தெரிந்து கொள்ளுங்கள்.. பூரான் கடி நிமிடத்தில் குணமாக இயற்கை மருந்து வகைகள்!!

0
162
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. பூரான் கடி நிமிடத்தில் குணமாக இயற்கை மருந்து வகைகள்!!

பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி ஆகும். இவை ஈரமான இடங்களில் அதிகம் காணப்படும். பொதுவாக பூரான் கடித்தால் நமக்கு வலி உணர்வு ஏற்படாது. இந்த பூரான் நம்மை கடிக்கும் பொழுது ஒருவித விஷத்தை வெளியிடும். பூரான் நம்மை கடித்து விட்டால் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும். பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும்.

பூரான் கடி அறிகுறி:-

*உடலில் பல இடங்களில் அரிப்பு மற்றும் தடுப்பு காணப்படும்

*உடலில் எரிச்சல் ஏற்படும்

பூரான் கடிக்கு சிறந்த இயற்கை மருந்து:-

**3 தேக்கரண்டி பால், 3 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை பூரான் கடித்த இடத்தில் போட்டு மெதுவாக தேய்த்து ஒரு காட்டன் துணி கொண்டு இதை கட்டினால் பூரான் விஷம் உடனடியாக முறிந்து விடும்.

**வெற்றிலை 1, மிளகு 5 அரைத்து விழுதாக்கி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் பூரான் விஷம் முறியும்.

**1 கைப்பிடி குப்பைமேனி இலை, மஞ்சள் சிறிதளவு சேர்த்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் தடவினால் பூரான் விஷம் முறியும்.

**பூரான் கடித்த இடத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் வைத்தால் பூரான் விஷம் உடலில் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்கும்.

**பூரான் கடித்து தடிப்பு ஏற்பட்டால் அதை மறைய வைக்க மண்ணெண்ணெய் சிறிதளவு எடுத்து அதில் தேய்ப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.

**சிறிதளவு குப்பைமேனி இலை மற்றும் உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். பின்னர் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து பூரான் கடித்த இடத்தில் தடவினால் உரியத் தீர்வு கிடைக்கும்.

**வெற்றிலை மற்றும் மிளகை அரைத்து சிறு உருண்டைகளாக பிடித்து விழுங்கினால் பூரான் விஷம் முறியும்.