Saturday, July 26, 2025
Home Blog Page 4547

குறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!

0

நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து வந்தது ஆனால் தற்சமயம் அந்த நோய்த்தொற்று பாதிப்பானது சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கு அமல் படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றது. இந்த நோய் தற்போது குறைய தொடங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நோய்த் தொற்றில் பாதிப்பின் தினசரி பாதிப்பானது இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழே குறைந்து இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

இன்றைய தினத்தில் காலை வரை உள்ளன 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் தினசரி நோய் தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழே குறைந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது 92 ஆயிரத்து 596 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, நோய்த் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 069 ஆக இருந்து வருகிறது

இந்தியாவில் நோய்த் தொற்று சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 31 ஆயிரத்து 715 ஆக குறைந்திருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். இதன் வழியாகவே நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,75,04,126ஆக அதிகரித்து இருக்கிறது.

அதேபோல சென்ற 24 மணி நேரத்தில் 2719 பேர் இந்த நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள் இதன் காரணமாக, மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக அதிகரித்திருக்கிறது. தொடர்ச்சியாக தினசரி பாதிப்புகளை விட குணமடைவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருவதாக சொல்கிறார்கள். இதன் காரணமாக, மருத்துவத் துறையினரும் பொதுமக்களும் ஆறுதல் அடைந்து இருக்கிறார்கள். ஆகவே தேசிய அளவில் குணமடைந்தவரின் சதவீதம் 94.29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

நாட்டில் இதுவரையில் 37.2 ஒரு கோடி பேர் நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற் கொண் டிருக்கிறார்கள் 21புள்ளி 90 கோடி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன எனவும் தகவல் கிடைத்திருக்கிறது

தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

0

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுகள் நடைமுறைக்கு வந்த மூன்று நாட்களும் சாலைகளில் ஏராளமான ஊர்திகள் நிரம்பி வழிந்தன.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல்களை மீண்டும் காவல்துறையினர் இயக்க ஆரம்பித்து விட்டனர். வழக்கமான நிலைக்கு பெரும்பாலான இடங்கள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது. இந்நிலையில், தெரு விலங்குகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் சிவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு விலங்குகளை பாதுகாக்க உரிய நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள. ஆனால் ஊரடங்கை விலக்கிக் கொண்டது போன்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது கொண்டாட்டங்களுக்கான நேரம் கிடையாது என்ற நீதிபதிகள், தேவையின்றி வெளியே வருவோரை தடுப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். அப்போது, முதல் அலையில் காவல்துறை கடுமையாக நடந்து கொண்டதால் பல பிரச்சனைகள் வந்ததாகவும், அதனால், தற்போது பொதுமக்களின் சிரமங்களை போக்குவதற்காகத்தான் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்கள் வேளியே வருவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்றனர். இதையடுத்து விசாரணையை 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது, தமிழக அரசு எடுத்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 வயதில் காவலாளி செய்த செயல்! போலீசார் தீவிர விசாரணை!

60 வயதில் காவலாளி செய்த செயல்! போலீசார் தீவிர விசாரணை!

ஒரு பெண் எந்த வயதானாலும் கஷ்டபடுத்தி காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தற்போது இந்த செய்தியில் கூட ஒரு வயதான பெண்மணியின் உடல் துர்நாற்றம் வீசிய நிலையில் கண்டெடுக்கப்பட்துள்ளது.

மும்பை செம்பூர் பகுதியில் உபயோகப்படுத்தப்படாத கன்டெய்னர் பெட்டியில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இதில் பிளாஸ்டிக் பையால் சுற்றிவைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் அழுகிய உடல் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் நேபாள நாட்டை சேர்ந்த துர்கா காட்கா(வயது52) என்பது தெரியவந்தது.

