Wednesday, July 30, 2025
Home Blog Page 4533

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உலகில் எவ்வளவு விசித்திரமான விஷயங்கள் நடைபெறுகின்றன. கடவுள் என்னவெல்லாம் படைத்திருக்கிறான். ஊட்ட சத்து குறைபாட்டினால், ஏற்பட்ட விசித்திரமான தலைமுடியை சாப்பிடும் பழக்கம் இருக்குமாம். இனம்த செய்தியில் கூட அப்படி ஒரு செய்திதான் பார்க்க போகிறோம்.

தெலுங்கானாவில், உள்ள ஒஸ்மானியா பொது மருத்துவமனையில், 17 வயதுடைய சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார்.

ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி, கடுமையாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் Rapunzel என்ற அரிய நோயால் பாதிக்கப்படிருந்தார்.

அவரை பரிசோதனை செய்ய ஸ்கேன் செய்யும் போது அவரது வயிற்றில், 2 கிலோ முடி இருந்ததை கண்டு அதிர்ந்தவர்கள், பின் நோயை பற்றி ஆராய்ந்து தீர்வை சொல்லி உள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக தங்கள் தலைமுடியை உட்கொள்வார்களாம். கடந்த 5 மாதங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை, ஸ்கேன் செய்த போது தலை முடி இருப்பது தெரிய வந்துள்ளது.

வயிற்றில் இருந்த முடியை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாகேந்தர் பி அடங்கிய மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தனர்.

அப்போது சுமார், 150 செ.மீ நீளமுள்ள 2 கிலோ முடியை மீட்டெடுத்தனர். இதுவரை உலகளவில் மிக நீண்ட முடி இருந்தது இந்த நோயாளியின் வயிற்றில் தான், உலகளவில் இதுவரை 68 வழக்குகள் பதிவாகியுள்ளன. 150 செ.மீ முடியில், 30 செ.மீ வயிற்றிலும், 120 செ.மீ சிறிய குடலிலும் இருந்ததுள்ளது என மருத்துவர்கள் தெரிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்ய நாள் குறிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையினால், தாமதமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விட்டது.

தலைமுடி செரிமான பகுதியில் தங்கி இருந்ததால், ஊட்டசத்து குறைபாடு அதிகளவில் ஏற்பட்டது என்றும் கூறினார்.

தன்னை மோசம் செய்து கொலை செய்ய முயன்ற தொழிலதிபர் என பிரபல நடிகை குற்றச்சாட்டு!

0

தன்னை மோசம் செய்து கொலை செய்ய முயன்ற தொழிலதிபர் என பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலியல் பலாத்காரம் என்பது சாதாரண பெண்களுக்கு மட்டும் அல்ல. எல்லாருக்கும் திரைத்துறையிலும் சர்வ சாதாரணம் போல் ஒரு குற்றச்சாட்டு இணையத்தின் மூலம் புகார் தரப்பட்டுள்ளது.

வங்காள தேசத்தின் பிரபல நடிகை ஷம்சுன்னஹர் ஸ்மிருதி. போரி மோனி என்பவர் பிரபலமாக அறியப்படும் நடிகை ஆவார். அவர் அங்குள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். அதுவும் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம்  பேஸ்புக் பதிவின் மூலம் கூறியுள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் அறிமுகமானார்.  மேலும் இவர் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வங்காள தேச திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஆண்டு ஆசியாவின் 100 டிஜிட்டல் நட்சத்திரங்களில் ஒருவராக இவரை தேர்ந்து எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்காவில் உள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சுமத்தி உள்ளார்.

பிரதமர் ஹசீனாவை அம்மா என்று அழைத்த நடிகை சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியை நாடியதாகவும் ஆனால் நீதி கிடைக்கத் தவறியதாகவும் கூறியுள்ளார்.

மேலும்  இவர் நான் எங்கே நீதி தேடுவேன்,  நான் ஒரு பெண், மேலும் நான் ஒரு நடிகை,  ஆனால் அதற்கு முன் நான் ஒரு மனித இனம். என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் கூறி உள்ளார்.

