கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது.
இதற்கு காரணமாக படத்தில் விக்ரமுக்கு மிகவும் குறைவான காட்சிகளே உள்ளன என்றும் அதிலும் அவர் நடந்துக்கொண்டே இருக்கிறார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படம் மலேசியாவில் ரிலீஸ் ஆகவில்லை.
இதற்கு காரணம் என்னவென்றால் மலேசிய அரசு இந்த படத்திற்கு சென்சார் சான்று தரவில்லையாம். ‘கடாரம் கொண்டான்’ படத்தின் கதைப்படி மலேசியாவில் திருடனாக இருக்கும் விக்ரம், மலேசியா போலீசார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து செல்வது போல் இருக்கும்.
இந்திய அரசு போல் இல்லாமல் இவ்வாறு தங்கள் நாட்டு போலீஸை தவறாக இந்த படத்தில் சித்தரிப்பதாக கூறி மலேசிய சென்சார் போர்டு இந்த படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாம்.
இதை சரிசெய்ய ‘கடாரம் கொண்டான்’ படக்குழு எவ்வளவோ முயன்றும் மலேசியா சென்சார் போர்டு இறங்கி வரவே இல்லையாம். இதனால் விக்ரம் உள்ளிட்ட ‘கடாரம் கொண்டான்’ படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனையடுத்து இந்தப் படத்துக்காக நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மலேசியாவில் உள்ள விக்ரம் ரசிகர்கள் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை சிங்கப்பூர் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மலேசியாவில் இந்த படம் வெளியாகாததால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒகேனக்கலில் திங்கள் கிழமை நடைபெற்றது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்தித்தது. தர்மபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இத்தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். இவர் தோல்வியை தழுவியது குறிப்பிட தக்கது.
இதை கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியை தவிர்க்கும் விதத்தில் மேலும் கட்சியை பலம் படுத்தும் விதத்தில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் ஆலோசனை கூட்டங்கள் நடத்திய வண்ணம் உள்ளது. இதை தொடர்ந்து தர்மபுரியில் ஒகெனக்கலில் கூட்டத் தொடர் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.அரசாங்கம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்டச் செயலாளர் இல.வேலுசாமி, மாநில துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதற்காக நடைபெறும் கூட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டுகள், மரக் கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் தேவேந்திரன்,இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் முருகசாமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநில மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றினார் ஜெகன்மோகன் ரெட்டி
மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் உள்ளூர் தொழிற்துறை/ஆலை தொழிலாளர் சட்டம் 2019 ஆந்திர சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 22) நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் மாநில மக்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் போதிய திறன்களுடன் தொழிலாளர்கள் இல்லாவிடில், மாநில அரசுடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு பயிற்சியளித்து பின்னர் வேலை கொடுக்க வேண்டுமென்றும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டத்திற்கு ஏற்ப அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு உள்மாநில மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்களையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்காக புதிய இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்பது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முக்கிய தேர்தல் உறுதிமொழிகளில் ஒன்றாகும். இச்சட்டத்துடன், நிரந்த ஓபிசி ஆணையம் அமைப்பதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு நியமன பதவிகளிலும், அரசு நியமன பணிகளிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கும், மகளிருக்கும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
நிரந்தர ஓபிசி ஆணையம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைய விரும்பும் பிரிவினர், சேர்க்கப்பட்ட, சேர்க்கப்படாத பிரிவினர் பற்றிய புகார்களையும், கோரிக்கைகளையும் விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதும் இந்த ஆணையத்தின் முக்கிய பொறுப்பாகும்.
மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துவரும் இந்நிலையில் ஆந்திர அரசின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா! கேன்சருக்குமா!
குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி உண்ணும் போது கருவேப்பிலையை உண்ணாமல் எடுத்து வைத்து விடுகிறோம். ஏதோ வெண்டாதது பொல கரு வேப்பிலையை ஒதுக்கி விடுகிறோம். ஆனால் கருவேப்பிலை எவ்வளவு மருத்துவ குணம் கொண்டது தெரியுமா?
உணவின் வாசனையை அதிகரிக்கத் தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும் போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.
இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது புற்றுநோய்,இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம்தேங்காய் எண்ணையில் கலந்து இதமானசூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல்உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.
இது தவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடைசெய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது.
75 – 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில்.
அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.
விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் பிரபலம் அடைந்தது.
இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் 23-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்து இருந்தார்.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பாடல் நாட்டின் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.
பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர். சர்கார் படம் போலவே இப்படமும் வெற்றி அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.இன்று ரசிகர்களுக்கு விருந்து தான்.
இன்றைய நவீன சூழலில் திருமணம், காதல் என்பது ரொம்பவும் சாதாரண விசியமாக மாறிவிட்டது. காதல் என்பது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து காதல் செய்வது மாறி இன்று முகமே பார்க்காமல் முன்பின் தெரியாமல் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் காதல் கொள்கின்றனர். திருமணம் என்பது ஆண் பெண் இருபாலரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இதற்கு லிவ்விங் டூ கெதர் என்று பெயர்.
