ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? ஒரு கப் ஜவ்வரிசி!

0
197
#image_title

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? ஒரு கப் ஜவ்வரிசி!

தற்போது உள்ள காலகட்டத்தில் உணவு முறைகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ஆனால் ஒரு சில நன்மைகளும் உண்டு.பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைப்பதற்காக என்ன செய்யலாம் என்று தேடி கொண்டிருப்பார்கள். அதுபோலவே உடல் பருமனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பலரும் தேடி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் உடல் பருமனை எவ்வாறு அதிகரிப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

அதற்கு தேவையான பொருட்கள்:100 கிராம் அளவிற்கு ஏலக்காய், முந்திரி, திராட்சை,நெய் , ஊற வைத்த ஜவ்வரிசி ஒரு கப், மற்றும் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள திராட்சை, முந்திரி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயில் உள்ள விதையை மற்றும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் நாம் எடுத்து வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து அதனுடன் ஏலக்காய், முந்திரி ,திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்தப் பொருட்கள் நன்கு கொதித்த உடன் நாம் எடுத்து வைத்துள்ள பாலை சேர்க்க வேண்டும். அதனுடன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொருட்கள் அனைத்தும் நன்கு கொதிக்கும் வரை நாம் கிளறி விட வேண்டும். அதன் பிறகு ஜவ்வரிசி வென்றதும் இறக்கி அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று முறை இவ்வாறு செய்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இவை பாயாசம் போலவே இருக்கும் ஆனால் இதில் நாம் சர்க்கரை ஒரு டீஸ்பூன் அளவு மட்டும் சேர்ப்பதால் இனிப்பு சுவை இருக்காது. மேலும் உடல் எடை உடனே அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் மூன்று முறை கட்டாயம் இதனை செய்து குடித்து வர வேண்டும்.

author avatar
Parthipan K