Thursday, July 17, 2025
Home Blog Page 4572

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு!

0

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் நாடே அல்லோல கல்லோலப் பட்டு கிடக்கிறது.இதன் பாதிப்பு பல விதங்களில் மக்களை பாதித்து வருகிறது.மாநில அரசுகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.

தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் படிப்படியே குறைந்து வருவதால், பாதிக்கப்படும் நபர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் 12,300 பேருக்கு தொற்று பாதித்த நிலையில் வீடு திரும்புவோர் எண்ணிக்கை 28000 ஆகும். அதே போல் நோயால் பாதிப்புக்கு ஆளாவோரின் விகிதமும் படிபடியாக குறைந்து நேற்று 13 சதவிகிதத்துக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கேரளாவில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பொது இடங்களில் நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை பின்பற்றியும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் போகலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

ஸ்டேசனரி கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் ஜவுளி, நகைக்கடை மற்றும் செருப்பு கடைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது.ஆனால் இந்த கடைகளில் திருமண அழைப்பிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும், மற்றவர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.மேலும் ஜூன் 7 முதல் பொது துறை நிறுவனங்கள், கம்பெனிகள், மற்றும் மத்திய, மாநில அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும், அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் யாருக்கும் தனி முன்னுரிமை இல்லாமல் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் கூறப்படுகிறது.

ரசிகரின் ஆசையை உடனே நிறைவேற்றிய யுவன் சங்கர் ராஜா!

0

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு அவருக்கு தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அதோடு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமனிதன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்சமயம் யுவன் சங்கர் ராஜா வலிமை,மாநாடு போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றையதினம் யுவன்ஷங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகையிலை விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நீங்கள் கடைபிடிப்பதால் உங்களுடைய உடம்பில் மெதுவாக விஷத்தை ஏற்றுக் கொள்வதுடன் உங்களை சூழ்ந்து இருப்பவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் இதன் காரணமாக, குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள் அதில் ஒரு ரசிகர் ஓகே நீங்க ஒரு ஹாய் சொன்னா சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு உடனே யுவன் ஷங்கர் ராஜா ஹாய் என்று பதிலளித்திருக்கிறார் அவருடைய இந்த பதிவு தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் விமர்சனத்திற்கு கூலாக பதில் தெரிவித்த நடிகை ரைசா!

0

உடை அணியும் விஷயத்தில் மற்றவர்கள் தொடர்பாக எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்று நடிகை ரைசா தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் மூலமாக புகழ் வாய்ந்தவர் நடிகை ரைசா. வேலையில்லா பட்டதாரி, பியார் பிரேமா காதல், போன்ற சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் அண்மையில் முகப்பொலிவு சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தார் ரைசா. அந்த சமயத்தில் மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்து முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார் ரைசா.

இதனைத்தொடர்ந்து வெகுநாட்களுக்கு சமூக வலைத்தளம் பக்கமே வராத ரைசா, சென்ற சில நாட்களுக்கு முன்னர் உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்து விட்டபடி புகைப்படங்கள் ஒரு சிலவற்றை போஸ்ட் செய்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக தொடங்கியது இதனை கவனித்த ரசிகர்கள் கலாச்சாரத்திற்கு எதிராக இது போன்ற புகைப்படங்கள் சமுதாயத்திற்கே கேடு என்று கமெண்ட் செய்திருந்தார்கள்.

இதன் காரணமாக டென்ஷன் ஆன நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில் உடை அணியும் விஷயத்தில் நீங்கள் வெறுப்புடன் இருந்தால் உங்கள் எதிர்மறை எண்ணங்கள் காரணமாக, நான் துவண்டு விட மாட்டேன். இதே எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ இயலாது. எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையுடன் எடுத்துச்செல்லும் பொதுவாக இதுபோன்ற கமெண்டுகளை நான் படிப்பதில்லை. இருந்தாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து சென்று விடுவேன் என்று கூலாக பதில் அளித்திருக்கிறார் ரைசா.

முன்னணி நடிகை மீது எழுந்த பரபரப்பு புகார்!

0

நடிகை மீரா சோப்ரா தன்னை முன்கள பணியாளர் என்று போலியான அடையாளத்தை காண்பித்து நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகார் எழுந்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தானே பிரிவு தலைவர் நிரஞ்சன் தாக்கரே தடுப்பூசி போட மீரா சோப்ரா தவறான வழியை பின்பற்றி இருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதோடு மீரா சோப்ரா முன் களப்பணியாளர் என தெரிவித்த அடையாளத்தையும் பகிர்ந்திருக்கிறார். ஆனால் நடிகை மீரா சோப்ரா இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் நாம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பப்படுகிறோம் ஆனாலும் நாம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முயற்சி செய்கின்றோம். அதேபோல எனக்கு தெரிந்த நண்பர்களிடம் உதவி கேட்டு முயற்சி செய்தேன். ஒரு மாத முயற்சிக்குப் பின்னர் ஒரு மையத்தில் பதிவு செய்ய இயன்றது. என்னுடைய ஆதார் அட்டையை அனுப்புமாறு கேட்டார்கள்.