இதனால் போலீசார் அப்பெண்ணின் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் காவலாளியாக வேலை பார்த்து வரும் மான்சிங் (60) என்பவர் மற்றொரு நபருடன் சேர்ந்து பெண்ணை கொலை செய்து கன்டெய்னரில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மான்சிங்கை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையில் தொடர்பில் இருந்த மற்றொருவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதற்காக கொலை நடந்தது, என்ன முன் விரோதம் அல்லது வேறு ஏதும் முகாந்திரம் உள்ளதா என்ற வகையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அடுத்து தடுப்பூசி போடப்பட்ட மணமகனை தேடும் ஒரு பெண்ணின் திருமண விளம்பரம்தான் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த விளம்பரத்தில், 24 வயதுடைய சுயதொழில் செய்யும் பெண் ஒருவர், தான் இரண்டு கோவிசில்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டதாக கூறி, அதேபோல் மணமகனும் இரண்டு தவணை கோவிஷில்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும் மற்றும் இதர பண்புகளுடன் இருக்கவேண்டும் என்ற விளம்பரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல் அந்த விளம்பரத்தை அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்து அவர் “விருப்பமான திருமண பரிசு ஒரு பூஸ்டர் ஷாட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த விளம்பரத்தைக் கண்டு பலர் உற்சாகமாக இருந்த போதிலும் பலர் அது உண்மையானதா என்று சந்தேகங்களை எழுப்பினார்கள்.

கோவாவின் ஆல்டோனாவை சேர்ந்த  ஒருவர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்களை உற்சாகப்படுத்த செய்வதற்காக தொடங்கப்பட்ட பாதிப்பில்லாத பிரச்சாரமாக இந்த விளம்பரம் விளங்குகிறது.

இந்த விளம்பரம் போலியான விளம்பரம் இதை சமூக மருந்தாளுனர் ஆன சவியோ ஃபிகியூரிடோ உருவாக்கப்பட்டது.அந்த விளம்பரத்தில் கொடுத்த தொலைபேசி எண்ணும் அவருடைய தான். அதனால் அவரது தொலைபேசி அழைப்புகள் ஒலிப்பதை நிறுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் அவருக்கு அழைப்பு விடுத்ததாக சொல்கிறார்.

அதை பற்றி அவர் கூறுகையில், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த உருவாக்கி அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு இட்டதாக கூறுகிறார், அது உண்மை என நினைத்து இப்போது அது வைரலாகி வருகிறது என்று அவர் கூறினார்.

கொல்கத்தா, ஒடிசா மங்களூர் ஆகிய இருந்து அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார். இந்த விளம்பரம் மிகவும் வைரலாகும் என்று அவர் நினைக்கவில்லை. மேலும் இது நல்ல நோக்கத்தோடு செயல்பட்டதால் இது எந்த விளைவுகளும் இல்லை. இந்த விளம்பரத்தைப் பார்த்து 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கூட நான் மன மகிழ்ச்சி அடைவேன் என அவர் கூறியுள்ளார்.

ஏன் இந்த மாதிரியான விளம்பரத்தை நீங்கள் பதிவு செய்தீர்கள் என்பதற்கு சவியோ ஃபிகியூரிடோ அவர் கூறிய பதில், மக்கள் ஒரு தடுப்பூசி தவணை செலுத்தி கொண்டாலும் அவர்களது வாழ்வை காப்பாற்ற முடியும், நாம் மனதார நேசிக்கும் ஒருவரை இழந்து விட்டால் அது எவ்வளவு கொடுமையானது என்று விவரிக்க முடியாது.

நான் என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவரை கொரோனா இரண்டாவது அலையில் இழந்தேன். அவர் ஒரு தடுப்பூசி டோஸ் கூட போட்டுக் கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர் போட்டுக் கொள்ளவில்லை. அதனால்தான் இந்த விளம்பரத்தை உருவாக்கினேன் என்று அவர் மனம் உருக பேசினார்.

https://www.facebook.com/saviofig/posts/10159260774662954

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?

இந்த கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வருமோ? என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் நோய் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் முழு நேர ஊரடங்குகளை செயல்படுத்தி வருகிறது.

இந்த 1 வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமே பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருப்பது பெரியோர்களுக்கு மட்டும் அல்ல பிள்ளைகளுக்கும் தான் என்பதை நாமும் உணர வேண்டும்.

