பல் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மூலிகை கசாயம் – செய்வது எப்படி?

0
267
#image_title

பல் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மூலிகை கசாயம் – செய்வது எப்படி?

மோசமான உணவுமுறை பழக்கத்தால் பலரும் பல் வலி பிரச்சனையை சந்தித்து வருகிறோம். உணவு உட்கொண்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் இருப்பது, பற்களை நன்றாக துலக்காமல் இருப்பது, பற்களை முறையாக கவனிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் பல் சொத்தை, பல் ஈறுகளில் வலி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது.

அதுமட்டும் இன்றி அதிகப்படியான இனிப்பு பொருட்களை உட்கொள்ளுதல் போன்றவற்றாலும் பற்கள் எளிதில் சொத்தையாகி விடுகிறது. பல் சொத்தை வலியை அனுபவிக்கும் நபர்களுக்கு மட்டுமே அதன் வேதனை தெரியும். இந்த பல் வலியை சில தினங்களில் குணமாக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை அவசியம் பின்பற்ற வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

*அரைக்கீரை வேர்

*நில வேம்பு

*மஞ்சள் தூள்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு அரைக்கீரை வேர் மற்றும் நிலவேம்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி வாயை நன்கு கொப்பளிக்கவும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும்.

பல் வலி குணமாக வேறு சில தீர்வுகள்:-

*வேப்ப இலையை நீரை சேர்த்து கொதிக்க விட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குணமாகும்.

*கிராம்பை தூள் செய்து பற்களை தேய்த்து சுத்தம் செய்து வந்தால் பல் வலி குணமாகும்.

*நெல்லிக்காயை உலர்த்தி பொடி செய்து பற்களில் தேய்த்து வர வலி குறையும்.

*தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடி செய்து பற்களில் தேய்த்து துலக்கி வந்தால் அதன் பல் வலி முற்றிலும் குறையும்.