விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!!

0
171
The case against Vijay Sethupathi!! ICourt dismissed!!
The case against Vijay Sethupathi!! ICourt dismissed!!

விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!!

உதவி இயக்குனர் ஒருவர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டது ஐகோர்ட். தனது விடா முயற்சியால் சிறுசிறு வேடங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர்.

2004-ஆம் ஆண்டிலிருந்து நடிக்க தொடங்கிய இவர் 2010-ஆம் ஆண்டு சீனு ராமசாமி
இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்
ஆனார்.அன்று முதல் பல வரவேற்பு பெற்ற படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.
இவர் கதாநாயகனாக நடிப்பதை விட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் சிறந்தவர்.

இவர் தமிழ் படங்கள் மட்டும் அல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து உள்ளார்.இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பவானி என்ற ரோலிலும், கமல் நடித்த விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி, தெலுங்கில் வைஷ்ணவ் தேவ், கீர்த்தி ஷெட்டி உடன் நடித்த படம் தான் உப்பெனா.

இதில் ராயாணம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். தெலுங்கு
படமான உப்பெனாவை தமிழில் மறு உருவாக்கம் செய்ய அந்த படத்தில் வில்லனாக நடித்த
விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கி இருப்பதாக சொல்லப்பட்டது.

இதனை அறிந்த தேனியை சேர்ந்த டல்ஹௌசி பிரபு என்ற உதவி இயக்குனர் உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா என உருவாக்கப்பட்டதாகவும், அதை ரீமேக் செய்ய தடை விதிக்க கோரியும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அப்போது உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கவில்லை என்று விஜய் சேதுபதி தரப்பில் நீதிபதியிடம் விளக்கம் கூறியதை தொடர்ந்து, அவரது விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்வதாக கூறினார்.