இந்த கொரோனா கஷ்ட காலம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அனைவரும் சேர்ந்து தனித்தனியாக வீட்டிலேயே கூட்டு ப்ரார்த்தனை செய்வதை தவிர வேறு வழி இல்லை.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் போதும்மணி இவருடைய மனைவி பத்மா தேவி இவர்களுடைய பெண் மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் வயது 19 ஊரடங்கு காலம் என்பதால் தற்போது அவர் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் மாணவி செல்போன் மோகத்தில் மூழ்கி உள்ளார்.

இதனால் அவர் அடிக்கடி செல்போனை உபயோகித்து வந்ததால் மாணவி மற்றும் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர்களிடம் மாணவி அடிக்கடி சண்டையிட்டதால் மாணவி வீட்டில் சாப்பிடாமலே இருந்து வந்துள்ளார்.

மேலும் செல்போனை உபயோகித்துக் கொண்டு இருந்ததால் கோபமடைந்த பெற்றோர்கள் மாணவியை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் பெற்றோர்கள் இல்லாத சமயம் பார்த்து தன்னுடைய உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்து புகை வர தொடங்கியவுடன் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து பார்த்த பொழுது வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து அதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால் மாணவியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

நேற்றே வெளியான இந்த செய்தியில் தற்கொலை என மட்டுமே தெரிந்தது அதற்கான காரணம் நேற்று தமிழன் பிரசன்னாவிடம் கேட்டு அறிந்தனர்.

அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை. இந்த இக்கட்டான கால நிலையில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்க்கு இந்த விஷயம் கூடவா தெரியாது. இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாட வில்லை என்றால் என்ன? அடுத்த வருடம் கொண்டாடி விட வேண்டியதுதான். இந்த சின்ன விசயத்திற்காக 1 வயது குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கி உள்ளார் என்றால் எவ்வளவு கல் நெஞ்சக்காரியாக இருப்பாள்.

மற்றொரு விதத்தில் என் செய்தார் என்று யோசித்து பார்த்தால், அவர் என்ன மன உளைச்சலில் இருந்தாரோ? என்னவோ? ஆனால் இதை மேலும் விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

இறக்கும் தருணம் எப்போது என்பது யாராலும் சொல்ல முடியாது. விதி முடிந்தால் செல்ல வேண்டியதுதான்.

கொடுங்கையூர் அடுத்த எருக்கஞ்சேரி மேற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா (வயது 43). இவர் தி.மு.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு ஏஞ்சல் பாரதி, ஜெனிபர் பாரதி ஆகிய 2 மகளும், தமிழ் நிரன் என்ற 1 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதற்கு தமிழன் பிரசன்னா தான் கட்சி பொறுப்பில் இருப்பதால், ஊரடங்கு நேரத்தில் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா நேற்று காலை கணவர் குளியல் அறைக்கு சென்ற நிலையில், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது புடவையால் தூக்கிட்டுள்ளார்.பிறந்த நாள் அன்றே இப்படி செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும், நதியா தூக்கில் தொங்கி துடிதுடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரசன்னா அவரை மீட்டு, காரில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அப்போது அங்கு நதியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுத்தில் காயங்களுடன், கைக்கால் கட்டப்பட்டு பெண் சடலம் கோணிப்பையில் கண்டுபிடிப்பு!

0

பஞ்சாபில் பெண்ணின் உடல், உடம்பில் காயங்களுடன் கை கால்கள் மெல்லிய கயிறால் கட்டப்பட்டு ஒரு சனல் பைக்குள் பெண்ணின் சடலத்தை சுற்றி அதை ஒரு கோணிப்பையில் போட்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் உள்ள லூதியானா என்ற கங்கன் வால் என்ற பகுதியில் ருத்ர காலனியில் பெண்ணின் சடலம் சாக்குப் பைக்குள் ஒரு காலியான நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு உள்ள மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணின் உடலில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கூர்மையான முனைகள் கொண்ட காயங்கள் இருந்ததால் அந்தப் பெண் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளதை உறுதி செய்தார்கள்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட அந்த உடலை கை மற்றும் கால்களை சின்ன கயிறால் கட்டி, அந்தப் பெண்ணின் உடலை ஒரு சணல் பையில் சுற்றி, கோணிப்பையில் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

சானேவால் காவல் நிலைய SHO சப் இன்ஸ்பெக்டர் பல்விந்தேர் சிங் , இறந்துபோன இந்தப் பெண் நேபால் பெண் போல இருப்பதாகவும், மேலும் அந்தப் பெண் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆகவும் இருக்கக் கூடும், என்று கூறினார்.

