Monday, July 14, 2025
Home Blog Page 4227

தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே!

0

தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே!

மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு போலீசில் ஒரு புகார் தெரிவித்தார். தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது சொந்த அண்ணனே தன்னிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் காரணமாக அந்த அண்ணனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அப்போது அந்த பெண் மைனராக இருந்ததால் அவருக்கு எந்த பரிசோதனையும் செய்யவில்லை. அந்த அண்ணனுக்கு ஜாமீனே கிடைக்கவில்லை.  இந்நிலையில், அந்த பெண் திடீரென தகவலை கூறியுள்ளார். அதில் தன் காதலனுடன் வெளியேற தன் அண்ணன் சம்மதிக்காததன் காரணமாகவும், மேலும் தன்னுடன் சண்டை போட்டு அடித்ததன்  காரணமாகவும் நான் அவ்வாறு கூறினேன். என்னை அவன் எந்த வன்கொடுமையும் செய்யவில்லை.

அவனை பழி வாங்குவதற்காகவே அவ்வாறு கூறினேன். இந்த தகவலை கேட்ட நீதிமன்றம் மற்றும் போலீசார் அதிர்ச்சியாகியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கு எந்த பரிசோதனையும் செய்யாததன் காரணமாக அந்த குற்றம் நடந்ததா? இல்லையா? என்றே தெரியவில்லை என்று சொல்லி அந்த நிரபராதியையும் வெளியே விட்டு உள்ளது.

ஆனால் தவறு செய்யாமல் இரண்டு வருடங்கள் தண்டனை அனுபவிப்பது எவ்வளவு பெரிய தவறு. இதில் அந்தப் பெண் மீது சந்தேகம் உள்ளது. மேலும் அந்தப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற வழக்குகளை என்ன செய்வது. நிரபராதி தேவை இல்லாமல் தண்டனை அனுபவித்து விட்டாரே.

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

0

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள ஃபோரெஷோர் எஸ்டேட்டில் 25 ஏக்கர் நிலத்தில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மைய வணிக வளாகத்தை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ் முத்துசாமி புதன்கிழமை தெரிவித்தார்.

மாநில சட்டப் பேரவையில் பேசிய முத்துசாமி இந்த வளாகம் சிங்கப்பூர் மற்றும் பிற அரசாங்கங்களுடன் இணைந்து கட்டப்படும் என்றார்.இந்த இடம் ஒரு முக்கிய இடத்தில் இரண்டு முக்கிய சாலைகளுக்கு நடுவில் இருந்ததால் நகரத்தில் அத்தகைய இடத்தை பெறுவது கடினம் என்று அவர் கூறினார்.

எல்ஐசி கட்டிடத்திற்கு அதன் சொந்த அடையாளம் இருப்பதைப் போலவே இந்த வளாகமும் நகரத்தில் ஒரு அடையாளமாக மாறும் என்று முத்துசாமி கூறினார்.முன்பு எல்ஐசி கட்டிடம் சென்னையின் அடையாளமாக இருந்தது.இது திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக இருந்தது.இந்த வளாகத்தை சென்னையின் புதிய அடையாளமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

இந்த திட்டத்திற்காக ஒரு சில மரங்கள் மட்டுமே வெட்டப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறினார்.இருப்பினும் அவர்கள் வேறு வழியில்லாமல் இருந்தால் மரங்கள் மீண்டும் நடவு செய்யப்படும்.நாங்கள் அகற்றும் ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகளை நடவு செய்வதை உறுதி செய்வோம் என்று முத்துசாமி கூறினார்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) திட்டத்தை செயல்படுத்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான தொழில்நுட்ப ஆய்வை தயார் செய்துள்ளது.

இது தவிர சென்னை புறநகரில் உள்ள 143 கிராமங்களை சரியான வளர்ச்சி இல்லாத அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளை நாங்கள் ஆய்வு செய்தோம்.சாலை இணைப்பு இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்பதை உணர்ந்தோம்.இந்த கிராமங்களை சாலைகளுடன் இணைக்க ஒரு திட்டத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

நந்தனத்தில் TNHB பழைய தலைமை அலுவலகம் மற்றும் EVR கட்டிடம் அமைந்துள்ள இடங்களில் வர்த்தக மையத்தை உருவாக்க முத்துசாமி முன்மொழிந்தார்.இது நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் செயல்படுத்த முடியவில்லை.இந்த திட்டம் மீள்பரிசீலனை செய்யப்படும் மற்றும் சாத்தியமானதாக இருந்தால் அது எடுக்கப்படும் என்றார்.

