Thursday, July 24, 2025
Home Blog Page 4590

பாஜக விற்கு ஆதரவாக இருக்கும் மூன்று சட்டசபை உறுப்பினர்கள்! கடும் அதிர்ச்சியில் திமுக!

0

புதுச்சேரி மாநிலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை உறுப்பினர்கள் ௩௦ மத்திய அரசு நியமனம் செய்தது மூன்று சட்டசபை உறுப்பினர்கள் மொத்தமாக 33 சட்டசபைஉறுப்பினர்கள் இருக்கிறார்கள். 30 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போன்ற கட்சிகளும் ஒரே கூட்டணியாக போட்டியிட்டது. அதே போல என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை அதிமுக போன்ற கட்சிகள் மற்றொரு கூட்டணியாக போட்டியிட்டது. இதில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அதே சமயம் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இருந்தாலும் அமைச்சரவை பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில். பாரதிய ஜனதா கட்சிக்கு இன்னும் இரண்டு சுயச்சை சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் 11 ஆக அதிகரித்திருக்கிறது. தற்சமயம் திருபுவனை சட்டசபை உறுப்பினர் அங்காளன் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் பலம் 12 ஆக அதிகரித்திருக்கிறது. புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 சட்டசபை உறுப்பினர்கள் பெயரை இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பலம் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இன்று இவர்களுக்கு முன்னேற்றம் தான்! இன்றைய ராசி பலன்கள்

0

இன்று இவர்களுக்கு முன்னேற்றம் தான்! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     நீங்கள் தெய்வ வழிபாடு செய்வதனால் பதட்டம் குறையும்.வேலைக்காக பயணம் மேற்கொள்ளவேண்டி இருக்கும்.நீங்கள் புத்திசாலியாக நடந்து கொள்ள வேண்டும்.தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி:

     இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.ஆன்மீக ஈடுபாடு நல்ல பலனை தரும்.உங்களின் திறமை வெளிபடுத்தும் நாளாக இருக்கும்.நிதி வளர்ச்சி காணப்படும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி:

     இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.இன்று சிறப்பான நாள் ஆகும்.திறமைகள் வெளிப்படும்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.ஊக்கதொகை மற்றும் சலுகைகள் கிடைக்கும்.இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசி:

இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாள்.பணத்தேவைஅதிகரிக்கும்.பணிகளில் கண்ணோட்டத்தை மாற்றுங்கள்.செலவுகளை தவிர்க்க முடியாது.வலி மற்றும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சிம்ம ராசி:

     உங்களின் தவறுகளை திறுத்திக் கொள்ளவேண்டும்.உங்கள் செயல்களை முறைப்படுத்துவதன் மூலம் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.இன்று செலவுகள் அதிகம் காணப்படும்.பணத்தை திட்டமிட்டு சேர்த்து

கன்னி ராசி:

முன்னேற்றமான நாளாக இருக்கும்.சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.அதிக அளவு பணம் காணப்படும்.உங்களுக்கு தைரியம் அதிகமாக காணப்படும்.

துலாம் ராசி:

     அமைதியாக இருப்பது ஆய்வு பகுதிகளில் நல்ல பலனே அமையும்.நர் பண்புகளை ஏர்படுத்தும்.பணம் குறைவாகவே இருக்கும்.முதுகு வழி ஏற்படுகின்றன.

விருச்சிக ராசி:

பலன்கள் தாமதமாக கிடைக்கும்.பணி சுமை அதிகமாக இருக்கும்.அது கவலையை குடுக்கும்.செலவுகள் அதிகரிக்கும்.ஆரோக்கியம் குறையும்.தலைவலி இருக்கும்.

தனுசு ராசி:

இன்று நாள் சுமாராக இருக்கும்.செலவு அதிகரிக்கும்.மனதில் குழப்பம் காணப்படும்.நிதிநிலைமை ஏற்ற இறக்கங்கள் உடன் இருக்கும்.உடலை வருத்த வேண்டாம்.

மகர ராசி:

மிகவும் அனுகூலமான நாள்.நம்பிக்கை அதிகரிக்கும்பணியிடத்தில் வாய்ப்புகள் உற்சாகமாக இருக்கும்.பணவரவு அதிகரிக்கும்.தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்ப ராசி:

இன்று சிறப்பான நாளாக இருக்கும்.நம்பிக்கையோடு செயலாற்றுங்கள்.பணம் சேரும்.ஆரோக்யமாக இருப்பெர்கள்.உங்களின் துணை உங்களை புரிந்து கொள்வார்.