உதவி ஐ.ஜி.பி சோஹல் ராணா,  நடிகை  போலீசை தொடர்பு கொள்ளும்போது போலீஸ்  நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை  பெயரைக் குறிப்பிடாமல் பேஸ்புக் பதிவில் குற்றச்சாட்டுகளை வைத்தார். அதன் பின்னர், நிருபர்களை சந்தித்த அவர் டாக்கா படகு கிளப்பின் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார  செயலாளர் நசீர் யு மஹ்மூத் தன்னை பாலியல் பலாத்காரமும், கொலையும் செய்ய முயன்றதாக  குற்றம் சாட்டியுள்ளார்.

டாக்கா படகு கிளப்பின் நிறுவன உறுப்பினரான நசீர் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

7ஆம் வகுப்பு போதும்! அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 1086 காலி பணியிடங்கள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் ஈஸ்டன் கோல்டு ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப புதியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செக்யூரிட்டி கார்ட் பண்ணியிருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு நிறுவனத்தின் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகுதியான மற்றும் விருப்பமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Eastern Coalfields Limited

பணியின் பெயர்: செக்யூரிட்டி கார்ட்

பணியிடம்: 1086 மொத்த காலி பணியிடங்கள் உள்ளது.

Unreserved – 842 பணியிடங்கள்
SC- 163 பணியிடங்கள்
ST- 81 பணியிடங்கள்

கடைசி தேதி: 15. 6 .2021

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களின் கீழ் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் உடல் தேர்வின் மூலம் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆர்வமுள்ளவர்கள் 15. 6.2021 ஒன்றுக்குள் அறிவிப்பில் வெளியிட்டுள்ள  [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கூடுதல் விவரம் மற்றும் விண்ணப்பத்தை பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

http://www.easterncoal.gov.in/notices/recruitment/20210521internalnotification.pdf

வாய், தலை-2, கண்கள்- 4 பிறந்த அதிசய கன்று! குவிந்த மக்கள்!

0

உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிசயமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த அரிய சம்பவம் எங்கோ ஒரு முறை தான் நடக்கும். இம்முறை உத்தரபிரதேசத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் வீட்டில் ஒரு பசுவுக்கு நான்கு கண்கள் இரண்டு வாய் இரண்டு தலை கொண்டு கன்று ஒன்று பிறந்துள்ள சம்பவம் அங்கு தெய்வீக அருள் என கருதப்படுகிறது.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சன்டாலி என்ற கிராமத்தில் வசித்து வரும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவிற்கு அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு வாய் இரண்டு காதுகள் நான்கு கண்கள் இரண்டு தலைகள் உள்ளது. இப்படி பிறந்தோம் பசுவும் கன்றும் நலமாகவே உள்ளன.

அப்பகுதி மக்கள் இது ஒரு தெய்வீக அதிசயமாக கருதுகின்றனர். அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இது ஒரு இயற்கை அதிசயம் மற்றும் கடவுளின் பேரருள் என்று கூறுகின்றனர்.


இதுகுறித்து கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த கிராமத்திற்கு வந்து அந்த அரிய நிகழ்வை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து சண்டாவாலி தலைமை கால்நடை மருத்துவர் சத்யபிரகாஷ் பாண்டே கூறுகையில், கரு வளர்ச்சி ஆகும் பொழுது உயிரணுக்களில் அசாதாரணமான வளர்ச்சி இதுபோன்ற சம்பவங்களை உருவாக்கும். அதன்படி கர்ப்பப்பையில் வளரும் கரு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பொழுது செல்கள் பல பகுதிகளாக பிரித்து இந்த செயல்பாட்டின் மூலம் சில சமயங்களில் உயிரணுக்கள் அதிகப் படியான வளர்ச்சி அடைவதால் இந்த இரண்டு தலைகள் உருவாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இது தெய்வீக அதிசயம் அல்ல என்று கூறினார்.

கரு உருவாவது தெய்வ பாக்கியம் என்று கருதும் மக்களுக்கு 2 தலை 2 காதுகள் நான்கு கண்களுடன் பிறந்த கன்று குட்டி நிச்சயமாக ஒரு தெய்வீக அதிசயம்தான்.

