Tuesday, July 22, 2025
Home Blog Page 4584

உடம்பில் ரத்தம் இல்லையா?? பாலுடன் இத சேர்த்து குடிங்க! பல பிரச்சனை தீரும்ங்க!!

0

இந்த காலகட்டத்தில் நாம் எவ்வளவு உணவுகள் எடுத்துக் கொண்டால் சத்தான உணவுகள் உடலில் ரத்தத்தை ஊறவைக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நமக்கு கேடு விளைவிக்குமே தவிர நன்மை பயக்காது. சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தான் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழம் என்றால் பேரிச்சம் பழம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. பேரீச்சம் பழத்தில் தாமிரம், பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

 

பாலுடன் பேரிச்சம் பழத்தை கலந்து கொடுத்து வந்தால் என்ன நன்மைகள் உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம்.

 

செய்முறை:

 

1. முதலில் இரண்டு பேரீட்சை பழங்களை எடுத்து கொட்டையை நீக்கிக் கொள்ளுங்கள்.

2. நன்கு சூடாக இருக்கும் பாலில் 2 பேரிச்சை பழங்களைப் போடவும்.

3. அந்த சூடான பாலிலே பேரீச்ச பழம் வேக வேண்டும்.

4. சுவைக்காக தேன் சேர்க்கலாம் இல்லை எனில் பேரிச்சபழம் சுவையை போதும் என்றால் விட்டுவிடலாம்.

5. நன்கு ஊறிய பின் கலந்து குடிக்கலாம்.

 

பலன்கள்:

 

1. உறங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து ஆணும் பெண்ணும் குடித்து வரும் பொழுது உடலில் ரத்தம் ஊறும். ரத்த சோகை மற்றும் சோம்பல் உள்ளவர்கள் இதை தினமும் குடிக்க வேண்டும்.

2. பாலில் பேரிச்சம் பழத்தை தினமும் கலந்து குடிப்பதனால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை நன்றாக ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

3. ரத்தசோகை மாதவிலக்கு மற்றும் மாதவிடாய் ஏற்படும் பொழுது அதிக ரத்தப்போக்கு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பேரிச்சபழம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

4. இதனை குடிப்பதனால் எலும்புகள் வலுவாகும். சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி அடையும்.

5. ஆண் பெண் இருவருக்கும் உள்ள மலட்டுத்தன்மை நீங்கும்.

6. சளி இருமல் தொல்லை உள்ளவர்களும் இந்த பாலை குடிக்கலாம்.

7. மலச்சிக்கல் சரியாகும்.

 

இவ்வாறு அத்தனை நன்மைகளை உள்ளடக்கிய பேரிச்சபழம் மற்றும் பால் இவை இரண்டும் உடலுக்கு ஏராளமான பலன்களை அள்ளித் தருகின்றன. அதனால் தினமும் இரவு படுக்கபோகும் முன் இதனை குடித்து வாருங்கள்.

 

 

வேலைவாய்ப்பை பதிவு செய்யவில்லையா? பதிவு செய்யாதவர்கள் புதுப்பிக்க அரசாணை வெளியீடு!

0

வேலைவாய்ப்பினை பதிவு செய்யாதவர்கள், 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 

2017, 2018, 2019 (1.1.2017 முதல் 31.12.2019 வரை) ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்தல் சிறப்பு சலுகையை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

 

நிபந்தனைகள் பின்வருமாறு:

 

1. சலுகை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்பட்டு நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

2. இச்சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.

3. மூன்று மாதங்களுக்குப் பின் வரப்படும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

4. 1.1.2017 இந்த ஆண்டுக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்கள் புதுப்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

இந்த அரசாணையை பத்திரிகைகளில் வெளியிடப்படவேண்டும் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டும் என்று அரசு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.

