எடப்பாடியார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கதறும் திருமாவளவன்!

தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியில் அறிவித்தார். இதுதொடர்பாக, இந்த அறிவிப்பை அரசு விழாவில் இல்லாமல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது முறையானதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது பொங்கலுக்கு கொடுக்கப்படும் பரிசு தொகையா? அல்லது வாக்குகளுக்கு கொடுக்கப்படும் முன் பணமா? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கின்றன அறிக்கையில், அதிமுக வின் சார்பாக தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். ஒரு முதலமைச்சராக வெளியிட வேண்டிய ஒரு அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் வெளியிடுவது முறையா? என்று தெரிவித்திருக்கின்றார். இது அப்பட்டமான விதிமீறல் என்றும் சாடி இருக்கிறார். இது மக்களுக்கான நலத்திட்டமா? அல்லது அவர்களுக்கு அளிக்கப்படும் முன்பணமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்திருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தாலும், பாதிப்புக்குள்ளான லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணத்தையும் வழங்காமல் பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசை திருப்பும் செயல். புயல் மழை வெள்ள நிவாரணத்திற்கு உடனடியாக உரிய தொகையை அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்திருக்கின்றார். சமீபத்தில் உருவான புயல்களாலும், அதனால் பெய்த மழை காரணமாக, தமிழ்நாட்டில் அநேக மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

பல ஏக்கர் விளை நிலங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. தோட்டப்பயிர்கள் ஏராளமானவை நாசமாகி இருக்கின்றன. இந்த மழை சேதத்தை பார்வையிடுவதற்காக வந்த மத்திய குழு மத்திய அரசிடம் எந்த மாதிரியான பரிந்துரை செய்து இருக்கின்றது. அதன் அடிப்படையிலே மத்திய அரசு இதுவரை எதற்காக பேரிடர் நிவாரண நிதியை தமிழகத்திற்கு அளிக்கவில்லை. அதனை பெறுவதற்காக தமிழக அரசின் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆனால், தமிழக அரசு அறிவித்த இந்த பொங்கல் பரிசு திட்டமானது,மக்களின் நலனை கருத்தில் கொண்டே என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இந்த பரிசு தொகையானது, மக்களுடைய வறுமையை ஓரளவிற்கு போக்குவதற்கான நடவடிக்கைதான் என்று தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகை காலங்களில் இந்த புயல் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தாக்கம் மக்களிடையே இருப்பதால், அதனுடைய வருத்தத்தைப் போக்கும் ஒரு சிறிய முயற்சி தான் இது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், திருமாவளவன் போன்றோர் இதனை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் அவர்களுக்கான எதிர்ப்புக் குரல்களும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏராளமான எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொண்டிருந்தாலும் அவர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.

சாதாரண அடித்தட்டு, வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற குடும்பங்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற சலுகைகளை அறிவித்திருக்கிறது. ஆனால் ஸ்டாலின் திருமாவளவன், போன்றோர் இதனை வைத்து அரசியல் செய்வது வேதனைக்குரிய ஒரு செயலாக பார்க்கப்படுகின்றது.