நம் சமுதாய கலாச்சாரம் இது அல்லவே இது போல கலாச்சாரம் அழிவையே தரும் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கிறது நமது செய்தி தொகுப்பு.
ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் இந்துமதி. 20 வயதான இவர் தஞ்சை மாவட்டதிலுள்ள உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்துமதி, ஒரத்தநாடு கால் நடை மருத்துவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரத்த நாடு எழுத்துக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
அந்த வீட்டில் அவரது சடலத்துக்கு அருகே குடி போதையில் சதீஷ்குமார் என்ற இளைஞர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையை இறங்கினர்.
மாணவி இந்துமதி, இந்த வீட்டிற்கு வந்து உயிரிழந்தது எப்படி ? என்று போதையில் படுத்திருந்த சதீஷ் குமார் தலையில் தண்ணீரை ஊற்றி விசாரித்த போது இந்துமதி முகநூல் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
எப்போதும் செல்போன் கையுமாக வலம் வரும் இந்துமதி முகநூல் காதலில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகின்றது. அப்போது இந்துமதிக்கு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் முகநூலில் நட்பு கிடைத்துள்ளது.
தலையில் வித்தியாசமான முடிவெட்டு..! முகத்தில் கூலிங்கிளாஸ்..! என வித விதமான புகைபடங்களை முக நூலில் பதிவிட்ட சதீஷ்குமார் தன்னை ஒரு பொறியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்துமதியை காதல் வலையில் விழவைத்துள்ளர்.
இருவரும் 2 ஆண்டுகளாக முகநூலில் காதலித்ததோடு, அவ்வப்போது நேரில் சந்தித்தும் காதலை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் லிவிங் டு கெதர் போல அவ்வப்போது வெளியில் அறை எடுத்து தங்கியும் வாழ தொடங்கி உள்ளனர்.
இவர்களின் காதல் பிணைப்பு அதிகமானதால் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியிருப்பதாக பெற்றோரிடம் பொய் சொன்ன இந்துமதி, கணவர் சதீஷ்குமாருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அங்கிருந்தபடியே கல்லூரிக்கும் சென்று வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சதீஷ்குமார் தன்னை ஏமாற்றிதிருமணம் செய்துள்ளார் என தெரிய வருகிறது. சதீஷ் பொறியாளர் அல்ல வெறும் எலக்ட்ரீசியன் என்பதும், அவன் ஒரு குடிக்காரன் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. தினமும் இரவு குடி போதையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததால் இருவருக்கும் அடிக்கடை சண்டை ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் தங்கள் மகள் கல்லூரியில் படித்து வருகிறாள் என்று மாத, மாதம் செலவுக்கு பணம் அனுப்பி வைக்க, இந்துமதி திருமணம் செய்துகொண்டு கணவருடன் தனியாக வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவில்லை என்றே கூறப்படுகின்றது. விடுதியில் தங்கி கல்லூரியில் படிப்பது போன்றே வீட்டில் காட்டிக்கொண்ட இந்துமதி அவ்வப்போது ஊருக்கு சென்றுவந்ததால் பெற்றோருக்கும் சந்தேகம் வரவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், இந்துமதியை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. தானே தேடிக் கொண்ட வாழ்க்கை என்று எண்ணி விரக்தியில் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்துமதியின் பெற்றோரோ தங்கள் மகளை அடித்து கொலை செய்து சதீஷ்குமார் தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனால் மருத்துவ மாணவி இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்ற நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் அவ்வபோது நடந்த வண்ணம் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். தன் மகள் எங்கு செல்கிறாள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது பெற்றோரின் கடமை இன்றைய நவீன உலகில் பெண்ணோ ஆணோ வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட செல்கின்றனர். இதனால் முன் பின் தெரியாத நபரிடம் வெறும் வெளித்தோற்றத்தை மட்டுமே நம்பி ஏமாருகின்றனர். இது கலாச்சார சீரழிவு ஆகும்.
தமிழகத்தில் எட்டு வழி சாலை அமைக்கும் பணி மத்திய அரசு கடந்த வருடம் உத்தரவிட்டது. இதை அடுத்து மாநில அரசு அதை நடைமுறை படுத்த எட்டு வழி சாலை செல்லும் இடத்தில் அளவீடு செய்து ஆங்காங்கே கற்களை ஊன்றியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து விடும் என பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் பிறகு எட்டு வழி சாலை தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக எட்டு வழி சாலை திட்டத்தை தொடங்கும் விதத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்று உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க கட்டளை இட்டது. 8 வழிச்சாலை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த எதிர்ப்பு இருப்பதால் வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel
சேலம்- சென்னை இடையே காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலத்திற்கு புதிய 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நிலத்தை அளவெடுக்கும் பணி கடந்த ஆண்டு நடந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கோரி, பல்வேறு போராட்டங்களை விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வருகிறார்கள்.
