ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு வங்கியின் ஓர் முக்கியமான அறிவிப்பு !

0
181

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியினை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தற்போது மிகப்பெரிய மோசடியில் இருந்து தனது வாடிக்கையாளர்களை காப்பாற்றும் நோக்கில் ஒரு பெரிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறையை மாற்றியுள்ளது, இந்த விதி விரைவில் எஸ்பிஐ ஏடிஎம்களில் அமலுக்கு வரும். இந்த விதி அங்கீகரிக்கப்படாத டிரான்ஸாக்ஷன்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பாக செயல்படும்.No ATM card? Here's how you can still withdraw cash using your smartphone

இதுகுறித்து வங்கி கூறியுள்ளபடி, வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது ஓடிபி-ஐ பகிர்ந்து கொள்ள வேண்டும், இதனால் ஏடிஎம் பயனர் சரியான பயனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஓடிபி என்பது கணினியால் உருவாக்கப்பட்ட நான்கு இலக்க எண்ணாகும், இந்த நான்கு இலக்க ஓடிபி எண்ணானது வங்கி வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இந்த ஓடிபி பணம் திரும்பப் பெறுவதை அங்கீகரிக்கும் மற்றும் ஒரு டிரான்ஸாக்ஷனுக்கு மட்டுமே செல்லுபடியாகும். கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி-1ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கி ஓடிபி அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் சேவையைத் தொடங்கியது. எஸ்பிஐ அவ்வப்போது சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் ஏடிஎம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.What does the decline in ATM withdrawals mean for cash? | ATM Marketplace

அதிகரித்து வரும் மோசடி மற்றும் சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு எஸ்பிஐ இந்த விதிகளை உருவாக்கியுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து ஒரே டிரான்ஸாக்ஷனில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் எடுக்கும் வாடிக்கையாளர்கள் ட்ரான்ஸாக்ஷனை முடிக்க ஓடிபி தேவைப்படும். இப்போது எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது உங்களிடம் டெபிட் கார்டு மற்றும் மொபைல் இருக்க வேண்டும்.

author avatar
Savitha