சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு நோய்த்தொற்றின் இழப்பை குறைத்து காண்பிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், நோயாளிகள் அவசர ஊர்திலேயே பலியாகி விடுகிறார்கள். அரசின் ஊரடங்கு தளர்வு காரணமாக, கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை என்று பலவாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த சூழ்நிலையில், நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய்த்தொற்று பாதித்துள்ள நோயாளிகளுக்காக கூடுதலாக 120 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் 6 படுக்கையறை கொண்ட கருப்பு பூஞ்சை வார்டின் செயல்பாட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார்.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
அதாவது அதிமுகவில் இருக்கக்கூடிய முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், அத்துடன் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்களும் தமிழக முதலமைச்சர் முன்னெடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
கடந்த 7ஆம் தேதி வரையில் முதலமைச்சராக இருந்துவந்தார். அன்றைய சூழ்நிலையில், ஆக்சிஜன் இருப்பு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 230 மெட்ரிக் டன்னாக இருந்துவந்தது. தற்சமயம் ரூர்கேலா, துர்காபூர் ஜாம்ஷெட்பூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மத்திய அரசின் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜனை கேட்டு வாங்கி வருகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் தமிழ் நாட்டில் தற்சமயம் ஆக்சிஜன் இருப்பு என்பது 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்து இருக்கிறது. ஆகவே ஆக்சிஜன் குறைவு காரணமாக பலியாகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சரின் அதிரடி பதில்!
இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்!
இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்!
மக்கள் என்னவெல்லாம் செய்து தங்களின் மீது கவனம் செலுத்தும் வண்ணம் செய்கின்றனர்.
மும்பையில் விரார் கிழக்கில் கோப்சர்பாடாவில் தனது மனைவி ரூபியுடன் வசித்து வருகிறார் 35 வயதான அஜய் ஹர்பஜன் சிங்.இதில் ரூபி ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயானவர்.
அதன் பிறகு அந்த நபரை பிரிந்து அஜய் ஹர்பஜனை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையையும், பெற்று எடுத்துள்ளார்.இந்நிலையில் அஜய் ஹர்பஜன் திடீரென ரூபியின் உறவுக்கார பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சில மாதங்களுக்கு முன் சென்று விட்டார்.
அதனை தொடர்ந்து ரூபி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அதன் பேரில் அவர் மீண்டும் ரூபியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.மேலும் இவருக்கும் ரூபிக்கும் நாளுக்கு நாள் வாக்கு வாதங்கள், தகராறுகள் அதிகரித்து உள்ளது.
அதன் காரணமாக தனது மனைவி ரூபியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என யோசித்துள்ளார்.ஆனால் எப்படி என தெரியாததால் யூ-டூபின் உதவியை நாடி உள்ளார் கணவன்.
பின் அதன்படி மனைவியை கழுத்தை நெரித்து கொலையும் செய்து விட்டார்.
கடந்த செவ்வாய் கிழமை இரவு ரூபியின் தங்கை அக்காவை தேடி வந்த போது ரூபி உயிர் இழந்து உள்ளதை பார்த்து அதிர்ந்த அவர், போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் அஜய் ஹர்பஜனை கைது செய்து விசாரித்த போது அவர் எப்படி கொலை செய்தார் என்பதை விவரித்தார்.கொலை செய்ததை ஒத்துக் கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் போலீசாரை வியக்க வைத்துள்ளது.
நோய் தொற்றால் காலமான பிரபல நடிகர்! பெரும் சோகத்தில் திரையுலகம்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த நோய்த்தொற்று பரவலின் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் பீதியில் தான் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு அதிவேகமாக பரவும் நோய் தொற்று காரணமாக, முன்கள பணியாளர்களும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரும் உயிரிழந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நடிகர் வெங்கட் சுபா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார்.
