Tuesday, July 22, 2025
Home Blog Page 4557

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

0

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று டெலிவரி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் வகுத்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தடைகளை உடைத்து விடுகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ஆனால் 2 நாட்களில் திட்டம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பதிலளித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு ரேஷன் பொருட்களை வீடுகளில் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.

பீட்சா, பர்கர், ஸ்மார்போன், துணிகள் எல்லாம் வீடு தேடி வரும் போது, ஏன் ரேஷன் பொருட்கள் வரக்கூடாது என அவர் கேள்வி எழுப்பினார். ரேஷன் மாஃபியாவுக்கு எதிராக முதல் முறையாக மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், ரேஷன் மாஃபியாக்கள் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தால் ஒருவாரத்தில் திட்டத்தை முடக்கியிருப்பார்கள் என கூறியுள்ளார்.

டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், லட்சத்தீவுகள், விவசாயிகள் என அனைவரிடமும் மத்திய அரசு சண்டையிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். அனைவரிடமும் சண்டையிடுவதாக் மக்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், இப்படியே சண்டையிட்டுக் கொண்டிருந்தால், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், முழு பெயரும் உங்களுக்கே(பிரதமர் மோடி) கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கோ, பாஜகவுக்கோ கிடையாது. மோடியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து ரேஷன் பொருட்களை விடு தேடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்குமாறு டெல்லியில் உள்ள 70 லட்சம் ஏழை மக்களின் சார்பாக இருகைகளையும் கூப்பி கேட்டுக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நாகினி சீரியல் நடிகருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு!

0

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியல் மிகவும் பிரபலமடைந்ததை தொடர்ந்து நாகினி 2, 3 என எடுக்கப்பட்டது. அதில் ஹீரோவாக நடிக்கும் பேர்ல் வி பூரி என்பவர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

 

இந்நிலையில் சாமுராய் படத்தில் நடித்த நடிகையான அனிதா அவர்களும், யாஷிகா ஆனந்த் அவர்களும் மற்றும் பல நடிகைகள் அந்த நடிகர் பேர்ல் வி பூரி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

 

நேற்று முன்தினம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்தனர். விசாரணையை தொடங்கிய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த நடிகருக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் இருக்கும் படி உத்தரவிட்டனர்.

 

இதனை தொடர்ந்து அடித்த நடிகை நடிகர்களும் இந்த நடிகருக்கு ஆதரவு தெரிவித்து வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகை யாஷிகா நடிகர் இவருக்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை தெரிவித்துள்ளார். எனக்கு தெரிந்த அன்பானவர்களில் பேர்ல் வி பூரியும் ஒருவர். நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன். என் நண்பர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புகிறேன். பாசிட்டிவாக இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். கீழே ஒரு hashtags பிரபலப்படுத்திய உள்ளார். #istandwithpearl எந்த ஹேட்ஸ்டகை பதிவிட்டுள்ளார்.

 

மேலும் அந்த சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு தகுந்த ஆதாரம் சிக்கி உள்ளதாக போலீசார் இடம்பெறாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

திமுக ஆட்சியில் அதிக மின்வெட்டுகளைச் சந்திக்கும் மக்கள்! முதல்வர் கவனிப்பாரா?

0

முன்பை விட இப்பொழுது அதிகமான மின்வெட்டு கள் ஏற்படுகின்றன என மக்கள் தவித்து வருகின்றனர்.

 

ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த தினசரி மின்தடை இருக்கின்றன. இன்னிலையில் திருபுவனத்தில் உள்ள சில கிராமங்களுக்கு ஒரு நாளுக்கு பத்துக்கும் மேற்பட்ட தடவை மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

 

திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையம் மூலம் நகர் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு மின் விநியோகம் தினசரி நடைபெறுகிறது. கடந்த ஒரு சில நாட்களாகவே பத்திற்கும் மேற்பட்ட முறை ஒரே நாளில் மின்வெட்டுகள் நடைபெறுகின்றன.

 

மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்தாலும் சரியான பதில்களைச் சொல்ல மறுக்கின்றனர் என மக்கள் கூறுகின்றனர்.

 

அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் மின்சாதனங்கள் பழுதாகி விடுகின்றன என மக்கள் சோகத்தில் உள்ளனர். இப்படி தொடர் ஊரடங்கு காலகட்டத்தில் மின்சாரமும் அதிக நேரம் தடைபடுவதால் மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.

 

திமுக ஆட்சியில் இந்த மாதிரியான மின்வெட்டுகள் நடைபெறும் என மக்கள் கூறுகின்றனர். இதை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கவனித்து சரி செய்வாரா?

