செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

0
139
#image_title

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

கடந்த சில மாதங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய தகவல் தான் ஹாட் டாபிக்காக உள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று சட்ட விரோத பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாளில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்பொழுது செந்தில் பாலாஜி அளித்த வாக்கு மூலத்தை 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களாக தயாரித்து நீதிபதி அல்லி அமர்வு முன் அமலாக்கத்துறை சமர்ப்பித்தது.

அதன் பின்னர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் செந்தில் பாலாஜியின் கோரிக்கை மனுவை ஏற்று இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஜாமீன் கேட்டு மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை தொடர்ந்து ஏழாவது முறையாக நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி புழல் மத்திய சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இரத்த கொதிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறைத்துறை பிரிவில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். தன்னுடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை என்று இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி உடல் நலனைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கினார். இதனால் செந்தில் பாலாஜியின் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ததோடு இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று நாளை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டி இருக்கிறது. இதனால் செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி விழுந்து வருவதாகவும் இனி வெளியில் வர வாய்ப்பு குறைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.