வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! சுங்கச்சாவடிகளில் புதிய நடைமுறை அறிமுகம் மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
சுங்க சாவடிகளில் எப்பொழுது பார்த்தாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காத்திருப்பதன் மூலம் அதிக நேரம் செலவாகிறது. மேலும் அந்த காத்திருப்பு நேரத்தை தவிர்ப்பதற்காக பாஸ்டர் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
அந்த பாஸ்ட்ட்ராக் ஸ்டிக்கரை ஒட்டி இருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி பதிவு மூலமாக வாகன உரிமையாளரின் வங்கி கணக்கிலிருந்து கட்டணம் நேரடியாக சுங்கச்சாவடியின் வங்கிக் கணகத்திற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சுங்க சாலையின் வாகனங்கள் காத்திருக்கும் நிலை தொடர்வதோடு அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையைமுற்றிலும் தவிர்ப்பதற்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அல்லது வாகன பதிவு எண் அடிப்படையிலான புதிய நடைமுறையை அறிமுகம் செய்யபடும் எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியானது தேசிய நெடுஞ்சாரங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஒரே வழித்தடத்தில் 60 கிலோ மீட்டருக்கு இடைவெளியில் சுங்கச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள். அப்போது அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிபுதிய இந்த புதிய அறிமுகத்தை பதிலாக அளித்தார்.
மேலும் பாஸ்ட்ட்ராக் நடைமுறைக்கு மாற்றாக இரண்டு மாற்றுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது அதில் ஒன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட ஆலோசனை நடைபெற்று வருகிறது எனவும் கூறினார். முதலாவதாக செயற்கைக்கோள் அடிப்படையிலான தொழில்நுட்பம் நடைமுறை இந்த நடைமுறையின் படி வாகனத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக உரிமையாளன் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் நேரடியாக சுங்கச்சாவடியின் வங்கி கணக்கு மாற்றப்படும் எனவும் கூறினார்.
மேலும் அடுத்த ஆறு மாதங்களில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இந்த அறிமுக தொடர்பாக அதிகாரப்பூர்வமான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் கணினி அடிப்படையில் இருந்தால் போதுமானது வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்காது எனவும் கூறினார்.
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலான உரிய சட்டம் இதுவரை கொண்டு வரவில்லை எனவே அதற்கான நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா ஒன்றை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.