மேலும் அவர் கையில் ஒரு பச்சை குத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அது நேபாள மொழியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மேலும் இறந்து போன இந்த பெண்ணை அடையாளம் காண சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். மேலும் உடலை அடையாளம் காண லூதியானாவில் குடியேறிய நேபாளத்தை சேர்ந்தவர்களையும் தொடர்பு கொண்டுள்ளோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

மேலும் இந்த கொலையை பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மத்திய அரசு காட்டிய அதிரடி அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

0

நோய் தொற்று நோய் தடுப்பூசி பதிவு செய்வதற்கான கோவின் செயலியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்து கொள்வதற்கான கோவின் இணைய தளமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா போன்ற 10 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ் மொழியானது இதில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். உடனடியாக தமிழிலும் முன்பதிவு செய்யும் வசதியை உண்டாக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தடுப்பூசி முன்பதிவு இணையத்தில் அடுத்த இரண்டு தினங்களில் தமிழ் மொழியிலும் முன்பதிவு செய்வதற்கான வசதி தொடங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி குறிப்பில் மத்திய அரசின் கோவில் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்தன. இந்த நிலையில், இன்று புதிதாக ஒன்பது மொழிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதுகூட தமிழ் வழியில் அந்த இணையதளத்தில் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என சுகாதார துறை அமைச்சரை முதல்வர் வலியுறுத்தி இருக்கின்றார்.

அதன்படி இந்தக் கோரிக்கையை மத்திய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் இந்த இணையதள வசதி படிப்படியாக பல மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்த கட்டத்தில் இரண்டு தினங்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலைகளில், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட முறைகளைத் தவிர்த்து மற்ற மாநில மொழிகளும் நீக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் மொழி உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளும் சேர்க்கப்பட்டு அந்த இணையத்தளமானது புதுப்பிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அம்மா என்று கூச்சலிட சிலை போல் நின்ற மகளை பார்த்து அதிர்ந்து போன சம்பவம்!

0

சென்னையில் 13 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்த உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு இருக்கும் பொது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் உள்ள தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் அண்ணாநகர் புறநானூறு தெருவை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள் சஞ்சனா 13 வயது, மகன் சித்தரஞ்சன் 9.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அதிகமான மழை பெய்ததால் சசிகலா வீட்டின் மேற் பகுதியில் மின் விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

 

சஞ்சனா விளையாட்டாக மின்கம்பியை தொட்டுள்ளார். உடனே உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்து அப்படியே சிலையாக நின்று உள்ளார். வெகுநேரமாகியும் திரும்பாத சஞ்சனாவை தேடி சஞ்சனாவின் தம்பியான சித்தரஞ்சன் சென்றுள்ளார்.

 

சித்தரஞ்சன் சஞ்சனா சிலைபோல நிற்பதை பார்த்தேன் கூச்சலிட்டு அனைவரையும் அழைத்து கதறி உள்ளான்.

 

மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு சஞ்சனாவை தூக்கிக் கொண்டு அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

 

சஞ்சனாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வகுப்புகளை தொடங்கலாம்! பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

0

தமிழ்நாட்டில் நடைபெற்ற பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும் தட்டுப்பாடு காரணமாக, பள்ளிகள் கடந்த ஒரு வருட காலமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை .அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த கல்வி வருடம் தொடங்கி விட்ட சூழ்நிலையில், பதினோராம் வகுப்புக்கான இணையதள வகுப்புகளை ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றது. அதோடு குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைத்து பதினோராம் வகுப்பு சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.