மீன ராசி:

இன்று சற்று மந்த நிலை காணப்படும்.வேலையை திட்டமிட்டு செய்வதால் வெற்றி பெறலாம்.பணியில் தவறுகள் ஏற்படும்.மகிழ்ச்சி பாதிக்கபடும். .

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

பெண் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.மேலும் அவர்களை மிகவும் வலிமையாக வளர்க்க வேண்டும்.எது நடந்தாலும் அவர்கள் தைரியமாக வெளியில் சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி(47) வயதான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவிக்கு, 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர் இறந்து விடவே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் அவர் இவரைவிட்டு பிரிந்து சென்றதால், மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.அவர்களுக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் 9 வருடங்களுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக சென்னையில் இருக்கும் போது, ஏற்கனவே திருமணமான ஜீனத் என்ற பெண்ணுடன், இவர் தொடர்பில் இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவத்தன்று 4 வது மனைவி மற்றும் அனைத்து குழந்தைகளும் உறங்கிக் கொண்டு இருந்தனர்.அப்போது 4 வது மனைவியின் முதல் கணவரின் குழந்தையான 11 வயது பெண் குழந்தையை பாரதி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

நடந்ததை அந்த குழந்தை தன் அம்மாவிடம் கூறியதும், ஜீனத் தாமதிக்காமல் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதியை(47) கைது செய்து போக்சோ சட்டத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாத்திரை வாங்கும்போது கண்டிப்பா இதை கவனிங்க!! இல்லைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்!!

0

நாம் அனைவரும் அன்றாடம் ஏதோ ஒரு உடலில் உள்ள பிரச்சனைக்காக மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். சிலர் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து பின் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். மற்றொரு பக்கம் நேரடியாக மருந்து கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையை சொல்லி மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் எவை நல்லது? அப்படி என்று ஒரு சிலர் பார்ப்பதில்லை. அப்படி மருந்து அட்டைக்கு பின்னர் என்ன உள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. மருந்து அட்டையின் பின் உள்ள பல குறியீடுகளின் அவசியம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

​​கொரோனோவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் தொற்று நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே போல் அனைத்து விலையும் அதிகமானது.

 

 

நோய் பாதித்தவர்கள் கூட அருகில் உள்ள மருந்து கடையில் சென்று சாதாரண நோய்க்கான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். அறிகுறிகள் ஒத்துப் போய் இருந்தாலும் மருத்துவரிடம் சென்று முழுமையாக பரிசோதித்த பின்னர் தான் மாத்திரைகளை உண்ண வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்கு எந்த ஒரு கேடும் வராது.

 

அப்படி நீங்கள் வாங்கும் மாத்திரைகள் அனைத்தும் தரமானவையா? எடுத்து கொள்ளலாமா? என்று எப்போதாவது நீங்கள் பரிசோதித்து உள்ளீர்களா!! இல்லை! மருத்துவரின் ஆலோசனையை இருந்தாலும் சரி இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கும் மருந்து அட்டைகளாக இருந்தாலும் சரி மருந்து அட்டையை முதலில் பாருங்கள். அதில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.

 

 

மிக முக்கியமான இன்னொன்று உள்ளது. மருந்து அட்டைக்கு பின்னால் சிவப்பு நிற கோடு உள்ளதா? என்று பரிசோதித்துப் பாருங்கள். இப்படி சிவப்பு நிற கோடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்றி அந்த மாத்திரையை தொடாதீர்கள். இது ஆன்ட்டி பயோட்டிக் அதிகமாக உள்ளதை குறிக்கிறது. அதிகமாக உட்கொள்வதும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் மாத்திரைகளை வாங்கி உண்ணுங்கள்.

 

 

தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக சந்தேகங்களுக்கு ஆளாகிறோம், சாதாரண பிரச்சினைக்கு மனம் பதறி விடுகிறது. தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு

 

1. துணியால் கட்டப்பட்ட மாஸ்க் பாதுகாப்பானதா?

 

N-95 வகையான மாஸ்க்குகள் மருத்துவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண மக்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட பஞ்சு மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம்.

