Sunday, July 27, 2025
Home Blog Page 51

இதை தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கனவு வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

0

மனிதர்களுக்கு கனவு வருவது பொதுவான ஒரு விஷயமாகும்.சிலது நல்ல கனவாக இருக்கலாம்.சிலது பயம் ஏற்படுத்தும் கெட்ட கனவாக இருக்கலாம்.ஆனால் எந்த கனவாக இருந்தாலும் அதற்கு என்று பலன்கள் இருக்கின்றது.உங்களுக்கு வரும் கனவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கனவில் இறந்தவர்கள் அழுவது போன்று வந்தால் அது உங்களுக்கு கெட்டது நடப்பதற்கான அறிகுறியாகும்.இந்த கனவு வந்தால் அருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்வது நல்லது.

கனவில் ஆலமரம் வந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.அதேபோல் அத்திமரம் கனவில் வந்தால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

உங்கள் கனவில் கடவுள் தோன்றினால் வாழ்வில் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம்.கனவில் மழை வந்தால் பண வரவு அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் அருவி,குளம் போன்ற நீர்நிலைகள் வந்தால் மங்களகரமான விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தம்.

கனவில் புலி வந்தால் உங்களுடைய தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் மாம்பழம் வந்தால் உங்கள் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

ஆன்மீக பயணம் மேற்கொள்வது போன்ற கனவு வந்தால் உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் தாமரை பூ வந்தால் உங்களது பிரச்சனைக்கு முடிவு கிட்டப்போகிறது என்று அர்த்தம்.புல்லாங்குழல் கனவில் வந்தால் மங்களகரமான செயல்கள் நடக்கும் என்று அர்த்தம்.

கனவில் யானை வந்தால் உங்கள் வலிமை அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.நிர்வாணமாக இருப்பது போன்ற கனவு உங்களுக்கு வந்தால் கஷ்டம்,அவமானம் வரப் போகிறது என்று அர்த்தம்.திருமணம் நடப்பது போன்ற கனவு வந்தால் வாழ்வில் அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

மதிய நேர உணவிற்கு பிறகு தூக்கம் சொக்கிகிட்டு வர காரணம் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!!

0

உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.தினமும் உணவு உட்கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.நமக்கு ஆற்றல் தரும் உணவை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அவை ஆபத்தாக மாறிவிடும்.

சிலர் மதிய நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.மதிய நேரத்தில் உணவு சாப்பிட்ட பிறகு உடல் சோர்வு,மந்த உணர்வு ஏற்படுவது பொதுவான ஒரு விஷயமாக இருந்தாலும் மதிய உறக்கத்தை அனுபவித்து வருபவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் வர காரணங்கள்:

*இரவு தூக்கமின்மை பிரச்சனை
*தைராய்டு பாதிப்பு
*இரத்த சோகை
*வயது முதுமை

மதிய உறக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்:

நாம் மதிய நேரத்தில் அதிகளவு உணவு சாப்பிட்டால் உடல் சோர்வு ஏற்படும்.இதனால் வேலை மீதான நாட்டம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

மதியம் உணவு சாப்பிட்ட பிறகு உறங்கும் பழக்கம் இருந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும்.இதனால் உடல் எடை கூடிவிடும்.

மதிய உணவு சாப்பிட்டு பிறகு உறங்கினால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.குடல் இயக்கங்கள் மோசமாகி வயிறு உப்பசம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மதிய உறக்கத்தை கட்டுப்படுத்த வழிகள்:

வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த காய்கறி,பழங்களை சாப்பிட வேண்டும்.

உடலுக்கு தேவையான தண்ணீர் பருக வேண்டும்.இரவில் நேரமாக தூங்க பழக வேண்டும்.அதேபோல் யோகா,தியானம் போன்றவற்றை செய்தால் பகல் நேரத்தில் உடல் சோர்வாகமல் இருக்கும்.

வழியில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று ஏன் சொல்றாங்கனு தெரியுமா?

0

இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் இந்தியாவில் மட்டும் மூட நம்பிக்கைகளில் மீதான நம்பகத் தன்மை குறைந்தபாடில்லை.நம் மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அனைத்திலும் சகுனம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

சுப நிகழ்வுகளுக்கு செல்லும் போது சகுனம் பார்ப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுப நிகழ்வில் கெட்ட சகுனம் ஏற்பட்டால் அதை நிறுத்திவிடவும் சிலர் தயங்க மாட்டார்கள்.எந்த ஒரு காரியத்திற்கு செல்லும் முன் பூனை குறுக்கே போனால் அது கெட்ட சகுனம் என்று செல்லும் வேலையை நிறுத்தவிடுகின்றனர்.

