மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா? இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கின்றது. தமிழகத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியில் மார்ச் 8ஆம் தேதி நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 50 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டத்தில் மட்டும் … Read more

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!! கொரோனா ஆபத்தினால் சில மாதங்களாக தடைபட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து மீண்டு வழக்கம்போல களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இதனால் சீன மார்க்கெட்டுகளில் நாய், பாம்பு, தேள் மேலும் பல்வேறு இறைச்சி சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் மூலம் உலக நாடுகளுக்கும் பரவி பலாயிரம் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இத்தாலியில் … Read more

காஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!!

காஷ்மீர் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உயிரிழப்பு! உடலை கொண்டுவர குடும்பம் கண்ணீர் கோரிக்கை!! காஷ்மீரில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உதவ வேண்டும் என்று அவரது குடும்பம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், … Read more

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை

Sachin Tendulkar

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனை வீரர்கள் வந்தாலும், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் நம்ம சச்சின் டெண்டுல்காருக்கேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு அவர் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கு கிரிக்கெட்டில் அவருடைய அதிரடி ஆட்டமும், அசைக்க முடியாத சாதனைகளும் தான் முக்கிய காரணமாகும். மும்பையை சேர்ந்தவரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாடும் போது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார், அந்த வகையில் இவர் … Read more

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதலானது உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி கடும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இது வரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் 1251 நபர்களை தாக்கியுள்ளதகவும், அதில் 102 நபர்கள் குணமடைந்து விட்டதாகவும்,32 நபர்கள் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் … Read more

கொரோனா ஊரடங்கால் வீட்டில் கொரளி வித்தைக்காட்டும் நடிகை : கிளுகிளு வீடியோவால் கிறங்கிபோன ரசிகர்கள்!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அனைத்தும் செய்வதறியாது தவிக்கிறது. உலக சுகாதார மையத்தின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி நாட்டு மக்களை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். கொரோனா பரவலை தடுக்க அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களில் … Read more

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு கொரோனாவால் ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பெரும் பொருளாதார இழப்ப ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டு்ள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது தெலுங்கானா அரசு. இன்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாதாரச் சரிவை ஈடு செய்யும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஐ.பி.எஸ் … Read more

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அண்ண நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ!

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அன்ன நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ! ஆட்கள் யாரும் இல்லாத சாலையில் யானை ஒன்று அசைந்த நடந்து சென்ற வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் போக்குவரத்து, அத்தியாவசியமற்ற நிறுவனங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் தடை செய்யப்பட்டு அத்தியாவசியம் உள்ள மருந்தகம், மளிகைகடை, பெட்ரோல் … Read more

கொரோனா தொற்றி மருத்துவமனையில் இருந்து சேட்டை செய்த விசித்திர பெண் : அதனை பார்த்த 3பேருக்கு நேர்ந்த விபரீதம்!

உலகம் முழுவதும் கொத்து கொத்தாக பல உயிர்களை கொன்று வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி நாட்டு மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்து தமிழக அரசு கண்காணித்து வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more

தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா

தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா தமிழகத்தில் நேற்று வரை 67 பேர் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தற்போது கொரோனா பாதி்த்தோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் நிஜாமுதீனில் நடைபெற்ற தாய்லாந்து நாட்டினர் நடத்திய மத நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் கலந்துக் கொண்டுள்ளனர். 1500 பேர் கலந்துக் கொண்ட இந்த மாநாட்டில் 981 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளோரைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் … Read more