ஐகோர்ட்டில் வழக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடரப்பட்டது.இந்நிலையில் 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 8வழிச்சாலை திட்டத்துக்காக அழிக்கப்படுவதா என கூறி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்கு வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் திமுக, பாமக, நாம்தமிழர் இயக்கத்தினரும் வழக்கு தொடர்ந்தனர்.
தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு பொதுமக்களிடம் கருத்துகேட்பு நடத்த வில்லை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என் றுகூறி திட்டத்தை செயல்படுத்த தடை விதித்ததோடு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்தது. பறிமுதல் செய்த நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து தமிழக அரசு மேல் முறையீடு உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் கடந்த மார்ச் 31ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தொடர்ந்து சென்னை -சேலம் எட்டுவழிச்சாலை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை31ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் குடும்பத்திலிருந்து ஹீரோயினா?
தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இரண்டு பெண்கள் தான் இரண்டு பெண்களுக்கும் ஆண் பிள்ளைகளாக இருப்பதால் அவருக்கு இரண்டு பேரன்கள் தானே இருக்கிறார்கள். பேத்தி இல்லையென்று நினைக்கிறீர்களா..? நாங்கள் சொல்ல வருவது கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் பற்றி.
சந்தனக் கடத்தல்
வீரப்பன் கடத்தி வைத்திருந்தாரே கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், அவரது குடும்பம் மிகப்பெரியது. அந்தக்
குடும்பத்திலுள்ள பெரும்பாலோனோர் நடிகர்கள்தான். ராஜ்குமாரின் தந்தை சிங்கநல்லூரு
புட்டஸ்வாமி ஒரு நடிகர். ராஜ்குமாரின் ஐந்து மகன்களுமே நடிகர்கள்தான். அவரது
மருமகனும் ஒரு நடிகர்தான். ராஜ்குமாரின் இன்னொரு மருமகனும் (மைத்துனரின் மகனும்)
நடிகர்தான். இதில் ராஜ்குமாரின் மகன்களான சிவ ராஜ்குமாரும் புனித் ராஜ்குமாரும்
கன்னடத் திரையுலகில் தற்போது தவிர்க்கமுடியாத நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆக, கன்னட திரையுலகில் ஒரு வருடத்தில் ராஜ்குமார்
குடும்பம் சேராத நபர்கள் நடித்திருக்கும் சினிமா பார்க்கவேண்டும் என நினைத்தால்
அது உங்களால் முடியவே முடியாது. நிலைமை இப்படியிருக்க, தற்போது ராஜ்குமாரின் பேத்தி தான்யாவும் சினிமாவுக்குள்
நுழைந்திருக்கிறார்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பாட்டன், தாத்தா, ஐந்து தாய் மாமாக்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து பெண் ஒருவர் நடிக்க வந்திருக்கிறார். ராஜ்குமாரின் மகள் பூர்ணிமாவின் மூத்த மகள்தான் இந்த தான்யா ராஜ்குமார்.
கமலின் உத்தம வில்லன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுமன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தில்தான் தான்யா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். ரொமான்டிக் காமெடியாக உருவாக இருக்கும் படத்தின் பெயர் ‘நின்னா சனிஹகே’. இவருடன் தான்யாவின் தம்பி தீரணும், ‘தாரி தப்பிடா மகா’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவிருக்கிறார்.
1010 ஆண்டுகளுக்கு முன்னரே மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்திய மன்னர் ராஜராஜ சோழன்
தமிழகத்தின் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் தட் டுப்பாட்டை போக்க மழைநீர் சேக ரிப்பு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறிவரும் நிலையில், 1010 ஆண்டு களுக்கு முன்பாகவே மழை நீரை குளத்தில் சேகரித்து பாசனத் துக்கும், மக்களின் குடிநீர் தேவைக் கும் பயன்படுத்தியுள்ளனர்.
மழை நீரைச் சேகரிக்கும் வித மாக, பரந்து விரிந்துள்ள தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவகங்கை என்கிற குளத்தை வெட்டி, கோயிலில் இருந்து அந்தக் குளத்துக்கு மழைநீர் செல்லும் வகையில் சாலவம் (நீர்ப் போக்கும் வழி) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மழைநீரை சேமித் துள்ளார் சோழ மன்னர் ராஜராஜ சோழன்.
இந்த தொழில்நுட்பத்தை ராஜராஜ சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மராட்டிய வம் சத்தின் சரபோஜி மன்னரும் கையாண்டுள்ளார் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வா ளர் மணி.மாறன் கூறியதாவது: தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் தனது ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை வளப்படுத்த குளங்கள், ஏரிகளை வெட்டினார். அதேநேரம் மக்களின் குடிநீர்த் தேவைக்காக என பெரிய கோயில் அருகே சிவகங்கை குளத்தை வெட்டினார்.
