“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து

0
101

“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

விராட் கோஹ்லி, தன்னுடைய கேப்டன் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அப்போதில் இருந்து அவருக்கும் பிசிசிஐக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதையடுத்து அணியில் ஒரு வீரராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேட்டிங் போதாமை காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

அவர் மீண்டும் தன்னுடைய பார்முக்கு மீண்டுவர சில தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஆனால் அடுத்து நடக்க உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்குமார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அதிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால் உலகக்கோப்பை டி 20 தொடரில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது கோஹ்லி பிசிசிஐ யிடம் ‘தான் ஆசியக் கோப்பை போட்டியில் விளையாட தயாராக உள்ளதாக” தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியக் கோப்பை தொடர் இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்க உள்ளது.

இது சம்மந்தமாக பிசிசிஐ அதிகாரி அருண் தோமல் “விராட் கோலி சாதாரண வீரர் இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி. இந்திய அணியில் அவர் இடம் பெறுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் இந்திய அணியின் தேர்வாளர்கள் தான் எடுப்பார்கள், அதில் நாங்கள் தலையிட எதுவும் இல்லை. விராட் கோலி முடிந்தவுடன் பழைய ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு” என்று அவர் கூறினார்.