Tuesday, July 22, 2025
Home Blog Page 4555

கொரோனா இவரையும் விடவில்லை! 1300 நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர்!

0

கொரோனா இவரையும் விடவில்லை! 1300 நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர்!

நாக்பூரை சேர்ந்தவர் சந்தன் நிம்ஜே (67). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கிங் கோப்ரா என்ற இளைஞர் படையில் தன்னை இணைத்து கொண்டு சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார்.

மேலும் கொரோனா தொடங்கிய காலம் முதல் இவர் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் நாக்பூர் மேயர் சார்பில் கொரோனா போராளி என்ற பாராட்டை பெற்றார்.இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந் தேதி சந்தன் நிம்ஜே மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காததால், நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்தன் நிம்ஜே சென்றார். அங்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக கேட்டனர். கையில் பணம் இல்லாததால், வீடு திரும்பிய அவர் 5-ந் தேதி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் சந்தன் நிம்ஜே குடும்ப உறுப்பினர்களும் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கொரோனா காரணமாக சந்தன் நிம்ஜேயின் 2 மகன்களும் ஏற்கனவே வேலை இழந்து இருந்த வேளையில், குடும்பமே கொரோனா பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால், பணமும் கரைந்து போனது. சந்தன் நிம்ஜேக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் கேட்ட மருந்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவரை 26-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அழைத்து செல்லும் முன் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சோகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இதில் பெருந்துயரம் என்னவென்றால், 1,300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த அவருக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அரசு அல்லது மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை என்று கிங் கோப்ரா இளைஞர்கள் படையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து இளைஞர் படையின் நிறுவனர் அர்விந்த் ரதுதி கூறுகையில், கொரேனா போராளியான சந்தன் நிம்ஜேக்கு சிகிச்சை அளிக்க குறிப்பிட்ட மருந்துக்காக மாவட்ட கலெக்டர், அரசியல் தலைவர்கள் பலரிடம் உதவி கோரினோம்.

யாரும் உதவ முன்வரவில்லை. இதுதொடர்பாக மாநில அரசு, நாக்பூர் மாவட்ட நிர்வாகம், நாக்பூர் மாநகராட்சிக்கு எதிராக மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையில் வழக்கு தொடர உள்ளேம்  என்றார்.

யூகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை! முதலமைச்சர் அதிரடி!

0

பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் விருப்பப்பட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். கட்சியின் மேலிடம் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது நான் அதனை பயன்படுத்த முயற்சிக்கின்றேன், அதேபோல மக்கள் சேவையாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா.

எனக்கு எதிராக கருத்துத் தெரிவிப்போறின் யூகங்களுக்கு நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய கட்சியின் மேலிடம் நான் ராஜினாமா செய்ய வேண்டுமென்று விருப்பப்பட்டால் நான் ராஜினாமா செய்ய தயார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணிபுரிவதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறேன். நான் யாரையும் விமர்சிக்க மாட்டேன் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு மாற்றமில்லை என்று நான் இதுவரை நினைத்ததில்லை திறமை வாய்ந்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும் கட்சியின் மேலிடத்திற்கு என் மீது நம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கிறதோ அது வரைக்கும் நான் முதலமைச்சராக இருப்பேன். ஒருசில சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகள் எனக்கு எதிராக மேலிடத்தில் புகார் கூறியும் மற்றும் கடிதம் எழுதியும் இருக்கிறார்கள். அது தொடர்பாக நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இன்றைய சூழ்நிலையில், கர்நாடகத்தின் துணை முதலமைச்சர் ஓ சி என் அஸ்வத் நாராயண் மற்றும் சி டி ரவி உள்ளிட்டோர் சரியான சமயத்தில் யூகங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார்கள்

பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி!

பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி!

எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்றே சிலர் இரவு பகலாக யோசிப்பார்கள் போல. ஒரு புலம்பலாக யாரிடமாவது நம் கஷ்டத்தை சொல்கிறேன் என்று நினைப்பவரை ஆறுதல் என்ற பெயரில் தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். ஆறுதலாக யாரும் இல்லை.