கோடநாடு கொலை வழக்கு! திடீரென்று ஏற்பட்ட திருப்புமுனை அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

0

தற்சமயம் ஆட்சிக்கு வந்திருக்கின்ற திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செய்துவருகின்றது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கிடையில் இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தவர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இருக்கிறது வழக்கின் அடுத்த விசாரணையை விரிவு படுத்த இயலும். ஆகவே இந்த காவல்துறை விசாரணைக்கு தடை விதிக்க இயலாது என்று அதிரடியாக தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது அந்த சமயத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்த விசாரணையை அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்திருக்கின்ற விளக்கத்தில், கொடநாடு வழக்கு குறித்து அனைத்து உண்மைகளும் வெளிவரவேண்டு.ம் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கொடநாடு வழக்கில் புலன் விசாரணை செய்வதற்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்த இருக்கின்ற சூழலில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த தனிப்படையில் யார், யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா 5 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்த சூழ்நிலையில், அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 தேதி ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்துவிட்டார்.

சென்ற 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இதில் 11 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதுடன் 97 பெயர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உடன் ஒன்றாக இணைந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் உள்ளிட்டோர் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! 

0

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கின் விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் சாட்சிகளுடன் விசாரணைக்குப் பிறகு நிலை அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு நான்கு வார அவகாசம் அளித்தது.

ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஆகியோரை விசாரித்த பிறகு வழக்கு நிலுவையில் இருந்ததால் வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது சென்னை உயர் நீதிமன்றத்தில்.

கோடநாடு எஸ்டேட் மேலாளர் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை விசாரித்த பிறகு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நிலை அறிக்கையை சமர்ப்பிக்க நேரம் கோரியதால் நீதிபதி சி சஞ்சய் பாபா நேரத்தை அனுமதித்து விசாரணையை அக்டோபர் 1 க்கு ஒத்திவைத்தார்.சயான் மற்றும் மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மஜோஜ் போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறிப்பாக அவருக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வருவதாக கூறி பாதுகாப்பு கோரினர்.பரபரப்பான வழக்கு என்பதால்,தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர் மற்றும் அதிகாரிகள் கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றும்படி அவர்களிடம் கேட்க வேண்டியிருந்தது.மறைந்த முதல்வருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் வாட்ச்மேன் ஓம் பகதூர் தொண்டையை அறுத்து மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார் மற்றும் மற்றொரு வாட்ச்மேன் பலத்த காயங்களுடன் கிடந்தார்.

உள்ளே உள்ள விருந்தினர் மாளிகையின் அறை ஒன்று 2017 ஏப்ரல் 24 இரவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது மற்றும் போலீசார் கொள்ளை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்தனர்.முன்னதாக ஆகஸ்ட் 27 அன்று உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் ஒரு வழக்கை மேற்கோள் காட்டி இந்த வழக்கை கீழ் நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ள முடியாது என்று வாதிட்டதை அடுத்து நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 2 க்கு ஒத்திவைத்தது.

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்கள் வளர்த்த எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.

0

நாளைய தினம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், உதகை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யும் எனவும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

நாளைய தினம் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் 4-ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரையில் பலத்த காற்று வீசுவதால் வாய்ப்பு இருக்கிறது. அதாவது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதா? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

0

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் வருவாய் கொடுக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் தனியார் முதலீட்டை அனுமதி வழங்கி அதன் மூலமாக லட்சம், கோடி உள்ளிட்ட விவரங்களை திரட்டும் முடிவில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அதாவது அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு நான்கு வருடங்களில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறது.

