Tuesday, July 15, 2025
Home Blog Page 4232

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்

0

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இந்த போட்டிகள் தொடங்கிய போது தான் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒன்றும் பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 180 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. அதன் காரணமாக எனது ஊனமான காலில் அணிந்திருந்த சாக்ஸ் ஈரமாகி விட்டது. அப்போது ஓடிச்சென்று அதிக உயரம் தாண்டும் போது கால் வழுக்கியதன் காரணமாக என்னால் தங்கம் வாங்கும் அளவிற்கு உயரம் தாண்ட முடியவில்லை.

இந்த மழை வராமல் சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் நான் நிச்சயம் 1.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருப்பேன். எனது லட்சியம் மழையினால் வீணாகி விட்டது. நான் சிறப்பாக விளையாடி இருந்தால் 1.90 மீட்டர் உயரம் தாண்டி இருப்பேன். மேலும் தங்கப் பதக்கத்தையும் வென்று இருப்பேன், என்றும் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது இலட்சியம் இந்த ஒலிம்பிக்கில் நிறைவேறவில்லை.

அடுத்த முறை கண்டிப்பாக வரலாறு படைக்க முயற்சிப்பேன். கொரோனா நபர்களுடன் நெருங்கி இருந்ததால் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை நான் இழந்தேன். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்தேன். அது மட்டுமின்றி பயிற்சியிலும் தனியாகவே ஈடுபட வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் நான் தேசத்துக்காக பதக்கம் வெல்வதில் உறுதியாக இருந்தேன். அதை செய்து காட்டியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாரியப்பன் கூறினார்.

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி!

0

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.அவரது மனைவி விஜயலட்சுமி சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அவரின் உடல்நிலையில் கவனம் செலுத்தி வந்தார்.

மறைந்த விஜயலட்சுமி அவர்களுக்கு வயது 66.இவரின் மறைவுக்கு பல கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது இரங்கலை ஒபிஎஸ் அவர்களுக்கு தெரிவித்தார்.அடுத்து அதிமுக தலைவரும் சட்ட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்தார்.மேலும் தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு,துரைமுருகன்,தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.குடல் இறக்கம் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த இறப்பானது தமிழக மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மற்றும் மருத்துவர்களிடம் அவரின் மனைவியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தது குறிப்பிடத்தக்கது.இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

0

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளைய தினம் சேலம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் ஓரிரு உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரும் 4ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தமிழக அரசு!

0

தமிழக வாணிப கழகம் தமிழ்நாட்டில் மது வகைகளையும் வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் இந்த நிறுவனம். தமிழ்நாட்டில் மது பானங்களையும் மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகம் செய்யும் லைசென்சை பெற்றிருக்கிறது.

தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும் நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதுபானங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி மூலமாக தமிழக அரசுக்கு வருடம்தோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறதாம். எப்போதுமே லாபம் கொடுக்கும் ஒரு வாரமாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் நோய்த்தொற்று காலத்தில் ஒரு சில தினங்களுக்கு மட்டுமே மூடப்பட்டதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு உண்டானது.

இந்த சூழ்நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூபாய் 10 முதல் 500 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற குடிமகன்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தமிழக அரசு தன்னுடைய வருமானத்திற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது தமிழக தாய்மார்களும் பெண்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல் டீசல் விலை!

0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட தினங்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 12 காசுகள் குறைந்து 99 08 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 14 காசுகள் குறைந்து 93 38 காசுக்கும் விற்பனையாகி வருகின்றது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து இருக்கிறது.

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! 17 மாதங்களுக்குப் பிறகு நேரடி விசாரணையில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

0

நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் சுமார் 17 மாதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசாரணை மட்டும் இன்றைய தினம் முதல் நேரடியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பமானது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொளி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தற்சமயம் நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பதை தொடர்ந்து விசாரணையை நேரடியாக நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலனை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குழு முதல்கட்டமாக குறிப்பிட்ட ஒரு சில விளக்கங்களை மட்டும் நேரடியாக விசாரணை செய்யலாம் என்று பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என் வி ரமணா தெரிவித்துள்ளார். அதேசமயம் காணொளி மூலமாக விசாரணையில் பங்கேற்க விரும்பும் வழக்கறிஞர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நோய்த்தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனடிப்படையில் ஒரு அறையில் இருபதுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகள் மீதான விசாரணையை நேரடியாக நடத்த அனுமதி கிடையாது. காணொளி மூலமாக தான் விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை நேரடியாக ஆஜராக விரும்பினால் ஒரு தரப்புக்கு ஒரு வழக்கறிஞர் அல்லது அவருடைய பதில் நபர் ஒரு வாதாடும் வழக்கறிஞர் மற்றும் ஒரு இளம் வழக்கறிஞர் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

அவர் நன்றாக விளையாடுவார்! கேப்டன் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்!