 

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறிய பொழுது 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றுதான் கூறுகிறார்கள் ஆனால் மின்வெட்டு அதிகமாகிக் கொண்டுதான் வருகின்றது என மக்கள் குறை கூறி வருகின்றனர்.

 

மின்சார வாரிய அலுவலர்கள் கூறுகையில், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும் தினசரி பராமரிப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. காற்று மற்றும் மழை காலங்களில் மின்கம்பிகள் உரசி மின்சாரம் தடை படுகின்றன. அதை நீக்குவதற்கு போதிய அளவில் மின் ஊழியர்கள் இல்லை என வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர்.

வீடியோ: இரட்டை வேடங்களில் வரலட்சுமியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

0

அனைத்து நடிகர் நடிகைகளும் கொரோனாவின் தாக்குதலையும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விழிப்புணர்வாக பதிவு மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

நடிகை வரலட்சுமி தமிழ் திரையுலகிற்கு தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்து வில்லியாகவும் நடித்து புகழ்பெற்றவர். இப்பொழுது அவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். வீட்டில் மற்றும் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு அளிக்கும் மிகுந்த சேவையை செய்து வருகிறார்.சமீபத்தில்கூட உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தெரு நாய்களுக்கு உணவு வழங்க கோரி ஒரு டன் அரிசி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் நமது சரத்குமார் அவர்களின் மகளான வரலட்சுமி இரட்டை வேடங்களில் நடித்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் ஒருத்தருக்கு கொரோனா பற்றி பயமுள்ள ஒருவராகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுரை கூறும் ஒருவராகவும் வரலட்சுமி நடித்துள்ளார்.

 

இது தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்து வெளியிட்டுள்ளார்.

 

அதில் கொரோனா மற்றும் தடுப்பூசியின் விளைவுகள் குறித்து பயப்படும் ஒருவருக்கு இது வெறும் கதையே என எடுத்துக்கூறி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கி உள்ளார்..

 

வாகனங்களில் செல்லும் பொழுது நாம் ஏன் ஹெல்மெட் அணிகிறோம். ஹெல்மெட் அணிந்தால் விபத்து ஏற்படாது என்பது அல்ல. விபத்து ஏற்பட்டாலும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள ஹெல்மெட் அணிகிறோம். அதேபோல தடுப்பூசி என்பது கொரோனாவை வராமல் தடுக்க என்பதல்ல. கொரோனா வந்தாலும் அதை கட்டுப்படுத்தி நம்மை உயிர் வாழ வைப்பதுதான் தடுப்பூசி. தடுப்பூசி போட்டு கொள்பவரும் இறக்கிறார்களே என்ற கேள்விக்கு, அவர்கள் வேறு விதமான நோயினால் பாதிக்கப் பட்டிருந்தால் இறக்க வாய்ப்புள்ளது அதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எல்லாரும் இறந்து விடுவதில்லை என்று கூறுகிறார்.

 

இந்த வீடியோ மக்களால் ஆதரிக்கப்பட்ட பகிர்ந்து வருகிறார்கள்.

 

https://www.instagram.com/tv/CPr3ADoA7mT/?utm_medium=copy_link

பெயிண்டர் உடன் உல்லாசம்!

0

சென்னையில் கள்ள தொடர்பினால் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சென்னையில் உள்ள கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பவர் அருண். இவருக்கு வயது 30. இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் திருநாவுக்கரசு என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

 

அருண் எவ்வளவோ முறை சொல்லியும் இருவரும் கேட்க மறுத்துள்ளனர். அருண் கெஞ்சி கூட பார்த்தும் இருவரும் தங்கள் தொடர்பை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த அருண் திருநாவுக்கரசை தாக்க முயற்சித்தார். அருண் தனது உறவுக்காரரான சூர்யா என்பவருடன் திருநாவுக்கரசை பலமாக தாக்கி தலையில் வெட்டி உள்ளார்.இதனால் பயங்கரமாக காயமடைந்த திருநாவுக்கரசு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

தகவல் அறிந்த கண்ணகி நகர் போலீசார் அருண் மற்றும் சூர்யாவை விசாரணை செய்து கைது செய்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் திருநாவுக்கரசு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வண்டலூரில் புலிகளுக்கும் கொரோனா டெஸ்ட்! சிங்கம் இறந்ததால் நடவடிக்கை!