இதற்கு பல மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்ற சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 70 வருட காலமாக இந்தியா உருவாக்கிய சொத்துக்களை வெறும் 7 வருட காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி விற்றுவிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்தவர்கள் அதை எப்படி மீட்பது என்று தெரியாமல் வேறு வழி இல்லாமல் எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்து விடுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பது குறித்து காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் செல்வபெருந்தகை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.அந்த சமயத்தில் துறைமுகங்கள் விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி பொதுத்துறை சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தனியார்மயமாக்கல் நடவடிக்கையின்போது மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் லாபகரமாக இயங்கும் தொழிற்சாலைகளை விற்க முயற்சி செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நாம் அனைவரின் சொத்தாகும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் தேச நலனுக்கு எதிரான செயல் பொருளாதார நலனுக்கும் சிறு மற்றும் குறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாக விளக்கமளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இளம் இயக்குனருடன் இணையும் தனுஷ்! முன்னணி இயக்குனர்கள் அவ்வளவுதானா?

0

இளம் இயக்குனருடன் இணையும் தனுஷ்! முன்னணி இயக்குனர்கள் அவ்வளவுதானா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.இவர் சமீப காலங்களில் நடித்த எல்லா திரைப்படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றன.தற்போது இவர் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் யாரடி நீ மோகினி,குட்டி,உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.இதில் 2008ல் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் பெரிய வெற்றியை இவர்களுக்கு பெற்றுத் தந்தது.இவர்கள் மீண்டும் நான்காவதாக திருச்சிற்றம்பலம் படத்தில் இணைகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

மேலும் நடிகர் தனுஷ் மாறன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்குகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி நடந்து வருகிறது.இதனிடையே தற்போது பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனரான இளன் உடன் நடிகர் தனுஷ் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.பியார் பிரேமா காதல் திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களால் தயாரிக்கப்பட்டது.

இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது.இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.தற்போது தனுஷ் படத்தை இயக்க ஒப்பந்தமாயிருக்கும் இவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.இந்த திரைப்படம் மதுரையை மையமாக வைத்து உருவாகும் கிராமப் பின்னணியில் உருவாக இருக்கிறது.

சமீப காலமாக நடிகர் தனுஷ் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருவதால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.இதனால் இவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடைசிவரையில் ஓபிஎஸ்-க்கு உறுதுணையாக இருந்த விஜயலட்சுமி! வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்!

0

ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி ஓபிஎஸ் சென்னையில் இருந்தால் அவரும் சென்னையில் இருப்பார் ஓபிஎஸ் தேனியில் இருந்தால் அவரும் தேனிக்கு சென்று விடுவார். இவ்வளவு ஏன் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றால் கூட அவருடன் விஜயலட்சுமி கண்டிப்பாக செல்வார் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டு பயணங்களின் போது கூட ஓபிஎஸ் அவர்களின் நிழலாக இருந்து வந்தவர் அவருடைய மனைவி விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதே போல ஓபிஎஸ் அவர்கள் எங்கு சென்றாலும் அவருடன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது..

பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்தவுடன் சசிகலா ஒரு நிமிடம் அதிர்ந்து போனதாக சொல்கிறார்கள். 66 வயதாகும் விஜயலட்சுமி சுமார் 45 வருடங்களாக பன்னீர் செல்வத்துடன் வாழ்ந்து வந்தவர். இவருடைய சொந்த ஊர் உத்தமபாளையம் என்று சொல்லப்படுகிறது அங்கேயே விஜயலட்சுமியின் தந்தை மிகப்பெரிய மில் வைத்திருந்தார். எனவும், சொல்கிறார்கள்.

அத்துடன் உத்தமபாளையத்தில் மிகப்பெரிய அளவில் விவசாயமும் செய்து வந்தவர் விஜயலட்சுமியின் தந்தை தமிழக நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தந்தை பி டி ஆர் பழனிவேல் ராஜன் காலம் முதலே அவர்களுக்கு சொந்தமான இடங்களில் விஜயலட்சுமியின் தந்தை அழகு பாண்டி தான் விவசாயம் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் இப்பொழுதும் கூட பழனிவேல் தியாகராஜன் குடும்பத்துடன் இணைந்துதான் விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அழகு பாண்டி என்று தெரிகிறது.