சூப்பர் ஹிட் இயக்குனருக்கு இந்த பரிதாப நிலையா? கவலையில் கோலிவுட் வட்டாரம்!

0

இளையதளபதி விஜயின் வெற்றி இயக்குனராக வலம் வந்துகொண்டு இருந்தவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் தனிமுத்திரை படைத்தது.

இப்படியான சூழ்நிலையில், நான்காவதாக விஜய்யை வைத்து அவருடைய 65ஆவது திரைப்படத்தை இயக்க இருப்பதாக ஒரு திட்டம் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு தவறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏன் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தர்பார் திரைப்படம் எடுத்தார் ஆர் முருகதாஸ். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, முருகதாஸின் சம்பள பிரச்சனை ஆரம்பிக்க தற்போது கோலிவுட்டில் ஏதாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் முன்னணி கதாநாயகர்கள் இடம் கதை தெரிவித்து வருகிறாராம் ஏ ஆர் முருகதாஸ்.

இருந்தாலும் பல முக்கிய நடிகர்கள் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அல்லு அர்ஜுன் இடம் முருகதாஸ் ஒரு கதை தெரிவித்து இருக்கிறாராம். ஆனால் இப்போது நடிக்க இயலாது எனவும் இரண்டு படங்கள் கமிட்மெண்ட் இருப்பதால் அதனை முடித்துவிட்டு உங்கள் படத்திற்கு கால்ஷீட் தருகிறேன் என்று தெரிவித்து விட்டாராம் அல்லு அர்ஜுன். இதன் காரணமாக மிகுந்த வருத்தத்தில் ஏ ஆர் முருகதாஸ் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளாமரில் தன் செல்லமான சேட்டைகளை தொடங்கிய மாளவிகா மோகனன்!

0

பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்னர்தான் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிட்டியது. எந்த திரைப்படத்திலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் மாளவிகா மோகனன் இடம்பிடித்து இருக்கின்றார் .மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் இதற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் ஆனால் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்பதையும் தனக்கு என்ன கதாபாத்திரம் என்பதையும் மிகத் தெளிவாக தெரிந்து கொண்டுதான் படத்தில் நடிப்பேன் என்று பல தரப்பினரிடமும் தெரிவித்து வருகிறாராம் மாளவிகா மோகனன்.

 


அதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்கின்ற கதாபாத்திரமாக இல்லை என்பது தான் என தெரிவிக்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் தற்போது அவருக்கு ஜோடியாக டி 43 என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் மாளவிகா அதற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ச்சியாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும், மீன் சமையல் காணொளி வெளியிடுவதும் என்று தொடர்ச்சியாக தன்னுடைய செல்லமான சேட்டைகளை தொடர்ந்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் தற்சமயம் உருவாகி இருப்பதால் இவர் எதை செய்தாலும் அதனை ரசிகர்கள் பெரிய அளவில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் தற்சமயம் படிக்கட்டில் அமர்ந்து கவர்ச்சி புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கின்றார். இவர் அந்த புகைப்படம் தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்!

0

எதிர்வரும் 21ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்றைய தினம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய சூழலில் தற்போது துணை தலைவர் பதவி ஓபிஎஸ் வசம் சென்று இருக்கிறது. இந்தநிலையில் 2-வது இடத்தை ஏற்பதற்கு ஓபிஎஸ் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது .அதோடு தொடர்ச்சியாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிகார மோதல் இருந்து வந்ததன் காரணமாக, துணை தலைவர் பதவியை ஓபிஎஸ் தான் ஏற்க வேண்டும் இன்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பன்னீர் செல்வத்துடன் அவர் சமாதான பேச்சுக்களை முன்னெடுப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி துணை கொறடாவாக, அரக்கோணம் சட்டசபை உறுப்பினர் ரவி பொருளாளராக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செயலாளராக, முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் துணைச் செயலாளராக ஆலங்குளம் தொகுதி சட்டசபை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்றைய தினம் நடைபெற்ற சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

SBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

0

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்பிஐ மாபெரும் உதவியாக 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியது.
கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த பிறகு மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆக்சிசன் படுக்கை இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் வெளியே ஆம்புலன்ஸில் இருந்து சிகிச்சை பெறும் மக்களை எவ்வளவு நாம் பார்த்திருப்போம்.

அதில் பாதிப்பேர் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் செலவுகள் அதிகமாகும் என்பதற்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள் உள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா சிகிச்சைக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. இதற்கு கவாச் பர்சனல் லோன் என்ற பெயரும் சூட்டி உள்ளது.

கவாச் பர்சனல் லோன் மூலமாக ஒரு தனிநபர் இத்திட்டத்தின் மூலம் மருத்துவ செலவுக்காக அதிகபட்சம் 5 லட்சம் வரை கடன் பெறலாம். ஒரு குறைந்தபட்ச கடன் தொகையாக 25 ஆயிரம் வரை பெறலாம். இதற்கு வட்டி விகிதம் 8.5 சதவீதம் என்று நிர்ணயித்துள்ளது. மேலும் இதை திருப்பி செலுத்துவதற்கு 5 ஆண்டுகள் கால நீட்டிப்பையும் கொடுத்துள்ளது.

இந்த திட்டம் குறித்து எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் கார கூறியது, இந்த கொரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எஸ்பிஐ கவாச் தனிநபர் கடன், இந்த திட்டத்தை அறிமுகப் படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கொரோனா சிகிச்சை தொடர்பாக செலவுகள் மற்றும் எவ்வித இடையூறும் இல்லாமல் மக்கள் உயிர் காக்கும் வகையில் இந்தத் திட்டம் மக்களுக்கு உதவும் என நம்புகிறோம். இது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்யும் வகையில் அமையும் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே செலவிடப்பட்ட மருத்துவ செலவுகளை செலுத்தவும் இந்தக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ கவாச் தனிநபர் கடன் திட்டத்திற்கு சம்பளதாரர்கள், சம்பளம் பெறாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியதாரர்கள், உள்ளிட்ட நபர்கள் தகுதி பெறுவார்கள், தனிநபர் கடன் பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நிதி வகையில் உதவுவதற்காக நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று எஸ்பிஐ தலைவர் கூறினார்.

30% , 45% என பிரித்து வசூலிக்க வேண்டும்! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் திட்டவட்டம்!

0

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவருக்கும் தேர்ச்சி என்று இருக்குமே தவிர மதிப்பெண்கள் இருக்காது என முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மதிப்பெண்களின் அடிப்படையில் தான் அடுத்த வகுப்பு சேர்வதற்கான அடிப்படை என்று இருந்தும் மதிப்பெண்கள் குறிப்பிட படாது என்று சொல்வது எவ்விதத்தில் சாத்தியம் என்று தெரியவில்லை.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பதினோராம் வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் இன்னும் கணிக்க படாத நிலையில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

தளர்வுல்லாத 11 மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை இல்லை. அதே போல் மற்ற மாவட்டத்தில் கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் அனைவரும் விதி முறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் இப்பொழுது இருக்கும் நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் எடுப்பது குறித்து யோசிக்கவில்லை. அதேபோல தொலைக்காட்சி அல்லது வாட்ஸ்அப் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் முறையே தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை இன்னும் ஒரு வாரத்தில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவருக்கும் தேர்ச்சி என்று இருக்கும் ஆனால் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டு இருக்காது என்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அதுவும் 30% 45% என இரண்டு தவணைகளாக பிரித்து வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குமேல் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!

0

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்திருக்கிறது.

திருவாரூர் நகர் நாலுகால் மண்டபம் என்ற இடத்தில் வசித்து வருபவர் லோகநாதன் சுமார் 65 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழிலாளியாக இருந்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக, நோய்த் தொற்று பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தபடியால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி லோகநாதன் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் நோய்த் தொற்று பரவல் ஏற்பட்டதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் திருவாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உதவியுடன் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அதோடு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.