நடிகரும் திரைத்துறை விமர்சகருமான வெங்கட் சுபா நோய்த்தொற்று காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்திருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சுபா டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வந்தார். தயாரிப்பாளராக இருந்து வந்த இவர், மொழி, கண்ட நால் முதல், அழகிய தீயே, உள்ளிட்ட திரைப்படங்களை தயார் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை ஆய்வு செய்யும் முதலமைச்சர்! ஸ்டாலின் நோய்தொற்று குறையுமா!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நேற்று ஒரே தினத்தில் 31 ஆயிரத்து 79 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 486 ஆக இருக்கிறது. இந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 255 பேர் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து அதைத்தொடர்ந்து மொத்த நலம் பெற்றோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 ஆக அதிகரித்திருக்கிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 3937 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. விருதுநகரில் 118 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல திருச்சியில் 1787 பேருக்கும் திருப்பூரில் 1823 பேருக்கும் மதுரையில் 1140 நபர்களுக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல ஈரோடு பகுதியில் 1731 பேருக்கும், செங்கல்பட்டில் 1329 பேருக்கும், கன்னியாகுமரியில் 1007 பேருக்கும், இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைய தொடங்கினாலும் பல மாவட்டங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், கோயமுத்தூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதோடு திருப்பூர் ஈரோடு கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நாளை முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகஅரசு பலகட்ட தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தினசரி பாதிப்பானது 33 ஆயிரத்திற்கு மேல் சென்றுகொண்டிருக்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரு 31-ஆம் வரையில் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
எதிர்வரும் 31ஆம் தேதியுடன் இந்த முழு ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் நலனை கருத்தில் வைத்து தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பொதுமக்கள் அவசியம் எதுவும் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும், தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், கடந்த ஐந்து தினங்களாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று முன்தினம் 3 லட்சத்து ௨௩,915 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சென்ற வாரங்களில் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் இருந்தது இந்த நிலையில், தற்சமயம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆகவே எல்லோரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதில் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3.6 லட்சம் பேர் இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிர்ச்சியளிக்கும் பெட்ரோல் விலை!
இந்தியாவைப் பொருத்த வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்படாமல் இருந்தது இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தி வருகின்றன. இந்த எண்ணெய் நிறுவனங்கள்.
இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 55 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 65 காசுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
ஆளுங்கட்சியை எச்சரித்த முக்கிய தலைவர்! அதிர்ச்சியில் திமுக!
சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் படித்துவரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரு அர்த்தத்தில் சைகை மூலமாக ஆபாச பேச்சுக்களின் மூலம் பேசுவது , காணொளிகள் மூலம் தொடர்பு கொள்வது, இணையத்தில் அரைகுறை ஆடையுடன் தோன்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில், அவருடைய நடவடிக்கையின் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.அதன்பின்னர் காவல்துறை அதிகாரிகள் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அவரிடம் தொடர்ச்சியான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் பத்ம சேஷாத்ரி தொடர்பான விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தற்சமயம் களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சேஷாத்திரி பள்ளி விஷயத்தில் நியாயமான விசாரணை தேவைப்படுகிறது என்றும், உள்நோக்கத்துடன் அரசு செயல்படுவது தெரியவருமேயானால் தமிழக அரசை கலைப்பது தவிர வேறு வழி இல்லை என்று சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த ஆசிரியர்கள், அர்ச்சகர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற செயல்பாடுகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சனை தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பி அறிக்கை தயாரித்துக் கொடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் சுப்பிரமணிய சுவாமி திமுகவின் ஆட்சியை கலைக்க நேரிடும் என்று சொன்னது வெறும் மிரட்டல் ஆகவேதான் பார்க்கப்படுகிறது அதற்கான முகாந்திரம் எள்ளளவும் இல்லை என்பதுதான் உண்மை.
திரும்பவும் அதையேவா? பேரதிர்ச்சியில் மக்கள்! இப்படியும் ஒரு அவலம்!
திரும்பவும் அதையேவா? பேரதிர்ச்சியில் மக்கள்! இப்படியும் ஒரு அவலம்!
கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதிலும் மாபெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.அரசுகள் பல திட்டங்களை முன் வைத்தும், செயல்படுத்தியும் வருகிறது.