சிலர் பூனை குறுக்கே போனால் உடனே வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தவிட்டு தான் செல்வார்கள்.பூனை குறுக்கே சென்ற காரியம் உருப்படாது என்று சிலர் சொல்கின்றனர்.இதற்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் அறிந்தால் நிச்சயம் உங்கள் மூட நம்பிக்கை உடைந்து போகும்.

முந்திய காலத்தில் இரவில் மாட்டு வண்டி,குதிரை வண்டியில் தான் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.இரவில் குதிரை,மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் வரும் பூனை அதன் கண்களுக்கு தெரியாது.பூனைகள் கண்கள் இருட்டில் மட்டும் லைட் போட்டது போன்று தெரியும் என்பதால் மாடு,குதிரை பயந்து மிரண்டுவிடும்.பூனை மட்டுமின்றி புலி,சிறுத்தை,சிங்கம் போன்ற விலங்குகளுக்கும் இரவில் கண்கள் லைட் போட்டது போன்று மின்னும்.இதனால் எதிரில் வருவது பூனையா இல்லை புலி,சிங்கமா என்பதில் குழப்பம் ஏற்பட்டு அச்சத்தில் மிரளும்.இது நடக்காமல் இருக்க வண்டிக்காரர் சிறிது நேரம் குதிரை,மாடு ஆகியவற்றிற்கு தண்ணீர் குடித்து ஓய்வெடுக்க வைப்பார்கள்.

இந்த நிகழ்வுதான் காலப்போக்கில் பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடிக்க வேண்டும்.சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வேலையை தொடங்க வேண்டுமென்று மாறிவிட்டது.எனவே இனி பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் பார்ப்பதை தவிருங்கள்.

SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

0

ஏழை எளிய மாணவர்களின் நலனிற்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது.அதேபோல் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் வங்கி கணக்கில் உதவித் தொகை செலுத்தி வருகிறது.

மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அதிகரிக்க தமிழக அரசு தொடர்ந்து உதவித் தொகை,ப்ரீ பஸ் பாஸ் வழங்கி வருகிறது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்று சீருடை,புத்தகம் போன்றவற்றை வழங்கி வரும் தமிழக அரசு தற்பொழுது பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலததுறை மூலமாக SC மற்றும் ST மாணவர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவ மாணவியர் இந்த மாத இறுதிக்குள் அதாவது மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ,மாணவியர் http://umis.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிரப்பி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

1)வருமானச் சான்றிதழ்
2)சாதி சான்றிதழ்
3)ஆதார் அட்டை
4)வங்கி கணக்கு எண்

2024-2025 ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரசவத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் குறைய இந்த தவறுகளே காரணம்!!

0

திருமணமான புதியதில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கின்ற அன்பு பிணைப்பு குழந்தை பெற்ற பிறகு குறைந்துவிடுகிறது.குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு இடையே ஒரு ப்ரேக் ஏற்படுவது அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.

குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு புதிய பொறுப்புகள் வருகிறது.இருவரின் வாழ்க்கையும் முற்றிலுமாக மாறிவிடுகிறது.கணவன் மனைவிக்கு பொருளாதார ரீதியான தேவை அதிகரிக்கின்றது.குழந்தை பிறப்பதற்கு முன் மற்றும் குழந்தை பிறந்த பிறகு என்று தம்பதிகள் வேறுபட்ட வாழ்க்கையை வாழத் தொடங்குகின்றனர்.

குழந்தை பெற்ற பின்னர் கணவன்,மனைவி தங்கள் பொறுப்பை உணர்ந்து வாழ்க்கையை நகர்த்தினால் உறவில் எந்தஒரு இடைவெளியும் ஏற்படாது.பிரசவத்திற்கு பிறகு பெண்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

அதேபோல் ஆண்கள் பொருளாதார ரீதியான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.ஆண் மற்றும் பெண் மனநிலை வேறுபட்டு இருப்பதால் சண்டை,மனக்கசப்பு போன்ற விஷயங்கள் ஏற்படும்.குழந்தை பெற்ற பிறகு கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்க நிச்சயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பெண் மட்டும்தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் இருந்து ஆண்கள் விடுபட வேண்டும்.

