Monday, July 14, 2025
Home Blog Page 4229

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்!

0

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்!

புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர். பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது.

சென்னை அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புலவர் புலமைப்பித்தனுக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் முன்னாள் சட்டசபை துணை தலைவருமான புலமைப்பித்தன் 1968ஆம் ஆண்டு நடிகர் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானவர்.

தொடர்ந்து நடிகர்கள் சிவாஜி,ரஜினி,கமல் மேலும் தற்போதைய விஜய்,ஜெயம் ரவி வரை ஏராளமான திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார்.அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார் புலமைப்பித்தன்.சட்டமன்ற உறுப்பினர் குழுவில் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார் இவர்.எம்.ஜி.ஆர் எனக்கு அண்ணன் பிரபாகரன் எனக்கு தம்பி புலமைப்பித்தன் என்று இருவருடனுடன் நெருக்கமாக இருந்தவர் புலமைப்பித்தன்.

வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.இதையடுத்து அவர் சென்னை நீலாங்கரையில் உள்ள சாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே உடனடியாக சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது அவருக்கு உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் மருத்துவமனையின் இயக்குனர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எத்தனை வகை டா சாமி! மீண்டும் உலக நாடுகளில் உலா வரும் புதிய வகை கொரோனா!

0

கொலம்பியாவில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கின்ற உருமாறிய மியு என்ற கொரோனாநோய்த்தொற்றை உலக சுகாதார அமைப்பு மிக தீவிரமாக கண்காணித்து வந்துகொண்டு இருக்கிறது.

2019 ஆம் வருடத்தின் கடைசியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கியது கொரோனா வைரஸ் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உருமாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா டெல்டா, டெல்டாப்லஸ் என்று பல விதத்திலும் உருமாறி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இதில் டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தான் அதிக அளவில் பாதிப்பையும் உயிரிழப்பையும் உண்டாக்கி வருகின்றது. ஒரு சில நாடுகளில் நோய்த்தொற்று கட்டுப்படுத்துவதை போல சில மாதங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, இதற்கு முடிவே இல்லையா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், முதல்முறையாக கொலம்பியா நாட்டில் கண்டறியப்பட்டு இருக்கின்ற பி1 621 என்ற உரு மாறிய கொரோனாவிற்கு மியு என்று ஆய்வாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். அதோடு உலக சுகாதார அமைப்பு இதனை கவனிக்கவேண்டிய நோய் தொற்று வகையாகவும் பட்டியலிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒன்றில் உருமாற்றம் அடைந்த மியு வகை கொரோனா தடுப்பு ஊசி மூலமாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் வல்லமை உடையது, இதனை மேலும் புரிந்துகொள்ள அடுத்தடுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது என கூறியிருக்கிறது.

மியூ என்ற உருமாறிய நோய்த்தொற்று உட்பட ஒட்டு மொத்தமாக ஐந்து வகைகளை கண்காணிக்க வேண்டிய நோய்த்தொற்று வகையாக பட்டியலிட்டிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. முதலில் கொலம்பியா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வகையான வைரஸ் தொற்று தற்சமயம் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் மியு வகை நோய் தொற்றினால் 0.1 சதவீதம் பேரும் கொலம்பியாவில் 39 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சார் covid-19 வகை வைரஸ் அநேக உரு மாற்றம் அடைந்தாலும் அதில் பெரும்பாலும் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. இருந்தாலும் ஒருசில உருமாற்றங்கள் மட்டும் அதிவேகமாக பரவுதல், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துதல், தடுப்பூசியை எதிர்க்கும் சக்தியை மட்டு படுத்துதல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்த வைரஸ் தொடர்பாக தான் அடுத்தடுத்து ஆய்வுகள் மூலமாக இதன் தன்மை தொடர்பாக தெரியவரும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ!

0

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ!

நாரதா லஞ்ச வீடியோ விவகாரம் தொடர்பாக இரண்டு மேற்கு வங்காள மந்திரிகள் உள்பட 5 பேருக்கு சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா செய்திகள்  என்ற செய்தி இணையதளம் மந்திரிகள் மற்றும் எம்எல்ஏக்களை சிக்கவைக்க ரகசிய வீடியோ ஒன்றை எடுத்தது.

