இரண்டாம் திருமணம் செய்த விஜயின் ரீல் அப்பா!! முதல் மனைவியின் குமுறல்!!

0
159
Vijay's reel dad who got married for the second time!! First wife's grumpy!!
Vijay's reel dad who got married for the second time!! First wife's grumpy!!

இரண்டாம் திருமணம் செய்த விஜயின் ரீல் அப்பா!! முதல் மனைவியின் குமுறல்!!

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இவர் தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, பகவதி, ஆறு, பாபா போன்ற படங்களில் நடித்துள்ளார். கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜயின் அப்பாவாக, குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இவர் 11 மொழிகளில்  200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1995ம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது 60 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி, அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவரது முதல் மனைவி ராஜோஷி பருவா. இவர் பாடகர் மற்றும் நாடக கலைஞராவார். இவர் பழைய நடிகை சகுந்தலா பருவாவின் மகளாவார்.

இரண்டாவது திருமணத்தை பற்றி ஆஷிஷ் வித்யார்த்தி கூறுகையில், நாங்கள் இருவரும் சந்தித்ததை பற்றி பிறகு சொல்கிறேன்.  இந்த கட்டத்தில் ரூபாலியை திருமணம் செய்து கொண்டது சிறந்த உணர்வை தனக்கு தருவதாகவும், நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கையில் சரியான நபர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு தேவை என்பதை உங்களிடம் கேட்க மாட்டார்கள். உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்த விஷயங்களை செய்யாதீர்கள் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதிகமான சிந்தனையும், சந்தேகமும் மனதை விட்டு நீங்கட்டும், தெளிவு, குழப்பத்தை மாற்ற வேண்டும். அமைதி உங்கள் வாழ்க்கையில் இருக்கட்டும். நீங்கள் வலிமையானவர், உங்கள் ஆசிர்வாதத்தை பெறுவதற்கான நேரம் இது. நீங்கள் அதற்கு தகுதியானவர் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிகிறது.