Thursday, July 31, 2025
Home Blog Page 4532

வெறும் 25 ரூபாயில் சிலிண்டரா? இதோ இப்படி புக் பண்ணி வாங்கிக்கோங்க!

வெறும் 25 ரூபாயில் கேஷ்பேக் சலுகைகளுடன் paytm நிறுவனம் 25 ரூபாயில் சிலிண்டரை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ரூ 825 க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டரை 800 ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 25 ரூபாய்க்கு நீங்கள் கேஸ் சிலிண்டரை பெற முடியும்.

 

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஐநூறு ரூபாய் இருந்து படிப்படியாக இந்த வருடம் 800 ரூபாய் வரை வந்து நிற்கிறது. அன்றாட வேலைக்கு தட்டு தடுமாறும் மக்கள் எல்பிஜி சிலிண்டர் விலைகளை கண்டு பயந்து தான் போயிருக்கிறார்கள்.

 

இப்பொழுது அதனை சரி செய்யும் விதத்தில் 800 ரூபாய் தள்ளுபடி உடன் இந்த சலுகையை Paytm நிறுவனம் வழங்குகிறது.

 

பாரத் கேஸ் சிலிண்டரை நீங்கள் Paytm மூலம் முன்பதிவு செய்யும் பொழுது பின் கேஷ்பேகை Paytm நிறுவனம் வழங்குகிறது. இது இந்த மாதம் 30ஆம் தேதி வரை இந்த சலுகை இருக்கும் என தெரிவித்துள்ளது. Paytm மூலம் ஒரு நபர் முதல் முதலாக கேஸ் சிலிண்டர் புக் செய்தால் 800 வரை தள்ளுபடி பெறலாம் என அறிவித்துள்ளது.

 

எப்படி செய்வது என்று பார்க்கலாம்:

 

முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm App டவுன்லோட் செய்யுங்கள். அது மற்ற விவரங்களை கேட்டால் அதனை உள்ளீடு செய்யவும். பின் அங்கே இருக்கும் recharge and pay bills என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் book a cylinder என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும். எந்த எரிவாயு என்று தேர்ந்தெடுக்க சொல்லும் அதில் பாரத் கேஸ் என்பதை தேர்ந்தெடுத்து செய்து கொள்ளவும். நீங்கள் எல்பிஜி பதிவு செய்த மொபைல் எண் அல்லது ஐடி இருந்தால் உள்ளீடு செய்யவும். அதன் பிறகு அங்குள்ள QR code ஐ ஸ்கேன் செய்து சலுகையைப் பெறலாம்.

 

இது உண்மையா என்று நினைப்பவர்களுக்கும் Paytm தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அதிகாரப் பூர்வமான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. Paytm இலிருந்து ரூ .800 வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக்கை மற்ற பொருட்களை வாங்க அல்லது உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகரை பலி கொண்ட விபத்து!

0

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகரை பலி கொண்ட விபத்து!

யார் உயிர் எப்போது போகும் என்பது யாருக்கு தெரியும். உயிர் என்பது யார் கையிலும் இல்லை, ஆனால் நாம் தான் அதை பாதுகாக்க வேண்டும். யாரவது நினைத்து இருப்பார்களா இவ்வளவு சின்ன வயதில் உயிர் போகும் என்று.

இவரது இயற்பெயர் விஜய்குமார் பசவராஜயா என்றாலும் மேடைப் பெயரான சஞ்சாரி விஜயே அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால கட்டத்தில் மேடை நாடகங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

‘ரங்கப்பா ஹோக்பிட்னா’ என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானவர் சஞ்சாரி விஜய். இவர், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘நான் அவனல்ல அவளு’ என்ற படத்தில் திருநங்கையாக நடித்தார்.  அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அவர் வாங்கினார்.

கடந்த 12ஆம் தேதி சஞ்சாரி விஜய் தன்னுடைய நண்பருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சறுக்கி அருகே இருந்த விளக்கு கம்பத்தின் மீது மோதியுள்ளது. இதையடுத்து, தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சாரி விஜய்க்கு, மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும், அதனை நீக்க அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சஞ்சாரி விஜய் இன்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்ததையடுத்து, அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்து உள்ளனர்.

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!

0

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!

ஆண்கள் தான் இப்படி என்றால் புதிதாக ஒரு பெண்ணும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்ய எப்படி மனது வந்ததோ? எதற்காக மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் இவர் மூன்றாவது கணவரிடம் மட்டும் தான் பணம் வாங்கி தலைமறைவாகி உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த வாலிபர் சுனில் குமார்( வயது 29) . இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.  இவரிடம் திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்ட சுகாசினி அவரை காதல்வலையிலும் வீழ்த்தியுள்ளார்.