தற்போதுவரை கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் அனைவரும் இரண்டு மாஸ்க் பயன்படுத்தவும், வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
அதே நேரத்தில் சிலர் பொறுப்பில்லாமல் தூக்கி எறியும் மாஸ்க்கினால் பலருக்கு நோய் தொற்றும் அபாய அவலங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், பயன்படுத்திய மாஸ்க், கையுறைகள், மற்றும் பி.பி.இ. கிட் போன்றவற்றை கழுவி மீண்டும் விற்பதாக கூறிய வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில், சட்னா மாவட்டத்தில், உள்ள பர்கேடா கிராமத்தில் சிலர் உபயோகித்து குப்பையில் எறியும் பொருட்களை மீண்டும் விற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்மாவட்ட ஆட்சியர், இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும், உபயோகப்படுத்திய பொருட்களை மக்கள் கைகளில் கிடைக்காத வண்ணம், பொது வெளியில் கொட்டாமல் தடுக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! நிம்மதியில் கோயமுத்தூர் மக்கள்!
கோயம்புத்தூர் அரசு காவல்துறையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அது தற்சமயம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், தெரிவிக்கிறார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவல் மிகவும் தீவிரமாக இருந்து வருவதால் ஒரு நாளைய நோய்த்தொற்று பாதிப்பில் மாநில அளவில் கோயம்புத்தூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. நோய்களுக்கு ஆளானவர்கள் அதிக அளவு சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருக்கின்ற ஆக்சிஜன் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியிருக்கிறது.
இதன் காரணமாக, தற்சமயம் சிகிச்சைக்கு அந்த மருத்துவமனைகளுக்கு வருகை தருவோர் படுக்கை காலியாகும் வரையில் ஆக்சிஜன் பேருந்துகளில் அல்லது அவசர ஊர்தி கைகளிலும் காத்திருக்க வேண்டிய நிலையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட நோய்த் தொற்று சிகிச்சை மையம் நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை காத்திருந்த 20 க்கும் அதிகமான நோயாளிகள் அரசுக் கல்லூரி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதிய மையம் திறக்கப்பட்டதன் காரணமாக, கோயமுத்தூர் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
முருங்கை இருக்கா?? மாத்திரையை தேவை இல்லை! பன்மடங்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்!!
கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் பொழுதுதான் உள்ளே வரும் வைரஸை எதிர்த்துப் போராடி கொல்கிறது. முருங்கைக் கீரைக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக்கும் தன்மை இயற்கையிலேயே உள்ளது. முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து நார்ச்சத்து இதுபோன்று ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் முருங்கைக்கீரை இருந்தால் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள். எப்பேர்ப்பட்ட சளிஇருமல் ஆக இருந்தாலும் விரட்டிவிடும்.
தேவையான பொருட்கள்:
1. ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை.
2. மிளகு 15
3. மஞ்சள் கால் டீஸ்பூன்
4. உப்பு தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் பாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
3. பிறகு ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை போட்டுக் கொள்ளவும். முருங்கைக் கீரையுடன் முருங்கைக்கீரை காம்புகளை சேர்ப்பதனால், அதில் உள்ள இரும்புச் சத்துக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். அதனால் முருங்கைக்கீரை காம்புகளையும் சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளலாம்.
4. பிறகு மிளகை எடுத்து உரலில் இடித்து கீரையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
5. கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.
6. மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
7. ஒரு டம்ளர் தண்ணீர் முக்கால் டம்ளர் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடவும்.
8. பின் இதனை வடிகட்டிக் டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.
9. தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்.
இதனை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம். டீ, காபிக்கு பதிலாக இதனை குடிக்கலாம்.
அப்படி நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது நெஞ்சு சளி, இருமல், உடல் சோர்வு, காய்ச்சல் ஆகியவற்றை உடனடியாக நீக்கும் தன்மை கொண்டது.
முருங்கைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் தன்மை கொண்டது.