ரஜினி சாரின் வில்லதனத்தை தலைவர் 171ல் கூடுதலாக பார்க்கப் போறீங்க! லோகேஷ் கனகராஜ் பேட்டி!!

0
41
#image_title

ரஜினி சாரின் வில்லதனத்தை தலைவர் 171ல் கூடுதலாக பார்க்கப் போறீங்க! லோகேஷ் கனகராஜ் பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தை பற்றிய முக்கிய விக்கெட்டுகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் உலகளவில் பெரும் வசூலை குவித்து வருகின்றது. இந்த லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் லியோ திரைப்படம் வசூலை பொருத்த வரையில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் லியோ திரைப்படம் குறித்து நேர்காணல் நிகழ்ச்சியில் பேசி வந்தார். அப்பொழுது அடுத்ததாக இயக்கவிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தை பற்றியும் சில அப்டேட்டுகளை கூறினார்.

லியோ திரைப்படம் குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் “எனக்கு பொதுவாக ரஜினிசார் அவர்களின் வில்லினிசம் பிடிக்கும். எனவே தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் வில்லத்தனத்தை இன்னும் அதிகமாக கொண்டு வருவதற்கு முயற்சி செய்வேன்.

தலைவர் 171 திரைப்படத்தின் கதை மிகுந்த எதிர்பார்ப்பு மிக்க கதையாக இருப்பதால் எனக்கு எப்பொழுது படத்தை இயக்குவேன் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. திரைப்படத்தின் முழுக்கதையையும் எழுதுவதற்கு 6 மாதம் ஆகும். எனவே 2024ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தலைவர். 171 திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் டி.ஜி ஞானவேல் இயக்கும் தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.