மாஸாக களமிறங்கும் கான்ஸ்டபிள்…. விஷால் நடிக்கும் லத்தி படத்தின் டீசர் வெளியீடு

0
94

மாஸாக களமிறங்கும் கான்ஸ்டபிள்…. விஷால் நடிக்கும் லத்தி படத்தின் டீசர் வெளியீடு

விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார்.  ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக இவரின் ஹிட் படமாக இரும்புத்திரை திரைப்படம் அமைந்தது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஷால் இப்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2 என்ன நிலைமையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்நிலையில் அவரின் அடுத்த ரிலீஸாக லத்தி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா- நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ளார். சுனைனா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக இந்த திரைப்படம் உருவாகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கான்ஸ்டபிளாக நடித்துள்ள விஷால் லத்தி சார்ஜ் செய்து குற்றவாளி ஒருவரை கைது செய்வது போல டீசர் உருவாகப்பட்டுள்ளது.

http://https://youtu.be/2KD_hOHuFvE