புனே சிங்காட் பகுதியை சேர்ந்த வியாபாரி தொழில் நஷ்டம் அடைந்த நிலையில் அவருக்கு ஜல்னாவை சேர்ந்த கிஷன் ஆசாராம் பவார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் சில பூஜைகளை செய்து பணமழை வரவழைப்பதாக தெரிவித்தார்.

இதற்காக வியாபாரிடம் இருந்து ரூ.52 லட்சத்தை கிஷன் ஆசாராம் பவார் பெற்று கொண்டார். ஆனால் அவர் கூறியபடி எதுவும் நடக்கவில்லை.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி சம்பவம் குறித்து புனே போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இநத புகாரின் படி புனே போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அந்த ஆசாமி ஜல்னாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன்படி புனே மற்றும் ஜல்னாவில் உள்ள மாந்தா போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஜல்னாவில் உள்ள ஹைவர்கேடாவில் கிஷன் ஆசாராம் பவார் இருப்பதாக தெரியவந்தது.

மேலும் வியபாரியின் புகாரை உறுதிபடுத்த போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி விசாரித்தனர். அங்கு அவர் போலி வாக்குறுதி அளித்து பணமழை வரவழைப்பதாக கூறி மோசடி செய்து வந்தது உறுதியானது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கிஷன் ஆசாராம் பவாரை பிடித்து கைது செய்தனர்.

HIV பாதித்த பெண்ணின் உடம்பில் 7 மாதம் இருந்த கொரோனா!

0

எச்ஐவி பாதித்த ஒரு பெண்ணின் உடம்பில் 216 நாட்களில் கொரோனா இருந்துள்ளது. அந்நாட்களில் 30 முறை உருமாற்றம் அடைந்து உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்னாப்பிரிக்காவில் உள்ள 36 வயதுடைய எச்ஐவி பாதித்த இந்தப் பெண்ணின் உடம்பில் தான் ஏழு மாதத்திற்கு மேல் கொரோனா உடம்பில் இருந்துள்ளது.

 

எச்ஐவி மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோணா ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால் நீண்ட நாட்கள் உடலிலேயே தங்கிவிடும். சாதாரணமான மனிதர்களைவிட இவர்கள் இறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில்தான் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பெண் அதுவும் 36 வயதுடைய ஒரு பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த வைரஸ் 216 நாட்கள் அந்த பெண்ணின் உடம்பில் இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 30 வகை ஆக அந்த கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. அந்தப் பெண்ணின் உடம்பில் தோன்றிய அந்த உருமாறிய வைரஸ் பரவும் வகையானதா? என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

 

பொதுவாக எச்ஐவி பாதித்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பொழுது இறக்கும் விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தப் பெண்ணின் இறப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

 

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இப்பொழுது டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது மற்ற கொரோனா வைரஸ் விட எளிதில் மக்களுக்கு பரவிவிடும். மற்ற வகை வைரஸ்களை விட 40% வீரியத்துடன் அதிகமாக பரவும். மறுபரிசீலனை செய்ய வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிப்பு வேண்டும் என கூறியுள்ளார். டெல்டா வகையினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஒருவர் கூட ஒரு டோஸ் தடுப்பு ஊசி கூட போட்டுக்கொள்ளவில்லை. இவ்வாறு ஐரோப்பிய நாடான பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக், செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

கொரோனா பாதித்த சிங்கங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

0

கொரோனா பாதித்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது 3.6.2021 அன்று ஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இறந்தது. ஏற்கனவே ஹைதராபாத் உயிரியல் பூங்கா, ஜெய்பூர் உயிரியல் பூங்கா மற்றும் எட்டாவா (உத்திரபிரதேசம்) சிங்க உலாவிடப் பூங்காக்களில் சிங்கங்களுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 11 சிங்கங்களின் மாதிரிகள் பற்றிய ஆய்வறிக்கை கிடைத்ததன் தொடர்ச்சியாக மேலும் 3 சிங்கம் மற்றும் 4 புலிகளின் மாதிரிகள் விரிவான ஆய்விற்காக இரண்டு நாட்களுக்கு முன் பரோலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து சிங்கங்களின் மாதிரிகள் ஹைதராபாத்திலுள்ள செல் உயிரணு மரபியல் மூலக்கூறு மையத்திற்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றார். அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

உயிரியல் பூங்காவின் இயக்குநர் தெபாஷிஸ் ஜானா, பூங்காவில் எடுக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கியதோடு, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்துதல்களின்படி நிலைத்த செயல்முறைகளை கவனமாக பின்பற்றப்படுவதையும் குறித்து விளக்கி கூறினார்.

டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான பூங்கா மருத்துவக்குழு, பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு வழக்கப்படும் சிகிச்சையின் சாராம்சங்களையும், பிற விலங்குகளுக்கு பூங்காவில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும் முதலமைச்சருக்கு விளக்கிக் கூறினர்.

இதையடுத்து வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித சுணக்கமுமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், வன உயிரின பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பார்சல்! அதனால் ஏற்பட்ட பரபரப்பு!

0

சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பார்சல்! அதனால் ஏற்பட்ட பரபரப்பு!

நவீன காலத்தில் அனைவரும் சமைக்க நேரமில்லாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டு உள்ளோம். அப்படி இருக்கையில் நாம் அனைவரும் துரித உணவுகளை விரும்பி உண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக வெளியில், கடைகளில் சமைத்து டெலிவரி செய்யும் உணவுகளுக்கு அனைவரும் அடிமை என்றே கூறலாம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு தான் சிக்கன். இதை சாப்பிடுவதால் வரும் ஆபத்துக்கள் அனைத்தும் தெரிந்தாலும் கூட அதை சாப்பிடாமல் இருப்பது மிகவும் கடினம்.

நினைத்த நேரத்தில் எல்லாம் பலவிதமான சிக்கன்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அப்படி சிக்கன் ப்ரை ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பிலிப்பைன்ஸ் துரித உணவகமான ஜொல்லிபீயில் ஆர்டர் செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வந்த உணவு பார்சலை திறந்து பார்த்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சிக்கன் ப்ரை ஆர்டர் செய்த அந்த பெண்ணிற்கு வறுத்த முகம் துடைக்கும் துண்டு ப்ரை கொடுத்துள்ளனர்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த அந்த பெண் இது குறித்து போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, போலீசாரிடம் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஜொல்லிபீ விற்பனை நிலையம் மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் போலீசார் செய்த காரியம்! சம்பந்தப்பட்டவர்கள் பணியிடை நீக்கம்!

0

ஊரடங்கு காலத்தில் போலீசார் செய்த காரியம்! சம்பந்தப்பட்டவர்கள் பணியிடை நீக்கம்!

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் சுற்றுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், துமகூருவில் ஊரடங்கு மத்தியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் அதிகஅளவில் சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வந்தது.

அதே நேரத்தில் குப்பியில் சூதாட்டம் நடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்தும், அதுபற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணாவுக்கு, சிரா போலீஸ் சூப்பிரண்டு குமாரப்பா, புகார் கடிதம் கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த வம்சி கிருஷ்ணா உத்தரவிட்டு இருந்தார்.

இந்த விசாரணையில், குப்பி தாலுகாவில் ஊரடங்கு நேரத்தில் பல்வேறு கிராமங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடந்து வருவதும், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்திருந்ததும், அதனை தடுக்கவோ, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குப்பி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களான சித்தேகவுடா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், சூதாட்ட விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பிற போலீசார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், போலீஸ்காரர்களை மட்டும் வம்சி கிருஷ்ணா பணி இடைநீக்கம் செய்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நடுக்கடலில் மருத்துவ உதவி கோரிய கப்பல் கேப்டனை மீட்டது இந்திய கடற்படை! வீடியோ உள்ளே!

0

கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிக கப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது.

மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்கு நேற்று காலை 4.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்கு கப்பலில், 50 வயதான தென்கொரிய கேப்டனுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவாவிலிருந்து இந்திய கடலோர காவல் படை கப்பல் சி-158, மீட்பு பணிக்கு இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ள கடலோர காவல் படையின் சேத்தக் ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது. மோசமான வானிலையிலும், அந்த ஹெலிகாப்டர் மார்ஷல் தீவைச் சேர்ந்த எம்.டி.சலீம் என்ற அந்த கப்பலை நெருங்கியது.