0

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புலிகளுக்கும் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், உள்ள சிங்கங்கள் சரியான உணவு உண்ணாமல் இருந்தன. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட டெஸ்டில் 11 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அன்று மாலையே தொற்று பாதித்த நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தப்பட்டன. விஜி மற்றும் சசி என்ற இரண்டு பெண் சிங்கங்களுக்கு அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால், நெபுலைசர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ், கால்நடை மருத்துவக் குழுவினருடன் பூங்காவுக்கு சென்று சிங்கங்களை பரிசோதித்தார். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து இக்குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், பூங்காவில் புலிகளின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதே போன்று, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு வெப்ப ஆய்வு நடத்தப்படுவதோடு, வெளி ஆட்கள் உள்ளே செல்லத் தடை விதிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

விதிகளை ஏற்காத டிவிட்டர்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

இந்தியாவின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு டிவிட்டர் நிறுவனம் இணங்க வேண்டும் என மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. இந்த விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன.

இதனை ஏற்று ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் குறைதீர்க்கும் அலுவலர்களை பணியில் அமர்த்தியுள்ளன. அதே நேரத்தில் டிவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிமுறைகளை ஏற்று குறைதீர்க்கும் அலுவலர்களை நியமிக்காமல் வேறு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.

இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில், டிவிட்டர் நிறுவனம் நியமித்துள்ள அதிகாரிகள், விதிகளுக்கு உட்பட்ட சுட்டுரையின் பணியாளர்கள் அல்ல என்றும், இந்திய மக்களின் குறைகளை தீர்க்க எந்த திட்டமும் வகுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விதிகளுக்கு இணங்க வேண்டும் என இறுதி நோட்டீஸ் அனுப்புவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, தவறினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.

கொரோனா 2ம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு! மருத்துவர்கள் எச்சரிக்கை!

0

கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு என மருத்துவகள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்  இரண்டாம் அலை பரவலில் 4 லட்சம் என்ற உச்சத்தை பாதிப்பும், 4 ஆயிரத்து 500 என்ற உச்ச்த்தில் உயிரிழப்பும் எட்டியது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் தமிழகம், டெல்லி உட்பட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநிலத்தில் கொரோனா வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் மருத்துவர் வி. ரவி, நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறையலாம், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையலாம். ஆனால், கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து வருவதாக நினைத்தால் அது மிகப்பெரிய தவறு என்றார். கொரோனா பாதிப்பு விகிதம் 5%க்கு கீழும், பலி எண் ணிக்கைவிகிதம் 1%க்கு குறைவாகவும் பதிவானால்தான் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக கூறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களில்தான் கொரோனா தொற்று குறைகிறதா இல்லையா என்பது தெரிய வரும் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தியாவில் பரவி வரும் வீரியமிக்க டெல்டா வகை வைரஸின் தீவிரம் குறையவில்லை, அது இப்போதும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஒரு வேளை தளர்வுகள் காரணமாக மக்கள் வெளியே வந்து, கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் தொற்று பாதிப்பு வெகுவாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊரடங்கு காரணமாகவே பாதிப்பு குறைவாக உள்ளது என்ற அவர், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் என்றார். கொரோனா தொற்றின் பரவும் வீரியம் குறைந்து விட்டதாக எந்தத் தரவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று உங்களுக்கு முன்னேற்றமான  நாளாக இருக்கும்! இன்றைய ராசி பலன்கள்!

0

இன்று உங்களுக்கு முன்னேற்றமான  நாளாக இருக்கும்! இன்றைய ராசி பலன்கள்

மேஷராசி:

     இன்று உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் இன்றி பணிச்சுமை அதிகரித்து காணப்படும். நிதானமாக செயல் படுவதன் மூலம் பணியில் தவறுகள் நேராமல் பார்த்து கொள்ளலாம். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.

ரிஷப ராசி:

     சூழ்நிலையை பொருத்து அனுசரித்து போகும்போது நாள் சுமூகமாக போகும். எல்லா விசயங்களையும் பக்குவமாக கையாள வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கவலை கொள்வீர்கள்.உங்கள் துணையுடன் பேச வாய்ப்பு கிடைக்காது.

மிதுன ராசி:

     இன்று உங்களுக்கு மிகவும் முன்னேற்றமான நாளாக இருக்கும். வாழ்கையின் யதார்த்தம் உணர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிளில் முன்னேற்ற பலன் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கும். நல்ல லாபம் இருக்கும்.

கடக ராசி:

      இன்று உங்களுக்கு முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். உற்சாகத்துடன் செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் ஏற்படுவதன் மூலம் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். சந்தோசம் அனுபவிக்கும் நாளாக இருக்கும்.

