Tuesday, July 22, 2025
Home Blog Page 4585

260 கோடியா? எப்படி வந்தது இந்த பணம்!

0

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து டிவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ஒரு விவாதம் நடத்தி இருக்கிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி தேர்தலில் செலவு செய்த தொகை உட்பட பலவற்றைப் பற்றி உரையாடினர். ஒரு நெருங்கிய சர்க்கிள் தான் என இதில் எஸ் வி சேகர் பேசியது லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

எஸ் வி சேகர் தன்னுடைய உரையாடலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலில் வெற்றி அடைந்தவர்களுக்கு தோல்வி அடைந்தவர்களுக்கும் கட்சி முறையாக கணக்கு கொடுத்து இருக்கிறார்கள்? கொடுக்க வேண்டும் இல்லையா எனவும், அவர் கேள்வி எழுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் வரையில் செலவு செய்யலாம் அதற்கு மேல் செலவு செய்தால் அது தேர்தல் விதி மீறல் என்று சொல்லப்படும். இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாக எஸ் வி சேகர் தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

ஒரு தொகுதிக்கு 13 கோடி ரூபாய் என்று 20 தொகுதிகளுக்கும் 260 கோடி செலவு செய்ததாக பாரதிய ஜனதா கட்சி அந்த கட்சியின் பிரமுகர் எஸ் வி சேகர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறது என தெரிவித்திருக்கிறார் மார்சிஸ்ட் பிரமுகர் அருணன். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 260 கோடி கருப்புப் பணத்தை செலவிட்டு இருக்கிறதா? அதேபோல ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட தொகுதிகள் கணக்கில் வைத்தால் எத்தனை நூறு கோடிகள் செலவிடப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! காரணம் இதுதான்!

0

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! காரணம் இதுதான்!

கர்நாடகாவின் பெங்களூர் நகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ராமமூர்த்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் போலீசாருக்கு கிடைத்த வீடியோவின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையிலும் 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று, பாதிக்கப்பட்ட பெண்ணை தேடுவதற்காக அண்டை மாநிலத்திற்கு போலீசார் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்க போலீசார் முடிவு செய்துள்ளனர் என பெங்களூர் நகர காவல் ஆணையாளர் கமல்பன்ட் கூறியுள்ளார்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 6 பேரும் வங்காளதேசத்தில் இருந்த ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்.

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணை அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்து, கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து உள்ளனர்.  மூத்த அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முழு அளவில் விசாரணை நடத்தப்படுகிறது என்று கமல் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் அண்டை மாநிலத்திற்க்கு சென்ற போலீஸ் குழு வந்தால் மட்டுமே முழு விவரங்களும் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.

Indane கேஸ் குட்டி 5 கிலோ கேஸ் சிலிண்டர் தராங்க! Missed Call கொடுத்த போதும்!

0

இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நான்கு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்த இந்தியன் ஆயில் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை என்னவென்றால், இந்தியன் கேஸ் எக்ஸ்ட்ரா தேஜ், 5 கிலோ எடையுள்ள குட்டி சிலிண்டர், குட்டி சிலிண்டர் மற்றும் 14 கிலோ எடையுள்ள பெரிய சிலிண்டர் இரண்டும் , மிஸ்டு கால் மூலம் பதிவு வசதி, என நான்கு அற்புதமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

1. இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ்

 

இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ் இந்த சிலிண்டர் அதிக செயல் திறன் கொண்டதாகவும், இது வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவான சமையல் செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

2. Missed Call சேவை:

 

அடுத்தது வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் மூலம் சிலிண்டரை பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மூலம் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து செலவில்லாமல் மிஸ்டு கால் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் 8454955555 என்ற எண்ணிற்கு அழைத்து பதிவு செய்யலாம்.

 

 

3. காம்போ சிலிண்டர்:

 

அதேபோல் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப காம்போ சிலிண்டர் விலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களது தேவைக்கேற்ப 14.4 கிலோ எடை கொண்ட பெரிய சிலிண்டரும் 5 கிலோ எடை கொண்ட குட்டி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்.