மேலும், பெரிய கோயிலில் மழையின்போது கிடைக்கும் தண் ணீரை வீணாக்காமல் சேமித்துப் பயன்படுத்தும் விதமாக கோயிலின் வடக்கு புறத்தில் நீர் போக்கும் வழி எனப்படும் சாலவம் என்ற வடிகால் போன்ற அமைப்பை கருங்கற்களைக் கொண்டு அமைத்தார். இதில் தண்ணீரைத் தடுத்து அனுப்பும் முறை உள்ளது.
முதலில் பெய்யும் மழைநீர் அழுக்காக இருக்கும் என்பதால் அந்த நீர் நந்தவனத்துக்குச் செல் லும்விதமாக ஒரு சாலவத்தையும், சிறிது நேரம் கழித்துக் கிடைக்கும் சற்று தெளிவான நீரை, முதல் சாலவத்தை அடைத்துவிட்டு, சிவ கங்கை குளத்துக்கு கொண்டு சேர்க்கும் விதமாக 2-வது சாலவ மும் அமைத்தார் ராஜராஜ சோழன்.
சிவகங்கை குளம் நிரம்பிய பிறகு, அங்கிருந்து அய்யன் குளம், சாமந்தான் குளங்களுக்கும் தண்ணீர் செல்லும்விதமாக நீர்வழிப் பாதைகள் அமைக்கப்பட்டு, அங் கும் மழைநீர் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் நல்ல பயனைக் கொடுத்ததால், அதன் பிறகு ராஜராஜ சோழன் கட்டிய அனைத்து கோயில்களிலும் இந்த மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் தஞ்சாவூரை ஆண்ட 2-ம் சரபோஜி மன்னர், ஜல சூத்திரம் என்கிற அமைப்பை உருவாக்கி, கோட்டையில் உள்ள கிணறுகள், நகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் ஆகியவற்றுக்கு குடிநீர் செல்லும் விதமாக ராஜராஜ சோழனின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார். இத்தகைய குடிநீர் குழாய்களை யானை மிதித்தாலும் சேதமடையாத வகையில் சுண்ணாம்புக் கலவை, சுடு மண் போன்றவற்றை கொண்டு அமைத்தார்.
இந்த வகையில், மழைநீரைச் சேமிப்பதற்காக தஞ்சாவூர் நகரில் மட்டும் 50 குளங்களை மன்னர் கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், தற்போது அந்தக் குளங் களில் பெரும்பாலானவை ஆங்கி லேயர் காலம் வரை பராமரிக் கப்பட்டு அதன்பின் குப்பை மேடாகி ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் 1,010 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெய்யும் மழைநீர், சாலவம் வழியாகத்தான் சிவகங்கை குளத்துக்கு செல்கிறது என்றார்.
சென்னை தெற்கு தொகுதியின் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் தனது முதல் உரையை ஜூலை 18 ஆம் தேதி பிற்பகல் ஆற்றினார். அவை மரபுகளை மீறி உறுப்பினரின் முதல் உரையின் போது ஆளுங்கட்சியினரான பாஜகவினர் சில சமயம் குறுக்கீடுகள் செய்தனர். சபாநாயகர்தான், ‘இது அவர் முதலில் ஆற்றும் உரை, குறுக்கிடாதீர்கள்’ என்று தலையிட்டு தமிழச்சி தங்கபாண்டியனை மேலும் பேசச் சொல்லியுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் உரையில் பேசியதாவது.
கணியன் முதல் ஸ்டாலின் வரையிலான புகழ்ச்சி
சென்னை தெற்கு தொகுதியிலிருந்து முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறேன். அனைத்து புவியியல் எல்லைகளையும் கடந்து, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று கூறும், இந்த உலகம் முழுவதும் எனது வீடே, அனைத்து மனிதர்களும் எனது உறவினர்களே என்ற கருத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த, கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் பிறந்த தமிழ்நாட்டு மண்ணிலிருந்து நான் வந்திருக்கிறேன். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறிவித்து சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தியும், கட்டுப்பாடு மிகுந்த வர்ணாஸ்ரம தர்மத்தை மறுத்தும் அனைத்து உயிர்களும் பிறப்பினால் சமமானவையே என்ற கொள்கையை அறிவித்த பெரும் புலவர் திருவள்ளுவர் பிறந்த மண்ணிலிருந்து நான் வந்திருக்கிறேன்.
தந்தை பெரியார் தொடங்கி வைத்த திராவிடர் சீர்திருத்த இயக்கமும், தமிழ் பண்பாட்டு மறுமலர்ச்சியும் பூத்த தமிழ்நாட்டு மண்ணில் திராவிட நாட்டு டெமாஸ்தனீஸ் என்று புகழ் பெற்றவரும், தி.மு.க. தோற்றுநருமான பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞரும் புகழ் பெற்ற இலக்கியச் செம்மலும், அரசியல் ராஜதந்திரியுமான டாக்டர் கலைஞர், பிறந்த திராவிட மண்ணிலிருந்து வந்தவள் நான் என்று கூறிக் கொள்வதிலும் அதே அளவில் நான் பெருமைப்படுகிறேன். எனது அரசியல் பயணத்தைத் துவக்கி வைத்த முத்தமிழ் அறிஞருக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்!