 

2. ஆவி பிடித்தல் நல்லதா?

 

மருத்துவ ரீதியாக ஆவி பிடித்தல் கொரோனாவை அளிக்கும் என்பதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. உங்களுக்கு ஆவி பிடித்தல் இதம் அளிக்கிறது என்றால் அதனை செய்யலாம். ஆனால் அதற்கு முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

3. குப்புற படுத்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்குமா?

 

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த குப்புற படுத்தல் மற்றுமொரு பக்கம் சாய்ந்து படுத்தல் ஆகியவை உதவி செய்யும். நுரையீரலுக்கு அழுத்தம் கொடுப்பதனால் ஆக்சிஜன் அளவை சீர் படுத்தும். நீண்ட நேரம் குப்புறபடுத்தல் மற்றும் ஒரு பக்கம் சாய்ந்து படுத்தல் மூலம் ஆக்சிஜன் தேவை சீராகும்.

 

4. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எத்தனை நாள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

 

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இன்னும் ஒரு முறை கூட தடுப்பூசி போடவில்லை எனில் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இல்லை ஏற்கனவே ஒரு டோஸ் போட்டு கொண்டு இருந்தால் 2 அல்லது 3 மாதங்கள் கழித்து அதே டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொள்ளும்போது, கோவேக்சினை 4 வார இடைவெளி விட்டு எடுத்து கொள்ளவும், கோவிஷீல்டை 12 வார இடைவெளி விட்டு எடுத்து கொள்ளவும். இப்படி எடுத்து கொண்டால், கொரோனாவுக்கான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகும் .

 

5. கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

 

இந்தியாவில் இன்னும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படவில்லை. கொரோனா வின் பாதிப்புகளை ஒப்பிடும்பொழுது கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டால் பாதிப்புகளின் விளைவுகள் குறைவானதாக உள்ளது என்று சோதித்து உள்ளது. ஆனால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியாவில் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

 

6. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மது அருந்தலாமா, இறைச்சி சாப்பிடலாமா?

 

தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு மதுவைத் தொடக் கூடாது. அப்படி மது அருந்தினால் கொரோனாவில் தடுப்பூசி செயல்திறனை பாதிக்கும். இதனால் பல்வேறு பக்க விளைவுகள் வரலாம். இறைச்சி சாப்பிட்டால் பக்க விளைவுகள் வரும் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. உடல் நிலையைப் பொறுத்து உண்ணலாம்.

 

7. மருத்துவ ரீதியாக, பொதுமுடக்கம் அவசியம்தானா?

 

கண்டிப்பாக அவசியம். பொது முடக்கத்தால் திடீரென்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறையும் வாய்ப்புள்ளது என்பதால் பொது முடக்கம் கண்டிப்பாக பலன் அளிக்கும்.

 

8. கொரோனா தடுப்புக்கு, ஒவ்வொரு தனிமனிதனும் என்ன செய்ய வேண்டும்?

 

முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது. அரசின் ஊரடங்கு மதித்து நடப்பது. சளி, காய்ச்சல், இருமல், வாந்தி ,உடல் வலி, பேதி ஆகியவை இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்வது.

 

ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதத்தை விட குறைவாக வந்தால் மட்டும், மருத்துவமனையில் சேரவும். தடுப்பூசி மறக்காமல் போட்டுக்கொள்வது.

 

இவ்வாறு நேர்காணலின் மூலம் மருத்துவர் மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் விளக்கினார்.

 

 

 

 

எனக்கு இரவில் தூக்கம் வரல! இப்படியும் ஒரு பள்ளியா? கிரிக்கெட் வீரர் ட்வீட்!

0

எனக்கு இரவில் தூக்கம் வரல! இப்படியும் ஒரு பள்ளியா? கிரிக்கெட் வீரர் ட்வீட்!

வரும் காலங்களில் நம் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லோருக்கும் உண்டு.ஏனென்றால் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அப்படி பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோரின் மனதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் நடந்த சம்பவமும் அப்படி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.பிள்ளைகளை எங்குதான் நம்பிக்கையுடன் அனுப்ப முடியும் என்ற கேள்விகுறி வந்துள்ளது.