ஹெலிகாப்டரில் சென்ற டைவர் கப்பலில் இறங்கி நோயாளியை பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏற்றினார். இந்த காட்சியை இந்திய கடலோர காவல்படை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேப்டன் கோவாவின் வாஸ்கோ நகரில் எஸ்எம்ஆர்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று நீங்கள் சவால்களை சந்திக்க நேரும்! இன்றைய ராசி பலன்கள்!

0

இன்று நீங்கள் சவால்களை சந்திக்க நேரும்! இன்றைய ராசி பலன்கள்!

மேஷ ராசி:

     இன்று மனக்கவலையின் காரணமாக பணியில் தவறுகள் செய்ய நேரிடலாம். கவனத்துடன் செயல்படும் போது சிறப்பாக செயல்படலாம். உறவில் சலசலப்பு ஏற்படும். பணவரவு சாதகமாக இருக்காது.

ரிஷப ராசி:

இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது. அனுசரித்து போவதன் மூலம் தன்னம்பிக்கை வளரும். பணிகள் அதிகமாக இருக்கும். அதிக உழைப்பு தேவைப்படும். பேசி புரிய வைப்பதன் மூலம் வீட்டில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கலாம்.

மிதுன ராசி:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். செய்யும் செயல்களில் வெற்றி ஏற்படும். உங்கள் திறமையை வெளிபடுத்தி நல்ல பெயர் வாங்குவீர்கள். அமைதியாகவும், பக்குவமாகவும் செயல்படுவதால் புரிந்துணர்வு அதிகரிக்கும்.

கடக ராசி:

இன்று சாதகமான நாள். பணத்தை பெருக்கும் புது வழியை காண்பீர்கள். எதிர்பாராத செல்வ செழிப்பு ஏற்படும். தொழில் வெற்றி பெறுவீர்கள். நல்ல பெயர் எடுக்கும் தினம் இன்று. உறவு வலுப்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.

சிம்ம ராசி:

இன்று எந்த செயல் செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செய்யவும். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். சில விசயங்களில் தடை ஏற்படும். வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கன்னி ராசி:

எதிர்பார்த்த பலன்கள் ஏற்படாது. தினசரி செயல்களில் மாற்றங்கள் நிறைய செய்ய வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். வணவரவு சொல்லும்படி இருக்காது.

துலாம் ராசி:

இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை அறிவீர்கள். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். உங்கள் திறமைக்காக மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள். எதிர்காலத்திற்காக பயனுள்ள முடிவை எடுப்பீர்கள்.

விருச்சிக ராசி:

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்யுங்கள். பணியை விரைந்து முடிப்பீர்கள். வீட்டில் அன்புடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும்.

தனுசு ராசி:

இன்று உணர்ச்சிவசப்படாமல், பொறுமையாக இருக்க வேண்டும். அதிக வேலை காரணமாக தவறுகள் ஏற்படலாம். துணையுடன் சகஜமாக பழகுங்கள். பணவரவு குறைவாக இருக்கும்.

மகர ராசி:

உங்கள் முற்போக்கு வளர்ச்சி சாதகமாக இருக்காது. சவால்களை சந்திக்க நேரும். கவனக்குறைவு காரணமாக பணிகளை கவனமாக கையாள வேண்டும். பதட்டத்தை குறைக்கவும். பணவரவு சுமாராக இருக்கும்.

கும்ப ராசி:

உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணி இடத்தில் புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். உங்களின் வார்த்தைகள் துணியை மகிழ்விக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

மீன ராசி:

இன்று சவால்களை சமாளிக்க திட்டமிட வேண்டும். பணிசுமை அதிகரிக்கும். கவலைகளும் அதிகரிக்கும். வீட்டில் வாக்கு வாதங்கள் ஏற்படும். பண வரவிற்கு வாய்ப்பு இல்லை.         .

தமிழக பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம்: கனமழைக்கு வாய்ப்பு!

0

மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை,  இன்று மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது.

மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனையொட்டிய கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி, சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில இடங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.