இங்கு நிற்கையில், எனது தந்தை காலம் சென்ற வே.தங்கபாண்டியன் அவர்களை நெகிழ்வுடனும், மகிழ்வுடனும் நினைவு கூரும் நான், நம் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும், அரசியல் ராஜதந்திரத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மதசார்பின்மைக்கும் சட்ட ரீதியான, உறுதியான ஆதரவை அளித்துள்ளனர் என்பதற்காக அவருக்கு எனது உளமார்ந்த நன்றியைப் பதிவு செய்வதற்கு விரும்புகிறேன்.
தென் சென்னை மக்களுக்கு நன்றி
தான் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் என்று தனது கன்னிப் பேச்சில் தாதாபாய் நவ்ரோஜி அவர்கள் குறிப்பிட்டது இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது. அதற்காக இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு இந்தியாவின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். அவ்வாறே, மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளுக்கு ஆதரவாக தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றியை எங்களுக்கு அளித்தமைக்காகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மக்களவையில் துடிப்பு மிக்க 78 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். சென்னை தெற்கு தொகுதியிலிருந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் உறுப்பினர் என்ற உண்மையை அடக்கத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கக் கோட்பாட்டாளர் திரு. முரசொலி மாறன், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர்.வெங்கட்ராமன், தற்போதுள்ள தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு போன்ற புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் இந்தத் தொகுதியின் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். எனது தொகுதி மக்களுக்கும் நன்றி கூறிக் கொள்ளும் நான், மிகச் சிறந்த சேவையை அளிப்பேன் என்று அவர்களுக்கு உறுதி கூறிக்கொள்கிறேன்.
கனவுகளைப் பரிசளிக்கும் கானல்
முதலில் தனது வரவு – செலவு நிதி நிலை அறிக்கையை முதன் முதலாக சமர்ப்பித்ததற்காக முதல் முழுநேர பெண் நிதி அமைச்சரான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். எங்கள் மண்ணின் மகளான ஒரு தமிழச்சி என்பதற்காக அவரைப் பாராட்டுவதில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.
மேதகு குடியரசுத் தலைவர் உரை, மாண்புமிகு பாரத பிரதமரின் உரை, மாண்புமிகு மத்திய நிதி அமைச்சரின் வரவு – செலவு திட்ட நிதி நிலை அறிக்கை அனைத்தும் ஒரு கானல் நீர் தோற்றமே – கனவுகளைப் பரிசளிக்கும் மாயக்கானல் நீர் தோற்றமே. 2024-25 ஆம் ஆண்டில் நம் நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக விளங்கும்போது, நாட்டு மக்கள் அனைவரும் நலமாகவும், வளமாகவும் வாழ்வார்கள் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று நம்பிக்கை தரும், நடைமுறை சாத்தியங்களற்ற பல உறுதிமொழிகளை அள்ளித் தெளிக்கின்ற கானல் நீர் தோற்றம் அவை! நாட்டில் பதுங்கியிருக்கும் அனைத்து கருப்புப் பணமும் வெளியே கொண்டு வரப்படும் என்றும், பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நமது மாண்புமிகு பாரத பிரதமர் சென்றமுறை பிரதமரானவுடன் பல உறுதிமொழிகளை அளித்தார். ஆனால் அவற்றில் எதுவும் உறுதியாக நிறைவேற்றப்படவில்லை.
பட்ஜெட் அல்ல ஃபட்ஜெட்
நாட்டில் 6.1 சதவிகித வேலையில்லாத் திண்டாட்டம் நிலவும்போது, நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலைக்கு உயர்த்தப்படும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது ஒரு மிகப்பெரிய மோசடியே ஆகும். இந்தியாவின் பெரும் பலமே தொழிற்சாலைகளில் பணியாற்றும் பாரம்பரியமான தொழிலாளர்களையும், அதன் வளர்ச்சி தொழில் நுணுக்கத் திறன் பெற்ற இளைஞர்களின் மனித ஆற்றலையும் சார்ந்து இருப்பதே ஆகும். ஆனால், தவறான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாதது, மற்றும் ரூபாயின் மதிப்பு குறைந்து போனது ஆகியவை மிகப் பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கிவிட்டன.
பட்ஜெட் தெளிவான கொள்கை முடிவுகளை அறிவிப்பதாக இல்லாமல், ஃபட்ஜெட்டாக (ஒரு திரிக்கப்பட்ட குளறுபடியான பட்ஜெட்) உள்ளது. அதனை நான் ஃபட்ஜெட் என்று கூறுவது ஏன் என்று விளக்கமளிக்கிறேன்.