 

4. குட்டி சிலிண்டர்:

 

அதிக சமையல் எரிவாயு தேவைப்படாதவர்களுக்கும் , குடும்பத்தை விட்டு தனியாக வசிக்கும் மற்ற மாணவர்கள் அல்லது வேலைக்குச் செல்வோர்களுக்கும் ஏற்றவாறு 5 கிலோ எடை கொண்ட குட்டி சிலிண்டரை தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

 

இந்த நான்கு சேவைகளும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

 

 

இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்!

0

இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள புலியூர் ஊராட்சி கசுவா கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.. இவரது சொந்த ஊர் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஆகும்.

இவருடைய மனைவி மற்றும் ஒரு மகள் ஏற்கனவே இறந்து விட்டதால் மனவேதனையுடன் இருந்த செல்வராஜ், தன்னுடைய மற்ற 2 மகள்களான ஹேமலதா (35), சாந்தி (30) ஆகியோருடன் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்து விட்டார்.

இவர்களில் ஹேமலதாவுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதால், அவர் தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற அச்சமும் அவர்களிடம் இருந்தது.

அதன் காரணமாக, அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அவர்களது வீட்டின் கதவு பூட்டியே இருந்ததாக தெரிகிறது. நேற்று செல்வராஜின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையிலான போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது மின்விசிறி மாட்டும் கொக்கியில் ஒரே கயிற்றில் செல்வராஜ், தனது மகள்கள் ஹேமலதா, சாந்தி ஆகியோருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருப்பதால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து போலீசார், அவரது வீட்டை சோதனை செய்த போது, அங்கிருந்த புத்தகத்தில் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.அதில் அவர்கள் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், நாங்கள் இறந்த பின்னர் எங்களது உடலை இந்த கிராமத்திலுள்ள சேவாலயா அறக்கட்டளையின் சார்பில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் எழுதி இருந்தனர்.

இதற்காக எங்களிடம் உள்ள ரூ.4 ஆயிரத்து 200, 6 கிராம் தங்க நகைகள் மற்றும் நாங்கள் வசித்து வந்த இந்த வீட்டுக்கான 5½ சென்ட் நிலத்தின் பத்திரம் போன்றவற்றை இந்த கடிதத்துடன் வைத்துள்ளோம். அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். எங்களது உடலை உறவினர்கள் யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் பணம், தங்க நகை, வீட்டுப்பத்திரம், கடிதம் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! குஷியில் பொதுமக்கள்!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றுப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறையவில்லை. அதன் காரணமாக, மே மாதம் 23ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த சூழலில் மே மாதம் 31-ஆம் தேதி வரையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு சார்பாக தமிழக அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதில் மிக பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் அவசர மருத்துவ காரணங்களுக்காகவும், இறப்பு காரணங்களுக்காகவும், மட்டும்தான் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பலனாக கடந்த மூன்று தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சன்னமாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் இரண்டாம் கட்ட அலையில் இருந்து ஓரிரு வாரங்களில் மீண்டு விடலாம் என்று தமிழக அரசு சார்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலன் கொடுத்து வருவதாகவும், அதோடு தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!

0

அஞ்சல் துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 29 வரை கால அவகாசம் அளித்துள்ளது.

 

மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், பீகாரில் 1940 காலிப் பணியிடங்களும் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. www.appost.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

 

வேலை  : இந்திய அஞ்சல் துறை

 

பணியிடம் : மகாராஷ்டிரா, பீகார்

 

காலிப் பணியிடங்கள்: 2842 மகாராஷ்டிரா, 1940 பீகார்.

 

சம்பளம்: ரூ. 10000- ரூ.14000 வரை

 

விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 29,2021

 

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

 

UR/OBC/EWS வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி, பெண்கள் மற்றும் PWD வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

 

விருப்புள்ளவர்கள் www. appost.in என்ற இணையதளத்துக்கு சென்று

முகப்பு பக்கத்தில் இருக்கும் Apply online link -ஐ கிளிக் செய்ய வேண்டும். பதிவு எண்ணையும், எந்த வட்டத்துக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.