தனக்கு பெற்றோர் மற்றும் உறவினர் யாரும் இல்லாத  ஒரு ஆதரவற்ற பெண் என்று கூறி சுனில்குமாரை நம்பவைத்து கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். சுனில் குமாரின் குடும்பத்தினரும் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், கூறி இரண்டு முறைகள் 6 லட்சம் ரூபாய் வரை சுனில்குமாரிடம் பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இதை அறிந்த பெற்றோர் கடந்த 7 ம் தேதி சுனிலிடம் இருந்து தங்களுக்கு தெரியாமல் பணம் பெற்றதை அறிந்தவர்கள், சுகாசினியிடம் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளனர். அதைனை தொடர்த்து சுகாசினி மாயமானதாகவும் கூறப்படுகின்றது.

அவர்கள் தொலைபேசியில் சுகாசினியை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ ஒன்றை தவறாக உணர்ந்த சுனில் ஆவணங்களை சரிபார்த்தார்.  ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் காத்து இருந்தது.

சுகாசினி ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து அவருக்கு ஒரு மகள் இருப்பதையும் கண்டுபிடித்தார். இதற்கிடையில், சுனிகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி , தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தந்து விடுவதாகவும்,  போலீசாரை நாடும் போது வீணாக பிரச்சினைக;ளை சந்திக்க நேரும் என்றும் மிரட்டியுள்ளார்.

மேலும், வெங்கடேசை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் சுனிலின் செல்போனிற்கு அனுப்பி அதிர்ச்சியூட்டி உள்ளார் சுகாசினி.

எப்படி எல்லாம் மனிதர்கள் உள்ளனர். புதிது புதிதாக ஏமாற்றுகிறார்கள் உஷார் மக்களே.இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இவர்கள் மூவருமே 90ஸ் கிட்ஸ் ஆம் பா. இன்னும் எத்தனை சுகாசினி உள்ளர்கள் என பாப்போம்.

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது?

0

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது?

கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன. இந்த பயன்பாடுகளில் பெரும்பாலானவை தீம்பொருள் (மால்வேர்) வைரஸ்களைக் கொண்டவை. மொபைல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், சைபர் குற்றவாளிகள் இந்த தளங்களை மக்களை தவறாக வழிநடத்த எளிதான வழிமுறையாக மாற்றி உள்ளனர். சமீபத்தில் வெளியான போலி முதலீட்டு செயலி மோசடியில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமாகிவிட்டது. மக்கள் முதலீடு செய்த பணத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்று அவர்களுக்கு சைபர் குற்றவாளிகள் உறுதியளித்தனர்.

சைபர் கலத்துடன் இணைக்கப்பட்ட டெல்லி காவல்துறை, சிண்டிகேட் இயங்குவதைக் கண்டறிந்து, இந்த தீங்கிழைக்கும் பயன்பாடுகளை சீன நாட்டினரால் மல்டிலெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) மாதிரியைப் பயன்படுத்தி மோசடிக்கு இயக்கியது தெரியவந்தது. சைபர் கிரைம் செல் துணை போலீஸ் கமிஷனர் அனீஷ் ராய் இந்த செயலிகள் சில கூகிள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறினார்.

தோராயமாக மக்களைத் தொடர்புகொள்வதற்கும் விவரங்களைப் பெறுவதற்கும் செய்தி தளங்கள் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, போலி செயலிகள் ஆன்லைன் மோசடியில் தொடர்புடைய சைபர் கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தொழில்நுட்ப நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பு சேவைகளை நம்ப வேண்டுமா?என்ற கேள்வியும் எழுகிறது.

போலி செயலிகளை எப்படி கண்டறிவது என்பது கடினம். ஆனால் இதுபோன்ற தீங்கிழைக்கும் தாக்குதல்களுக்கு இரையாகாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, iOS மற்றும் Android இயங்குதளங்களில் போலி பயன்பாடுகளை அடையாளம் காண உதவும் சில எளிய முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

செயலியின் பெயரையும் ஆப் ஸ்டோரில் பயன்பாட்டை வெளியிட்ட டெவலப்பரையும் சரிபார்க்கவும். செயலிகளைத் தேடும்போது, ஒத்த பெயர்களைக் கொண்ட பல செயலிகளை நீங்கள் காணலாம், பெயர் மற்றும் விளக்கத்தில் எழுத்துப்பிழை தவறுகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். Google Play Store அல்லது Apple App Store இல் நீங்கள் பதிவிறக்க விரும்பும் செயலிகளுக்கான மதிப்புரைகள், மதிப்பீடுகள் மற்றும் பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்கவும்.