வரி மூலம் கிடைக்கின்ற நிகர வருமானம் 2018-2019 ஆம் ஆண்டில் உத்தேசமாக 13.16 லட்சம் கோடியாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் தொகுதியின் புள்ளி விவர இணைப்பு 2.5 வெளிப்படுத்துகிறது. ஆனால் பட்ஜெட்டில் அது 14.84 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதனால்தான் இதனை ஒரு குழப்பமான அறிக்கை (ஒன்றுமே இல்லாததற்கு மிகப் பெரிய பாராட்டுதல்-விளம்பரம் தரும் பட்ஜெட்) என்று நான் கூறுகிறேன்.
இந்தியா ரத்தம் சிந்துகிறது
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு நான் மீண்டும் வரும்போது, காலம் சென்ற தாதாபாய் நவ்ரோஜி அவர்களை மறுபடியும் நினைக்க வேண்டியிருக்கிறது. மிகவும் புகழ் பெற்ற தனது உரையில் அவர் சாலிஸ்பரி பிரபுவிடமிருந்து பெறப்பட்ட ‘இந்தியா ரத்தம் சிந்தவேண்டும்’ (ஐனேயை ஆரளவ க்ஷந க்ஷடநன) என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இருந்து கீழ்க்கண்ட எடுத்துக்காட்டை, எடுத்துக் காட்டுவதற்கு நான் விரும்புகிறேன்.
இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டு செயலாளர் சாலிஸ்பரி பிரபு பேசிய பேச்சிலிருந்து அதன் தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு, தாதாபாய் நவ்ரோஜி அவர்கள் பின்வருமாறு தனது உரையைத் துவக்குகிறார். ‘ஒரு நாட்டை ரத்தம் சிந்த வைப்பது என்றால் என்ன பொருள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம் என்று இருந்தால் மிகவும் நிச்சயமாக மக்கள் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், மக்கள் மீது வரிவிதிப்பதற்கும், மக்களை ரத்தம் சிந்தச் செய்வதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது’.
நான் அரசைக் கேட்க விரும்புகிறேன் – கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறீர்கள். பொதுத்துறையில் உள்ள அரசின் பங்குகளை தனியாருக்கு விற்கிறீர்கள். ஆனால், நடுத்தர மக்களுக்கும், பாமர மக்களுக்கும் வரி தள்ளுபடி செய்வதும் இல்லை, விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதுமில்லை, கூடவே, வரியை மட்டும் உயர்த்துகிறீர்கள். அதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இது நம் நாட்டை மேலும் ரத்தம் சிந்தச் செய்வதாக இல்லையா?
குடும்பங்களின் சேமிப்பு தங்கம்
விவசாயிகளின் நலனே நாட்டின் முக்கியமான அம்சமாக விளங்குவது என்று காந்திஜி கூறியதை நீங்கள் நம்புவது உண்மையெனில், பிச்சை போடுவது போல 6,000 ரூபாய் கொடுத்துவிட்டு, அவர்களை நீங்கள் நிர்கதியில் நிறுத்தி இருப்பீர்களா? இது நியாயமற்ற மிகமிகக் குறைந்த தொகையாகும். நமது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கஜா புயலின் போது தமிழகத்துக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் புறக்கணித்துவிட்டார் என்று தமிழ்நாட்டு மக்கள் இன்றுவரை கடும் வருத்தமுடன் இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் இங்கே பதிவு செய்வதற்கு நான் விரும்புகிறேன்.
தங்க விலை உயர்வைப் பற்றிக் குறிப்பிட நான் விரும்புகிறேன். அது நாட்டை ரத்தம் சிந்தச் செய்யவில்லையா? பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் நம் நாட்டை பெண்களால் வழிநடத்திச் செல்லப்படும் ஒரு நாடாக ஆக்குவது என்ற ஒரு மாற்றம் நிகழும் என்று மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறினார். அப்படி இருந்தால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ஏன் 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதத்திற்கு உயர்த்தப்பட்டது?
நடுத்தரப் பிரிவு இந்தியப் பெண்களை இது பெருமளவில் பாதிக்கும். இப்போதும் கூட இந்திய குடும்பங்களின் சேமிப்பு தங்கமாகத்தான் இருக்கிறது என்பதே இதன் காரணம். அடிமட்டத்து, ஒடுக்கப்பட்ட பிரிவு பெண்களுக்கும், அன்றாட கூலி வேலை செய்யும் சாமான்யமான பெண்களுக்கும் தங்கத்தாலான தாலி கூட ஒரு தொலைதூரக் கனவாக ஆகிவிட்டது. இது மேலும் இந்தியாவை ரத்தம் சிந்தச் செய்யவில்லையா?
தனியார் மயம் என்னும் தாக்குதல்
நிதிநிலை மசோதா என்ற பெயரை நான் பயன்படுத்தலாம் என்றால், அது வரவு – செலவு திட்டத்தின் நொய்மை அடைந்த சகோதரன் போலவே இருக்கிறது. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, பாமர மக்கள் எதிர்ப்பு கொள்கைகளையே கிளிப் பிள்ளை போல திரும்பத் திரும்ப அது கூறிக் கொண்டே இருப்பதுதான் இதன் காரணம். பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்பது, இந்தியாவை மேலும் மேலும் ரத்தம் சிந்தச் செய்யும் ஒரு செயலாகும்.
பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்கள், மாற்றுத் திறனாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் மேலாகச் சிறுபான்மை மக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதை வைத்துத்தான் ஒரு நாட்டின் பெருமையினையும், எதிர்காலத்தையும் கணிக்க முடியும். ஆனால், மக்கள் கலவரக் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்; வேட்டையாடப்படுகிறார்கள். ஜனநாயகம் சிதைக்கப்பட்டு பணநாயகம் மேலோங்கி இருக்கிறது.
அவை இந்தியாவை மேலும் மேலும் ரத்தம் சிந்தச் செய்யாதா? நாடு முழுவதிலும் ஏமாற்றமும், வெறுப்புடன் கூடிய கவலை உணர்வும் நிலவுகிறது என்பதை ஒரு பிராந்திய மொழிக் கவிஞராக நான் உணர்கிறேன். பன்முகத் தன்மை, பிராந்தியக் கோட்பாடு, வேறுபட்ட தன்மை, கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மை ஆகிய அனைத்தும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று மாநில, தனிமனித உரிமைகளை மழுங்கடிக்கும் முழக்கத்தினால், அடக்கி ஒடுக்கப்படுகின்றன!
புகழ் என்னும் கோயிலுக்கு வழி
பின்னாளில் ஆர்போர்டின் இளவரசராக ஆன சர் ராபர்ட் வால்போல் என்பவர் 1719 ஆம் ஆண்டு பிரபுக்கள் அவையில் பேசும்போது கூறிய கருத்தில் இருந்து ஓர் எடுத்துக்காட்டைக் காட்ட நான் விரும்புகிறேன் , ‘பூமியில் இருக்கும் மிகச் சிறந்த ரோமானிய பேரறிஞர்களால் வைக்கப்பட்டுள்ள புகழ் என்னும் கோயில், நற்பண்புகள் என்ற கோயிலுக்குப் பின்னேதான் அமைந்துள்ளது. நற்பண்புகள் வழியாக இல்லாமல் புகழ் என்னும் கோயிலுக்கு எவராலும் வர முடியாது’ என்பதைக் குறிப்பதே அது. இந்த காட்சி நீடித்தால், நமது நற்பண்புகள் அனைத்தையும் நாம் இழந்துவிடுவோம் என்பதுடன் இந்தியா மேலும் மேலும் ரத்தம் சிந்தவும் நேரும். விளக்கம் பெறுவதற்கான சில கேள்விகள் என்னிடம் உள்ளன.
நீலப்புரட்சி சாதாரண மீனவருக்கு உதவுமா?
எனது சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் வசிக்கின்றனர். தொழில் என்ற உண்மையான கருத்தில், விவசாயம், மீன்பிடிப்பு மற்றும் தோட்டக் கலை ஆகியவை இன்றுவரை நடத்தப்படவில்லை. அது மட்டுமன்றி, புயல், சுனாமி மற்றும் ஆதாரங்களின் பற்றாக்குறை போன்ற இயற்கைப் பேரழிவுகளின் கடுந்தாக்குதலையும் அவை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
விவசாயிகள் நல்வாழ்வுத் திட்டங்கள் என்னும் குடையின்கீழ் அனைத்து மீனவர்களையும் ஒன்றாகக் கொண்டு வரும் நோக்கத்துடன் கூடிய ‘நீல புரட்சியின்’ ஒரு பகுதியாக விளங்கும் ‘மத்சய சம்பதா யோஜனா’ என்ற திட்டத்தை மரியாதைக்குரிய நிதி அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளது மட்டுமன்றி, எளிதாகக் கடன் பெறும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் மீன்வளர்ப்பை மேம்படுத்தவும் உறுதி அளித்திருக்கிறார். சிறப்பு மீன்வள, கடல்வள கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஒன்றின் கீழ் கடந்த ஆண்டு 7,522 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், மீன் வள கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி நிர்வகிப்பதற்கு தனியார் முதலீடுகளைக் கவர்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
அன்றாடம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் கடலின் மகனான ஒரு சாதாரண மீனவன் எந்தவித முதலீடும் இன்றி இந்த திட்டங்களில் பங்குபெற்று எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
இத்திட்டம், இம்மண்ணின் பூர்வகுடி மீனவர்களின் நலனுக்கானதாக இருக்காது. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே பயன் அளிப்பதாக இருக்கும். தனியார் முதலீடு என்று இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளதே இதற்கு சான்றாகும்.
தனது தொகுதிதென் சென்னையின் தேவைகள்
சென்னையின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பப் பூங்கா எனது தொகுதியில் உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்துள்ள இந்த யுகத்தில், முக்கியமான கவனம் இப்போது செயற்கை ஒற்றறிவது அல்லது புலனாய்வு என்பதற்கு மாற்றப்பட்டுள்து. 5ஜி அலைக் கற்றை அறிமுகப் படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை நோக்கி இந்த தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவை? இந்த அரசில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு?
