Monday, July 21, 2025
Home Blog Page 44

அதிமுக மாநிலங்களவை எம்பி பதவிக்கான சீட்டு இவர்களுக்கா.. அதிரடி காட்டப்போகும் EPS!!

மாநிலங்களவை எம்பி பதவி முடிவுக்கு வரும் நிலையில் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுகவிற்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பாக 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கவிஞர் சல்மா, சேலம் எஸ் ஆர் சி சிவலிங்கம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக சார்பாக மாநிலங்களவை வேட்பாளர்கள் தற்போது வரை அறிவிக்கவில்லை. இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக இரண்டு மாநிலங்களவை எம்பி பதவிகள் உள்ள நிலையில் 41 மாவட்ட செயலாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மேலும் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தக் கூட்டத்திற்கு பிறகு எம்பி தேர்தலுக்கான இரண்டு வேட்பாளர்கள் யார் என தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி செயலாளர் இன்ப துரை, கொள்கை பரப்பு செயலாளர் வித்யா செம்மலை, பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உள்ளிட்டோரின் பெயர்கள் மாநிலங்களவை எம்பி சீட்டு வழங்கும் பெயர்களில் அடிபடுவதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

தேமுதிக வுக்கு MP சீட் இல்லை.. இது தான் எடப்பாடி முடிவு-பத்திரிக்கையாளர் மணி!!

ADMK DMDK: தமிழ்நாட்டில் எம்பி தேர்தல் ஆனது வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக யாருக்கு அதன் சீட்டுகளை வழங்கும் என்பதை பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தேமுதிக எம்பிசி குறித்து பொருள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் அதிமுக தங்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை முழுவதுமாக எடப்பாடி தரப்பினர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் இந்த எம்பி சீட் குறித்து பத்திரிக்கையாளர் மணி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கட்டாயம் அதிமுக தேமுதிக _ வுக்கோ அல்லது பாமகவுக்கும் எந்த ஒரு சீட்டையும் ஒதுக்காது. ஏனென்றால் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாமக இறுதி கட்ட பேச்சு வார்த்தை அனைத்தையும் நடத்திவிட்டு பாஜகவுடன் கை கொடுத்தது. இதே போல தான் ஜி கே வாசனம் செய்தார்.

மேற்கொண்டு தேமுதிக விற்கும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் தந்ததாக அவர்களது தரப்பில் தெரிவிக்கவில்லை. அது மட்டுமின்றி மாநிலங்களவையில் நான்கு பேர் உள்ள நிலையில் அதில் இருவர் குறைந்தால் அதிமுகவிற்கு தான் பெரும் இழப்பு. இந்த காரணத்தினால் எடப்பாடி தனது கட்சி நிர்வாகிகளை தான் நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணுவார். மேற்கொண்டு கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டுமென பாமக அல்லது தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது.

ஏனென்றால் ஸ்டாலின் திருமாவளவன் உடன் கூட்டணி வைக்க விரும்புவதா பாமக மற்றும் தேமுதிகவிற்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை. இவர் கூறுவதை பார்க்கையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்பது தெரிய வந்துள்ளது.

பாமக _ விற்கு 2 பொருளாளர்?? ராமதாஸ் மற்றும் அன்புமணி அறிவிப்பு!!

PMK: பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றில் அப்பா மற்றும் மகன் இருவருக்கும் மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பது குறித்து மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சி தற்போது உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ், அன்புமணி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். மேற்கொண்டு வன்னியர் சங்க சொத்துக்கள் என அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் பாமகவின் பொருளாளர் திலக பாமகவை கட்சியிலிருந்து நீக்கம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க தனியார் மண்டபம் ஒன்றில் தொடர் மூன்று நாட்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். அதில் 23 பேரில் 22 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பொருளாளர் திலகபாமாவும் பங்கேற்றுள்ளார். கட்சி ரீதியாக வங்கியிலிருந்து பணம் எடுக்க வேண்டுமென்றால் கட்டாயம் திலகபாமா கையெழுத்து போட வேண்டும். இதனால்தான் ராமதாஸ் முதல் செக்மேட் ஆக திலகபாமாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.

இவருக்கு மாற்றாக திருப்பூரை சேர்ந்த மன்சூர் என்பவரை பொருளாளராக நியமித்துள்ளார். இப்படி இருக்கையில் ஒரு சில மணி நேரத்திலேயே அன்புமணி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் திலகபாமா பொருளாளராக கட்சியில் நீட்டிப்பார் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாட்டாளி மக்கள் சொத்து என்பது தனி நபருக்கு கிடையாது மேற்கொண்டு தொண்டர்கள் இல்லாமல் பாமக என்பது இல்லை.

