற்றல், வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு, சுவாசத்தில் பிரச்சனை, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும் என்று கூறப்படுகின்றது. இன்று வரை நிபா வைரஸுக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!

0

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில்  உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து நாட்களுக்கு ஒருமுறை ஆந்திரா சென்று கார்த்திக்கை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. அவர் ஆந்திரா சென்று இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கருதினார்கள். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றமும் வீசியுள்ளது. அதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எனவே அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அமீனா பூட்டிய வீட்டுக்குள் கட்டிலில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் சொன்னார்கள். அமீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலக் குறைவினால் இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும்  அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

0

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம்.

அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு கௌரவிக்கிறது. இந்த விருதுக்காக நாம் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். அவர்கள் அதற்குத் தகுதியானவர்களா என்பதை தெரிந்து கொண்ட அரசு அவர்களுக்கு இந்த விருதுகளை சமர்ப்பிக்கிறது. நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி என அனைத்து பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த விருதுகளை மாநில அரசு வழங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் இதற்கான 11 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி விருதுகளை வழங்கினார். இவர்களுக்கு புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்படுத்துதல், மாணவர் சேர்க்கையை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களுக்கும், வெள்ளிப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்திற்கான காசோலைகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.விருது பெற்றவர்கள் விபரங்கள்:

1.ரத்தினசபாபதி- தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சித்தோடு,

2.சந்திரசேகரன் – பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி குட்டிபாளையம்,

3.மணிகண்டன்- பட்டதாரி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி,

4.பாலகிருஷ்ணன்- பட்டதாரி ஆசிரியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பவானி,

5.சேட்டு மதார்சா- பட்டதாரி ஆசிரியர், ஈ.கே.எம் அப்துல்கனி மதரசா இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி, ஈரோடு,

6.கல்யாணி- தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறுகளஞ்சி.

7.நம்பிக்கை மேரி- தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காடகநல்லி,

8.சுமதி- இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஏழூர்,

9.ரஞ்சித்குமார் – இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குருவரெட்டியூர்,

10.தீபலட்சுமி – பட்டதாரி ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அவ்வையார் பாளையம்,

11.ரவிக்குமார் – முதுகலை ஆசிரியர், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை.

வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்!

0

வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்!

சென்னையில் பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த நபர் அசோக் ராஜபாண்டி என்பவர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி 38 வயதானவர், சிவதர்ஷினி என்ற 17 வயது மகள் மற்றும் சிவனேசன் என்ற  11 வயது மகனுடன் உள்ளனர். சிவதர்ஷினி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பும்,  மகனும் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.

அசோக் ராஜபாண்டி அதே பகுதியில் சொந்தமாக ஓட்டல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்ததும், கதவை திறந்ததும்  அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அப்போது அவருடைய மனைவி ராஜலட்சுமி மற்றும் சிவதர்ஷினி இருவரும் வீட்டின் ஹாலில் உள்ள மின் விசிறிகளில் தனித்தனியாக தூக்கில் தொங்குவதைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் விட்டார்.

அதன் பின் உடனடியாக மனைவி மற்றும் மகள் இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்களோ, அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜே.ஜே நகர் காவல் நிலைய போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ராஜ பாண்டி வேறொரு பெண்ணுடன் அடிக்கடி கைபேசியில் பேசுவது தெரிய வந்தது. நீண்ட நேரம் அவ்வாறு பேசி வந்ததன் காரணமாக, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியே பேச்சுவார்த்தை இல்லாமல் வசித்து வருகின்றனர்.

இதில் திடீரென்று மனமுடைந்த மனைவி ராஜலட்சுமி மற்றும் தனது 17 மகளும் வீட்டில் ஒரே இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்!

0

செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்!

கரூர் மாவட்டம் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு ஏழு வருடங்களுக்கு முன்பே வனிதா என்பவருடன் திருமணம் முடிந்துவிட்டது. 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கரூர் பேருந்து நிலையம் அருகில் கார்த்திக் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடையை திறந்துள்ளார். இந்நிலையில் அங்கு ஒரு பெண் போலீஸ் அடிக்கடி அவரது கைப்பேசி பழுது பார்க்க வர ஆரம்பித்து உள்ளார்.