 

இதனால் 2017,2018, 2019 புதுப்பிக்க தவறியவர்கள் 3 மாதங்களுக்குள் ஆன்லைனில் https://tnvelaivaaippu.gov.in/Empower/ இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

இன்று ஆசைகள் நிறைவேறும் நாள்! இன்றைய ராசி பலன்கள்

0

இன்று ஆசைகள் நிறைவேறும் நாள்! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     இன்று உங்களது ஆசைகள் எளிதில் நிறைவேறும்.நேர்மறை எண்ணங்கள் மாறும்.பணியில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.வீட்டில் அமைதி நிலவும்.சிறந்த ஆரோக்யத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி:

     இன்று உங்களுக்கு பொறுமை அவசியம்.பணிகள் சிறிது கடுமையாக இருக்கும்.அது உங்களுக்கு கவலை அளிக்கும்.உறவுகளுடன் அனுசரித்து போகவும்.ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மிதுன ராசி:

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் இருக்கும்.பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

கடக ராசி:

     இன்று உங்களுக்கு எதிர்பாராத நாளாக இருக்கும்.கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.விவாதங்கள் ஏற்படலாம்.நிதி ஏற்றத்தாழ்வு இருக்கும்.பண விசயத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி:

     இன்று சில மாற்றங்கள் நிகழும்.பயணங்கள் ஏற்படும்.உறவில் அமைதி காக்கவும்,அதிக செலவுகள் காணப்படும் நாளாக இருக்கும்.ஆரோக்யத்தில் கவனம் தேவை.

கன்னி ராசி:

     இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.பணியில் வெற்றி காண்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.நிதி வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசி:

     வீடு வாங்க திட்டமிருந்தால் அது பலன் தரும்.நீங்கள் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.வளர்ச்சிகள் சிறப்பாக இருக்கும்.உங்கள் நண்பர்களின் தொடர்பு இனிமையாக இருக்கும்.சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி:

     இன்று பொறுப்புகள் அதிகமான நாளாக இருக்கும்.பணிகளில் தவறு ஏற்படலாம்.கவனமாக இருக்கவும்.சேமிப்பிற்கான வாய்ப்பு குறையும்.தூக்கமின்மை ஏற்படும்.

தனுசு ராசி:

     ஆன்மீக இசை கேட்பதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்.பணியில் கவனமாக செயல்படவும்.உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

மகர ராசி:

     இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள்.பணிகளை கவனமாக செய்யவும்.வேலையின் காரணமாக பயணம் கேர்கொள்ள நேரலாம்.பண விசயங்களில் கவனம் தேவை.

கும்ப ராசி:

     இன்று உங்களுக்கு உற்சாகமான நாள்.இனிமையான சூழ்நிலையை ஏற்படுத்தும் நாள்.கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.உறவினர்களின் வருகை உற்சாகம் தரும்.பண வளர்ச்சி சிறப்பாக அமையும்.

மீன ராசி:

     இன்று நீங்கள் பலனடைய மிகவும் முயற்சி செய்ய வேண்டும்.இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது.துணையுடன் உற்சாகமாக இருப்பீர்கள்.பணத்தை பார்த்து செலவிடவும்.

இனி கொரோனா பரிசோதனை இந்த மாதிரி பண்ணலாம்!! 3 மணி நேரத்தில் ரிசல்ட்! நாக்பூர் விஞ்ஞானிகள்

0

உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் கோரோணா பரிசோதனையை மேற்கொண்டு நோயை கண்டறியலாம் என நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

 

கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இந்தியா பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் மிக எளிமையான மற்றும் புதுமையான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலிங் நாக்பூர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.

 

வெறும் உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து அதை ஆர்டி – பிசிஆர் சோதனையை செய்து விரைவான முறையில் மிகவும் எளிமையாக நோயை கண்டறிய முடியும் என கணித்துள்ளனர்.

 

வெறும் 3 மணி நேரத்தில் சோதனையின் முடிவுகளை கண்டறியலாம். இதனால் கிராம மற்றும் பழங்குடியினருக்கு இந்த முறை எளிமையாக இருக்கும் என கூறுகின்றனர்.

 

இது பற்றி சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி, டாக்டர் கிருஷ்ணா கையர்னர்யிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது:

 

சளி பரிசோதனை முறைக்கு அதிக நேரம் எடுக்கிறது. மேலும், மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை மக்களிடம் இருந்து சேகரிக்க வேண்டியுள்ளதால், இது மக்களுக்கு அசவுகரியமான சூழலை உருவாக்குகிறத. மேலும், இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது. வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது மற்றும் முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!

0

தெலுங்கு திரைப்பட உலகில் மாபெரும் நடிகராக போற்றப்பட்ட மற்றும் ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்த மறைந்த என்.டி ராமராவுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரி மத்திய அரசுக்கு நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்து உள்ளார்.