தியாகராயர் நகர் மற்றும் மைலாப்பூர் இரண்டு சட்ட மன்றத் தொகுதிகளுமே முக்கியமான சென்னை தெற்கு பாராளுமன்ற தொகுப்பு பகுதிகளாகும். ஜி.எஸ்.டி. ஒப்புதல் பெற்ற எம்.எஸ்.எம்.ஈ (ஆளுஆநு) பிரிவுகளுக்கு ரூபாய் ஒரு கோடி அளவுக்கான கடன் 59 நிமிடங்களில் வழங்கப்படும் என்பதை நிதி அமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். அதை நான் பாராட்டுகிறேன். ஆனால், அது போன்று கடன்கள் வழங்குவதற்கு வங்கிகள் தயங்குகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் உண்மையாகக் கடன் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பற்றிய புள்ளி விவரங்களை அரசால் வழங்கமுடியுமா?
வருமான வரி மற்றும் இதர வரி, ஜி.எஸ்.டி., போன்ற வரித் துறைகளில் பல முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவர்களது வருமானம் என்னவாக இருந்தாலும், ஐ.டி.ஆர். (ஐகூசு) வருமான வரித் தாக்கல் அறிக்கைகளைக் கீழ்க்கண்ட பிரிவினர் பதிவு செய்ய வேண்டும் என்று 139 ஆவது பிரிவு என்னும் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு மின்சாரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாகவும், ஆண்டு ஒன்றுக்கு அயல்நாட்டுப் பயணங்களுக்காக இரண்டு லட்சத்திற்கும் மேலாக செலவழிப்பவர்கள் இவர்கள். அது எப்படி சாத்தியமாகும்? கூட்டுக் குடும்ப நடைமுறை இன்னமும் நிலவும் நாடு நம் நாடு. பல உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தால் மின்சாரத்துக்கான செலவை எவ்வாறு ஒரு வருடத்தில், ஒரு லட்ச ரூபாய்க்குள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?
புறநானூறுக்கு பதில் நற்றிணை
சங்க இலக்கியமான நற்றிணையில் ஒரு பாடல் உள்ளது. அது கூறுவதாவது:
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர் நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே
மூலிகைச் செடியினம் அழிந்து போகும் அளவுக்கு அந்த மூலிகைச் செடியை, சிறப்பான, பொறுப்பான நிலையில் உள்ள மக்கள் பொதுவாக முற்றிலுமாகப் பறித்துவிடமாட்டார்கள். தங்களது ஆற்றல் இழந்து போக்கும் அளவுக்கு அவர்கள் தவம் செய்ய மாட்டார்கள். அதேபோல ஒரு நல்ல அரசன் அதிக வரிவிதித்து குடிமக்களை வறுமையில் தள்ளித் துன்புறுத்த மாட்டான். அத்தகைய நிலைப்பாட்டில் உள்ள மனிதர்கள் எப்போதுமே தவறு செய்யாமல் இருப்பதால்தான் இந்த உலகம் பிழைத்திருக்கிறது. ஆனால், இந்த அரசு இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது.
அரசின் விருப்பமான மும்மொழி திட்டத்தை நடைமுறைப்படுத்தவே, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிப்பதற்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் என்பதை மிகுந்த மன வேதனையுடனும், கவலையுடனும் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். தி.மு.கழகமும், எங்களது தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் இரு மொழிக் கொள்கையை மட்டுமே ஆதரிக்கின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன். அதற்கு வலுச்சேர்க்க, எங்கள் கட்சியின் தோற்றுனரும், தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பு ஒன்றை இங்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்.
அவர் கூறியதாவது: நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, மூன்று சட்ட மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தேன். சென்னை மாநிலம் என்றிருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது ஒன்று. மத சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லாமல் நடத்தப்படும் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பதற்கான சட்டம் மற்றொன்று. இருமொழிக் கொள்கையை மட்டுமே கடை பிடிப்பது என்ற சட்டம் மூன்றாவது. இந்த சட்டங்களை நீக்கவோ அல்லது மாற்றவோ துணிவு கொண்டவர்களாக எவரும் இருக்க மாட்டார்கள்!
கவிஞர் ஷெல்லியின் வரிகளுடன் எனது உரையை நான் முடித்துக் கொள்கிறேன். ‘வாழ்க்கையின் முட்கள் மீது நான் வீழ்ந்துவிட்டேன்; நான் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறேன்’ என்பதே அது!
இந்த வரவு – செலவு திட்டம் இந்தியாவை மேலும் ரத்தம் சிந்தச் செய்துள்ளது என்றும் அவர் பேசினார்.
நாடாளுமன்றதில் தூங்கியது குறித்தும் அவர் மேக்கப் போடுவது குறித்தும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் தன்னுடைய முதல் உரையிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் திமுகவின் அழகான நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.