144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

0
120
Violation of 144 Prohibitory Order will take strict action! Police alert!
Violation of 144 Prohibitory Order will take strict action! Police alert!

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காடிபல்லா நான்காவது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல். இவர் அதே பகுதில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர் அதனை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.மேலும் இதுகுறித்து சூரத்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜலீல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எந்த காரணத்திற்காக இவர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.மத மோதல்களால் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கொலை தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்துள்ளது.அதை வைத்து ஐந்து பேரிடம் சந்தேகத்தில் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இதற்கென தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்டவர் முஸ்லீம் நபர் என்பதால் மத மோதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அதனை தடுப்பதற்கு போலீஸ் தரப்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சூரத்தல்,பஜ்பே,பணம்பூர், காவூர் ஆகிய நான்கு பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K