செயலியின் வெளியீட்டு தேதியைச் சரிபார்க்கவும். அசல் பயன்பாடு வழக்கமாக ‘புதுப்பிக்கப்பட்ட’ தேதியைக் காட்டுகிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பயன்பாடு உங்களிடமிருந்து என்ன அனுமதிகள் கேட்கிறது. அந்த செயலி ஆடியோ மற்றும் பலவற்றை அணுகும்படி கேட்டால், அனுமதிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடிவாளம் இட்டும் அடங்காத சசிகலா!

0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் உரையாற்றி அதற்காக அதிமுகவிலிருந்து நேற்றையதினம் 15 முக்கிய நபர்கள் நீக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், சசிகலா உரையாற்றும் மற்றொரு ஆடியோ வெளியாகி இருப்பதாக தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் அவர்களும், கொறடாவாக எஸ் பி வேலுமணி அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உட்பட 15 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதேபோல அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாவிதமான பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இப்படியான சூழ்நிலையில், சசிகலா உரையாற்றும் இன்னொரு ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மதுரை அதிமுக நிர்வாகியிடம் உரையாற்றிய சசிகலா கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள் விரைவில் நான் உங்களை நேரில் சந்திக்கிறேன் கட்சியை மறுபடியும் நல் முறையில் கொண்டு செல்வோம் அதை யாராலும் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

இவர்களைப் போன்று எத்தனையோ பேரை நான் பார்த்து இருக்கின்றேன். 1987-ம் வருடம் எம்ஜிஆர் மறைவின் போது ஏற்பட்ட பிரச்சனையை அம்மாவுடன் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன் அதிலிருந்து மீண்டு வந்து தான் ஆட்சியை பிடித்தோம். அதேபோல மறுபடியும் ஒரு சம்பவம் நடக்கவிருக்கிறது இவர்கள் செய்வது எல்லாம் புதிய செயல்கள் அல்ல. ஜெயலலிதா போல நாமும் தொண்டர்களுடன் வந்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று தெரிவித்திருக்கின்றார். இது சசிகலாவின் 41வது ஆடியோ என்று சொல்லப்படுகிறது.

முதல்வரின் புதிய அறிவிப்பிற்கு வெடித்தது எதிர்ப்பு!

0

முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்டோர் செல்லும் வழியில் பெண் காவலர்களை பணியில் அமர்த்த கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இது பல சிக்கல்களை உண்டாக்கும் என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் பலர் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில், இந்த அறிவிப்பு சிக்கலை உண்டாக்கும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார்.

தமிழக காவல்துறையில் ஆண், பெண் என்று இருவருமே சமமான பயிற்சி, சமமான சம்பளம், சமமான வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் கொடுக்கும்போது இவ்வாறான பெண்களின் பிரச்சனைகளை தெரிவித்துக்கொண்டு புலம்பிக்கொண்டே இருப்பது சரியாக இருக்காது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதிக அளவிலான சலுகைகள் கொடுக்கப்படும் சமயத்தில் உரிமைகள் இழப்பில் கொண்டுபோய் விட்டு விடும் என்று தெரிவித்திருக்கின்றார் திலகவதி. இவ்வாறு பிரித்துக் கொடுத்து கொண்டே இருந்தால் ஆண் காவலர்கள் மட்டுமே துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

கழிவறை பிரச்சனை மற்றும் மாதவிடாய், கர்ப்பகாலம், போன்றவைதான் பெண் காவலர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் இந்த பிரச்சனைகளுக்கு போதிய வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு வழியில் அமர்த்தாமல் இருப்பது சரி கிடையாது என்றும் திலகவதி தெரிவித்திருக்கின்றார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை பெண் காவலர்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் எதிர்காலத்தில் சம்பள குறைப்பு இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சிறிய வட்டத்துக்குள்ளேயே பெண் காவலர்கள் சுருக்கி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றார். முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி அவர்கள்.

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

0

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அவர் அறிவித்த தொகையை இரு தவணைகளாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மே மாதம் கடைசியிலிருந்து முதல் தவணை நிவாரண தொகை 2000 வழங்கப்பட்டு வருகிறது. நோய்தொற்று காலத்தில் வெளியூரில் சென்று தங்கி இருக்கின்றவர்கள் தங்களுடைய நியாயவிலை கடைகளில் 2000 ரூபாய் பெற இயலாத நிலை இருப்பதால் எந்த தேதியிலும் முதல் தவணை தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.

தற்சமயம் இரண்டாவது தவணை தொகையாக 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த தொகையுடன் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பையையும் இலவசமாக வழங்க இருக்கிறார்கள். இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது ஆகவே பொதுமக்கள் அவசரம் எதுவும் இல்லாமல் அவற்றை பெற்றுக் கொள்ளலாம். 15ஆம் தேதி முதல் இந்த மாதம் இறுதி வரையில் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.

முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்! வெளியாக இருக்கும் அறிவிப்பு!

0

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ தற்சமயம் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரையில் ஒரு நாளைக்கு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்சமயம் 13 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாக இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறைப்பு இருக்கிறது. முழு ஊர் அடங்கில் படிப்படியாகத் தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகின்றார்.

இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கோயமுத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே அந்த தொகுதிகளைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், நாளை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்படுகிறார் 17ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய நோய்த்தொற்று நிலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக்கூறி செங்கல்பட்டு நோய் தடுப்பு மருந்து உற்பத்தி போன்ற பல திட்டங்களுக்கு மிக விரைவில் அனுமதி பெறுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதற்கென்று தற்சமயம் நோய்த்தொற்றின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அது தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை நடத்துவதற்காக நோய் தொற்றின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதற்காகவும் மாவட்ட அளவில் முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது .காணொளி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலும் நோய்த்தொற்றின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ராசிக்கு சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 15-06-2021 Today Rasi Palan 15-06-2021

0

 

இன்றைய ராசி பலன்- 15-06-2021,

நாள் : 15-06-2021,

தமிழ் மாதம்:

ஆனி 01, செவ்வாய்க்கிழமை,

சுப ஹோரைகள்

காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இராகு காலம்:

மதியம் 03.00-04.30

எம கண்டம்:

காலை 09.00-10.30,

குளிகன்:

மதியம் 12.00-1.30,

திதி:

பஞ்சமி திதி இரவு 10.57 வரை பின்பு வளர்பிறை சஷ்டி

நட்சத்திரம்:

ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.42 வரை பின்பு மகம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக-நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகி லாபம் பெருகும். சிலருக்கு உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.

ஆண்கள் உடலுறவில் செய்யும் தவறு/திருத்திக்கொள்ள வேண்டும் எனப் பெண்கள் கருதுவது எது?

0

 

அதிகமாக இணையத்திலும் போர்ன் வீடியோக்களையும் பார்ப்பதால் உடலுறவில் சீராக இல்லாமல் பல பெண்களின் வாழ்வு அழிந்து விடுகிறது ! இது ஓர் உளவியல் ஆராய்ச்சி மட்டுமல்ல, நரம்பியல் பிரச்சனையும் கூட

கட்டாயப்படுத்தி எதையும் செய்தால் மன நோய்க்கு உள்ளாகிறார்கள் பெண்கள் ! இருவருக்கும் விருப்பப்பட்டே செய்தல் வேண்டும்

பெண்ணின் பண்பு இதமாக உணர்வுகளில் தொடங்கும் ! அவளுடைய உடல் அமைப்பு வேறு ரகம் ! ஆண்களின் அமைப்பும் மூளை / நிரம்பு / உடல் உணர்ச்சிகளும் வேறு வகை ! நன்றாக பேசி புரிந்து கொண்டால் பெண்களின் தேவைகளை அவர்கள் சொல்வார்கள் அல்லது அவர்களை கேட்க வேண்டும்

 

செல் / கைப்பேசி / டிவி / லேப்டாப் படுக்கை அறையில் வைத்து அதையே பயன்படுத்தி உடல் வலு இழந்துவிட்டால் பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் வாழ்க்கை கசந்து விடும்

உடல் பயிற்சி , முக்கியமாக மண்ணில் ஏதாவது ஓர் பொழுதுபோக்கு. உதாரணம் : தோட்ட வேலை செய்தல் ரூட் சக்ரா எனப்படும் மூலாதாரம் வலுவாக இருக்கும் ! அப்பொழுது தான் பெண்ணை நன்றாக திருப்தி படுத்த முடியும்

போர்ன் வீடியோக்களில் போடப்படும் அனைத்துமோ இல்லையேல் விபச்சாரி விடுதிகளில் ஏற்பட்ட அனுபவமோ அல்லது அசாதாரண வகையிலான உடலுறவை மனைவியிடம் எதிர்பார்ப்பது , விபரீத எண்ணங்கள் கொண்ட எண்ணற்ற வகைகளில் நடந்து கொள்வது போன்றவற்றால் மனைவி பைத்தியமாக நேரிடும் ! குறைந்த பட்சம் விவாகரத்து !

இந்த சுகம் இரு பாலருக்கும் சொந்தம். இதை புரிந்து கொண்டால் நல்லது

பெண்களுக்கு உணர்வு ரீதியாக சுகமும் தேவையும் அதிகம் ! தாம்பத்திய முழுமையை விட அவர்களுக்கு வேறு சில தேவைகள் இருக்கும் ! அதை தெரிந்து கொள்ளவும் ! உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களை படுக்கை அறையில் புகழ்ந்து வருணித்து நடந்து கொள்ள எதிர்பார்ப்பார்கள்.