பிரசவித்த பெண்களுக்கு நிச்சயம் எமோஷனல் சப்போர்ட் தேவைப்படுகிறது.குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர்.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம்,மனச் சோர்வு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.பெண்களின் தூக்கச் சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.இதன் காரணமாக உடல் பருமன்,மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

மனைவிக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கணவன் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.இருவரும் தங்கள் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும்.அதேபோல் பொருளாதார பிரச்சனைக்கு இருவரும் சேர்ந்து சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.

இந்த ஒரு ஆவணம் இருந்தால்.. புதிய கேஸ் இணைப்பை எளிதில் பெறலாம்!!

0

தற்பொழுது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புதிய இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.ஏழ்மையில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

இலவச கேஸ் இணைப்பு பெற தகுதி:

1)விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2)விண்ணப்பத்தார் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

3)இதுவரை கேஸ் இணைப்பு பெறாதவராக இருக்க வேண்டும்.

4)மிகவும் பிற்படுத்தப்படுத்த வகுப்பை சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும்.

5)வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரதான் மந்திரி உஜ்வலா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

**ஆதார் கார்டு
**ரேஷன் கார்டு
**வங்கி கணக்கு எண்
**இருப்பிடச் சான்றிதழ்

பிரதான் மந்திரி உஜ்வலா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

http://www.pmuy.gov.in/ujjwala2.html என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கேஸ் இணைப்பு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து Register Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு பெயர்,பயன்பாட்டில் இருக்கின்ற தொலைபேசி எண்,மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்சா கோடு ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும்.

பிறகு விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு தேவைப்படும் ஆவணங்களை இணைத்து தேர்வு செய்த கேஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு இலவச கேஸ் அடுப்பு மற்றும் ஒரு சிலிண்டர் வழங்கப்படும்.

தினமும் பால் குடிக்கும் குழந்தைகளின் உயரம் அதிகரிக்குமா? உண்மை என்ன?

0

குழந்தைகளின் எடை மற்றும் உயரம் வயதிற்கேற்றபடி இருக்க வேண்டும்.சிலர் உயரமாக வளர்வார்கள்.சிலர் உயரம் குறைவாக இருப்பவர்கள்.குழந்தைகளின் உயரம் என்பது அவர்களின் மரபணு சார்ந்த ஒன்றாக இருக்கிறது.

குழந்தைகளின் முன்னோர்கள் உயரமாக இருந்தால் அவர்களும் உயரமாக வளர்வார்கள்.ஒருவேளை குழந்தையின் முன்னோர் உயரம் குறைவாக இருந்திருந்தால் குழந்தையும் உயரம் குறைவாக வளரத் தொடங்குவார்கள்.

குழந்தைகள் உடலில் இருக்கின்ற ஹார்மோன்களில் பிரச்சனை இருந்தால் அவர்களின் உயரத்தில் பாதிப்பு ஏற்படும்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் வளர்ச்சி தடைபடும்.

குழந்தைகள் உடலில் சுரக்கும் பிட்யூட்டரியின் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கச் செய்துவிடும்.இதனால் குழந்தைகள் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.வளரும் பிள்ளைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் அவசியம் பருக வேண்டும்.குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியம் மேம்பட,எலும்புகள் வளர்ச்சி அடைய கால்சியம் நிறைந்த பால் பருகுவது அவசியமாகிறது.

குழந்தைகளின் எலும்புகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்கும்.பால் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.எனவே குழந்தைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் பால் கொடுப்பதை பெற்றோர் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

குழந்தைகளின் உயரத்தை ஊக்குவிக்கும் பால் குடிக்க கொடுக்கலாம்.இது தவிர புரதம் நிறைந்த முட்டை,சோயா பால்,மீன்,இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.ஊற்றவைத்த சுண்டல்,வேர்க்கடலை,உளுந்து பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உயரம் அதிகரிக்கும்.

மறைக்கப்பட்ட ராஜதந்திரமா? 2008 பெய்ஜிங் காந்தி-பூட்டோ சந்திப்பை காங்கிரஸ் விளக்க வேண்டும்!