சென்னையில் உள்ள பத்மா ஷேஷாத்ரி பால பவன் பள்ளியின் கணக்கியல் மற்றும் வணிகவியல் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முன்னாள் மாணவிகள் தங்களிடம் தவறாக பேசியதை பாடகி சின்மயி உட்பட பலர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் அதனை பதிவு செய்து வந்த நிலையில் விசாரனைக்கு உத்தரவிடப்பட்டு தற்பொழுது கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான அஸ்வின் தனது கண்டனத்தை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் எனக்கு உறங்க முடியாத இரவுகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. நான் அங்கு படித்த முன்னாள் மாணவன் என்பது மட்டுமில்லாமல் நான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்பதை நினைத்தால் என் மனம் பதறுகிறது. ராஜகோபாலன் என்ற பெயர் மட்டும் தான் இன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் இது போன்று பலர் ஊடுருவி இருக்கின்றனர். வரும் காலங்களில் இவை நிகழாமல் இருக்க இது போன்ற மனநிலையுடன் இருப்பவர்களை களை எடுக்க வேண்டும்.

மொத்த அமைப்புகளையும் சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை நான் அறிவேன். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து இதுபோன்ற பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். அதுவே வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நிகழாமல் தடுக்க உதவும் என்று பள்ளியின் முன்னால் மாணவரும் கிரிக்கெட் வீரருமான அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சினிமா பிரபலம்!

0

நடிகை ரித்விகா கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டு இருக்கிறார்.

நாடு முழுவதும் நோய் தொற்று தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் ௧௮ வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், திரைத்துறை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், தடுப்பூசி போட்டு கொள்வதுடன் மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள். தற்சமயம் நடிகை ரித்விகா தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் நீங்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்திருக்கிறார்.

இவர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸில் பங்கேற்று கொண்டு டைட்டில் வின்னரான பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனை!

0

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழவிச்சாமி வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களின் நலனே முக்கியமானது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் 14 நல வாரியங்களை விசாரணை 35 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியது போலவே ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், எல்லோருக்கும் சமூக கூடங்கள் அமைத்து அதன் மூலம் உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் தான் நோய்த்தொற்று இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு போர்க்கால அடிப்படையில் ஆன நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு எடுத்தால் மட்டும் தான் இந்த தொற்றை கட்டுப்படுத்த இயலும் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக அரசு அதிரடி முடிவு! அரசியல் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி!

0

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. கடைசி கட்டத்தில் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி கலவரம் உண்டானது. இந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த விவகாரம் தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதோடு இளைஞர்களின் எதிர்கால படிப்பினை உறுதி செய்யும் வகையில், அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சித்தலைவர்கள் மீது தொடுக்கபட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சிபிஐ விசாரணைக்கு மாற்ற பட்ட வழக்குகளை தவிர்த்து 38 வழக்குகளை தமிழக அரசு திரும்பபெற்றிருக்கிறது.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று உத்தரவிட்டிருக்கிறார். இதன் வழியாக நல்லகண்ணு, தினகரன், வைகோ, கீழ்ப்பாக்கத்தில் பெண் மருத்துவர் சிபிஎஸ் அனிதா ராதாகிருஷ்ணன் அழகு முத்து பாண்டியன், ராஜா உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

0

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

மக்களுக்கு எதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏதோ ஒன்றை செய்து கொண்டு இருக்கின்றனர்.சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் பெரிய முடிவை மிக சுலபமாக எடுத்து விடுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவில் கீலப்பூடி காலனியை சேர்ந்த பெரியப்பன் (55).இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.முருகைய்யன் (30) மற்றும் வேலு (25). இருவருக்கும் திருமணமான நிலையில் வேலுவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரோஜா(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு ரோஹித் (7) என்ற ஏழு வயது மகனும், இலக்கியா(5) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ரோஜாவிற்க்கும், வேலுவிற்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறினால், ரோஜா கோபித்துக்கொண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த வேலு, தன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வரலாம் என அங்கு சென்றுள்ளார்.

ஆனால், மனைவியோ வர மறுத்து விட்டதால் வேலு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.எனவே நேற்று முன்தினம் கிராமத்தின் நடுவே உள்ள காட்டுக்கு சென்று ஒரு கருவேல மரத்தில் தூக்கில் தொங்கினார்.இந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொதட்டூர் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் வேலுவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.