அந்த அளவிற்கு வசதியான மனிதராக இருந்தாலும் கூட தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பால்பண்ணை வைத்திருந்த பன்னீர் செல்வத்திற்கு தன்னுடைய மகள் விஜயலட்சுமியை மணம் முடித்து கொடுத்திருந்தார் அழகு பாண்டி.. திருமணம் செய்து கொண்டது முதலே பன்னீர்செல்வம் மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்டோருக்கு இடையிலான பந்தம் மிகவும் நெருக்கமாகி இருக்கிறது. விஜயலட்சுமி கணவர் பன்னீர்செல்வம் சட்டசபை உறுப்பினர், அமைச்சர்,முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று மிகப்பெரிய பதவிகளில் இருந்தாலும் கூட விஜயலட்சுமி சாதாரண பெண்ணாகவே வலம் வந்து இருக்கின்றார்.

அதிலும் பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் அவருடன் நிழலாக இருந்து வந்தவர் விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதேபோல பன்னீர்செல்வம் எங்கே சென்றாலும் அவருடன் தன்னுடைய மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் .அதேநேரம் கட்சிக் கூட்டம், போராட்டம், பேச்சுவார்த்தை என்று வரும் சமயங்களில் மட்டும் விஜயலட்சுமி தன்னுடைய கணவரை பிரிந்து இருப்பார் என தெரிவிக்கிறார்கள்.

அந்த சமயத்திலும் கூட சரியான நேரத்திற்கு பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் அழைத்து சாப்பிட்டு விட்டீர்களா? என்று கேட்காமல் இருக்க மாட்டார் விஜயலட்சுமி என்று தெரிவிக்கிறார்கள். அதேபோல பன்னீர் செல்வமும் மனைவி எங்கே இருந்தாலும் சரியான நேரத்திற்கு தொலைபேசியில் அழைத்து அவரை சாப்பிட சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்கிறார்கள்.

இரண்டு மகன்கள் ஒரு மகள் என்று இருக்கின்ற நிலையில், மூன்று பிள்ளைகள் மீதும் விஜயலட்சுமிக்கு அதீத பாசம் என கூறுகிறார்கள். இளையமகன் ஜெயபிரதீப் என்றால் விஜயலட்சுமி அவர்களுக்கு செல்லம் சற்று அதிகமாம். இளைய மகனான ஜெயபிரதீப்பை சட்டசபை உறுப்பினர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் வைத்து பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக கடைசி வரையில் அவருடைய ஆசை நிறைவேறவே இல்லை தாய் மீதான அளவுக்கு மீறிய பாசம் காரணமாக, தன்னுடைய இனிஷியல் கூட தாய் விஜயலட்சுமியின் பெயரை சேர்த்துக் கொண்டவர் ஜெயபிரதீப் என்று சொல்கிறார்கள். அதேபோல அரசியல் ரீதியாகவும் பல நேரங்களில் ஓபிஎஸ் அவர்களுக்கு விஜயலட்சுமி உதவி புரிந்ததாக தெரிவிக்கிறார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த சமயத்தில் போயஸ் கார்டனுக்கு விஜயலட்சுமியும் சென்று வந்துகொண்டிருந்தார் என தகவல் கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் சசிகலாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் தற்சமயம் வரையில் விஜயலட்சுமிக்கு நீடித்து இருக்கிறது. இதன் காரணமாக, தான் விஜயலட்சுமி மறைவு செய்தியைக் கேட்டவுடன் கண்ணீரும் அழுகையுமாக சசிகலா மருத்துவமனைக்கு விரைந்து வந்ததாக கூறுகிறார்கள்.

அவர் மருத்துவமனைக்கு காரில் வந்து இறங்கியதில் இருந்து பன்னீர் செல்வத்துடன் சந்திக்கும் வரையில் சசிகலா கண்களில் ஆனந்த கண்ணீர் நிற்கவில்லை அதேபோல பன்னீர் செல்வத்துடன் உரையாற்றும் போது கூட சசிகலா கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு விஜயலட்சுமி உடன் நெருக்கமான ஒரு உறவை சசிகலா ஏற்படுத்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கிறார்கள். பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தத்தை ஆரம்பித்த சமயத்தில் விஜயலட்சுமியின் மூலமாக சசிகலா தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி இருந்ததாகவும், அதன் பிறகு தினகரனை ரகசியமாக சென்று பன்னீர்செல்வம் சந்தித்ததன் பின்னணியிலும் விஜயலட்சுமி இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் விஜயலட்சுமி பன்னீர்செல்வத்துக்கு ஒரு மிகப்பெரிய உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை கவனிக்கும்போது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான தம்பதிகளாக பன்னீர்செல்வம் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கடைசிவரையில் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

பிரபல மாடல் மற்றும் நடிகர் மாரடைப்பால் மரணம்! பிக்பாஸ் டைடில் வின்னர்!