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் சீனாவின் உலகளாவிய அறிமுக விழாவாகக் கருதப்பட்டது – விளையாட்டு, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச பங்கேற்பின் ஒரு பிரமாண்டமான காட்சிப்படுத்தல் என்றே கருதப்பட்டது. ஆனால் அரங்கத்தின் வெளிச்சத்திற்கு அப்பால், தெற்காசியாவின் மிக முக்கியமான இரண்டு அரசியல் குடும்பங்களுக்கு இடையே அமைதியான மற்றும் அடையாள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடந்தது.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது, இந்திய தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருடன் பெய்ஜிங்கில் இருந்தனர். அதே நேரத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அவரது சகோதரிகள் பக்தவார் மற்றும் ஆசிஃபா மற்றும் ஜஹாங்கிர் பதர் மற்றும் ரெஹ்மான் மாலிக் உள்ளிட்ட மூத்த பிபிபி தலைவர்களும் சீன தலைநகரில் கலந்து கொண்டனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அழைப்பின் பேரில், ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இரு பிரதிநிதிகளும் பெய்ஜிங்கில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று ரீதியாக அந்தந்த நாடுகளில் செல்வாக்கு மிக்க இரு குடும்பங்களும் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த ஒரு சுருக்கமான சந்திப்பை நடத்தினர். அந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் தாயார் பெனாசிர் பூட்டோவின் படுகொலை குறித்து சோனியா காந்தி பூட்டோ உடன்பிறப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பொது அறிக்கைகளில், ரெஹ்மான் மாலிக் இந்த சந்திப்பை அன்பானதாகவும் தனிப்பட்டதாகவும் விவரித்தார், எந்த அரசியல் விவாதங்களும் நடத்தப்படவில்லை என்பதை வலியுறுத்தினார். பகிரப்பட்ட துக்கம், குடும்ப நினைவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் சைகை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) CPC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாகவும், அரசியல் மற்றும் சர்வதேச விஷயங்களில் ஆலோசனைகளை அனுமதிப்பதாகவும் பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் ஒருபோதும் முழுமையாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், அது அரசியல் ஆர்வத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி CPC உடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் முறையான விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்போது, ​​18 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த நிலையில், இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிவந்துள்ளது, இது மீண்டும் கவனத்தையும் விவாதத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படம் – கடந்த வாரத்தில் பரவலாகப் பரப்பப்பட்டது – இது போன்ற முறைசாரா ஈடுபாடுகளின் தன்மை மற்றும் தாக்கங்கள் பற்றிய புதிய கேள்விகளைத் தூண்டியுள்ளது, குறிப்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உணர்ச்சிகரமான இயக்கவியலைக் கருத்தில் கொண்டு விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்தச் சந்திப்பு ஒரு அதிகாரப்பூர்வ ராஜதந்திர நிகழ்வாக இல்லாவிட்டாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீன மண்ணில் நடைபெற்றதும், பிராந்திய செல்வாக்கின் நீண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு அரசியல் வம்சங்களின் வாரிசுகள் இதில் ஈடுபட்டதும் பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

சில விமர்சகர்கள் மற்றும் இணைய பயனர்கள், குறிப்பாக சர்வதேச சூழலில் இந்தியா-பாகிஸ்தான் பிளவின் இரு தரப்பிலிருந்தும் உயர் மட்ட அரசியல் பிரமுகர்கள் இதில் பங்கேற்றதால், சந்திப்பின் நோக்கம் மற்றும் சூழலை தெளிவுபடுத்துமாறு காங்கிரஸ் கட்சியைக் கேட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் புதுப்பிக்கப்பட்ட புழக்கம் குறித்து காங்கிரஸிடமிருந்து இன்னும் முறையான பதில் இல்லை. இந்தப் பதிவு தொடர்ந்து வைரலாகி வருவதால், ஒரு காலத்தில் வெறும் இரங்கல் கூட்டம் என்று விவரிக்கப்பட்டது இப்போது பொதுமக்களின் கூர்மையான ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. திரைக்குப் பின்னால் உள்ள சாத்தியமான அரசியல் சாயங்கள் மற்றும் ரகசிய தொடர்புகள் மீது கவனம் திரும்பியுள்ளது. இன்றைய சூழலில் குறிப்பிடத்தக்க அரசியல் மதிப்பைக் கொண்ட இந்த குறியீட்டு சைகைகளின் தன்மையை காங்கிரஸ் தெளிவாக விளக்க வேண்டும்.