அதன் காரணமாக அவர்களுக்குள் கல்யாணத்தை தாண்டிய உறவு ஒன்று வளர ஆரம்பித்துள்ளது. அவர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் கவுசல்யா ஆகும். இந்நிலையில் அவர்களின் தகாத உறவை கடையிலேயே வலுவாக்கி உள்ளனர். பலநாட்கள் அவரும் கடையிலேயே தங்கி விடுவாராம். அதன் பிறகு வீட்டிற்கு இரவில்  தாமதமாக வந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக மனைவி அவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்த போது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மழுப்பி வர ஆரம்பித்தார்.

அதற்கு அவர் மேல் சந்தேகம் வந்த மனைவி கேள்வி கேட்டால் வேலை அதிகமாக இருந்தது என்று ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி கொண்டே நாட்களை கடத்தி வந்தார். இதனால் சந்தேகம் வலுத்த மனைவி ஒருநாள் கடைக்கு நேரில் சென்று பார்த்தபோது, இப்படி ஒரு தகாத செயல் அங்கே நடப்பது தெரியவந்து அதிர்ந்து போனார். மேலும் அப்போது அங்கு பணிபுரியும் கடை ஊழியரிடம் இதுபற்றி கேட்டபோது, இது அவ்வப்போது நடக்கும் ஒரு விஷயம் தான்.

அடிக்கடி இது போன்று நடக்கின்றது என்று கூறியுள்ளார். எனவே வனிதா இது பற்றி கணவரிடம் விட்டு விடும்படி பேசியுள்ளார். ஆனால் கணவரோ அதை கண்டுகொள்ளவே இல்லை. அதன் பின்னும் இந்த தொடர்பு தொடரவே வனிதா கடையில் வைத்தே கணவருடனும் அந்த பெண் போலீசிடமும் வாக்குவாதம் நடத்தியுள்ளார். உடனே கணவர் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிச் சென்று விட்டார். ஆனாலும் அவரது உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர்.

அதன் காரணமாக ஒருநாள் வனிதா கணவருக்கு தகவல் சொல்லாமலேயே கடைக்குச் சென்று பார்த்த போது மீண்டும் அதே கள்ள உறவில் அவர்கள் ஈடுபட்டிருந்தது கண்டு பிடித்தாள். போலீஸின் சீருடைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கும் வந்து விட்டார். இதை அறிந்தவர்கள் பதறிப்போய் மாற்று உடை போட்டு வீட்டு அருகே வந்து பிரச்சினை செய்தனர். அப்போது அக்கம்பக்கத்தினர் அங்கு கூடி கொள்ளவே சத்தம் போடாமல் அங்கிருந்து நகர்ந்து கொண்டார் கௌசல்யா.

வனிதா கொண்டு சென்றது அவருடைய சீருடை அல்லவா எனவே பதட்டம் இருக்க தானே செய்யும். அந்த பதட்டத்தில் தான் வீட்டின் அருகே வந்து ரகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் கூட்டம் கூடி விடவே என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து நழுவி ஓடிவிட்டார் பெண் காவலர். அதன் காரணமாக செல்போன் கடைக்காரரின் மனைவி வனிதா அந்த சீருடையை எடுத்துக்கொண்டு பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்க சென்று இருந்தார்.

ஆனால் புகார் காவலர் மீது என்பதன் காரணமாக அங்கு அந்த புகாரை அங்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே வனிதா தன் தாய், தந்தையுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, அவர் என் கணவர், ஆயுதப்படை போலீசாருடன் உள்ள தொடர்பை நிரூபிக்கவே போலீசாரின் சீருடையை நான் எடுத்து வைத்துக் கொண்டேன். அங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும்போது அவர்கள் அதை சட்டை செய்யவே இல்லை.

அதன் காரணமாக இங்கே வந்து புகார் மனு கொடுத்துள்ளேன். இதற்கு தீர்வு காணவே நான் இங்கு வந்துள்ளேன் என்றும் கூறினார். அதேபோல அந்தப் பெண் காவலரும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் வேறு ஒரு நபருடன் இப்படிப்பட்ட ஒரு உறவில் இருப்பதன் காரணமாக கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!

0

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!