 

என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் போல ஆந்திராவில் மாபெரும் மக்கள் மனதில் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

 

எம்ஜிஆர் போலவே அவரது பாணியை பின்பற்றி ஆந்திராவில் தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கி ஆட்சியை பிடித்தார். 1982 – இல் கட்சியை துவங்கி 1983 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தார். அந்த ஆண்டு முதல் முதலாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆனார்.

 

மூன்று முறை முதல்வராக இருந்தார். பின் 1996 ஆம் ஆண்டு மறைந்தார். இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கி இருக்கும் அவருக்கு விருது வழங்கி பெருமைப்படுத்த வேண்டும்.

 

இசைக்கலைஞர் பூபேன் ஹசரிகாவிற்கு மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது போல, என்.டி,ராமாராவுக்கு கொடுக்க வேண்டும். அவருடைய நூறாவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் அந்த உயரிய விருது பாரத ரத்னா விருது வழங்கி அவரை கவுரவிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்படும் விருதானது தெலுங்கு மக்களுக்கான கவுரவமாகவும் இருக்கும்” என நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.

 

 

உங்க புகைப்படங்களை பத்திரமா சேமிச்சு வைங்க!! இனி இந்த செயலிக்கு கட்டணம்!

0

நாம் அனைவரும் பயன்படுத்தும் செயல் என்பது கூகுள் போட்டோஸ். அதில் ஏகப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வரம்பற்ற அளவில் சேமித்து கொள்ளலாம். ஆனால் இதற்கு மேல் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

கூகுள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற சேவையானது முடிய போகிறது. இந்த மாதத்திற்கு பின் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உயர்தரமான புகைப்படங்கள் 15gb க்குள் இருந்தால் கட்டணம் எதுவும் இல்லை. அதற்கு மேல் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும்.

 

ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து 15 ஜிபி – க்கு மட்டுமே போட்டோக்களை சேமித்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் சென்றால் கூகுள் ஒன் என்ற சந்தா இணைப்பில் இணைய வேண்டும். கூகுள் ஒன் அடிப்படை சந்தா 100 ஜிபி கொண்டிருக்கும்.

இதற்கு மாதம் ரூ 130 லிருந்து ரூ.1300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அதன் பின் அதிகமாக வேண்டுமெனில் 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதற்கு மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும். 2டிபிக்கு மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 கட்டணம். 10டிபிக்கு, மாதத்திற்கு ரூ.3,250 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நீங்கள் கூகுள் பிக்சல்(Pixel) பயனாளர்கள் கூகுள் போட்டோஸ் கட்டணம் இல்லை. வரம்பற்ற புகைப்படங்களை சேமித்துக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்று கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்வை உள்ளன. இதற்கும் கட்டணம் இருக்கலாம். ஆனால் கூகுள் விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கஷ்டப்படும் 3600 நடன கலைஞர்கள்! உதவி கரம் நீட்டிய நடிகர்!

0

கஷ்டப்படும் 3600 நடன கலைஞர்கள்! உதவி கரம் நீட்டிய நடிகர்!

கொரோனாவின் இரண்டாம் அலை அனைவரது வாழ்விலும் மிகப்பெரிய துயரமாக இருந்து வருகிறது.பல பேரதிர்ச்சி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது.

சிலரது வாழ்வில் கொரோனா வாழ்வாதரத்தையே அழித்து வருகிறது.

அதிலும் திரையுலகமே முடங்கி உள்ளது.சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு நடிகர்,நடிகைகள் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் அக்க்ஷய் குமார் திரைப்பட நடன கலைஞர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.3600 குடும்பங்களுக்கு ஒரு மாத மளிகை பொருட்களை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு தொண்டு நிறுவனம் மூலம் அவர் இந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார்.

கடந்த வருடம் கொரோனா பரவலின் முதல் அலையின் போதே ரூ.25 கோடி கொடுத்தது நினைவில் கொள்ள வேண்டும்.தற்போது இரண்டாம் அலையின் போதும் தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன், மருந்து, உணவு ஆகியவற்றை தர கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

“மச்சான் உன் இன்ஸ்டாகிராம் பாருடா” பல நிர்வாண புகைப்படம்! செய்தது யார் தெரியுமா??