சமூக வலைதளத்தில் பரவிவரும் அடையாள அட்டை என்னுடையது கிடையாது. பதிவு செய்வதற்காக என்னுடைய ஆதார் அட்டை என்னிடம் கேட்கப்பட்டது. நான் ஆதார் மட்டும் தான் கொடுத்தேன் உங்கள் கையொப்பம் இல்லாத எந்த அடையாளமும் செல்லுபடி ஆகாது. என்னுடைய அடையாள அட்டை என்ற பெயரில் போலியாக முதல்முறையாக வலைதள பக்கத்தில் வந்ததை நானே பார்த்தேன். இதைப் போன்ற நடைமுறைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு இது போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டை செய்யப்பட்டிருந்தால் அது எப்படி ஏன் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

“ஹிட்லரின் கழிப்பறை சாவி” எவ்வளவிற்கு ஏலம் போனது தெரியுமா?

0

Adolf Hitler’s toilet key is up for grabs – 76 years after his HQ was bombed

 

சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் கழிப்பறை சாவி ஒருவரது வாழ்க்கையையே மாற்றி உள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. 14,000 பவுண்டுக்கு ஏலம் போயுள்ளது. இந்தியப் பணத்தில் சுமார் 14 லட்சம்.

அடால்ப் ஹிட்லரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்படி இரண்டாம் உலகப்போரின்போது பெர்லின் விடுவிக்கப்பட்ட பின்னர் பிரித்தானியா விமானப்படை அதிகாரி ஒருவர் அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார்.

அவரது பெயர் வில்லியம்ஸ். அந்த விமானப்படை அதிகாரி நாம் ஒரு நினைவுப் பொருளாக இந்த சாவியை வைத்து கொள்ளலாம் என்று நினைத்து அதை தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார். அதன்படி அந்த சாவியை குறித்து ஒரு கடிதமும் எழுதி வைத்தும் இருந்திருக்கிறார்.

அந்த கடிதத்தில் 1945 ஆம் ஆண்டு ஹிட்லரின் மேஜையில் உள்ள டிராயரை திறந்து அவர் பயன்படுத்திய சொந்த கழிப்பறையின் சாவியை எடுத்து கொண்டதை பற்றியும், அது உலோகத்தால் ஆனது என்று குறிப்பிட்டிருந்தார்.

பின் அவருக்குஉ அடுத்து வந்தவர்கள் 1980-90களில் லண்டனில் உள்ள ஒரு சிறிய அருங்காட்சியகத்திற்கு அந்த சாவி கொண்டு வரப்பட்டுள்ளது. அரியவகை பொருட்களையெல்லாம் வாங்கி சேர்க்கும் ஆர்வமுடைய ஒரு நபர் அந்த சாவியை வாங்கி உள்ளார்.

வாங்கிய நபருக்கு அப்போது தெரியவில்லை அதனுடைய மதிப்பு. அந்த சாவியை வாங்கிய நபருக்கு இதை ஏலத்தில் விற்கலாம் என முடிவு செய்துள்ளார். தற்போது அந்த சாவியை ஏலத்தில் விற்க முடிவு செய்த அவர் Ashford with C&T என்ற ஆன்லைன் ஏல நிறுவனத்தில் அந்த சாவியை ஏலத்தில் விட முடிவு செய்தார்.

அவர் ஏலத்திற்கு விடலாம் என்ற நோக்கத்தில் அதை விட வில்லை. அதுவும் அந்த சாவி நிறைய பவுண்டுகளை தாண்டுமா என்று எண்ணிக் கொண்டுதான் ஏலத்தில் விட்டுள்ளார்.

ஆனால் அவரே நினைத்துப் பார்க்காத அளவிற்கு அந்த சாவி நிறைய பவுண்டுக்கு ஏலம் போனது. அடால்ப் ஹிட்லரின் கழிப்பறை சாவியை வாங்க இங்கிலாந்தைச் சேர்ந்த ஏலதாரர்கள் மற்றும் ஜெர்மனை சேர்ந்த நிறைய பேர் இதை வாங்க போட்டி போட்டதால் இதன் விலை பல மடங்கு உயர்ந்தது.