அந்த இணையதளத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக மந்திரிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து தங்களது நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து, பிரதி உபகாரமாக லஞ்சம் கொடுக்கிறோம் என்று சொன்னதோடு அதை ரகசியமாக படம் பிடித்து அந்த வீடியோவைவும் வெளியிட்டனர். அது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் லஞ்ச வீடியோவில் சிக்கிய மேற்கு வங்காளம் மந்திரிகள் சுப்ரதா முகர்ஜி, பிர்ஹாத் ஹக்கிம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன்மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மிர்சா ஆகியோர் மீது சிபிஐ அமலாக்கத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்தனர். 5 பேரும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள சிபிஐ கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டு மந்திரிகள் உட்பட 5 பேருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 பேரும் நவம்பர் 16ஆம் தேதி கோர்ட்டில் நேரில் வந்து ஆஜராகுமாறும் அவர் கூறியுள்ளார். எம்.எல்.ஏக்களாக  இருப்பதால் அவர்கள் மூவருக்கும் சபாநாயகர் அலுவலகம் மூலம் சம்மன் அனுப்புமாறும் மற்ற இரண்டு பேருக்கும் வீட்டு முகவரிக்கு நேரடியாக அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தை மதிபோருக்கு இன்முகமும் சட்டத்தை மீறுவோருக்கு இரும்புக்கரமும்! முதலமைச்சர் காவல்துறைக்கு அதிரடி அறிவுரை!

0

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் இருக்கின்ற தமிழக காவல் உயர் பயிற்சி நிறுவனத்தில் 941 உதவி ஆய்வாளர்களுக்கான ஒரு வருடத்திய பயிற்சி நேற்று ஆரம்பமானது. இதில் காணொளியின் மூலமாக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் உதவி ஆய்வாளர் களுக்கான பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, காவலர் பயிற்சி இயக்கத்தின் இயக்குனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை இந்த இரண்டு முறையாக செயல்பட்டால் அந்த அரசாங்கம் மிகச்சிறந்த அரசாங்கமாக செயல்படும் விதத்தில் காவல்துறையின் செயல்பாடு மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. காவல்துறையில் எத்தனையோ உயர் பதவிகளில் இருந்தாலும் மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள கூடிய இடத்தில் இருப்பவர்கள் உதவி ஆய்வாளர்கள் ஆகிய நீங்கள் தான் என தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

காவல்துறை என்றாலே குற்றங்களை தடுக்கும் துறையாக இருக்க வேண்டும், தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டும் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்0 காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத விதத்தில் சூழ்நிலையை ஏற்படுத்தி தரும் ஒரு துறையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட குற்றமே நடைபெறாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும் ஒரு துறையாக காவல்துறை அவதாரம் எடுக்க வேண்டும். மக்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று தெரிவித்திருக்கிறார்.

நாட்டிலேயே முதல் முறையாக காவல் துறையில் மகளிர் பங்கு கொள்ள வைத்தவர் கலைஞர் தான் என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். காவல்துறையில் உங்களைப் போன்ற பெண் வீராங்கனைகள் அதிகமாக பங்கு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாக்கியத்திற்கு முன்னுதாரணமாக நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும். அநியாயத்தை தடுப்பதற்கு எப்போதும் தயங்காதீர்கள், நியாயத்திற்காக எப்போதும் முன் நில்லுங்கள் உங்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதியை குற்றம் நடக்காத ஒரு பகுதியாக மாற்றிக் காட்டுங்கள் உண்மை குற்றவாளிகள் எல்லோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வேலையை செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.

சூழ்நிலையின் காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள் சட்டத்தை மதித்து இன்முகத்துடன் மற்றும் சட்டத்தை மீறுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பழகுங்கள் என கலைஞர் தெரிவிப்பார். இதுதான் உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்!

0

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்!

தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைத் தடுக்க தமிழக அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலங்களை அனுமதிப்பதில்லை என்ற மாநில அரசின் உத்தரவை இந்து எதிர்ப்பு என்று அழைத்தார்.

இந்து நடைமுறைகளில் தலையிடுவதை நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட ராஜா சமீபத்தில் நடந்த இந்து அல்லாத பண்டிகைகளின் போது ஊர்வலங்களை அனுமதிக்கும்போது அவர்கள் ஏன் விநாயகர் சதுர்த்தியை அனுமதிக்க முடியாது?பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராஜாவின் கருத்தை அவர் எதிரொலித்தார்.

