பிரபல நடிகையை மணக்கிறாரா விஷால்… வைரலாக பரவும் தகவல்!

0
97

பிரபல நடிகையை மணக்கிறாரா விஷால்… வைரலாக பரவும் தகவல்!

நடிகர் விஷால் 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் கோலிவுட்டின் அதிக வயது பேச்சிலராக இருக்கிறார்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்து வருகிறார். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என பொறுப்புகளையும் வகித்து வந்தார்.

 இந்நிலையில் அவன் இவன் படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்த போது அவருக்கு தலைவலி போன்ற பிரச்சனைகள் வந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த பிரச்சனை இப்போது அவருக்கு மீண்டும் வந்துள்ளதாகவும், அதனால் அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ல முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் அவரின் லத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகாமலும், மார்க் ஆண்டனி திரைப்படம் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையிலும் உள்ளது. இதற்கிடையில் இப்போது விஷாலின் திருமணம் பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. தமிழில் நாடோடிகள் மற்றும் ஈசன் உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநயாவை விஷால் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

விஷால் ஏற்கனவே நடிகை வரலட்சுமி சரத்குமாரை காதலிப்பதாக தகவல்கள் பரவின. அதற்கடுத்து தெலுங்கு நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாகவும், அது நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் அந்த திருமணம் நின்றது குறிப்பிடத்தக்கது.