Wednesday, July 30, 2025
Home Blog Page 4534

தமிழ்நாடு ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு எழுதிய திடீர் கடிதம்! என்ன முடிவு எடுக்கப் போகிறது தமிழக அரசு!

0

பதினோராம் வகுப்பு மாணவர்களின் மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஜூன் மாதம் 11ஆம் தேதி அதாவது இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல் இன்று முதல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்றும் இன்றிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.

அதில் தலைமை ஆசிரியர் முதல் அலுவலக பணியாளர்கள் வரையில் 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாடப்புத்தகம் கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதில் தெளிவான நிலை இல்லை. அதோடு பெற்றோர் மற்றும் மாணவர்கள் நிலையில் இது தொடர்பாக குழப்பங்கள் நீடித்து வருகிறது.

ஊரடங்கு உதாரணமாக பொது போக்குவரத்து இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை தலைமையாசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அதிகளவில் பெண்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது அதோடு மாணவர்கள் சேர்க்கை ஆசிரியர்கள் எல்லோரும் இருந்தே கலந்தாலோசித்து இதை நடைமுறைப்படுத்துவது தான் வழக்கம். தற்சமயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு இயலாத நிலை இருந்து வருகிறது. அதனை போலவே மாணவர்கள் தங்களுடைய பெற்றோரும் போக்குவரத்து எதுவும் இல்லாமல் பள்ளிக்கு வந்து செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டி இருக்கிறது. இந்தப் பணிகளில் எந்தவிதமான பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக நடைபெற வேண்டுமென்றால் நோய்த்தொற்று குறைந்து ஊரடங்கும் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் அதன் பின்னர் மாணவர் சேர்க்கை நடத்துவது நான் எல்லோருக்கும் நல்லது இதன் காரணமாக நோய்த் தொற்று குறைந்து ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்து வரும் அச்சத்தை போக்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இனி தனியார் ஆம்புலன்ஸ் இவ்வளவு தான் வாங்கணும்! அதிகமா வாங்கினால் உடனே புகார் கொடுங்க!

0

தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து உள்ளது. கொரோனா காலத்தில் போக்குவரத்து சேவைக்காக தனியார் ஆம்புலன்சும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனுடைய சேவை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது அரசு.

 

கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் வரை கொரோணா பாசிட்டிவ் கேஸ்கள் இருந்து வந்தன. அரசு ஆம்புலன்ஸில் உதவிக்கு வர முடியாத நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க எக்கச்சக்கமான பணத்தை சேவை கட்டணமாக வாங்கியது. இப்பொழுது இதற்கு பதிலடி கொடுத்தார் போல அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. மக்களின் அவசரத்தையும் அவர்களது சூழ்நிலையையும் புரிந்து கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகமான கட்டணத்தை வசூலித்து வந்தது கண்டனத்துக்குரியது. இது அரசின் பார்வைக்கு சென்று அரசு இப்பொழுது கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது.

 

நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாயும், ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 2 ஆயிரம் ரூபாயும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூபாய் 4 ஆயிரமும் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

மக்களே இதனை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு மேல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக புகார் தெரிவியுங்கள். நமக்கு என்ன ஆனது என்று அவர்கள் கேட்ட பணத்தை நீங்கள் தந்தால் ஏழை எளிய மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

 

நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கண்டிப்பாக புகார் தெரிவிக்கவும்.

டெல்லி அளவில் தமிழகத்தின் முக்கிய பதவியை அறிவித்த தமிழக அரசு! குஷியில் முக்கிய புள்ளி!

0

தமிழக அரசின் சார்பாக டெல்லியில் தமிழக பிரதிநிதியாக முன்னாள் மக்களவை உறுப்பினரும் திமுகவின் வழக்கறிஞருமான ஏ கே எஸ் விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு இருக்கின்றார். இவர் ஒரு வருடத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவர் கடந்த 2009ஆம் வருடம் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பதவியானது தமிழக அளவில் மிக உயரிய பதவியாக கருதப்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் இதே டெல்லி பிரதிநிதி பதவி தளவாய் சுந்தரத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தற்சமயம் அந்தப் பதவிதான் திமுக ஏ கே எஸ் விஜயன் அவர்களுக்கு வழங்கபட்டு இருக்கிறது.

அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்திருக்கின்றன 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி நேற்றையதினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. காரைக்குடியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹஜ் ராஜா முதலமைச்சர் கல்லா கட்டுவதற்காக மதுபான கடைகளை திறந்திருக்கிறார் என்று கோஷம் போட்டார் ஸ்டாலின். அது வேற வாய் இது வேற வாயா நோய்தொற்று 29 மடங்கு அதிகரித்து இருக்கும் சமயத்தில் மதுபான கடைகளை எவ்வாறு திறந்து வைக்கலாம் என்று கடுமையாக சாடியிருக்கிறார் எச் ராஜா.

மதுபான கடைகளை திறந்து வைத்திருப்பதை பாரதிய ஜனதா கட்சி மிகக்கடுமையாக கண்டிக்கின்றது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் கொள்ளை நடக்கும் என்று தெரிவித்தும் பொதுமக்கள் யாரும் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனை தற்சமயம் அனுபவித்து வருகிறார்கள் ஓட்டு போட்ட மக்கள் எதற்காக வாக்களித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. வெறும் அரைவேக்காடு அமைச்சர்கள் ஆகி பொதுமக்களை படுத்தும் பாடு தாங்க இயலவில்லை என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார் எச் ராஜா. அவருடைய இந்த விமர்சனத்திற்கு திராவிடர் முன்னேற்ற கழகத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ராஜாவின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ராஜா பிரச்சாரம் செய்து மதுக்கடைகளை மூட செய்ய வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். மதுக்கடைகள் இல்லாவிட்டால் கள்ளச்சாராயம் அதிகமாகிவிடும் இதனை யாரும் மறுத்துவிட இயலாது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!

0

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் கள்ளச் சாராய உற்பத்தி இருக்குமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் கடமை அது சாத்தியமானது தான். அதனை செய்யாமல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பதற்காக மதுக்கடைகளை திறப்பதற்கு காரணமாக தெரிவிப்பது தமிழக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

முழுமையான மதுவிலக்கு கோரிக்கைகள் பலமாக எழுப்பப்படும் சமயத்தில்தான் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற ஒரே காரணத்தை கடந்த 38 வருடங்களாக மது விற்பனைக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி வருகிறது கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூடப்பட வேண்டும் மது அரக்கனின் தீமைகளை தடுப்பதற்கு முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டிய அவசியத்தை தமிழக அரசு உணர வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் மருத்துவர் ராமதாஸ்.

வழக்கை வாபஸ் பெற்ற சபாநாயகர்! தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

0

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 512 தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக தற்போதைய சபாநாயகர் அப்பாவு புகார் கொடுத்திருந்தார்.

இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் புகார்களை பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பி இருப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரின் ஒப்புதல் பெற்று வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி உள்ளிட்டோர் அமர்வு முன்பு கடந்த பெப்ரவரி மாதம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட சமயத்தில் அரசு தரப்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு இன்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட சமயத்தில் சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து ,இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கினர். அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை! மீட்பு பணி தீவிரம்!

0

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணி தீவிரமாக செய்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தரியை என்ற கிராமத்தில் 5 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள நிபுஹரா காவல் நிலையத்தில்தான் காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் குழந்தையின் நடமாட்டத்தை கவனித்து வருவதாகவும், குழந்தை அதற்கு பதில் அளிப்பதாகவும் ஸ்டேஷன் அதிகாரி சுரேஷ் பிரசாத் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தகவல் கிடைத்த அடுத்த நிமிடத்தில் இருந்து குழந்தையை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தந்தை சோட்டெல்லால் தோண்டிய ஆழ்துளை கிணற்றில் தான் குழந்தை விழுந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குழந்தை விழுந்த ஆள்துளை கிணற்றில் ஒரு கயிற்றை விட்டுள்ளோம். அதை அந்த குழந்தை பிடித்துக் கொண்டு நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறது என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.

போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் கிராம வாசிகள் குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது முதியவரை அடித்துக் கொன்ற போலீசார்! 8 பேர் இடைநீக்கம்!

0

கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரை போலீசார் அடித்து கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொடகு என்ற மாவட்டத்தில் மனநிலை சரியில்லாத ராய் டிசோசா 50 வயது. இவர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து 8 பேர் ஞாயிற்றுக்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 9ஆம் தேதி விராஜ்பேட்டை டவுன் காவல் நிலையம் அருகே நடந்ததாக ஐஜிபி பிரவீன் மதுகர் பவார் தெரிவித்தார்.

இறந்த ராய் டிசோசாவின் சகோதரர் கொடுத்த புகாரில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக மனநிலை பாதிக்கப்பட்ட டிசோசாவை போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பலமாக தாக்கி உள்ளனர். பலமாக தாக்கியதில் டிசோசா மயக்கம் அடைந்து இருக்கிறார். உடனே போலீசார் டிசோசாவின் அன்னைக்கு தொலைபேசி மூலம் அழைத்து உங்களது மகனைக் கூட்டிக் கொண்டு போகுமாறு சொல்லியுள்ளனர். பதறி அடித்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு சென்று டிசோசாவை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மயக்க நிலையில் இருந்த அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். டிசோசா சிகிச்சை பலனின்றி ஜூன் 12 அன்று உயிரிழந்து விட்டார் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான அறிக்கையை ஐ.ஜி.பி பவார் கூறுகையில், நியாயமான மற்றும் பக்கசார்பற்ற விசாரணையை உறுதி செய்யும் நோக்கில் 8 போலீஸ்காரர்களை இடை நீக்கம் செய்வதற்கான முடிவு அறிக்கையில் எடுக்கப்பட்டது.

தலைமை கான்ஸ்டபிள் சுனில், போலீஸ் கான்ஸ்டபிள் லோகேஷ், தனுகுமர், சதிஷ், சுனில் எம் எல், ரமேஷ் ஏ, கே ஜி நேரு, மற்றும் பி டி பிரதீப் என 8 அதிகாரிகள் தலைமை கான்ஸ்டபிள் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் டிசோசா பணியாளர்களை அச்சுறுத்தியதாக போலீசாரால் சொல்லப்படுகிறது. மேலும் இந்த வழக்கு மாநில குற்ற விசாரணை துறை சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக எதுவெல்லாமோ செய்கிறார்கள், அவர்களின் மகிழ்சிக்காக. ஆனால் பிள்ளைகளோ அற்ப விசயத்திற்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

நடைபயிற்சி மேற்கொண்டால் அதைமட்டும் செய்ய வேண்டியது தானே. செல்பி எடுக்க வேண்டியதுதான், அதற்காக மேலே ஏறி தான் எடுக்க வேண்டுமா என்ன? சகோதரன் அருகில் இருக்கும் போதாவது எடுத்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது தற்போது உயிர் போய் விட்டதே.

மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூரில் உள்ள சிலிகான் சிட்டியில் இருப்பவர் நேஹா அர்சி. 22 வயதான இவர் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

தனது சகோதரன் சவுரவ் உடன் இந்த பெண்ணும் ஒரு பாலத்தின் ,மீது நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தனது சகோதரனிடம் தனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

எனவே அவர் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்த நேரம் அந்த பெண் செல்பி எடுக்க பாலத்தின் சுவர் மீது எறி நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அங்கிருந்து கீழே விழுந்து விட்டார்.

இதில் நேஹாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நேஹாவின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செல்பி மோகத்தினால் மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், போன்ற எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நோய்தொற்று தாக்கம் அதிகம் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

இந்த சூழ்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 69 காசிற்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 92 காசுக்கும் விற்பனை ஆகி வருகிறது.