ஏல நிறுவனம் கூறுகையில் , ஜெர்மன் மற்றும் பிரித்தானிய ஆன்லைன் ஏலதாரர்கள் இதை வாங்குவதற்கு கடுமையான போட்டி போட்டதால் ஏலத்தில் விலை பல மடங்கு உயர்ந்தது என்று கூறினர். நாங்கள் எண்ணியதை விட அதிகமான லாபத்திற்கு விற்றது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்களும் விற்பனையாளரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

300 பவுண்டுகளை கூட தாண்டாது என எண்ணியிருந்த விற்பனையாளருக்கு ஹிட்லரின் கழிப்பறை சாவி 14,000 பவுண்டுக்கு ஏலம் போனது ஆச்சரியமே.
இந்திய ரூபாயில் 14,000 பவுண்ட் என்பது 14,47,537 ஆகும்.

விஷ்ணு விஷால் திரைப்படம் ஓடிடியில் வெளியிடா?

0

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் எஃப்ஐஆர் கௌதம் மேனன், நாராயணன் மஞ்சிமா மோகன், மோனிகா, ஜான் ராபின்சன் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் ஒட்டுமொத்தமாக அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் கவனம் செலுத்துகின்றது. இந்த படத்தின் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதன் டீசருக்கு இணையதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக, படக்குழுவினர் எந்த ஒரு விளம்பரமும் செய்யாமல் அமைதியாக இருந்து வருகிறார்கள்.

இதற்கு இடையே எஃப்ஐஆர் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவை ஹாட்ஸ்டார் ஓடிடி தலம் கைப்பற்றி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் படக்குழுவினர் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் தெரிவிக்கவில்லை. விஷ்ணு விஷால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மோகன்தாஸ் படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார்.

அஸ்க்கு மாரோ பாடல் படைத்த புதிய சாதனை! ரசிகர்கள் கொண்டாட்டம்!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமானவர் கவின் இதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் பகுதி மூன்றில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து கொண்டார். இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன், போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்சமயம் அவர் இயக்குனர் பிரசாத் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அண்மையில் நடிகர்களின் தேஜஸ்வினி உடன் ஒன்றிணைந்து நடித்த அஸ்க்கு மாரோ ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார் இந்த பாடலை தரண் குமார் சிவாங்கி ஆகியோரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அதோடு இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இந்நிலையில், அஸ்க்கு மாரோ பாடல் காணொளி யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்

ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

0

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதி வழங்கியது. மருந்தகங்கள் மற்றும் பால் மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசியமான கடைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

மக்கள் பெரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்த மதுபான விற்பனைக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டிருந்தது. மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். அதனால் டெல்லி அரசு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

மது பிரியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க டெல்லி அரசு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என அனுமதி கொடுத்துள்ளது. அதனால் மது வாங்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே அதற்கான மொபைல் எண் அல்லது செயலி இருந்தால் அதனை பயன்படுத்தி ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி அனைத்து மது கடைக்காரர்களும் இந்த விற்பனையில் ஈடுபடும் முடியாது என்றும் , எல்- 13 என்ற சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்பவர்களுக்கு உபயோகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது.

பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

0

பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது என்ற கருத்தை வெளியிட்டார்..

இதற்கு டாக்டர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார்.

உத்தரகாண்ட் மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதேபோல பாபா ராம்தேவை கண்டித்து ஜூன் 1-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என டாக்டர் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று டில்லியில் உள்ள மருத்துவர்கள் கருப்பு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

டாக்டர்கள் குறித்தும் அலோபதி மருத்துவம் பற்றியும் தவறான வகையில் கருத்து தெரிவித்த ராம்தேவை கண்டித்த ஜூன் ஒன்றாம் தேதி கருப்பு தினத்தை முடிவு செய்துள்ளோம். அன்றைய தினத்தில் நோயாளிகளுக்கு அனைத்தும் நடைபெறும். எந்தப் பிரச்சினையும் இல்லாமல், எந்த தடையும் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

மேலும் ராம்தேவ் அவர்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!

0

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!

தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க இப்படியொரு டிரைலர் போதும் அந்த அளவுக்கு அதிரடியாக உள்ளது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா பரவல காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேராக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த படம்  ரிலீஸ் ஆகா உள்ளது. மேலும் இந்தப் படம் ஜூன் 18 ஆம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அதே போல், இதுவரை பார்த்திடாத புதிய தனுஷைக் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்கப்பட்டிருப்பது ட்ரைலர்  பார்க்கும் போதே தெரிகிறது. மேலும்  தனுஷ் அவர்கள் லண்டனில் எப்படி தாதாவாக மாறுகிறார் என்பதை வைத்து இப்படம் உருவாக்கப்படுள்ளது. மேலும் இந்த படத்தில் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா எனறு தனுஷ் கூறியுள்ளார். மேலும் லண்டனில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ இருவர் கேங்குக்கும் இடையே ஏற்படும் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்க்கு தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்ப் பார்ப்புடன் உள்ளனர்.