0

தன் கணவனை பழிவாங்க மனைவி தனது கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் பல பக்கங்களை ஓபன் செய்து அதில் கணவனின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அப்போது வயது மதிக்கத்தக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் இடிபோல் பல பிரச்சினைகள் வந்துள்ளது. சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகவே இருவரும் இரண்டு வருடத்திற்கு முன் பிரிந்து போயுள்ளனர். இருவரும் இரண்டு வருடமாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அந்த இளைஞரின் ஆண் நண்பர் பதறிப்போய் அந்த ஆணிற்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய அந்த இளைஞரின் நண்பர் இன்ஸ்டாகிராம் உன்னுடைய பல படங்கள் வெளியாகி உள்ளதாகவும், பல நிர்வாண புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த இளைஞர் உடனடியாக இன்ஸ்டாகிராமில் சென்று பார்த்துள்ளார். அதில் அவரது பெயரிலேயே கணக்கு துவங்கப்பட்டு அவரது பக்கத்திலேயே பல நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். செய்வதறியாது திகைத்து நின்ற அந்த இளைஞர் சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் சொல்லி புகாரை பதிவு செய்துள்ளார்.

 

விசாரணை நடத்திய பின்பு தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தெரியவந்துள்ளது. அப்படி கணக்கு உருவாக்கி நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டது வேறு யாரும் இல்லை அந்த இளைஞரின் மனைவி தான்.

 

கணவன் மனைவி பிரச்சனைக்காக கணவனை பழிவாங்க இன்ஸ்டாகிராமில் அவரது பெயரிலேயே பல பக்கத்தை ஓபன் செய்து திருமணத்திற்குப் பின் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

ஒருவரின் பழிவாங்கும் எண்ணம் எந்த அளவிற்கு போயுள்ளது என்பதை இந்த சம்பவமே உதாரணம்.

அம்மா உணவகத்தில் இலவச உணவு! ஏழை எளிய மக்கம் மகிழ்ச்சி!!

0

ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

 

அதில் கடந்த ஒருவாரமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதிமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தொடங்கிய அம்மா உணவகம் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த செலவில் மூன்று வேளையும் உணவுகளை அளித்து வந்தது.

 

இப்பொழுது முதலமைச்சராக பணி அமர்ந்திருக்கும் திரு ஸ்டாலின் அவர்கள் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்படும் என்றும் அறிவித்தார்.

 

மேலும் கோவை மாநகராட்சி மாவட்ட ஆட்சியர் நாகராஜன் சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள், கொரோனா காலத்தில் இலவசமாக அம்மா உணவகங்களில் உணவு வழங்கும் திட்டத்தை பற்றி மாநகராட்சி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

அந்த உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அந்த செலவுத்தொகையையும் திமுகவை சேர்ந்த சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் பொறுப்பேற்பதாக கூறியுள்ளனர்.

 

மேலும் திமுகவினர் ஊரடங்கு காரணமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளனர். இதற்காக நிதியையும் திரட்டி வந்தனர்.

 

கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் மொத்த எண்ணிக்கை 15. பொள்ளாச்சி வால்பாறை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 15 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

ஊரடங்கு காரணமாக இலவச உணவு அம்மா உணவகங்களில் வழங்கப்படும் என மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு திமுக சார்பில் 52.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

 

இன்று முதல் 15 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவில் விரைவில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்! யார் தெரியுமா?

0

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை முன்னிட்டு அந்த கட்சி இரு தலைவர்களுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலா காய் நகர்த்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.சட்டசபை உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்லப்படுகிறது. தலைமையும் மோதல், முன்னாள் தலைவர்களுக்கு பாதுகாப்பு இன்றி இருப்பது என பல காரணங்கள் இருந்து வருவதால் அதனை பயன்படுத்திக் கொண்டு கட்சிக்குள் மீண்டும் வருவதற்கு தன்னுடைய வேலைகளை சசிகலா தரப்பு ஆரம்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியில் இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நோய் தொற்று காரணமாக, சசிகலா வெளியே தலைகாட்டாமல் இருந்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அவர் காய்நகர்த்தல்களை சரியாக செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நான்தான் கட்சியை காப்பாற்ற இயலும் நான்தான் மோதலையும் சரிசெய்ய இயலும் என்று சசிகலா இப்போது தூது அனுப்ப தொடங்கிவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.