கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம் என்ன?… அனில் கும்ப்ளே அளித்த பதில்!

0
162

கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம் என்ன?… அனில் கும்ப்ளே அளித்த பதில்!

உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ள நிலையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பவுலர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தற்போது 35 வயது மற்றும் 34 வயது ஆகும் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் ஓய்வு பெற்று, அடுத்த உலகக்கோப்பையில் இளம் வீரர்களுக்கு வழிவிடவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் கோலி, அசுரத்தனமான பார்மில் இப்போது இருக்கிறார். இந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் அவர்தான்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே “ ஓய்வு பற்றி வீரர்கள்தான் முடிவு செய்யவேண்டும். வரும் ஆண்டுகளில் அவர்கள் விளையாடுவதை வைத்தும், அவர்களின் மனவலிமை மற்றும் ரன் சேர்க்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தேர்வுக்குழு அந்த முடிவை எடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக தேர்வுக்குழு தலைவர் இதெ கேள்விக்கு பதில் அளிக்கையில் “போட்டியின் நடுவில் நான் யாரிடமும் (அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி) பேசக் கூடாது. அவர்கள் அவ்வளவு பெரிய வீரர்கள், அவர்கள் எதையாவது பேசவேண்டும் என்றால் அவர்களே வந்து எங்களுடன் பேசுவார்கள், ”என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.