விராட் கோலியை மட்டம் தட்டும் பிசிசிஐ : எதற்காக தோனி!

டி20 உலக கோப்பைக்காக்கான இந்திய அணியில் ஆலோசகராக தோனியை நியமித்தது விராட் கோலியை மட்டம் தட்டும் செயல் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வளைகுடா நாடுகளில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்தியா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில் பெரும்பாலும் கணிக்கப்பட்ட வீரர்களே இடம்பெற்றுள்ளனர். 4 வருடங்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே யாரும் கணிக்காத வீரர் ஆவார். … Read more

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். எந்த காரணத்துக்காக அணியிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்பது இதுவரை யாருமே அறியாத புதிராக உள்ளது. ஏனெனில் 46 டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எகோனமியை 7க்கும் குறைவாக வைத்திருந்தார். 7க்கும் குறைவாக எகோனமியை ஒரு சில இந்திய … Read more

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, … Read more

டி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!

டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ச்சியாக முதலிட வகித்து வருகிறார். மகளிர் டி20 தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக களமிறங்கிய இளைய வீராங்கனையான 17 வயதேயான ஷஃபாலி கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதிலிருந்து தொடர்ந்து இன்று வரை தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷஃபாலி … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே?

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே? இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் டிசம்பர் மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, … Read more

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா? இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வென்றுள்ளதால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரச்சி … Read more

டிஎன்பிஎல் (TNPL) டி20 தொடர் தடை செய்யப்படுமா?

spot fixing allegations in TNPL

தமிழகத்தில் உள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக ஐபில் போன்று கடந்த நான்கு வருடங்களாக டிஎன்பிஎல் டி20 தொடரை தமிழ்நாடு கிரிகெட் சங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சென்ற மாதம் தான் இந்த தொடரின் நான்காவது சீஸன் கோலகலமாக முடிந்தது. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெறுவதாக புகார் எழும்பியுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு வீரர்களிடமும் அணிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ ஊழல் தடுப்பு … Read more