நான் அடிமட்ட தொண்டனாக கூட கட்சிக்கு செயல்பட தயார். மேலும் பொறுப்புகள் என்பது இன்றைக்கும் நாளைக்கும் நிச்சயம் இல்லாதது, வரும் போகும் இதனால் நமக்குள் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது என தெரிவித்தார். அத்தோடு இது ரீதியாக பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடத்தி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அனைத்து நிர்வாகிகளும் எப்பொழுதும் போல முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதிமுகவுடன் மெகா கூட்டணி அமைக்குமா தவெக; ஹின்ட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!!

சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில் அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றார். அந்த கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சி பணிகள் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

முதல் நாள் கூட்டத்தில் ஜூன் மாதம் இறுதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது அப்போது விஜய் மற்றும் தவெகவினரை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் நிர்வாகிகளுக்கு தடை விதித்துள்ளார். அதற்கு மாறாக திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை அதிகரிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் விரும்பியதைப் போல அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதனால் நம்பிக்கையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக கூட்டணிக்குள் தவெக நுழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தவெக தலைவர் விஜய் அதிமுகவை பற்றி எந்த ஒரு விமர்சனங்களையும் முன்வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராமதாஸ் உயிருக்கு பெரும் ஆபத்து.. ஸ்கெட்ச் போடும் அன்புமணி பொண்டாட்டி!! அலர்ட் செய்த மணிகண்டன்!!

PMK: இன்றைய நாளில் ஹாட் டாபிக்காக பேசப்படுவது பாமக வின் அப்பா மகன் மோதல் குறித்துதான். தற்போது மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் காடுவெட்டி குருவின் உறவினரான விஜி கே மணிகண்டன் அன்புமணிக்கு எதிராக பேசியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, பாமகவை ஆரம்ப கட்டத்திலிருந்து பாடுபட்டு உருவாக்கிக் கொண்டு வந்தது ராமதாஸ் தான் அதனால் அக்கட்சியை எந்த வழியில் கொண்டு வர வேண்டும் என்ற பக்குவம் அவரிடம் உள்ளது.

அப்படி இருக்கையில் தற்போது வந்த அன்புமணி தன்னிடம் அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து விடுங்கள், உங்களுக்கு வயதாகிவிட்டது ஓய்வு பெற வேண்டும் என வன்முறையில் இறங்கிவிட்டார். இதனை பொறுக்க முடியாமல் தான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் 1984 ஆம் ஆண்டு எப்படி கட்சி ஆரம்பித்து மக்களுக்காக செயல்பட்டேனோ அதேபோல் செயல்பட போகிறேன். மேற்கொண்டு எனது சொத்துக்களும் வன்னியர் அறக்கட்டளையின் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு கொடுக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் காடுவெட்டி குரு உடல்நிலை சரியில்லாத போது வெளிநாட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. இது ரீதியாக ராமதாஸ் யிடம் பணம் கேட்ட பொழுது அவர் வெளிநாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை ரீதியாக அனைத்தையம் ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் அதனை தடுத்ததே அன்புமணி தான். அவருக்கெல்லாம் ஏன் தர வேண்டும் எனக் கூறி ராமதாசை வாய் பேச முடியாமல் வைத்துவிட்டார்.

இதனால் காடுவெட்டி குரு தமிழகத்திலேயே சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. அவரை மருத்துவ கொலை செய்ததே ராமதாஸ் தான். இனி வரும் நாட்களில் இது ரீதியான உண்மையை ராமதாஸ் வழியே நாம் கேட்க முடியும். அதேபோல காடுவெட்டி குரு இறந்து கலவரம் ஏற்படாமல் இருக்க ஒரு வாரம் கழித்துதான் அவரது இறப்பை உறுதி செய்தார்கள். இதை அனைத்திற்கும் அன்புமணி தான் காரணம். தற்பொழுது மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. இனி வரும் நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

முக்கியமாக பல கோடி கணக்கான சொத்துக்கள், உள்ளது ஆனால் அது யார் பேரில் உள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும் அதன் ஆவணங்கள் அனைத்தும் அன்புமணியிடம்தான் இருக்கிறது. எனது ஆதரவு முழுவதும் ராமதாஸ்க்கு தான், அன்புமணிக்கு ஒருபோதும் கிடையாது என்று மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் விஜிகே மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ராமதாஸ் உயிருக்கு அவரது மகன் மற்றும் மருமகளால் பெரும் ஆபத்து உள்ளது எனவும் கூறியுள்ளார்.

உட்கட்சி மோதல்: சேலம் பாமக MLA பதவி விலகல்.. வெளியான பரபர அறிவிப்பு!!