0

இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு இடையே நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளையதினம் இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற லண்டன் நகரில் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினால் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ ராமன் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும், தலா ஒரு வெற்றி பெற்று ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கின்றன. முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. நாளைய தினம் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இருக்கின்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

முதல் மூன்று கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் 5 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார் இதில் இந்திய அணி முன்னிலை பெறும் அளவிற்கு மிகப்பெரிய இன்னிங்சில் அவர் விளையாடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டபுள்யூ வி ராமன் விராட்கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தால் மறுபடியும் பழைய நிலைக்கு இந்திய அணி திரும்பும் அவர் மீது அதிக அழுத்தம் இருக்கிறது. அதனாலேயே எல்லாருடைய கவனமும் அவர் மீது திரும்பியிருக்கிறது, அதோடு மட்டுமல்லாமல் அவர் சிறந்த வீரர் என்பதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாகவே அவர் ஆளாக்கப்படுகிறார் என்று கூறியிருக்கிறார்.

3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் விராட் கோலி மறுபடியும் பழைய திறமையுடன் ஆடினார் கண்டிப்பாக அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் நன்றாகவே விளையாடுவார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு! மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

0

பள்ளிகள் திறப்பதை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து இன்று முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. அனுமதி வழங்கினாலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

பள்ளிகள் வாரத்தில் ஆறு தினங்களும் செயல்படும் வகுப்பறைகளில் இருபது மாணவர்கள் மட்டுமே அமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் எல்லோரும் நோய் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.. பள்ளிகள் திறந்த உடனேயே பாடம் நடத்தப்படாது, மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தும் நிறத்திலும் பழைய பாடங்களை நினைவில் நிறுத்தும் வகையிலும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு முதல் 45 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் அதற்கான புத்தகமும் வெளியிடப்பட்டு உள்ளது.

மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் இடையே ஒரு சிறிய பயம் இருந்தாலும் இதுவரையில் யாரும் வெளிப்படையாக அதனை காட்டிக்கொள்ளவில்லை. இதனை மனதில் வைத்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

அதேபோல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்த வழக்கு ஒன்று தொடரப்பட்டது. சமயத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த படமாட்டார்கள். இணையதள வகுப்புகளும் மேற்கொள்ளப்படும் இதன் மூலம் அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிப்பதற்காக மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக 37 மாவட்ட அதிகாரிகளை பள்ளிகல்வி துறை நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திறக்கப்படுகிறதா? வகுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? மாணவர்களின் வருகை எப்படி இருக்கிறது ?போன்ற விஷயங்களை கண்காணித்து பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த அதிகாரிகள் அறிக்கை அனுப்புவார்கள்.

கனிம வளங்களை திருடினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

0

கனிம வளங்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதி அளித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் பொது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் மற்றும் கனிமவளத்துறை மீதான விவாதம் நடந்தது.அந்த விவாதத்தின் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பிரின்ஸ் கன்னியாகுமரியில் மலைப்பகுதி கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதனை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

அவருடைய இந்த கோரிக்கைக்கு பதிலளித்து உரையாற்றிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி தெரிவித்த துரைமுருகன், இதனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனாலும் கனிம வளங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கையை அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்ட துரைமுருகன் பயன்படாமல் இருக்கும் பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளை பொதுமக்களுக்கு பயனுள்ள அமைப்புகளாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு கனிமங்கள் எடுப்பதை தடுப்பதற்காக ஆளில்லாத சிறிய விமானங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

கட்டுமான பணிகளில் மணலுக்கு பதிலாக தற்சமயம் எம்சாண்ட் உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகின்றது. ஆகவே தரமற்ற எம் சாண்டினை சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காகவும், அதனை கண்காணிக்கவும், தயாரிப்பு, தரம் விலை மற்றும் அவற்றை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவற்றில் வரைமுறை படுத்துவதற்கு மாநில அளவில் புதிய கொள்கை ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் துரைமுருகன்.

சுரங்கம் இருக்கும் பகுதியில் மலை போல குவிந்து இருக்கும் குறைந கழிவு கற்களை அரசுக்கு வருவாய் தரும் விதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகம் நிறுவனத்தின் கிராபைட் சுரங்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளை கண்டறிவதற்காக ஆய்வு செய்யப்படும் 20 லட்சத்தில் நவீன நில அளவை கருவி கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வெள்ளி வென்ற மாரியப்பன்: 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு

0

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் தமிழக முதலமைச்சர்.

டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற T63 உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், மாரியப்பனின் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இதேபோல் அவருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த கிராமமே பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக தமது திறமையை நிரூபித்துள்ளார் மாரியப்பன்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.

இந்தப்போட்டியில் மற்றொரு இந்திய வீரரான சரத் குமார் தமது முதல் முயற்சியில் 1.83 மீட்டர் உயரம் தாண்டிய நிலையில், மூன்று முறை தோல்விக்குப் பிறகு 1.86 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பெறும் தமிழகத்தின் முதல் வீரர் மாரியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.