மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

0
89
Vijay Sethupathi to pair up with Bollywood actress again!! Next update!!
Vijay Sethupathi to pair up with Bollywood actress again!! Next update!!

மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும்.

ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இப்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். மேலும் இவர் தற்பொழுது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகின்றார்.

அந்த வகையில் அவர் தன் ரசிகர்களிடம் மிகவும் அன்பாகவும் ,கனிவாகவும் நடந்து கொள்ளவார்.அதற்கு உதாரணமாக சமூகவலைத்தளத்தில் வெளியான பல வீடியோக்களை பார்க்கலாம்.

இவ்வாறு நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வருகின்ற விஜய் சேதுபதி தற்பொழுது வில்லன் ரோலில் கலக்கி கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது அட்லி இயக்கத்தில் உருவாக்கி கொண்டுள்ள ஜாவான் படத்திலும் வில்லனாக நடித்து வருகின்றார்.இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக மலையாள பட இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விபின் தாஸ் அவர்கள் நான் தமிழ் படம் இயக்கினால் சூது கவ்வும் படம் பானியில் தான் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவ் நடிக்க உள்ளார்.

கங்கனா ரானவ் தற்பொழுது லாரன்சுக்கு ஜோடியாக சந்திரமுகி பாகம் 2 படத்தில் நடித்து வருகின்றார் என்று கூறப்படுகின்றது. எனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கூடிய விரைவில் தொடங்கும் என்று படக்குழு கூறியுள்ளது.