PMK : பாமகவில் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் நிர்வாகிகள் அனைவரும் செய்வதறியாது உள்ளனர். இதில் ராமதாஸ் தனி செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து அன்புமணி என்னவெல்லாம் மறைமுகமாக செய்து வருகிறார் என்பது குறித்து பேசியுள்ளார். இதனிடையே அன்புமணியும் தனியாக பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதில் பெரும்பாலானோர் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் மூத்த நிர்வாகிகள் பலர் தந்தை மற்றும் மகன் இருவரும் ஒன்று சேர வேண்டும் என நினைக்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தின் பாமக எம்எல்ஏ அருள் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பா மகன் இருவரும் மோதல் போக்கை கைவிடவில்லை என்றால் மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ-வாக உள்ள நான் பதவி ராஜினாமா செய்ய போவதாக கூறியுள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பு மற்ற நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி பல பொய்களை பேசுபவர், அம்மா வையே அடிக்க வந்தவர், எனக்கு எதிராக செயல்பட நினைக்கிறார் என இவர் கூறியது கட்சி நிர்வாகளிடையே அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிரச்சனை என்றால் அவர்களுக்குள் பேசி முடிக்காமல் பொதுவெளி வரை கொண்டு வரலாமா அது தலைமைக்கு அழகா?? என கேள்வி எழுப்புகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களின் கவனத்திற்கு….அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!

TN: தமிழக அரசு போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்களை வழங்கவில்லை என போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இதனால் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

ஆனால் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 15 வது ஊதிய ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு குரோம்பேட்டை மாநகரப் போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கலந்து கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஊதிய உயர்வு உடனடியாக பணப்பலன்கள் வழங்க வேண்டும் ,தற்காலிக ஒப்பந்த ஓட்டுனர்களை நியமனம் செய்யக்கூடாது, பணியில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அமைச்சர் இதுகுறித்து கூறுகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,09,787 பணியாளர்கள் 15வது ஒப்பந்தத்தின் கீழ் 48,006 ஓட்டுநர்கள் 42,825 நடத்துனர்கள் மற்றும் 13,003 தொழில்நுட்ப பணியாளர்கள் 2529 இதர பிரிவு பணியாளர்களுக்கு பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் ஆறு சதவீதம் உயர்த்தி உரிய நிர்ணயம் செய்யப்பட்டது.

2024 செப்டம்பர் முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் ஊழியர்கள் தங்களுடைய பனிக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை குறித்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை ஒருமுறை தளர்த்தி ஜூன் 30-ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு தயாராகும் அடுத்த பெரிய பதவி!! கனிமொழிக்கு வர போகும் ஆப்பு!!

DMK: அரசியல் பயணத்தில் உதயநிதி ஸ்டாலின் காலடி எடுத்து வைத்த ஓரிரு மாதங்களிலேயே அமைச்சர் துணை முதல்வர் என்று பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பலரும் கட்சிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு கிடைக்காத முன்னுரிமை கூட தனது மகன் என்ற காரணத்தினால் வாரிசு அரசியலை முன்வைத்து உதயநிதிக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கட்சிக்குள்ளேயே இதற்கு சிலரிடம் எதிர்ப்பும்  இருந்து வருகிறது.

குறிப்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் இதனை விரும்பவில்லை. இது ரீதியாக துரைமுருகன் மற்றும் உதயநிதிக்கு தான் முற்றல் போக்கு இருந்தது. அதனை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டனர். அதேபோல் தற்போது மதுரையில் ஜூன் ஒன்றாம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்த கருத்துக்கு திமுக முழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் முன்னதாகவே 5 பொதுசெயலாளர்கள் உள்ள நிலையில் மேற்கொண்டு உதயநிதியை கொண்டு வர பிளான் இல்லை என கூறியுள்ளனர். ஆனால் துணை முதல்வர் பதவி கொடுத்ததும் உடனடியாக பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் விமர்சனத்திற்கு ஆளாக கூடும் என்பதால் அதனை தவிர்த்து வந்துள்ளார்களாம். அதற்கு பதிலாக தற்போது இந்த 5 நபர்களிலிருந்து ஒருவரை நீக்கிவிட்டு உதயநிதியை பொதுச்செயலாளராக மாற்ற உள்ளதாக தலைமை வட்டாரம் பேசுகின்றது. இதில் ஒருவர் தான் கனிமொழி, அதனால் அவரை பதவியை விட்டு நீக்கம் செய்யலாம் என கூறுகின்றனர்.

அப்பா வை விரட்ட மகன் போட்ட பலே திட்டம்!! கட்சியே இனி அன்புமணி க்கு தான்!!