நாடு முழுவதும் நக்சல் அச்சுறுத்தலை நசுக்கும் மோடி அரசின் இரும்புக்கை அணுகுமுறை 

இந்தியாவின் நக்சலிசதுக்கு எதிரான போர் என்பது புதியது அல்ல. பல ஆண்டுகளாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மாவோவாத தீவிரவாதத்தின் நிழலில் இருந்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களாட்சிக்கான பிரதிநிதிகள், கொடூர தாக்குதல்கள் மற்றும் கொலைகளுக்குப் பலியாகி உள்ளனர். முந்தைய அரசு தலைமையிலான அனைத்து நிர்வாகங்களும் இடதுசாரி தீவிரவாதத்தை (Left Wing Extremism – LWE) ஒரு தீவிர உள்நாட்டு அச்சுறுத்தலாக ஏற்றுக்கொண்டாலும், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசும், பாஜக தலைமையிலான NDA அரசும் (மோடி தலைமையில்) எடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் முடிவுகள் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் தெளிவாக தெரிகிறது.

மோடி அரசின் இரும்புக்கை அணுகுமுறை

2004 முதல் 2014 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசு நக்சல் பிரச்சனையின் பரவலான தன்மையை உணர்ந்தது. அதனால் ஒருங்கிணைந்த செயல்திட்டம் (Integrated Action Plan – IAP) மற்றும் பெரிதும் பிரசாரம் செய்யப்பட்ட ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ போன்றவை தொடங்கப்பட்டன. இது பாதுகாப்பையும் வளர்ச்சியையும் இணைக்கும் முயற்சியாக இருந்தாலும், நடைமுறையில் பல இடங்களில் தோல்வியடைந்தது. UPA அரசு பெரும்பாலும் மென்மையான அணுகுமுறையை, சமூகவியல் திட்டங்களை முன்வைத்து வன்முறையைத் தவிர்க்க முயன்றது. ஆனால் அந்த அணுகுமுறை போதுமான சிக்கனமான உளவுத்தகவல்கள் இல்லாமல் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது. வன்முறையை கைவிடாத தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நக்சல்கள் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பரந்த பகுதிகளில் ஆட்சியைக் கடைபிடித்து, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கான நிலை தொடர்ந்தது.

2014க்குப் பிறகு நிலைமையின் மாற்றம்

2014 இல் மோடி தலைமையிலான NDA அரசு பதவியேற்றதுடன், தெளிவான திட்டம், உறுதியான நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உளவுத்தகவல் அடிப்படையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், ‘ஆபரேஷன் பிரஹார்’, ‘ஆபரேஷன் ஆக்டோபஸ்’ போன்ற பல பரந்த அளவிலான பறக்கும் படையணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை செயற்கைக்கோள் கண்காணிப்பு, ட்ரோன் ரீகான், தரைமட்ட மனித உளவுத்தகவல்கள் மூலம் நக்சல் தலங்களை அழிக்க உதவின.

வளர்ச்சி = பாதுகாப்பு + இணைப்பு

துப்பாக்கிச் செயல்களில் மட்டுமின்றி, NDA அரசு வளர்ச்சியையும் முக்கியமாகக் கொண்டது. பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா (PMGSY) மற்றும் பாரத்மாலா பரியோஜனா திட்டங்கள் மூலமாக, நக்சல் ஆதிக்கம் கொண்ட பழங்குடி பகுதிகள் நாட்டின் முக்கிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டன. பள்ளிகள், சந்தைகள் மட்டுமல்ல, நிர்வாகம், பொது சேவைகள் ஆகியவை இப்பகுதிகளுக்குச் சென்றன. பயிற்சி, பணதொகை ஊக்கங்கள் போன்ற வசதிகள் மூலம் நூற்றுக்கணக்கான முன்னாள் நக்சல்கள் ஒழுக்கமான வாழ்க்கையைத் தழுவினர்.

விளைவுகள்: வன்முறை குறைந்தது, நிர்வாகம் உயர்ந்தது

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, நக்சல் சம்பந்தப்பட்ட வன்முறை 77% குறைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்புகள் 85% வரை குறைந்துள்ளன. இது வெறும் எண்கள் அல்ல — உயிர்கள் காப்பாற்றப்பட்டன, குடும்பங்கள் அழிவிலிருந்து தப்பின.

ஆபரேஷன் காகர்: மீண்டும் எழும் இந்தியாவின் அடையாளம்

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் உள்ள காரேகுட்டாலு காட்டுப் பகுதியில் நடக்கும் ‘ஆபரேஷன் காகர்’ பாஜக அரசின் உறுதியான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட نیم படையினர் இதில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை, 3 பெண் நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர், 44 பேர் சீர்திரும்பியுள்ளனர். மூத்த நக்சல் தலைவர்கள் எவacuate செய்திருப்பதற்கான சந்தேகமும் எழுந்துள்ளது.