அவர்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.ஆனால் திருவிழா முழுமையாக கட்டுப்படுத்தப்படும் போது அதை ஏற்க முடியாது.மாநிலத்தில் பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு திங்களன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைத் தடுக்கவும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற நீர்நிலைகளிலும் சிலைகளை மூழ்கடிப்பதைத் தடுக்க முடிவு செய்தது.

பொது கோவிட் பூட்டுதல் கட்டுப்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கையில் மக்கள் தங்கள் வீடுகளில் பண்டிகையைக் கொண்டாட முடியும் என்றும் அவர்கள் அந்தச் சிலையை அருகிலுள்ள நீர்நிலைகளில் தனிநபர்களின் திறனாகவும் குழுவாகவும் மூழ்கடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.ஆளும் கட்சியைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவதாக எச்சரித்தது.

மேலும் முன்னால் சென்று சிலைகளை நிறுவி அரசாங்க உத்தரவுக்கு எதிராக ஊர்வலம் நடத்தும்.இருப்பினும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததாக ஒரு திமுக தலைவர் கூறினார்.

கர்நாடகத்தில் உள்ள பிஜேபி அரசாங்கம் கூட முஹர்ரம் மற்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை அனுமதிக்கவில்லை.பாஜகவின் கூட்டாளியான அதிமுகவும் கடந்த ஆண்டு கட்சி ஆட்சியில் இருந்தபோது மதக் கூட்டங்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு!

0

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு!

நமது அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரம் சமீபத்தில் சில ஆண்டுகளாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா சூழல் நாட்டின் பிரதான வருவாய்த்துறையான  சுற்றுலா துறையின் முடக்கம் போன்றவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற காரணங்களால் அந்நியச் செலவாணி இருப்பு குறைந்து உள்ளது. அதன் காரணமாக இலங்கையின் ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்கள் குறைவதாலும், பதுக்கல் அதிகரிப்பதாலும் நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசரநிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப் பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணுவ தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் கமிஷனர் ஆகவும் அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் வியாபாரிகள், சில்லரை வர்த்தகர்கள் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரிசி சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் அந்த பொருட்களை வழங்குவதற்கு என நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணியில் சேர்க்கப்பட்ட புதிய வீரர்!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் நகர் ஓவலில் இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்ற காரணத்தால், இந்த தொடரில் அவரை மிகப்பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் ஆட்டமிழக்க செய்யும் விதத்தில் எல்லா பெருமையும் எங்களுடைய பந்துவீச்சாளர்களை சாரும் இப்போது வரையில் அவரை ஆடுகளத்தை விட்டு வெளியேற்றும் வழிமுறைகளை நாங்கள் கண்டறிந்த இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் ஜோ ரூட்.

எதிர்வரும் போட்டிகளிலும் இதே முயற்சியில் அவருக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து மிக விரைவாக அவரை ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் தொடரை வெற்றி கொள்ள இயலும். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது அவர் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் எங்களுக்கு எதிராக விக்கெட் விழுத்தியது மட்டுமல்லாமல் ரன்னும் சேர்த்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அவருடைய திறமை என்ன என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.

அவரால் டெஸ்ட் போட்டியில் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும் அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். போட்டியின்போது யார் பந்து வீசினாலும் அவர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் எடுப்பது மட்டும் தான் எங்களுடைய வேலை அதை சரியாக நாங்கள் செய்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் ஜோ ரூட்.

இப்படியான நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட இருக்கிறார். இந்திய அணியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில் பிரசித் கிருஷ்ணா அணியின் சேர்க்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது.

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி!

0

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இஸ்லாமியர்களின் புதிய விதியின் கீழ் சர்வதேச போட்டிகள் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கையை எழுப்பிய ஆப்கானிஸ்தானின் முதல் கிரிக்கெட் சோதனைக்கு தாலிபான்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP இடம் ஆஸ்திரேலியாவுக்கு அணியை அனுப்ப எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது 2001இல் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தாலிபான்கள் பல விளையாட்டுக்கள் உட்பட பெரும்பாலான பொழுதுபோக்கு வடிவங்களை தடை செய்தனர்.அரங்கங்கள் பொது மரணதண்டனை இடங்களாக பயன்படுத்தப்பட்டன.கடந்த மாதம் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய பின்னர் இம்முறை இஸ்லாமிய சட்டத்தின் குறைவான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை ஹோபார்ட்டில் நடக்கவிருந்த டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.

ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவில் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் இதுவாகும்.ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி அக்டோபர் 17-நவம்பர் 15 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும்.இந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்றும் சின்வாரி உறுதிப்படுத்தினார்.

கடந்த மாதம் தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்த பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேற்றப்பட்டதில் இருந்து கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவியது.ஆனால் ஏசிபி அதிகாரிகள் கிரிக்கெட்டை தாலிபான்கள் ஆதரிப்பதாக திட்டவட்டமாக கூறினர்.2000 களின் முற்பகுதி வரை ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் அரிதாகவே அறியப்பட்டது.

பாகிஸ்தானில் இந்த விளையாட்டை ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கள் சொந்த நாட்டில் விதைத்தனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷித் கான் கடந்த ஆண்டில் Player of the Decadeஆக தேர்வு செய்யப்பட்டார்.

ஓபிஎஸ் மனைவி மரணம்! தினகரனிடம் கதறிய பன்னீர்செல்வம்!

0

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்றைய தினம் மரணம் அடைந்தார். இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவருடைய மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகல் விஜயலட்சுமி உடல் சென்னையில் இருந்து அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொண்டுசெல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமி உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இரவு 11 மணி அளவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமான டிடிவி தினகரன் பெரியகுளத்தில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அவரைப் பார்த்தவுடனேயே சார் என்று உடைந்து அழத்தொடங்கினார் பன்னீர்செல்வம். அவருக்கு ஆறுதல் தெரிவித்த தினகரன் அங்கேயே சுமார் அரைமணி நேரம் இருந்து பன்னீர்செல்வத்தின் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் என்று எல்லோரிடமும் தன்னுடைய துக்கத்தை பகிர்ந்து கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

டிடிவி தினகரனின் மகளுக்கு எதிர்வரும் 15ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது திருமணம் நடைபெற இருக்கும் சூழலில் திருமண விட்டார்கள் யாரும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற மரபு இருக்கிறது. ஆனால் அந்த மரபை மீறி இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

மகளுக்கு திருமணம் என்றபோதிலும் பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்த செய்தி கேட்ட டிடிவி தினகரன் அந்த நள்ளிரவிலும் கூட விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்து விட்டார் என்று டிடிவி தினகரன் தொடர்பாக பன்னீர்செல்வத்தின் வீட்டு வாசலில் குழுமி இருந்த பொதுமக்கள் பேசிக் கொண்டார்களாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர் !

0

சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் முத்துசாமி சட்டசபையில் நேற்று தெரிவித்துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்றையதினம் சட்டசபையில் நடந்தது. அந்த சமயத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் முத்துசாமி உரையாற்றினார்..

சென்னை பெருநகர எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளை கண்காணித்தபோது அங்கே மிக விரைவாக வளர்ச்சி மற்றும் அதற்கான உள் கட்டமைப்பு தேவைகள் அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிடட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள், அதோடு அரக்கோணத்தையும் ஒன்றிணைத்து சென்னை பெருநகர பகுதியை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்தை கேட்டு விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

அத்துடன் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ரோடுகளை ஒன்றிணைக்கும் விதத்தில் ஒக்கியம், துரைப்பாக்கம், கண்ணகி நகருக்கும் இஞ்சம்பாக்கதிற்கும் இடையில் இதற்கு முன்னரே இருக்கின்ற சாலைகளை அகலப்படுத்தி பக்கிங்ஹாம் கால்வாய் மீது சுமார் 180 கோடி செலவில் உயர்மட்ட சுழல் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் குறைந்த வருவாய் அல்லது மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் தவணை திட்டம் மறுபடியும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்.

சென்னை மற்றும் மற்ற நகரங்களில் பல காரணங்களால் சேதமடைந்து இருக்கின்ற குடியிருப்புகள் தொழில்நுட்ப குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நான்கு வருடங்களில் மறு கட்டுமானம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சிதைந்து போன 7500 அடுக்குமாடி குடியிருப்புகள் நடப்பு நிதி ஆண்டில் 1700 கோடியில் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயலின் காரணமாக, பாதிப்படைந்த குடும்பங்களுக்கு 1610 கோடி ரூபாயில் வீடுகள் கட்டி தருவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுக்குமாடி திட்டப் பகுதியில் இருக்கின்ற தரைதளம் குடியிருப்புகள் மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை அமைச்சர் முத்துசாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார்