Tuesday, July 22, 2025
Home Blog Page 4556

என் உடம்புக்கு என்னனு பாருங்க – சிகிச்சைக்கு தனியாக வந்த 3 வயது சுட்டி குழந்தை!

0

என் உடம்புக்கு என்னனு பாருங்க – சிகிச்சைக்கு தனியாக வந்த 3 வயது சுட்டி குழந்தை!

இந்தக்கால குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்தே படுசுட்டியாக இருந்து மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த குழந்தையோ வேற லெவல்.

கொரோனா தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கொரோனா தொற்றுக்கு சிறு குழந்தைகளும் பலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தொற்றில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோர்களுக்கே அதிகம் உள்ளது.

ஆனால் பலர் இந்த தொற்றின் வீரியம் தெரியாமல் காய்ச்சல் சலி ஏற்பட்டாலும் மருத்துவர்களை அணுகாமல் வீட்டு வைத்தியம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சுய விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை உணர்ந்த 3 வயது சிறுமி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். ஆம், 3 வயதான லிபாவி என்ற சிறுமி நாகாலாந்து மாநிலம் ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு முதல் சளி இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் நிலத்தில் வேலைக்கு சென்றுவிட்டதால் சிறுமி தெளிவாக யோசித்து நேராக அந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மாஸ்க் போட்டு கொண்டு வந்த சிறுமியிடம் மருத்துவர் விசாரித்தபோது தனக்கு சளி இருப்பதாக கூறியுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை, நாகாலாந்தின் பாஜக இளைஞரணி தலைவர் பெஞ்சமின் யெப்தோமி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் தற்போது பெரியவர்களே கொரோனா தடுப்பூசி போடவும் கொரோனா சோதனை செய்து கொள்ளவும் தயக்கம் காட்டி வரும் நிலையில் சிறிய குழந்தை லிபாவி நமக்கெல்லாம் நல்லதொரு வழியை காட்டியுள்ளார்.

பொறுப்புணர்வுதான் தற்போதைய பெரிய தேவையாகும். அந்த குழந்தை விரைவில் குணமாக வாழ்த்துகள் என தெரிவித்து அந்த புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கும் ஹாஸ்டேக் செய்துள்ளார். இந்த ட்வீட்டை தற்போது நெட்டிசன்களும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் குறைந்து வருவதால் நிம்மதி!

0

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் குறைந்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை 36ஆயிரம் என்ற உச்சத்தைத் தொட்டு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 20,421 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில், கோவையில் 2,645 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,644 பேரும், ஈரோட்டில் 1,694 பேரும், சேலத்தில் 1.071 பேரும், திருப்பூரில் 1,068 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு குறைந்து வந்தாலும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இன்று 434 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 50 பேரும், கோவையில் 38 பேரும், சேலத்தில் 34 பேரும், வேலூரில் 29 பேரும், திருச்சி மற்றும் செங்கல்பட்டில் 21 பேரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழிழந்துள்ளனர். இவர்களில் 110 பேருக்கு கோமார்பிடிடீஸ் எனப்படும் இணை நோய் இல்லை என்றும், வெறும் காய்ச்சல் மட்டுமே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 33,161 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,44,289 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பும் உயிரிழப்பும் சற்று குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ: இனி மனிதர்களும் காற்றில் பறக்கலாம்! சாதனம் கண்டுபிடிப்பு!

0

ஆஸ்திரேலியாவில் ஆய்வாளர்கள் மனிதர்கள்  பறவைகளைப் போல மனிதர்களும் பறப்பதற்கு “காப்டர் பேக்” என்ற ஒரு சாதனத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

 

இதைப் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த சாதனமானது ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மற்றும் விசிறி மற்றும் ரோட்டார் போன்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்டது. இந்த சாதனம் மனிதனின் முதுகில் பொருத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பறக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

அதுமட்டுமின்றி ஏதேனும் கோளாறு நடந்து விபத்துக்குள்ளாகும் நேரத்தில் காப்டர் பேக்கிலிருந்து பாராசூட் உடனடியாக திறந்து உயிரை காப்பாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது கார்பன் பைபர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாக இந்த பறக்கும் சாதனத்தை பரிசோதிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடலின் மீது நடத்தப்பட்ட ஒரு சோதனையில் காப்டர் பேக் வெற்றி அடைந்துள்ளது.

அந்த காப்டர் பேர் பொருத்திக் கொண்ட ஒரு நபரை குறிப்பிட்ட தூரம் வரை கடல் மேல் பறக்க செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

 

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? வெளியுறவுத்துறை விளக்கம்!

0

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? என வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த ஆரம்பித்ததில் இருந்து, பல்வேறு நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்தின. இதனால், வெளிநாடுகளில் பணிக்காகவும், படிப்புக்காகவும் சென்று தவித்து வந்தவர்களை சிறப்பு விமான சேவை மூலம் ஒவ்வொரு நாடும் அழைத்து வந்தன.

இந்தியாவும் இதே போன்று, பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்களையும், வேலை இழந்து தவித்தவர்களையும் தாயகம் அழைத்து வந்தது. வேலை இழந்தவர்கள், தாயகத்திலேயே வேலை தேடிக்கொண்டோ அல்லது மறுபடியும் வேலை கிடைத்து வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் தாயகத்திலேயே தங்கியுள்ளனர். தற்போது சில நாடுகளில் கொரோனா தொற்று இல்லாததால் கல்வி நிலையங்களுக்கு அனுமதி அளித்து வருகின்றன.

இதனால், அந்த நாடுகளில் இருந்து தாயகம் வந்தவர்கள் படிப்பை தொடர வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளதால், மாணவர்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் படிக்கும் நாடுகளுக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை செய்து வருகிறது. வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், தமது தாயகம் வருகைக்குப் பிறகு மீண்டும் தாங்கள் படிக்கும் நாடுகளுக்கு செல்ல முடியாமலிருந்தால், அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் OIA-II பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரீந்தம் பக்ஷி தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் மட்டும் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் அங்கு செல்வதற்கான சீன அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

0

சேலம் மாவட்டத்தில் கோரோணா பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தற்காலிக பணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 

சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கொரோனா மேலாண் பணிக்காக மூன்று மாதம் தற்காலிக பணியிடங்களை ஜூன் 7 நாளை காலை 11 மணிக்கு பல்நோக்கு மற்றும் கோட்டை அரங்கில் ஆட்கள் சேர்ப்பு பணி நடைபெறுகிறது.

 

செவிலியர் பணிக்கு:

பி.எஸ்சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஜி.என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 20 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ. 14000 உதவித் தொகை மாதம்.

 

சுகாதார செவிலியர் பணிக்கு:

 

ஏ. என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 40 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ. 11000 உதவித் தொகை மாதம்.

 

தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு:

 

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் பட்டயம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு,50 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ. 9000 உதவித் தொகை மாதம்.

 

கணக்கெடுப்பு பணியாளர் பணிக்கு:

 

பி.எஸ்சி., எம்.எஸ்சி., கணினி அறிவியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு, 50 காலி பணியிடங்கள் உள்ளன.ரூ. 8000 உதவித் தொகை மாதம்.

 

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நாளை நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறவும்.

நாமக்கல்லில் கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் அதிர்ச்சி!

0

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 719 நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்டில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 2 நாய்கள் நோயாளியின் படுக்கையில் படுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்களும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது பேரதிர்ச்சியாய் இருந்தது.

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்!

0

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்!

பெண்கள் என்ன வேலை செய்தாலும், எப்படி கெத்தாக இருந்தாலும் கட்டிய கணவன் சரி இல்லாத போது ஒரு பெண்ணால் நிம்மதியாக இருக்க தோணுமா? என்ன? இதை சொன்னால் யார் ஒத்துக்கொள்கிறார்கள் சொல்கிறார்கள்.

