எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங்

0
282
SRM University Students Suicide Death Trending_News4 Tamil Online Tamil News Channel
SRM University Students Suicide Death Trending_News4 Tamil Online Tamil News Channel

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங்

சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் அடுத்தடுத்த மாணவ மாணவிகளின் தற்கொலையானது பெற்றோர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தற்கொலை சம்பந்தமாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

காட்டாங்கொளத்தூரில் உள்ள இந்தக் கல்லூரியானது திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் பாரி வேந்தருக்கு சொந்தமானது. இந்த கல்லூரிக்கான விடுதி பொத்தேரியில் அமைந்திருக்கிறது. சமீபத்தில் இங்கு கல்லூரியின் விடுதியில் 10-வது மற்றும் 2-வது மாடியிலிருந்து இரண்டு மாணவர்கள் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.

இதில் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் செளத்ரி (வயது 19) என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது. இவர் விடுதியில் தங்கி முதலாமாண்டு மின்னணு பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார்.

அனில் சௌத்ரியின் தற்கொலை குறித்து மறைமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் அனில் சௌத்ரியின் பெற்றோர்கள் படிப்பிற்காக நிறைய கட்டுபாடுகள் விதித்துள்ளதாகவும். குறிப்பாக டி.வி கூட பார்க்கக் கூடாது எனவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு அவரது பெற்றோர்கள் அனைத்து விஷயங்களுக்கும் மிகுந்த கட்டுப்பாடு விதித்ததால் அவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அனில் செளத்ரியுடன் தங்கியிருந்த மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் கண்டிப்பதற்கே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. இவரது தற்கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்குமா என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள்.

SRM University Students Suicide Death Trending
SRM University Students Suicide Death Trending

இதே போல கல்லுரி விடுதியின் 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் சொண்ட மாணவி அனுப்ரியா பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட இந்த அனு பிரியாவும் கல்லூரி விடுதியில் தான் தங்கி படித்து வந்துள்ளார்.

இவர் சனிக்கிழமை நடைபெற்ற கடைசி தேர்வை முடித்து விட்டு விடுதியை காலி செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்த அனு பிரியாவை அழைத்துச் செல்ல அவரது அம்மா  செல்வியும், சகோதரர் ராஜூ சுந்தரமும் வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் வந்து கொண்டிருந்த இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்திருக்கிறார் இந்த மாணவி அனுப்ரியா.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் இந்த மாணவர்களின் தற்கொலை குறித்து வெளியிட்ட அறிக்கையில், மன அழுத்தம் காரணமாக இரு மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பல்கலைக்கழக உளவியல் துறை உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் ஆன்லைன் இணையதள வசதியின் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க மாணவர்களுடன் எப்போதுமே அவர்களது பெற்றோர் நல்ல நட்புறவுடன் இருக்க வேண்டும். மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும். ஆசிரியர்களும் இதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அதில் கூறியிருக்கிறார்.

கல்லூரியில் தொடர்ந்து நடைபெறும் மாணவ மாணவிகளின் தற்கொலைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் முறையான விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொள்ளாத பொது மக்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் பதிவிட்ட விமர்சனங்கள் #SRMcollegesuicudes என்ற ஹேஷ் டேக்கில் தேசிய அளவில் டிரென்ட் ஆகி வருகிறது. பொதுமக்கள் வெளியிட்ட விமர்சன பதிவுகளில் சில உங்களின் பார்வைக்காக

SRM University Students Suicide Death Trending