மக்கள் கிட்ட இருந்து தானே வாங்கி இருக்காங்க! வரட்டும்!- சமுத்திரக்கனி

0
220
#image_title

இன்று காலை தென்காசி சங்கரன்கோவிலில் தரிசனத்திற்கு வந்த சமுத்திரக்கனி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

மிகவும் நல்ல கதாபாத்திரங்களையும் நல்ல வேடங்களையும் எடுத்து நடித்துக் கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. கிராமத்து கதை சார்ந்த படங்களில் மற்றும் மிகவும் துடிப்பான கதாபாத்திரங்களில் மிகவும் நேர்த்தியாக நடித்த வருபவர் சமுத்திரக்கனி. இன்று காலை சங்கரன்கோவிலில் தரிசனத்திற்காக வந்து செய்தியாளர்களிடம் பதில் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறிய பதில் மிகவும் சிரிப்புக்கு உள்ளாகியுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற செய்தியாளர் சமுத்திரக்கனிடம் கேட்டுள்ளார்கள். அவருக்கு “ஒன்னும் சொல்ல விரும்பல” அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்! நன்றாக வருவார்கள்! என்று சொல்லி உள்ளார்.

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்! அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? என்று செய்தியாளர் சமுத்திரக்கனிடம் கேட்டபோது, அதற்கு சமுத்திரக்கனி,” அவர்களிடமிருந்து தானே வாங்கி இருக்கிறார்கள்” வரட்டும்! நல்லதை செய்யட்டும்! என்று சொல்லியுள்ளார்.