கர்நாடகா மாநிலத்தில், கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகா சிவாஜிநகர் அருகே வசித்து வருபவர் சஞ்சீவ் ரெட்டி. இவரது மனைவி இந்திரா (வயது 38). இந்த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சேடத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக இந்திரா வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், தனது மனைவி இந்திராவிடம் பணம் கேட்டு சஞ்சீவ் ரெட்டி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்திராவை அவர் தொடர்ந்து அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக அவர் மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த இந்திரா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார்.

உடல் கருகி உயிருக்கு போராடிய இந்திரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இந்திரா பரிதாபமாக இறந்துவிட்டார்.

கணவனின் கொடுமை தாங்க முடியாமல் இந்திரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சேடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சஞ்சீவ் ரெட்டியையும் போலீசார் தேடிவருகின்றனர்.

காலக்கெடு முடிந்த நிலையில் எந்த நிறுவனமும் இன்னும் ஒப்பந்தபுள்ளி தரவில்லை என  அமைச்சர் கூறினார்!

0

காலக்கெடு முடிந்த நிலையில் எந்த நிறுவனமும் இன்னும் ஒப்பந்தபுள்ளி தரவில்லை என  அமைச்சர் கூறினார்!

தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாதநிலையில், தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கூறியிருந்தது.

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், எந்த ஒரு முக்கிய நிறுவனமும் தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை. கேரளா, தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்கள் வழங்கிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் அறிவிப்பையும் தடுப்பூசி நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு எந்த நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி அளிக்கவில்லை என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு உலக அளவில் தமிழக அரசு சார்பில் கோரப்பட்ட ஒப்பந்தபுள்ளி, அதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை எந்த நிறுவனமும் தடுப்பூசி வழங்க முன்வரவில்லை. இதற்கு மத்திய அரசே காரணம் என்று கூற முடியாது. எந்த காரணத்தினால் ஒப்பந்தப்புள்ளி எடுக்கவில்லை என்று ஆய்வு செய்து, மீண்டும் உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்படும் என்று அவர் கூறினார்.

தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடல்!

0

பொதுமக்கள் தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, மத்திய அரசு டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் குறைந்த அளவே தடுப்பூசி தயாரிக்கப்படுவதால், தினந்தோறும் தடுப்பூசி முகாம்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுகளிடம் தடுப்பூசி கேட்டு வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி குறைந்த அளவே கிடைப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை சாடியுள்ளார். பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காமல் அல்லல் படும் நேரத்தில் மத்திய அரசு டிவிட்டர் புளு டிக் கிடைக்கவில்லை என சண்டையிட்டுக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இதே போன்று, கடந்த வாரம் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து விளக்க வேண்டும் என்றும், ஆம்பிடெரிசின் மருந்து குறித்தும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்!

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 31). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் அனுஷ்கா (5), மகன் மாதேஷ் (2).

சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கரநாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்பு செல்வி அதே கிராமத்தில் தனது தாயார் வீரலட்சுமியின் (60) வீட்டின் அருகே வேறு ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார்.

கணவர் தற்கொலைக்கு பின்னர், செல்வி மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை செல்வி தனது நகைகளை எல்லாம் கழற்றி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய தாய் வீரலட்சுமி எதற்காக நகையை எல்லாம் கழற்றுகிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு செல்வி, சும்மா தான் கழற்றி வைக்கிறேன் என கூறி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஊரை அடுத்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றார்.

பின்னர் மனதை கல்லாக்கிக் கொண்டு, பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் மகனையும், மகளையும் கிணற்றில் தூக்கி வீசியுள்ளார். கிணற்றில் குழந்தைகள் தத்தளித்ததும், செல்வியும் குதித்தார். பின்னர் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே தனது மகளும், பேரக்குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் வீரலட்சுமி அருகில் உள்ள இடங்களில் எல்லாம் தேடி உள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்வி, தனது குழந்தைகளுடன் காட்டுப்பகுதியை நோக்கி சென்றதாக தெரிவித்தனர்.

பின்னர் வீரலட்சுமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று தேடிப்பார்த்த போது, கிணற்றில் செல்வியும், குழந்தை அனுஷ்காவும் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினரும், போலீசார் அங்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கணவர் இறந்த வேதனையில் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று செல்வி தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.