ஒவ்வொரு வருடமும் மைசூருவில் உள்ள அரண்மனையில் விஜயதசமி விழாவின் போது மைசூர் அரண்மனையில் வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொண்டாடப்படும். தொடர்ந்து  ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை பார்க்க அந்த இடமே கோலாகலமாக இருக்கும். அவ்வளவு மக்கள் கூட்டம் கூடி இருப்பார்கள். அரண்மனையிலும் சரி, அதற்கு முன் அந்த ஊர்வலங்கள் செல்லும் இடத்திலும் சரி. அவ்வளவு ஊர் மக்கள் திரண்டு வரிசை கட்டி இருப்பார்கள்.

இந்த விழாவை பார்ப்பதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் அங்கு வந்து சேர்ந்து விடுகின்றனர். அந்த விழாவின் பொது ஊரே திருவிழா கோலம் பூண்டு இருக்கும். அதை பார்க்கவே நமக்கு கோடி கண்கள் வேண்டும். அவ்வளவு பிரம்மிப்பாக இருக்கும். அது அப்படியே ராஜா காலத்து வாழ்க்கை நம் கண்முன் காட்டுவதற்கு உதாரணமாக இருக்கும்.

யானைகளை வைத்து அந்த ஊர்வலம் நடத்துவதால் சாமுண்டீஸ்வரி தாயை யானையின் மீது வைத்து செய்யப்படும் ஊர்வலம் தான் விஜயதசமியின் சிறப்பே ஆகும். அங்கு ஒவ்வொரு வருடமும் அங்கு விஜயதசமி விழாவையொட்டி மைசூரு தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் நாள் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறுவது  வழக்கம். ஜம்பு சவாரி என்பது யானைகளின் சவாரி ஆகும். இதில் தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனை சுமந்து செல்லும் யானை ராஜ நடையோடு செல்லும்.

அதன் பின்னால் மற்ற யானைகளும், அலங்கார ஊர்திகளும், பல்வேறு கலை குழுவினரும் அணிவகுத்து பின்தொடர்ந்து செல்வார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டவர்களும், லட்சக்கணக்கான மக்களும் கூடி பங்கேற்பார்கள். இதனால் மைசூரின் தசரா விழா உலக அளவில் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த விழா கடந்த வருடம் கொரோனாவின் காரணமாக மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு அந்த விழாவை கொண்டாடுவது குறித்து, பெங்களூரு விதான சவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில், உயர்மட்டக்குழு கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

0

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

மீண்டும் ஒரு புன்னகை மன்னன் படத்தில் வந்த காதல் ஜோடி போல ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் அருகே உடுமலையிலிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் உள்ளே சென்றால் மறையூர் என்னும் இடம் உள்ளது. இது கேரளாவின் பார்டர் என்று கூட சொல்லலாம். இங்கு சினிமா படபிடிப்புகள் கூட அதிமமாக நடைபெறும்.

அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது திகழும். முடிந்தால் ஒரு முறை போய் பார்த்து விட்டு வாருங்கள். மறையூர் அருகே பெரும்பாவூரைச் சேர்ந்த நாதிர்ஷா மற்றும் மறையூர் நிகிலா தாமஸ் என்ற ஜோடி இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறது. இந்த காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ஒரு வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளனர்.

மறையூர் அருகே உள்ள பிரம்மன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்த அந்த ஜோடி, ஒரு நாள் முழுவதும் சேர்ந்து இருந்து விட்டு அதன் பிறகு அங்கிருந்து குதித்து தற்கொலை, செய்து கொள்ளலாம் என்று அங்கு சென்று அதிக நேரம் செலவழித்து உள்ளனர். அதன்பின் இருவருமே கத்தியால் தங்களது கைகளை வெட்டிக் கொண்டுள்ளனர். ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் மயங்கி விழுந்து விட்டனர்.

அதில் சுருண்டு விழுந்து கீழே விழுந்து விட்டார்கள். மலை உச்சியில் இருந்ததன் காரணமாக நாதிர்ஷா உருண்டு கீழே விழுந்து இறந்துவிட்டார். நிகிலா தாமஸ் அங்கேயே மயங்கி விழுந்த நிலையில் இருந்தார். அவரை அங்கு சென்ற மீட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரை கோட்டையம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மலையடிவாரத்தில் நாதிர்ஷாவின் உடலையும் கைப்பற்றினர். இருவரும் பேஸ்புக் மூலம் ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

அதில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளனர். மறையூர் காவல் அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். காதலர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விஷயம் நமக்கே என்னவோ போல் உள்ளது. மேலும் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட விஷயம் அங்கு மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. என்ன இருந்தாலும் விதியும் அவர்களை பிரித்து விட்டதே. இறப்பில் கூட அவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்பதை போல.

ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்!

0

ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்!

நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த ஜெர்மனிய பெண் தன்னை திருமணம் செய்வதாக தன்னிடம் ஏமாற்றி 70 லட்ச ரூபாய் வரை ஆர்யா வாங்கி படத்தில் முதலீடு செய்துள்ளதாக  பிரதமரிடமும், குடியரசுத் தலைவர் இடமும் புகார் மனு தந்திருந்தார். போலீசார் இடம் புகார் மனு கொடுத்து அதற்காக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதை அப்படியே கிடப்பில் போட்ட நிலையில்,  இது பற்றி புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, அதாவது பிப்ரவரி மாதம் புகார் அளித்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தான் விசாரணையை ஆரம்பித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டபோது ஆர்யா குற்றமற்றவர் என்றும், ஆர்யா போல் பேசி, மிமிக்ரி செய்து அந்தப் பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை கைது செய்ததாகவும், கூறி போலீசார் அந்த கேஸை உடனடியாக மூடி மறைத்து விட்டனர்.

அதனை தொடர்ந்து ஜெர்மனி பெண் மீண்டும் அவரது வழக்கறிஞர் மூலம் என்னிடம் பேசியது இவர்கள் இல்லை. ஆர்யாதான் என்றும், எங்களிடம் அதற்கான அனைத்து சாட்சிகளும் உள்ளது என்றும், தெரிவித்திருந்தார். தற்போது ஆர்யா மீது மீண்டும் அந்த வழக்கு குறித்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் இது பற்றி செய்தியாளர்களிடம் கூறும் போது நடிகர் ஆர்யாவுக்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை என பகீரென்று ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

இந்த மாதம் 2ஆம் தேதி ஆர்யா காவல் ஆய்வாளரை தனிமையில் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த ஜெர்மன் பெண்ணின் வழக்கறிஞர் செய்திகளில் கூறும் போது முதலாவது குற்றவாளியான ஆர்யாவையும், இரண்டாவது குற்றவாளியான ஆர்யாவின் தாயாரையும் இதில் அழைக்கவே இல்லை. மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும், ஆர்யா நடிகர் என்பதால் தான் நேரடியாக சென்று பணம் எடுக்க முடியாத சூழல் நிலவு வருவதால், அவரின் மேனேஜர்கள் பணம் எடுக்கும் வகையில் பணம் அனுப்பும் படி கூறி இருந்தனர்.

ஆள்மாறாட்டம் செய்த ஆர்யாவின் மேனேஜர்கள் முகமுது அர்மான், முகமது ஹுசைனி இருவரும் 3-வது 4-வது குற்றவாளிகள் மட்டுமே. அவர்களை மட்டுமே விசாரணைக்கு அழைத்து வந்தார்கள் என்றும், தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் சென்னை காவல் ஆணையர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பணம் இருந்தால் யாரும், யாரையும் எது வேணாலும் செய்யலாம் என்பது போல் சொல்கிறார்கள் போல. இவ்வளவு நாகரீக உலகில் ஆர்யா போல் பேசுபவர்களையும் ஆர்யாவையும் தெரியாமலேயேவா அந்த பெண் 70 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பார். அதுவும் ஜெர்மன் பெண் வேறு. வளர்ந்த நாட்டில் உள்ள தற்போதைய சூழலில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு மினிமம் படித்த பெண் கூட மிகவும் உஷாராக இருக்கும்போது, இலங்கையை சேர்ந்த பெண் என்றாலும், ஜெர்மன் பெண் எவ்வாறு அப்படி ஏமாறி இருப்பார். இதை யாராவது நம்பமுடிகிறதா? எப்படி மூடி மறைக்கிறார்கள் பாருங்கள் உண்மையை.

நீரில் மிதக்க விருக்கும் மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கோவை, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு,திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.