 

 

 

 

 

காலியாகும் அதிமுக கூடாரம்? அதிர்ச்சியில் தலைமை!

0

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே மறுபடியும் பனிப்போர் வெடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுவது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தான் என்று சொல்லப்படுகிறது. அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு இது அதிர்ச்சியை உண்டாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியில் இருந்த சமயத்தில் சிறுபான்மையினர் பிரிவின் கருத்துக்களை அதிமுக தலைமை செவிகொடுத்து கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை எடுத்து கூறியும் கேட்கவில்லை என்று அப்போது ஒரு தகவல் வெளியானது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவின் கீழ்மட்ட புலம்பல்கள் சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிமுகவைச் சேர்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களில் ஒரு சிலர் திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் நோய்த்தொற்று பிரச்சனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. திமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது நோய் தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அதிமுகவில் இருக்கின்ற சிறுபான்மையினர் பிரிவில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் வெளியிட்ட நற்செய்தி! விவசாயிகள் மகிழ்ச்சி!

0

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் காணொளி மூலமாக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் விவசாய கடன்களை விரைவாக கொடுக்கவேண்டும் என்று கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பெரியசாமி அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகள் விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த கடன்களை விரைவாக வழங்க வேண்டும் விவசாயிகள் பயிர்க் கடன் கேட்டு மனுக்கள் கொடுத்தால் அந்த மனுக்கள் மீது தாமதமில்லாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாய பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான உரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறேன் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்து இருக்கிறார்.

அதோடு தற்போது விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருவதால் இயற்கை உரத்தை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியதாக தெரிவித்திருக்கிறார் அமைச்சர். அத்துடன் தமிழ்நாட்டில் சிறு வணிக கடன்கள் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை திரும்ப செலுத்தும் சிறுவணிகர்களுக்கு கூடுதலாக கடன் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அமைச்சர் கூறினார்.

அத்துடன் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மீது எடை குறையாமல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். கூட்டுறவு பண்டக சாலைகளில் வெளிச்சந்தை விடவும் மிக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி இருப்பதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.aa

கொரோனா தொற்று! அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!

0

நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்த நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுவர்கள் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற பணத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த விதத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை நோய்த்தொற்று நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பில் இருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்டோர் ஒரு ஒரு நாளைய ஊதியத்தை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்று தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொள்ள அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன் வழியாக நோய்த்தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்காக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரிய பெருமக்கள், உள்ளிட்டோர் அவர்களுடைய ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஊதியத்தை அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி மே மாதம் அல்லது ஜூன் 2021 ஆம் ஆண்டிற்கான ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு அனுமதி தந்து தமிழக அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய ஒருநாள் அல்லது அதற்கு மேலான தினங்களுக்கு ஊதியத்தை வழங்குவதற்கு விருப்பம் கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர் பெருமக்கள், போன்றோர் அதற்கான தங்களுடைய விருப்பத்தை சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் எழுத்துப்பூர்வமாக வழங்கவேண்டும். பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்திற்கு உரிய நிகர ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் இருக்கின்ற வழிமுறைகளை பயன்படுத்தி பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஆன உதயத்தை பெற்று வழங்கும் அலுவலர் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

0

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

திருவண்ணாமலையில் மாற்று திறனாளி பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ஒரு நபரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்.

இது குறித்து பெண்ணின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருந்தார்.அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனே கைது செய்தனர்.இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவம், சட்டம், காவல்துறை, உளவியல் சார்ந்த உதவிகள் கிடைக்கப்பெற்றதா எனவும், இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாற்று திறனாளிகள் நல ஆணைய மாநில ஆணையர், ஜானிடாம் வர்கீஸ் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருவண்ணாமலை வருவாய் கோட்டாசியர், மாவட்ட சமூக நல அலுவலர், ஆகியோரிடம் விரிவான அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் விரிவான அறிக்கையை வரும் 4 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மாற்று திறனாளிக்கான உரிமை சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.