மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை!

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு தமிழரின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த பொங்கல் திருநாளில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.அதிலும் மதுரை பாலமேடு,அலங்காநல்லூர்,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக புகழ்பெற்றது.ஆனால் கடந்த 16 ஆம் தேதி பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த்ராஜன் என்ற மாடுபிடி வீரர் காளை முட்டியதில் பரிதபாமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.மேலும் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கூறியிருந்ததாவது மஞ்சுவிரட்டு போட்டிக்கு முன் அனுமதி பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.வாகனங்களில் காளைகளைக் கொண்டு வந்தவர்கள்  கால்நடை மருத்துவரிடம் தகுதி சான்று பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காளைகளை ஏற்றி வரும் வாகனத்தில் இருவருக்கு மேல் இருந்தால் அவர்கள் அனுமதிக்கவில்லை.மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் அருந்தியிருக்க கூடாது.மேலும் அனுமதிக்கபடாத இடங்களில் காளைகளை அவிழ்த்து விட கூடாது.மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அதனால் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறினார்.