0

பிரபல மாடல் மற்றும் நடிகர் மாரடைப்பால் மரணம்! பிக்பாஸ் டைடில் வின்னர்!

பிரபல நடிகராக நமக்கு திரையில் தோன்றும் சின்னச் திரையில் தோன்றிய நடிகர் சித்தார்த் சுக்லாவை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. மேலும் அவர் பிக்பாஸ் பதிமூன்றாம் சீசனில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர். இவர் ஒரு மிகச்சிறந்த மாடலும் ஆவார். 2005 ம் உலகின் சிறந்த மாடல் என்று ஒரு விருது கூட வாங்கி உள்ளார். அவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இவர் மிகவும் பிசியான ஒரு நபராவார். இவ்வளவு சிறு வயதில் அவர் இறந்தது சக நடிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இவர் சின்னத்திரை நடிகராக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெருத்த வரவேற்பு இருந்தது. 2008 ம் ஆண்டிலிருந்து இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல தொடர்கள் வெற்றியடைந்தது.  பலிகா வத்து, தில் சே தில் தக் என்ற இரண்டும் மிக வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா என்ற ஒரு திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். அவரது சின்னத்திரை தொடர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அதனால் தமிழகத்தில் கூட அது மொழிபெயர்ப்புத் சேனல்களில் இடம்பெற்றன. பலிகா வத்து  என்ற தொடர் தமிழில் மண் வாசனை என்ற பெயரில் வெளியானதும் குறிப்பிடத் தக்கது. அதனால் தமிழகத்தில் கூட இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ஆல்பம், வெப்சீரிஸ் மற்றும் சின்னத்திரை தொடர்கள் என மிக பிஸியாக இருக்கும் ஒரு நடிகர். இவருக்கு இப்படி நேர்ந்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. இன்று மாலை அவரது இறுதி சடங்குகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இதை அவரது ரசிகர்களாலும், நண்பர்களாலும்  தாங்கவே முடியவில்லை. அவரின் இந்த இழப்பை.

இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதும், அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செற்ற போது அவர் இறந்துவிட்டார் என தெரிவித்து உள்ளனர். அவருக்கு தாயும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி நல்லதா? கெட்டதா ஒரு அலசல்!

0

தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்க சாவடிகளில் புறநகர்ப் பகுதிகளில் 9 சுங்கச்சாவடிகளும் இருக்கின்றன. சென்னை நகரப் பகுதிக்குள் இருக்கின்ற சென்னை சமுத்திரம் நிமிண்டி, வானகரம். பரனூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது அதனை அகற்றுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார் என கூறியிருக்கிறார் அமைச்சர்.

இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் என கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.

மாநிலத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் அந்தந்த பகுதிகளில் சுங்க சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்வது மற்றும் போக்குவரத்து அதற்கான கட்டணத்தை வசூலிப்பது போன்ற பணிகளில் இந்த சுங்க சாவடி ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அப்படி வசூலிக்கப்படும் பணம் அந்த சாலை பராமரிப்பு மற்றும் பூஞ்செடிகள் வைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும் இப்படி சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் மொத்த தொகையும் அந்த சாலைக்கு செலவிடப்படுவதில்லை. அந்த சாலை பராமரிப்பு பணிகளுக்கு செயல்படுத்தப்படும் தொகையை தவிர்த்து மற்ற தொகை அப்படியே மத்திய அரசின் கருவூலங்களுக்கு சென்றுவிடும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்

அதேநேரம் இப்படி சுங்கச்சாவடிகள் ஆங்காங்கே இருப்பதால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளும் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் தொழில்களும் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்