PMK : பாமக கட்சியானது இரண்டாக பிளவுபட போகிறது என்று நேற்று ராமதாஸ் வைத்த செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நன்றாக அறிய முடிந்தது. அதுமட்டுமின்றி முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்புமணியின் அனைத்து பொறுப்புகளையும் மகள் வழி பேரனான முகுந்தனுக்கு தர ஏற்பாடு செய்யப்படுகிறதாம். அதேபோல நேற்று நடந்த பிரஸ் மீட்டில் முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏன் யாரும் வரவில்லை என்பது குறித்து விவரித்து பேசியிருந்தார்.

இவரது இந்த பேட்டியானது அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியதோடு இவர்களின் மோதல் போக்கு தீவிரம் அடைந்ததையும் காட்டியுள்ளது. நேற்று இவர் பேட்டி அளித்ததை வைத்து பார்க்கையில், ராமதாஸ் அழைப்பிற்கு கூட்டத்திற்கு வராத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிகிறது. புதிய நிர்வாகிகளை அமைத்து அரசியல் கட்சியை மேற்கொண்டு வலுப்படுத்த ராமதாஸ் முயற்சிப்பதாக கூறுகின்றனர். ஆனால் அன்புமணியும் ராமதாஸ் அவர்களின் செயலை பொறுக்க முடியாமல் மாற்று ஆலோசனை செய்து வருகிறார்.

என்னதான் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினாலும் அதனை தற்போது வரை பொதுக்குழு அங்கீகரிக்கப்படவில்லை. மேற்கொண்டு தேர்தல் ஆணையமும் அன்புமணியை தான் தலைவர் என்ற முடிவில் உள்ளது. ஆகையால் இதனை பலமாக்கி அவசர பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார். இதனை வைத்து கட்சி அதிகாரத்தை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் அன்புமணி இருப்பதாக கூறுகின்றனர். இறுதி கட்டத்தில் தான் மாம்பழம் யார் கைக்கு போகும் என்பதை பார்க்க முடியும்.

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்தார்.

“மேற்கு வங்கம் இன்று ஊழல், வன்முறை, மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவால் சிக்கிய மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு மாநில அரசே காரணமாக உள்ளது. முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் நடந்த நிகழ்வுகள், இந்த அரசாங்கத்தின் இரக்கமற்ற முகத்தை காட்டுகின்றன.

சமாதானம் என்ற பெயரில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் முற்றிலும் செயலற்று நிற்கிறார்கள். இளம் தலைமுறையும், ஏழை மக்களும், குறிப்பாக பெண்களும் மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

மம்தா பானர்ஜியின் கட்சி 24 மணி நேரமும் அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறது; மாநில வளர்ச்சி குறித்து சிறிதும் அக்கறை இல்லை. அதனால் தான் மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மாதிரியாக, விரைவில் ‘ஆபரேஷன் பெங்கால்’ என்ற திட்டத்துடன் மேற்கு வங்கத்தை மீட்டெடுக்க விரும்புகிறது”
என மோடி தெரிவித்தார்.

இந்தக் கருத்துகள், குறிப்பாக “ஆபரேஷன் பெங்கால்” மற்றும் பெண்கள் நலன் குறித்து மோடி பேசிய விதம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமரின் பேச்சு குறித்து கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது “பிரதமர் மோடி, பெண்களின் மரியாதையை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது பெண்களின் வாழ்க்கையை அரசியல் கருவியாக்கும் முயற்சி. சிந்தூர் என்பது ஒரு பெண்ணின் கணவரால் தரப்படும் மரியாதையின் அடையாளம்.

பிரதமர் மோடி, நீங்கள் எல்லா பெண்களுக்கும் கணவர் அல்ல. உங்கள் சொந்த மனைவிக்கு கூட சிந்தூர் கொடுக்க தயங்கிய நீங்கள், இப்போது நாங்கள் அனைவருக்கும் உரிமை கொண்டது போல் பேசுகிறீர்கள்!

‘ஆபரேஷன் பெங்கால்’ என்றால் என்ன? எங்களை மீட்பதா, அழிப்பதா? இது வங்காள மக்களுக்கு எதிரான அவமதிப்பு. உங்கள் கட்சியில் பெண்களுக்கு அடிப்படை மரியாதையும் இல்லை.

நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். ஆனால் எங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டோம். நாட்டில் நடைபெறும் உங்கள் கட்சியினர் சார்ந்த ஆபாச சம்பவங்களைப் பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள், ஆனால் எங்களை குற்றம் சொல்ல வருகிறீர்கள் என்று விமர்சித்துள்ளார்.”

மம்தாவின் இந்தக் கடுமையான விமர்சனத்தின் பின்னணியில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றை ஆதாரமாக குறிப்பிட்டு பேசியுள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மனோகர் லால் தாக்கத், ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாகக் கூறப்பட்ட அந்த வீடியோ விவகாரம் இதனால் மீண்டும் அதிக கவனத்தை பெற்றது. இதைத் தன் பதிலில் மம்தா குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.