உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

0
64
#image_title

உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கருப்பு உளுந்தில் உணவு செய்து உண்டு வந்தோம் என்றால் மூட்டு வலி,இடுப்பு வலி,பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை,எலும்பு சம்மந்தமான பாதிப்புகள் நீங்கி உடல் மிகவும் வலிமையாக காணப்படும்.இந்த உளுந்து பருப்பில் அதிகளவு ஊட்டச் சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் இருக்கின்றது.

உடலுக்கு அதிக வலிமை தரும் உளுந்து குழம்பு சுவையாக செய்யும் முறை:-

தேவையான பொருட்கள்

*கருப்பு உளுந்து – 1/2 கப்

*நல்லெண்ணெய் – தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – 1/2 கப்

*தக்காளி – 2(பொடியாக நறுக்கியது)

*தேங்காய் – 1/2 மூடி (துருவியது)

*பூண்டு – 10 பற்கள்

*புளிக்கரைசல் – தேவையான அளவு

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*குழம்பு மிளகாய்த்தூள் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் கடாய் வைத்து அதில் கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் 1/4 கப் சின்ன வெங்காயம்,5 பற்கள் பூண்டு,சோம்பு,சீரகம் மற்றும் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி தேவையானஅளவு கல் உப்பு மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிண்டிவிடவும்.பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.பிறகு வறுத்து வைத்துள்ள கருப்பு உளுந்தில் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.இதை கொதிக்கும் கலவையில் சேர்த்து நன்கு கிண்டவும்.பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த கருப்பு உளுந்து குழம்பு சாதம்,பூரி,இட்லி உள்ளிட்டவற்றிற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.