சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! காரணம் இதுதான்!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்டனர்.
இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வந்தனர். கவர்னர் சேலம் வருவதை தடுத்து பல்வேறு கட்சியினரும் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் பெரியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் அனைவரும் பட்டமளிப்பு விழாவின் போது கருப்பு உடை அணிந்து வர தடை விதித்து சுற்றறிக்கையை ஒன்றை வெளியிட்டது.
காவல் துறையின் அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கருப்பு உடை அணிய நாங்கள் எதுவும் தடை கூறவில்லை என்று காவல் துறையினர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக கருப்பு சட்டையை மணவர்கள் அணியக்கூடாது என்று விதித்த தடையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தினர் அனைவரும் மாநகர காவல் துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த புகாரில் காவல் துறையாக கூறியதாக கூறி மாணவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று சுற்றறிக்கையை வெளியிட்ட பெரியார் பல்கைலைக்கழகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.