சிம்ம ராசி:

     இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான சூல்நிலையாக இருக்கும். தேவையற்ற விசயங்களை யோசிப்பதை விட்டு ஆன்மீகத்தில் ஈடுபாடு செலுத்துங்கள். துணையுடன் நட்பு பாராட்டவும். கவனக் குறைவால் பணம் இழக்கும் வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி:

     உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். பணிகள் அதிகரித்து இருப்பதினால் தவறு ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். வீட்டில் புரிந்துணர்வு ஏற்படும். பணவரவு சற்று குறைவாக இருக்கும்.

துலாம் ராசி:

     இன்று உங்களுக்கு சந்தோசமான சூழ்நிலை ஏற்படும். வெற்றி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பீர்கள். பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டில் விழா ஏற்பாடுகள் நடைபெறும். உங்கள் சேமிப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி:

     இன்று உங்களுக்கு மிகவும் எளிதில் வெற்றி கிடைக்கும். உங்கள் தகவல் தொடர்பின் மூலம் மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையால் வெற்றியின் உச்சத்திற்க்கு செல்வீர்கள். சவாலான பணிகளை எளிதில் முடிப்பீர்கள்.

தனுசு ராசி:

இன்று கொஞ்சம் மந்தமான நாளாக இருக்கும். இலக்கில் வெற்றியடைவது சிரமமாக இருக்கும். மன அழுத்தத்தை உணர்வீர்கள். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு இருக்காது.

மகர ராசி:

இன்று உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது. புத்தியை பயன்படுத்தி சவால்களை முடிக்க வேண்டும். பணிகளை கவனமாக செய்ய வேண்டும். பதட்டம் காரணமாக வீட்டில் குற்றம் கண்டு பிடிப்பீர்கள். ஓரளவு பணவரவு இருக்கும்.

கும்ப ராசி:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய நட்புக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் புதுமையான கருத்துக்களை கூறுவீர்கள் அதனால் பாராட்டு பெறுவீர்கள். உங்களின் இனிமையான வார்த்தை துணையை மகிழ்விக்கும். பண வரவு அதிகரிக்கும்.

மீன ராசி:

இன்று உங்கள் பணிகளில் சவால்களை சமாளிக்க பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். பணியிட சூழல் சாதகமான பலன்களை தராது எனவே நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். துணையுடன் அனுசரித்து போகவும். பணவரவு ஏற்படாது.  .

சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறது தமிழக அரசு. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை கேட்டு முடிவெடுத்துள்ளது.

 

ஒன்றிய அரசு மத்திய இடைநிலை வாரியம் சிபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே இரத்து செய்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களும் அவரவர்களின் மாநில பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளனர்.

 

பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், மாநில அரசு, மத்திய அரசு ,சுகாதாரம், பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், அமைச்சர்கள், உளவியல் நிபுணர்கள், என அனைவரிடமும் அமைச்சரின் முன்னிலையில் கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது.

 

ஒரு தரப்பினர் இதை மேலும் நடத்துவது குறித்து ஆதரவாகவும், ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்த நிலையிலும், மாணவர்களின் மனநலம் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளனர்.

 

கொரோனா வின் இரண்டாவது அலையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மூன்றாவது அலை வரும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். 18 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்ற நிலையில் , அதற்கும் வயது குறைவான மாணவர்களை ஒரே நேரத்தில் எப்படி தேர்வு எழுத அனுமதிப்பது. அது தொற்றை மேலும் அதிகமாகி விடும் என்று கூறுகின்றனர்.

 

12-ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டுமே உயர் கல்வியைப் பெறுவதற்கான ஒரு முன்னோடி என்று அறிந்தும், தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டால் மாணவர்களின் மன நலன் பாதிக்கும் என்பதால் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே வந்த கருத்துக்களின் ஆலோசனை படி இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மதிப்பெண்கள் வழங்குவது குறித்து தலைமை செயலாளர்கள், பள்ளி துணைவேந்தர்கள் ஆகியோருடன் குழு அமைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

 

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை பற்றி அந்த குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை கொண்டுதான் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதை வைத்து மட்டுமே அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

 

பெருந்தொற்று காரணமாக அகில இந்திய அளவில் நடத்தப்படும்’ நீட் ‘ போன்ற தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இந்தச் சூழ்நிலையில் இருக்காது என தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராத நிலையில் ஸ்டாலின் அவர்கள் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி‌ பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

கொரோனா காலத்தில் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.