2024 மற்றும் 2025 நக்சல் நிலை தரவுகள்

ஆண்டுகொல்லப்பட்டோர்கைது செய்யப்பட்டோர்சீர்திரும்பியோர்அதிக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
20242871,000+83738
2025 (ஜன-மே)150+நடைமுறையில் உள்ளதுநடைமுறையில் உள்ளது6

அந்தரங்கமான காடுகள், 1,000 ஆயுதமேந்திய நக்சல்களின் அபாயங்கள் இருந்தபோதிலும், பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. முக்கிய மேடுகளை கைப்பற்றி, தேசிய கொடி ஏற்றப்பட்டு, ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புடன் கூடிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வெறும் நடவடிக்கை அல்ல – இது இந்திய அரசு தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண்டிருப்பதை காட்டுகிறது.

மறுப்பும் குழப்பமும்: காங்கிரஸ் மற்றும் BRS தலைமையிலான குழப்பப்படுத்தும் முயற்சிகள்

BJP அரசு தீவிரவாதத்துக்கு எதிராக ஒழுங்காக போராடும் நிலையில், காங்கிரஸ் மற்றும் BRS போன்ற எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுக்கின்றன. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, KCR மகள் கவிதா ஆகியோர் UPA வின் தோல்வியடைந்த பயணத்தை மீண்டும் முன்வைக்க முயல்கின்றனர். மேலும், முக்கிய நக்சல் தலைவர்கள் ஓடச் சொல்லப்பட்டதாகவும் புகார்கள் எழுகின்றன.

பாஜக: ஒரு உறுதியான தேசிய பாதுகாப்பு கண்ணோட்டம்

உள்துறை இராஜிய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுவது போல, துப்பாக்கி ஏந்தி மக்களை கொல்வோருடன் பேச்சுவார்த்தை என்ற வார்த்தையே கிடையாது. நிலைமையை கட்டுப்படுத்திய பிறகு மட்டுமே நீடித்த அமைதி கிடைக்கும். ஒரு காலத்தில் மக்கள் போர்குழுக்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பகுதிகளை ஆட்சி செய்தார்கள். இன்று, பாஜக தலைமையிலான பயணத்தின் மூலம், நாட்டின் பெரும்பகுதி நக்சல்களில் இருந்து விடுபட்டுள்ளது.

தீர்மானம்: 2026ல் நக்சலிசத்தை முழுமையாக அழிக்க முடிவு

UPA இன் தயக்கம் எங்கே? NDA இன் உறுதி அங்கே. BJP உருவாக்கும் இந்தியா — பாதுகாப்புடன், இணைந்ததாகவும், நக்சல் அச்சுறுத்தலின்றி இருக்கும். 2026க்குள் நக்சலிசத்தை அழிக்க உறுதியுடன் செயல்படும் அரசு, இன்று பாரதத்தில் இருக்கிறது.

வருஷத்துக்கு 2 லட்சம்.. கிளாமர் உடையில் பொண்ணுங்க நைட் FULL ஆ பார்ட்டி!! போலீஸ் வலையில் சிக்கிய கும்பல்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியில் கக்கனூர் சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்லும். அதுபோல கர்நாடகவை சேர்ந்த கார் ஒன்று கடந்த 24ஆம் தேதி இரவு அந்த சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அந்த காரை சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் பின்தொடர்ந்து சென்ற பொழுது அந்த கார் பேரிகை அருகே முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் நுழைந்துள்ளது. மேலும் அந்த காரை பின் தொடர்ந்து சென்ற போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த தென்னந்தோப்பில் டிஜே பார்ட்டி கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் அரைகுறை ஆடையுடன் போதையில் தள்ளாடியபடி ஆட்டம் பாட்டத்துடன் இருந்தனர்.போலீஸ் வருவதை கூட கண்டுகொள்ளாமல் அவர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களை சோதனை செய்தனர்.

அப்போது விலை உயர்ந்த போதை மாத்திரைகள், வெளிநாட்டு மதுபானங்கள், கஞ்சா போதை பொருட்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள். போலீசார் காரில் தப்பி வந்த பெங்களூரைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கோவையைச் சேர்ந்த இக்னேசஸ் லாரன்ஸ் காமிலோ, பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் தோப்பை ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

அங்கு பண்ணை வீடு அமைத்து இரவு விருந்து நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு இரவு மது போதையுடன் நடன நிகழ்ச்சி நடத்தியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அடுத்த கட்டம் விசாரணையில் இறங்கியுள்ளனர்.